மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை என கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுய விருப்பின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும், இதனால் கட்சிக்கு நன்மைகள் கிட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தனி ஒரு நபரின் கட்சியாக உருவெடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஒரு கண்கட்டி வித்தை எனவும், மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை எனவும் காதர் தெரிவித்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் கட்சித் தலைமையுடன் இணைந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.