வன்னியில் மீள் குடியமர்த்தப்படும் மக்களுக்கு பாம்புகள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளன. பற்றைக் காடுகளாக இருக்கும் குடியிருப்புக்களில் பாம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. வீடுகள் அழிவுற்ற நிலையில் தற்காலிக குடில்களை அமைத்து வாழும் மக்களின் குடில்களுக்குள்ளும் சில வேளைகளில் பாம்புகள் நுழைந்து விடுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதைக்கு அண்மையாகவுள்ள கடையொன்றின் உரிமையாளர் தனது கட்டத்தைப் பார்க்கச் சென்ற போது அவரை பாம்பு தீண்டியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் அவசர சிகிச்சைகளின் பின்னர் உயிர் தப்பினார்.
தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள தார்மபுரம், விசுவமடு பகுதிகளிலும் பாம்பின் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை, பளை பகுதியில் மீள்குடியமர்த்தபட்ட மக்களும் பாம்பக்கடிக்கு இலக்காகி வருகின்றனர். இப்பகுதிகளிலும் நிரந்தர வீடுகள் இல்லாததால் தற்காலிக கொட்டில்களிலேயே மக்கள் குடியிருக்கின்றனர். இக்கொட்டில்களில் இரவு வேளைகளில் பாம்புகள் புகுந்து தீண்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. பளைப்பகுதியிலிருந்து பலர் பாம்பினால் கடியுண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அவ்வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை, தர்மபுரம, விசுவமடு பகுதிகளின் காணிகளிலுள்ள தென்னை மற்றும், பயன்தரும் மரங்களை காட்டு யானைகள் நாசம் செய்துள்ளதாக அப்பகுதிகளில் மீள்குடியேறும் மக்கள் தெரிவிக்கன்றனர்.
Related News:
பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்
BC
வன்னியில் புலிகளின் காலத்திலும் அவர்களின் கொடுமைகளோடு பாம்புகளின் அச்சுறுத்தலும் மக்களுக்கு இருந்து வந்தது.பாம்புகள் பற்றி விடயம் அறிந்த பெரியவர் ஒருவர் இது பற்றி தேசத்தில் முன்பு கட்டுரை எழுதியிருந்தார்.இந்த பாம்புகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.