முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட 31 கிராமசேவகர் பிரிவுகளில் எதிர்வரும் 10ஆம், 12ஆம் திகதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முல்லை மாவட்டத்தின் அரசாஙக அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். கரைதுறைப்பற்று பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள 18 கிராமசேவகர் பிரிவகளில் முதற்கட்டமாக மிள்குடியேற்றம் நடைபெறவள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வவனியாவில் முகாம்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வசித்துவரும் மக்கள் எதிர்வரும் 10ஆம், 12ஆம் திகதிகளில் காலை 7 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தருமாறு முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.