மன்னார் பிரதேசத்திலுள்ள எண்ணெய் வளம் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் நடவடிக்கையில் இந்தியக் கம்பனி ஒன்று ஈடுபடவுள்ளது என்று பெற்றோலிய வளத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார். இதற்கான விலைமனுக் கோரல் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி மார்ச் மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.