பலஸ் தீனத்துக்குச் சென்ற துருக்கி உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பது தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்று இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் சபை ஒத்திவைப்பு பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
பலஸ்தீன அகதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேலிய படையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய தாக்குதலினால் பத்தொன்பது பேர் உயிர் இழந்தனர். இரு இலங்கையர்கள் உட்பட ஏராளமான பிரயாணிகள் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை மக்களின் கண்டனத்தை தெரிவித்து சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதுடன் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.