உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்தால் தமிழ்க் கூட்டமைப்பு அரசுடன் பேச்சு நடத்தும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

surash.jpgஅரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாகப் பேச்சு நடத்துவதற்கான எவ்வித அழைப்பும் ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ இதுவரை கிடைக்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை ஏற்று பேச்சுவார்த்தைக்குச் செல்லுமென கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எனினும், அழைப்பு கிடைத்ததன் பின்னரே பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் விடயங்கள் பற்றி குறிப்பிட முடியுமெனவும் அவர் தெரி வித்தார். ஏற்கனவே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ¤க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றமை உண்மையே. எனினும், அப்பேச்சுவார்த்தை உத்தியோகப்பற்றற்றதாகவே அமைந்ததுடன் எந்தவித தீர்மானமும் அதன் மூலம் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை யெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறதே தவிர அதற்கான அழைப்பை விடுப்பதில் ஏன் இந்தளவு தாமத மேற்படுத்தப்படுகிறதோ எமக்குத் தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    அரசியல் ஆதிக்கமும், ஆயுத பலமும் இருந்த போதே, உடன்பாட்டுக்கு வராத பேச்சுவார்த்தைகள், இப்போது எதுவும் புதிதாகச் சாதித்து விடப்போவதில்லை.

    பேச்சுவார்த்தைக்காக தவம் கிடப்பது இருக்கட்டும்.

    ஆளும் வர்க்கம், தன் பேரினவாத வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, போடும் பிச்சையை பொறுக்கி எடுக்கு முன்னெ, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, எந்த கோரிக்கையிலாவது ஒரு பொதுவான புரிந்துணர்வை ஏற்படுத்தி அந்த அடிப்படையில், அரசுடன் யாசிப்பதற்கு முதலில் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அதை விடுத்து, தனியே நின்று உங்கள் வாய்களுக்கு பொரிஅரிசி தேடாதீர்.

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்திரிகா காலத்திலும் ராஜபக்ஷ காலத்திலும் “நிபந்தனையற்ற” பேச்சுக்கு புலிகளை அழைத்த போது “முடியாது” யுத்தம் செய்வோம் என்று முழங்கி முள்ளிவாய்க்காலில் முழங்காலில் மண்டியிட்டு மண்டையை போட்டது போலல்லாமல் பேச்சு வார்த்தைக்குப் போவது தமிழர்களுக்கு எந்த நஷ்டத்தையும் கொண்டு வரப்போவதில்லை!

    Reply