இடி, மழையுடன் கூடிய காலநிலை தொடரும் – 60 கி. மீ. வேகத்தில் காற்றும் வீசும்

lightning.jpgநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வ துடன் இடியுடன் கடும் காற்றும் வீசக் கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

குறிப்பாக மேல் மாகாணம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக் கிடை மழை பெய்யுமெனவும் மாலையில் மத்திய, ஊவா மாகாணங்களில் கடும் மழை பெய்யுமெனவும் மேற்படி நிலையத் தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசுவதுடன் சிலவேளைகளில் 60 கிலோ மீற்றர் கடல் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவித்த அவர், கடற்றொழிலில் ஈடுபடுவோர் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியமெனவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் சூறாவளி இடம்பெற வாய்ப்புகளில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *