காணாமல் போனோர், சிறைக் கைதிகள் தொடர்பாக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்.

Disappeared_Families_20007காணாமல் போனோர் மற்றும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை 18ம் திகதி வவனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக மறியல் போராட்டம் நடத்த ‘காணாமல்போனோரைத் தேடியறியும் குழு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இக்குழுவின் இயக்குநர் சு.மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ள நிலையில், நாம் அரசாங்கத்திற்கு இதனை விளக்கி வந்துள்ளோம். இதுவரை எமது அமைப்பிற்கு எத்தகைய பதிலையும் அரசாங்கம் வழங்கவில்லை. யுத்தத்தின் பாதிப்பினால் மக்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழந்த நிலையில் துன்பச்சுமையுடன் வாழந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எதவித நீதிவிசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்றும் ஒரு இலட்சம் பேர் வரையிலான மக்கள் முட்கம்பிவேலிகளுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். வெளியேறிய இரண்டு இலட்சம் மக்கள் எதுவித பாதுகாப்புமின்றி பரிதவிக்கின்றனர். இத்தகைய துயரமான நிலையில் அரசாங்கம் யுத்த வெற்றியின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்பாகவும், சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கவனத்தை ஈர்க்க நாளை 18ம் திகதி செவ்வாய் கிழமை வவுனியா மாநகரின் பஸ்நிலையத்திற்கு முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளோம். எனவே காணாமல் போனோரின் உறவினர்களும், சிறைக் கைதிகளின் உறவினர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது உறவுகளை மீட்டெடுக்க எம்மோடு கைகோர்த்து செயற்படும் படி வேண்டுகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • Pandiyan
    Pandiyan

    என்ன இந்த விடயத்திற்கு ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை. புலியை திட்டி எழுதினால் தான் மாத்திரம் விடுவார்களோ! முன்பு மனித உரிமை காப்பகம் விட்ட அறிக்கைகளை( புலிக்கெதிராக)தூக்கிப் பிடித்து கூட்டங்கள் போட்ட எனது நண்பர்கள் அண்மைய அறிக்கை (அரசுக்கெதிரான) பற்றி மூச்சும் விடாதது ஏன்?

    எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து பூஸா முகாமிற்கு கூட்டம் கூட்டமாக பிடித்துச் செல்வதில் இருந்து காணாமல் போன எம்மக்களை பற்றி ஏதேனும் பேசினால் ஜேவிபி இளைஞர்களும் இவ்வாறு காணாமல் போனார்கள் என பதில் வருகிறது. அதன் மறுதலை அப்பாவி சிங்கள இளைஞகள் காணாமல் போனால் தமிழ் இளைஞர்களும் அவ்வாறே என்பது போலல்லவா இருக்கிறது. உதாரணமாக மட்டக்களப்பில் ஒருவரை இருபது வயதுகளில் பிடித்துச் சென்று நாற்பது வயதின் இறுதிப்பகுதிகளில் விடுதலை செய்த போது அவரின் மகளுக்கே திருமணமாகி பேரப்பிள்ளையும் கிடைத்திருந்தது என்பது மூன்று வருடங்களுக்கு முன் வந்த செய்தியை எல்லோரும் இலகுவாக மறந்து விட்டார்கள்.

    Reply
  • Pandiyan
    Pandiyan

    கூட்டமைப்பின் அரசியல் பற்றி ஆயிரம் விமர்சனம் எமக்குண்டு. இங்கே செய்தியில் குறிப்பிடப்பட்டது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைப் பற்றியே. எனவே அது பற்றி சில கருத்துக்களை வைப்போம். முகாம்கள் திறந்து விடப்பட்டு விட்டன மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்கள் தான் வேறு உதவிகள் இல்லாதபடியால் முகாமை விட்டு போகின்றார்கள் இல்லை. எல்லோரும் போய் பார்க்க கூடியதாக உள்ளது. பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் மலை குவித்து விடப்பட்டுள்ளது என்றெல்லாம் பலரும் வக்காலத்து வாங்குகிறார்கள். ஆனால் கூட்டமைப்பினரை மாத்திரம் உள்ளே விடமாட்டார்களாம்.

    தென்னிலங்கையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எனது அருமைச் சகோதரர்களுக்கு ஐம்பதாயிரம் கொடுக்கப்படுவதாக மந்திரி பெளசி கூறுகிறார். தானே குண்டை வீசி அகதியாக்கி விட்ட வன்னி சகோதரர்களுக்கு இருபத்தையாயிரமே வழங்கப்படுகிறது.சந்திரன்ராஜா அவர்களே இது நியாயமா?

    காணாமல் போனோர் மற்றும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் பற்றிய செய்திக்கு அட ஒருவர் கூட பின்னூட்டம் விடவில்லை. பந்து சரியாக போட்டுத்தந்தால் தானோ சிக்ஸர் அடிப்பீர்கள் தோழரே!

    “ஒருசார் தமிழ் மக்களின் பிற்போக்கு தனத்தையே வெளிப்படுத்துகிறது.”

    இந்தக் கருத்தானது நாங்கள் சொல்லும் நபருக்கே வோட்டுப் போட வேண்டும் என்ற புலிப்பாணி அரசியலையே காட்டுகின்றது. தென்னிலங்கை மக்களும் 77 ல் ஏகாதிபத்தியங்களின் அடிவருடி ஜெயவர்த்தனாவுக்கு ஏகோபித்த வாக்கைப் போட்டது மட்டுமல்ல ரொஸ்கியவாதிகளான என்எம் பெரேரா கொல்வின் ஆர் டி சில்வா போன்றோரை தோற்கடித்ததற்காகவோ அல்லது நிக்கரகுவாவில் டானியல் ஒட்டோவாவையோ முதல் தேர்லில் தோற்கடித்தற்காகவோ நாம் அந்த மக்களை பிற்போக்குவாதிகள் என கூறக் கூடாது.

    Reply
  • NANTHA
    NANTHA

    புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்களின்/ கொல்லப்பட்டவர்களின் நிலை பற்றி யாரும் அழவில்லை. தற்போது “பிடித்துச்” செல்லப்பட்ட/காணாமல் போன புலிகளுக்காக யார் அழப்போகிறார்கள்?

    வன்னி மக்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படுவது பலருக்கு தெரியவில்லைப் போலிருக்கிறது!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    யுத்தத்தில் ஜனனம் ஏற்படுபதில்லை. மரணம் தான் ஏற்படுகிறது. மேற்சொல்லப்பட்ட வீடியோ காட்சி முள்ளிவாய்காலில் ஏற்பட்ட இறுதியுத்தத்தில் விதுசா தீபன் உட்பட்ட பலபத்து முக்கிய தளபதிகள் உட்பட ஐந்நுhறு போராளிகள் ஒரே குண்டுவீச்சில் கொல்லப்பட்ட காட்சியே!
    இதில் தான் பொட்டம்மான் “எல்லாம் எம்கையைவிட்டு போய்விட்டது” என்று வாய்விட்டு அழுதாக சொல்லப்படுகிறது. இதன் பிறகே மணைவியும் இவரும் தற்கொலைசெய்து கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது…..?.

    மரணம் யாருக்கும் கவலையளிப்பதே! இன்னும் யுத்தம் ஆறுமாதங்கள் நீடித்திருந்தால் மூன்று லட்சம் அப்பாவிமக்களில் இரண்டு லட்சத்தை காவு கொடுத்திருப்பார்கள் என்றும் எண்ணத் தோன்றுகிறது. பிரபாகரன் வன்னிமக்களை விரட்டிஅடித்து கூட்டிச் செல்லவில்லை. பிரபாகரன் மேல் சத்தியம்செய்து தமிழ்ழீழம் என்னும் “பாதாளமூலிகையை” தேடிப் போனவர்கள் தான் விரட்டிச் சென்றவர்கள். வாழத் தப்பியோடச் சுட்டவர்களும் இவர்களே!
    பிள்ளையை தூக்கிகொண்டு இராணுவகட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் பொழுது புலிகளின் குண்டுபட்டு பிள்ளை பிணமாக தகப்பனின் கையில் இருந்தது. இதில் பலாத்காரமாக இணைக்கப்பட்டு வேறுவழியில்லாதால் புலியாக வேஷம் போட்டு நடிக்கும் போது அவர்களும் மரணம் ஆனார்கள் என்று எண்ணும் போது யாருக்குத்தான் மனம்சுமையில்லாமல் இருக்கும். இருந்தாலும் சயினட்டையும் துப்பாக்கியையும் தூக்கியெறிந்துவிட்டு முகாம்மை வந்தடைந்த புலிகளையும் அவர்கள் எதிர்காலத்தை எண்ணி அக்கறை கொள்வதில் அர்த்தம் உண்டு. ஆனால் இந்த வீடியோ காட்சிகளில் அல்ல.

    Reply
  • Pandiyan
    Pandiyan

    இது வரை வெளிவந்து நான் அறிந்து கொண்ட செய்திகளின்படி காணி உறுதி உள்ளவர்களுக்கு இருபத்தையாயிரம் ரூபாவும் காணி உறுதி இல்லாதவர்களுக்கு ஐயாயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது என அறிந்துள்ளேன். நண்பர் புதியவனும் ஒரு சந்திப்பில் இத்தகவலை தெரிவித்திருந்தார். தவறாக நான் கூறியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

    அரசு தரப்பில் விடப்படும் குறை குற்றங்களை சுட்டிக்காட்டுவதன் மூலமே மக்களுக்கு சரியான உதவிகள் சேவைகள் போய் சேரும். அதை விடுத்து இவற்றை மறைப்பதன் மூலம் பிரபாகரன் ஆரம்பத்தில் பிழை விடும் போது கேட்காமல் இருந்து பிரபாகரன் விஸ்வரூபம் எடுத்தது போன்ற நிலை எமக்கு வந்து விடும்.

    கடந்த ஞாயிறு 16.05 10 ல் தாய் தகப்பனற்ற குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு வன்னியில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவருடன் (அவரது பாதுகாப்புக் கருதி பெயர் விபரங்களை குறிப்பிட விரும்பவில்லை. தேவையெனில் ஜெயபாலனிடம் தெரிவிக்கிறேன்.) பேசிய பொழுது அவர் சொன்ன எண்ணிக்கை ஒரு உதவி அரசாங்க அதிபர் பகுதியில் மாத்திரம் கிட்டத்தட்ட 600 குழந்தைகள் தாய்; தகப்பன் அற்று இருப்பதாக கூறினார். எனவே போரின் கோரத்தையும் எவ்வளவு பேர் கொல்லப்படடிருப்பார்கள் என்பதையும் உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். மேலும் இங்கிருந்து பணம் அனுப்பிய போது அதை வன்னியில் பெற்றுக்கொள்ள கூட முடியவில்லை. ஏனெனில் வங்கிகள் இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கின்றன என கூறுகின்றனர்.

    கடந்த திங்கள் 17.05.10 தருமபுரம் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்ட மக்களுக்கு பரந்தன் எம்பிசிஎஸ் இனர் அரிசியும் பலாக்காயும் சேர்த்து அவிக்கப்பட்ட புளிக்கஞ்சி போன்ற ஓரு உணவை சொப்பிங் பைகளில் போட்டு கொடுத்தார்கள். தயவு செய்து பட்டு சேலையுடன் அகதிகளை பார்க்கப் போகும் உயரதிகாரிகள் இதை கவனிக்கவும்.

    Reply
  • Ajith
    Ajith

    “காணாமல் போனோர் மற்றும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும்
    போராட்டம்”
    The above is the title of the news.
    This is a comment by Nantha: Can we see any relevance here. You may have seen the same lie again and again.
    வன்னி மக்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படுவது பலருக்கு தெரியவில்லைப் போலிருக்கிறது!.

    What does it mean. UN gives Rs. 50000 to the government. The government takes Rs 45,000 and gives Rs 5000 to the refugees.
    Recently, JVP announced over 40,000 Sri Lankans including Sinhalese and tamils) were missing. Every one knows it is Rajapakse government and EPDP does this. But these persons do not want to speak the truth and repeatedly talk irrelevant things.

    Reply