விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து, தடுப்பு முகமாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 200 சிறுவர்கள் 24-05-2010 வவுனியா நீதிமன்றத்தினால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த இச்சிறுவர்கள் இராணுவப் பாதுகாப்புடன் ஐ.நா. சிறுவர் நிதியப் பிரதிநிதிகளின் வழித்துணையுடன் நிதிமன்றததிற்கு அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளின் ஊடாக அங்கு வந்திருந்த பெற்றோர்களிடம் அச்சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
கொழும்பு இந்துக் கல்லூரியில் இவர்களுக்கான புனர்வாழ் வளிக்கப்பட்டதாகவும், இவர்கள் புனர்வாழ்வு நடவடிக்கையின் போது திருப்திகரமாக செயற்பட்டதாலும், போதுமான புனர்வாழ்வினைப் பெற்றுக்கொண்டதாலும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பம்மலப்பிட்டி இந்துக் கல்லூரியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புழந்தைப் போராளிகள் சில வாரங்களுக்கு முன் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இசை நிகழ்ச்சி ஒன்றினை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ( முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!) அம்பேபுச புனர்வாழ்வு முகாமில் இருந்து கொழும்பு இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட இச்சிறுவர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு லிற்றில் எய்ட் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ( http://littleaid.org.uk/ and http://littleaid.org.uk/gallery/musical-instruments-to-ambepusse-24th-july-2009 )