தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுதல், மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி, அதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்கிறார். இதன் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடவுள்ளது.
rohan
13ஆவது திருத்தம் அரசினால் குப்பைக்குள் போடப்பட்டால் என்ன செய்வீர்கள், தோழரே?
அது தான் உங்கள் பேச்சாகவும் மூச்சாகவும் இருக்கிறதே?
epdpnews.com/news.php?id=7046&ln=tamil
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் முன்வைத்துள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். நேற்றைய தினம்(6) கைதடியில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி மேற்குப் பகுதி மக்களால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் சி.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் அவர்கள் 13வது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் இடம்பெற்றுள்ளதுடன் சர்வதேசமும் இந்தியாவும் அதற்கு ஆதரவளித்துள்ளதுடன் தென்னிலங்கை மக்களும் இத்திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
NANTHA
13 ஆவது திருத்தத்தை குப்பைக்குள் எறிந்தவர்கள் புலிகள். புலிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அது பற்றி கதைக்காமல் இருப்பது நல்லது!