மலசல குழியில் மனித சடலங்கள்

body.jpgஇலங் கையின் வடக்கே கிளிநொச்சி நகரை அண்டிய கிராமம் ஒன்றில் மலசல குழியொன்றிற்குள் இருந்து மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கணேசபுரம் என்ற பகுதியில் மீள்குடியேற்றத்திற்காகச் சென்ற காணி உரிமையாளர் ஒருவர் தமது வீட்டு மலசலகூடக் குழியைத் துப்பரவு செய்தபோதே இந்த சடலங்கள் குழிக்குள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகளும். த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவித்துள்ளனர்.

கறுத்த பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து, ஆறு சடலங்கள் அந்தக் குழிக்குள் இருந்ததைக் கண்டதாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய சிவஞானம் சிறிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சடலங்கள் ஆணா பெண்ணா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இவ்வாறாக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்தப் பகுதியில் மக்கள் பீதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறிதரன் தெரிவித்திருக்கின்றார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் இந்தக் குழியைத் தோண்டி சடலங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலங்கள் இருக்கும் காணிப் பகுதி பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நன்றி BBC

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

 • rohan
  rohan

  இந்தப் பொலித்தீன் பைகள் ஏதோ ஒரு NGO கொடுத்தது என்றும் புலிகள் தான் இந்தக் கொலைகளைச் செய்தார்கள் என்றும் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்.

  Reply
 • Siva
  Siva

  புலிகள் தேவையில்லாமல் கொலைகள் செய்வதில்லை; செய்தாலும் ரயர் போட்டே கொழுத்தும் பண்பாளர்கள். ஆதலால் இது ஈபிடிபி செய்ததாகத்தான் இருக்கும் என்ற அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  புலிகள் எப்பவும் நரமாமிசத்தை உண்டதில்லை. சைவ உணவையே உண்டு பழக்கப்பட்டவர்கள் என்று சொல்ல வேண்டியது தானே! ரோகன். இழிச்சவாய்கள் நம்பவதற்கு இன்னும் இலகுவாகயிருக்கும்.
  வெளிநாட்டுப் பணத்தில் குண்டுவாங்கி-குண்டடிச்சு கொண்டவர்களுக்கு என்.சி யோ. பற்றியும் தெரியாது. ” நீலபாக்” பற்றிய விபரமும் புரியாது.
  மாற்று இயக்கங்களை அழித்தது. வன்னிமக்களை முள்ளிவாய்கால் வரை தேசியத்லைவருடன் உடன்கட்டை ஏற மூன்றுலட்சம் மக்களை ஆயுதமுனையில் அழைத்துச் சென்றது. இப்படி தொடர்ச்சியாக வாசிக்க வேண்டியது தானே ரோகன். தொடர்ந்து வாசியுங்கள். கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

  Reply
 • thurai
  thurai

  //புலிகள் தான் இந்தக் கொலைகளைச் செய்தார்கள் என்றும் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்.//றோகன்

  புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் வன்னி இருந்தபோது கொல்லப்பட்டவர்களின் சடலங்கழும் கிடைக்காமல் போய் விட்டது. இப்போ அரசாங்கமோ, புலிகளோ செய்வதொரு பக்கமிருக்க சடலங்களாவ்து காணக்கூடியதாக இருக்கின்றதே.

  துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //… இப்போ அரசாங்கமோ, புலிகளோ செய்வதொரு பக்கமிருக்க சடலங்களாவ்து காணக்கூடியதாக இருக்கின்றதே….//
  நல்லாத்தான் சேடிபிக்கேற் கொடுக்கிறியள்? இதைத்தான் யாழ்ப்பாண மென்றாலிற்றி என்கிறது! இந்த சேட்டிபிக்கேற்றை செத்தவனின் சொந்தக்காரரிடம் கொடுங்கள்!

  Reply
 • thurai
  thurai

  யாழ்ப்பாணத்தாரை வெல்வதென்றால் யாழ்ப்பாணத்து மென்ராலிற்ரிதான் வேண்டும். உலகமுழுவதும் வாழும் புலத்து புலித்தமிழர்களின் மென்ராலிற்ரி மேற்குலக் மென்றாலிற்ரியாக 30 வருடத்தில் மாறியுள்ளதா?
  சேட்டிபிக்கற் பறவாயில்லை ஆனால் புலிகளின் வெள்ளை சேலை கலாச்சாரத்திற்கு ஒப்பாகுமா?.

  துரை

  Reply
 • BC
  BC

  எல்லாமே புலிகளின் ஆயுத கலாச்சாரம் வெள்ளை சேலை கலாச்சாரத்திற்கு முடிவு வந்துவட்டதே என்ற கவலை தான். இவர்களின் வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு வந்தவர்களில் ஒருவரும், புலிகளால் கொல்லப்பட்டவருமான அமிர்தலிங்கத்தின் மனைவி, பிள்ளைகளுடன் 21 வருடங்களுக்கு பின்பு இலங்கைக்கு போக கூடிய நிலை வந்துள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததிற்கு ஜனாதிபதியை அவர் பாராட்டியுள்ளார்.

  Reply
 • siva
  siva

  கணேசபுரத்து சடலங்கள் தோண்டியெடுப்பு
  தோண்டியெடுக்கப்பட்டுள்ள உடல் எச்சங்கள் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி கணேசபுரத்தில் மலசல குழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனித சடலங்கள் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

  மாவட்ட நீதவான் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி இராணுவம் ஆகியோர் முன்னிலையில் பொலிசாரினால் இச்சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. நீதவானின் உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பொலிசாரினால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

  “பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்ட நிலையில் 5 சடலங்கள் காணப்பட்டன ஆணா பெண்ணா என்று இனம் காணவோ இன்னார் என அடையாளம் காணவோ தக்கதாக அவை இருக்கவில்லை” என இந்தச் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டபோது அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

  “இந்தச் சடலங்களில் ஒன்று புடவையால் சுற்றப்பட்டிருந்தது. 3 சடலங்கள் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய சீருடையை ஒத்த காற்சட்டையுடன் காணப்பட்டது. மற்றுமொரு சடலம் இராணுவ காக்கி சீருடை காற்சட்டையுடன் காணப்பட்டது.” என்று அவர் கூறினார்.

  இந்தச் சடலங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  சட்ட வைத்திய துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நீதவான் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். —பிபிசி

  Reply
 • Appu hammy
  Appu hammy

  All above commentors!!!
  this shows that your comments are baseless.. don’t you remember that government released number of ex LTTEers who were disabled..? and there are lot of disabled who yet to be released.. read something to improve your knowledge

  for you six lives are not seen as human life ? there are more like this to come The world know about the Heartless Buddhists. Doesn’t matter who’s work. why don’t you allow the investigators to conduct a free & fair investigation whithout anyones intereference.. then all of you comment here will have the answer. whether it was LTTE or Army

  Reply
 • Ajith
  Ajith

  This news clearly illustrates that there should be an impartial, international inquiry to investigate the war crimes committed by State which constitutionaly has a duty to provide security, safety irrespective of race, colour, relegion. The commissions, investigations carried out by Sri Lanka state always biased and favourable to Sinhala buddhists which is morally and lawfully not acceptable in any democratic process. Anyone who do not accept these fundamentals are criminals and they have morally not fit to talk about justice.

  Reply
 • sumi
  sumi

  செம்மணி புதைகுழி விடயத்தில் நியாயமான தீர்வு கிடைத்தது போன்றுதான்….
  இனிமேலும் தீர்வு கிடைக்கும். நம்புங்கள் நற்தீர்வு நாளை கிடைக்கும்.

  Reply