பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் கொழும்பில் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்ளமாட்டார். சென்னையில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். ராவணன் படத்தின் விசேட காட்சி ஒன்று அந்த நிகழ்வில் காண்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். ஆயினும் தயாரிப்புக்குப் பின்னரான வேலைகள் பூர்த்தியடையும் வரை அந்தத் திரைப்படம் திரையிடப்படாது.
ராவணன் படம் ஜூனிலேயே தயாரித்து முடிக்கப்படும். நான் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டேன் என்று மணிரத்தினம் கூறியதாக இந்தியா கிலிட்ஸ் தெரிவித்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்தகொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, அவரின் தீர்மானத்தில் தான் தலையிட முடியாது எனவும் அது அவரின் விருப்பம் என்றும் அதாவது பங்குபற்றுவதா இல்லையா என்பது அவரின் விருப்பம் எனவும் மணிரத்தினம் கூறியுள்ளார்.