யாழ்.மாவட்டத்தில் நாளை 18ம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ள 342 பொலிஸாருக்கும் யூன் மாதம் முதலாம் திகதி களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லாரியில் பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ். பொலிஸ் நிலைய அத்தியட்சகர் மென்டிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில், யாழ்.மாவட்ட தமிழ் இளைஞர்; யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரிட்சையில் மருத்துவ சோதனையில் பங்கேற்றவர்களில் 342பேர் பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 22 பெண்களும். 320 ஆண்களும் அடங்குகின்றனர் எனக்குறிப்பிட்டுள்ளார்.