”யாழ் நகரை அபிவிருத்தி செய்ய தமிழ் மக்கள் முன்வரவேண்டும்” என யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் May 16 2009 ரிபிசியில் நடைபெற்ற அரசியல் கலந்துதுரையாடலில் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
”அண்மைக்காலத்தில் யாழ்.மாவட்டத்தில் நடந்த கடத்தல் முயற்சிகளில் பல தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளும் காதலர்களின் சட்டவிரோத திருமண முயற்சிகளுமேயாகும். எனினும் இவற்றை யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர்ப் பத்திரிகைகள் சில கடத்தல் சம்பவங்கள் என்றே செய்திகளைப் பிரசரித்து நாடுகடந்த தமிழ் ஈழ் அரசிற்க்கு ஆதரவு தேடும் முயற்சிற்களில் ஒன்றாகவே காணபடுகிறது.
யாழ் மாநகர சபையின் துணை முதல்வர் கைது என்பது ஒரு மொட்டை கடிதத்தை கொண்டே கைது செய்யபட்டுள்ளார். அது தொடர்பாக மக்களின் வேண்டுகோள்ளுக்கு இணங்க நீதிதேவதை நீதி வழங்க என்ற அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன் தவிர நீதிதுறை நான் விமர்சிக்கவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்
”இந்தியாவின் அணுசரனையுடன் ஜனாதிபதி இன்னும் மூன்று மாதகாலத்திற்க்குள் 13வது அரசியல் திருத்த சட்டத்தை அமுல் படுத்துவதுன் ஊடாக முழுமையான தீர்வு ஒன்றை காணவுள்ளதாக ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளலஸ் தேவநந்தாவுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியதாக தெரிவித்துள்ளார். மிகவும் பலமான அமைப்பான விடுதலை புலிகளால் கூடு தமிழ் ஈழ விடுதலை வெற்றி பெறமுடியாவில்லை மற்றவர்களால் எவ்வாறு தமிழ் ஈழ அடையமுடியும்” என யாழ் மாநகர முதல்வர் கேள்வி எழுப்பினார்.
நல்லூர் ஆலய பகுதிகளில் தற்காலிகமாக நடைபாதை வியாபாரிகளுக்கு மக்களின் உடனடி தேவைகளுக்காக தற்காலிகமாக அனுமதி வழங்கபட்டிருந்தது ஆனால் இப்பொழுது அப்பகுதி முழுமையாக புனிதபடுத்தபட்டிருப்பாதாகவும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் தெரிவித்தார்.
pandithar
கல்வித்தூண்களை தூக்கி நிறுத்திய ஆசிரிய சிற்பி!….யாழ் மாநகரமாதா.. மனச்சாட்சிக்கு மாறாக எதையும் சொல்ல மாட்டார் என்பது நம்பிக்கை…
பல்லி
//மனச்சாட்சிக்கு மாறாக எதையும் சொல்ல மாட்டார் //
அப்படியா?? அப்போ இந்த பேட்டியின்போது அவர் வீட்டில் தனது அந்த சாட்சியை (அதே மனசாட்ச்சியைதான்) மறந்து விட்டு விட்டு வந்து
விட்டாரோ??
சாந்தன்
//…”யாழ் நகரை அபிவிருத்தி செய்ய தமிழ் மக்கள் முன்வரவேண்டும்” …//
இலக்சன் ரைமில் எல்லாம் ‘அதி உத்தம ஜனாதிபதி செய்வார்’ எண்டியள் , இப்ப அவர் கைவிரிச்சிட்டார் போல கிடக்கு!
//…”அண்மைக்காலத்தில் யாழ்.மாவட்டத்தில் நடந்த கடத்தல் முயற்சிகளில் பல தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளும் காதலர்களின் சட்டவிரோத திருமண முயற்சிகளுமேயாகும்….//
தனிப்பட்ட பழிவாங்கல் சரி, ஆனால் எந்த ’ஈபிடிபி’ உறுப்பினரின் ‘தனிப்பட்ட’ என்று சொன்னால் இன்னும் நல்லது.
/…எனினும் இவற்றை யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர்ப் பத்திரிகைகள் சில கடத்தல் சம்பவங்கள் என்றே செய்திகளைப் பிரசரித்து நாடுகடந்த தமிழ் ஈழ் அரசிற்க்கு ஆதரவு தேடும் முயற்சிற்களில் ஒன்றாகவே காணபடுகிறது…//
அப்ப யாழ்ப்பாணத்திலும் நாடுகடந்த தமிழீழத்துக்கு சப்போட் இருக்கு. யாழ்ப்பாணச்சனமும் ‘தனிப்பட்ட’ ‘காதல்’ சம்பவங்களை பேப்பரை கண்மூடி வாசித்து விட்டு நாடுகடந்த அரசுக்கு சப்போட் பண்ணுகிறார்கள் என்கிறியள்.
எல்லாம் சரி இலக்சன் ரைமில உங்கட கட்சி வாகன எரிப்பு, தலைமயிரைப் பிடித்து இழுப்பு எல்லாம் எந்த ‘காதல்’ பிரச்சினை?
வர வர நீங்கள் கருணாநிதி லெவலுக்கு வாறியள். அவர்தான் மாறன்/அழகிரிப்பிரச்சினை எல்லாம் தனிப்பட்ட பிரச்சினை என கதை விட்டவர்.
//… அது தொடர்பாக மக்களின் வேண்டுகோள்ளுக்கு இணங்க நீதிதேவதை நீதி வழங்க என்ற அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன் தவிர நீதிதுறை நான் விமர்சிக்கவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்…//
போடீங்களே ஒரு போடு “மக்களின் வேண்டுகோளுக்கிணங்க” எண்டு, சொல்லி மாளாது!! அதே மக்கள் நாடுகடந்த அரசை பேப்பர் வாசிச்சு நம்பியிடுவினம் எண்டு வேற சொல்லுறியள்!
//…”இந்தியாவின் அணுசரனையுடன் ஜனாதிபதி இன்னும் மூன்று மாதகாலத்திற்க்குள் 13வது அரசியல் திருத்த…/
அதென்ன எல்லோரும் ஒரு ‘3 மாத’ கணக்கு? சங்கரியரும் சொல்லிறார், ஜனாதிபதி சொன்னவர் எண்டு டக்ளஸ் சொன்னார் எண்டு நீங்கள் சொன்னனியள் எண்டு ரீ.பீ.சி சொன்னதெண்டு தேசம் சொல்லுது!
ஏன் உங்களுக்கு ஜனாதிபதி நேரடியாக சொல்ல மாட்டாரோ?
//….மிகவும் பலமான அமைப்பான விடுதலை புலிகளால் கூடு தமிழ் ஈழ விடுதலை வெற்றி பெறமுடியாவில்லை மற்றவர்களால் எவ்வாறு தமிழ் ஈழ அடையமுடியும்” என யாழ் மாநகர முதல்வர் கேள்வி எழுப்பினார்…..//
இதென்ன புதுக்கதை, புலிகள் பலமற்ரவர்கள் மக்கள் ஆதரவற்றவர்கள் எண்டெல்லோ எல்லோரும் பிரச்சாரம் செய்தனியள். அப்ப பலமான புலியளை ஏன் எதிர்த்தனியள். இன்னும் கொஞ்ச நாள் தான் உங்களுக்கும் இருக்கு. ஏற்கனவே வீணை போயிட்டுது….
/…முழுமையாக புனிதபடுத்தபட்டிருப்பாதாகவும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் தெரிவித்தார்…//
அப்போ நடைபாதை வியாபாரம் ‘புனிதமில்லை’ என்கிறியள். பாவம் ஏழை வியாபாரியள் உங்களைப்போல் அரசுடன் கூடி கடத்தல் கொலை செய்து தம்மை‘புனிதப்படுத்த்’ அவர்களால் ஏலாது!
samy
முந்தி உயிரோடை இருந்த புலியைச் சொல்லி தம் பிழைப்பை அரசியல்வாதிகள் பார்த்தார்கள். இப்ப செத்த புலியை சொல்லி வாழ்கிறாங்கள். எப்பவும் ஏதோவொரு காரணம் அகப்படும் அதைவைத்து பிழைக்கலாம்.
ram
எல்லோரும் புலியின் நிழலில் நின்று அரசியல் செய்தார்கள் இன்று புலி இல்லை என்றவுடன், இவர்கள் பாடு அந்தோ கதிதான். கேட்கவும் ஏலாது, சனங்களுக்கு சொல்லவும் ஏலாது … பாவங்கள்.
அங்கே சேர்ந்து நின்று புலி அழித்தவையெல்லாம் இன்று, சுடு சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த நிலையாம். ஆனால் என்ன கொஞ்சம் கொஞ்சம் அடிக்க ராஜபக்ஸ குடும்பம் இவையளையும் விட்டிருக்குதாம