கொழும்பு விழா: நடிகர்களுக்கு எச்சரிக்கை

iifa-awards-logo.jpgகொழும்பில் நடத்தப்படக்கூடிய IIFA விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு எதிராக தென்னிந்திய திரைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விருது வழங்கும் விழாவை ‘இரத்தக் கறை படிந்துள்ள’ இலங்கையில் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைத்துறை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமது கோரிக்கையை மீறி கொழும்பில் விழா நடக்கும் பட்சத்தில், அதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடாமல் புறக்கணிக்கப்போவதாக தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வெள்ளியன்று சென்னையில் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம் கூறுகிறது.

“இந்த விருது வழங்கும் விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் இரத்தக் கறை படிந்த இலங்கையில் நடத்தப்படுவதைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக” அத்தீர்மானம் கூறுகிறது. ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-5 தேதிகளில் கொழும்பில் இந்த விழா நடக்கும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

BBC

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • thurai
    thurai

    புலியின் வலையில் விழுந்துள்ள தமிழக சினிமா உலகம்.

    துரை

    Reply
  • rohan
    rohan

    “புலியின் வலையில் விழுந்துள்ள தமிழக சினிமா உலகம்” /துரை.

    ஆனால், இந்தக் கோரிக்கை சரி தானே?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தற்போதைக்கு கிழக்காசியாவுக்கு வரவிருந்த ஆபத்தை தனது சமார்த்திய புத்தியால் களைந்தவர் மகிந்தா ராஜயபக்சா அவர்கள். அவரின் துணிவும் நேர்மையும் பாராட்டப் படகூடியது தொன்று.(இதற்கு ஆலோசனை வழங்கியவர்கள் மதிநுட்பம் வாய்ந்த சீனராக இருக்கட்டும் அல்லது இந்தியராக இருக்கட்டும்)வரப்போகும் அழிவுகளை முன்கூட்டியே உணர்ந்து நடவடிக்கை எடுப்பது அறிவுசார்ந்த விஷயமே!.

    தமிழ்நாடாக இருக்கட்டும் அதைகடந்து வடக்காக இருக்கட்டும் இந்த முதாலிளித்துவ குணாம்சம் கொண்ட சினிமா படஉலகத்தால் அரசியலில் சருகைகூட நகர்த்த முடியாது. சல்லியை சுண்ட அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடிவார்கள். ஆகவே இவர்களின் நடவடிக்கைகள் அரசியல் சார்ந்ததல்ல. இவர்களின் போராட்டத்தின் தகமைகள் தேசம்நெற்றின் அறிமுகமான கருத்தாளர்களான “சாந்தன் “தமிழ்வாதம்” “ரோகன்” போன்றேன் தகமையையே பெறும்.

    Reply
  • NANTHA
    NANTHA

    கருணானிதி அழைத்து பேசியவுடன் இன்னொரு அறிக்கை வெளிவரும்.

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    எம்ஜிஆரும்,ரொனால்ட் றீகனும் அரசியல் ஜாம்பவான்களாக இருந்தது வரலாறு.

    கருத்துகளை,போராட்டங்களை முறியடிக்க சாதி, மதம், தொழில், தகமை,இனம் எனக் கூறி இழிவுபடுத்துதல் இயலாமையின் வெளிப்பாடு. அதை விட எல்லாச் சிக்கலுக்கும் சர்வரோக நிவாரணியாக சிவப்பு மட்டையைக் கிழித்துக் காட்டுதல், ஆற்றாமையின் புலம்பல்.

    ஒடுக்கப்பட்டோருக்கு குரல் கொடுக்காது, ஒடுக்குவோனுக்காக கதைப்பது என் தகமையில் இல்லை நண்பரே.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..சல்லியை சுண்ட அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடிவார்கள். ….//

    அதேபோல உதயன் என்கின்ற பத்திரிகையின் ஊடகவியலாலர்களை தான் ஆரம்பிக்கப்போகும் புதிய தமிழ் பத்திரிகைக்கு வருமாறும் அவர்களுக்கு அதிக சம்பலம் வழங்கப்படும் எனவும் ‘சல்லியை சுண்டி’ இருக்கிறார் தோழர் டக்ளஸ் என கேள்விப்பட்டேன். அவர் ஏற்கனவே தினமுரசு எனும் வாராந்த பத்திரிகை நடாத்துவது தெரிந்ததே!

    Reply
  • rohan
    rohan

    “தமிழ்நாடாக இருக்கட்டும் அதைகடந்து வடக்காக இருக்கட்டும் இந்த முதாலிளித்துவ குணாம்சம் கொண்ட சினிமா படெளலகத்தால் அரசியலில் சருகைகூட நகர்த்த முடியாது. சல்லியை சுண்ட அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடிவார்கள்.” என்று ஒரு கருத்து வந்திருக்கிறது.

    இதுவரை அமிதாப் அபிஷேக் பச்சன்களையும் ஐஸ்வரியா ராயையும் பின் வான்க வைத்தது தமிழ்த் திரை உலகம் தான்.

    சீமான் போராட்டம் மூலம் செய்தாரா அல்லது ரஜனி செல்வாக்கு மூலம் செய்தாரா அல்லது combination of bothஆ அன்பது தெரியவில்லை. ஆனால், செய்திருப்பது என்னவோ நிஜம்.

    Reply
  • thurai
    thurai

    //இதுவரை அமிதாப் அபிஷேக் பச்சன்களையும் ஐஸ்வரியா ராயையும் பின் வான்க வைத்தது தமிழ்த் திரை உலகம் தான்.

    சீமான் போராட்டம் மூலம் செய்தாரா அல்லது ரஜனி செல்வாக்கு மூலம் செய்தாரா அல்லது சொம்பினடிஒன் ஒf பொட்கா அன்பது தெரியவில்லை. ஆனால், செய்திருப்பது என்னவோ நிஜம்.//றோகன்

    இந்தியப் படையினர் பின் வாங்கும்போதும் உந்தப்பெருமைப் பேச்சுத்தானே பேசினீர்கள். இப்ப இந்தியன் தான் எங்களை அழிச்சவன், இலங்கை ஆமிதனியாக என்றால் நாங்கள் விட்டிருக்க மாட்டம் என்று ஒப்பாரி இன்னமும் அடங்கவில்லை அறிவாளிகள் பின்வாங்குவது தற்பாதுகாப்பிற்கு பயத்திலோ அல்லது முட்டாள்தனமோ அங்கில்லை.

    துரை

    Reply
  • rohan
    rohan

    “அறிவாளிகள் பின்வாங்குவது தற்பாதுகாப்பிற்கு பயத்திலோ அல்லது முட்டாள்தனமோ அங்கில்லை.” / துரை.
    என்ன கருத்துக்கு என்ன பதில் சொல்லியிருக்கிறேன் என்று பார்ப்பது அறிவுடைமை.

    “தமிழ்நாடாக இருக்கட்டும் அதைகடந்து வடக்காக இருக்கட்டும் இந்த முதாலிளித்துவ குணாம்சம் கொண்ட சினிமா படெளலகத்தால் அரசியலில் சருகைகூட நகர்த்த முடியாது. சல்லியை சுண்ட அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடிவார்கள்.” / சந்திரன் ராஜா.

    “இதுவரை அமிதாப் அபிஷேக் பச்சன்களையும் ஐஸ்வரியா ராயையும் பின் வாங்க வைத்தது தமிழ்த் திரை உலகம் தான்.” என்றேன் நான்!

    துரையின் கருத்தின் ஆழத்தை அறியும் அளவுக்கு எனக்குத் தான் அறிவு போதவில்லையோ!

    Reply
  • thurai
    thurai

    தமிழ்த்திரையுலகில் புலிகளின் ஊடுருவல் உண்டென்பது யாவரும் அறிந்ததேயாகும்.அமுதாப்பச்சனையும், ஜய்ஸ்வரியாவையும் பின்வாங்க வைத்ததற்கு பக்க விளைவுகளுண்டு. இதனால் மேலும் பாதிக்கப்படுவது ஈழ்த்தமிழர்கள். ஈழத்திலும் பார்க்க புலம்பெயர் நாடுகளில் தமிழக சினிமாவிற்கு ஆதரவாளர் அதிகம்.

    எனவெ இந்த சலசலப்புகள் ஓர் புலிசார் விளம்பரங்களே தவிர அரசியலில் அணுவளவும் மாற்ரத்தைத் தராது.

    துரை

    Reply
  • BC
    BC

    இனிமேல் தமிழ்சினிமா புறகணிப்பு எல்லாம் கிடையாது. ரஜனி நமீதா புகழ்பாடுவது தேசியத்தின் கடமையாக கொள்ளவேண்டியது தான்.

    Reply
  • rohan
    rohan

    “தமிழ்த்திரையுலகில் புலிகளின் ஊடுருவல் உண்டென்பது யாவரும் அறிந்ததேயாகும். அமுதாப்பச்சனையும், ஜய்ஸ்வரியாவையும் பின்வாங்க வைத்ததற்கு பக்க விளைவுகளுண்டு.” என்று சொல்கிற துரை, புலி காட்டுவது மாதிரிப் பூச்சாண்டி காட்டாது, முடிந்தால் அப்படி இருப்பதாக அவர் சொல்ல வருகிற ஒரு பக்க விளைவைச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சவாலாக எடுத்துக் கொண்டாலும் சரி தான்.

    “இனிமேல் தமிழ்சினிமா புறகணிப்பு எல்லாம் கிடையாது. ரஜனி நமீதா புகழ்பாடுவது தேசியத்தின் கடமையாக கொள்ளவேண்டியது தான்.” என்று சொல்ல வருகிற , புலி ஆதரவாளர்கள் என்ன சொன்னாலும், தமிழ்த் திரை உலகம் கடந்த பல வருடங்களாக ‘ஈழத் தமிழர்’ தயவில் தான் ஓடுகிறது என்பதை அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். படம் எடுக்கவும் சரி பல டொலர்கள் பவுண்ஸ்கள் கொடுத்துப் பார்க்கவும் சரி திரைஉலக சிங்கன்களை அழைத்து ஷோ காட்டவும் சரி ஈழத் தமிழர்கள் தான் பெரும் பங்கு தருகிறார்கள். புலி அழைத்தால் ஓகே மற்றவன் அழைத்தால் பகிஷ்காரம் என்பது புலி விதி. அதற்கு ஒத்துப் போகவேண்டி இருந்தது தமிழன் தலைவிதி.

    Reply
  • thurai
    thurai

    //ஒரு பக்க விளைவைச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சவாலாக எடுத்துக் கொண்டாலும் சரி தான்//றோகன்

    இந்தியா புலிகள் மீதான தடையை அண்மையில் நீடித்தது யாவ்ரும் அறிந்ததேயாகும். சீமான் புலிகழுடன் தொடர்புள்ளவர் என்பது யாருக்கும் நாம் சொல்லித்தெரிய வேண்டிய்தில்லை. இவரே இந்த பகிஸ்கரிப்புகளிற்கு மூலகர்த்தா.

    உலக்முழுவதும் தமிழர் நலனிற்காக யார் குரல் கொடுத்தாலும் அது புலிகளின் குரல் என்பதே இலங்கை இந்திய அரசின் கருத்து. புலிகளிற்கு தங்களை விட வேறு யாரும் ஈழப்பிரச்சினையில் தலையிடப்படாதென்பதே இன்னமும் உள்நோக்கம்.

    இலங்கையில் இந்த விழா ஆரம்பிக்கு முன்பே த்ங்கள் எதிப்புகளை சுயமாக தென்னிந்திய,வட இந்திய நட்சத்திரங்கள் தெரிவித்திருந்தால் அதுவே ஈழ்த்தமிழர்களிற்கு கிடைத்த அனுதாபமும் வெற்ரியுமாகும்.

    இப்போ நடந்துள்ளது பயங்கரவாதத்திற்கு வட இந்திய நட்சத்திரங்கள் அடிபணிந்ததாகவே இந்திய அரசு கருதவும் நடவ்டிக்கைகள் எடுக்கவும் இடமுண்டு.

    துரை

    Reply