தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் ஆரம்ப காலங்களிலேயே தடம்புரண்டு விட்டது. அதன் பின்பு நடைபெற்றது ஆயுதத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்டது விடுதலைப் போராட்டம் என்பதிலும் பார்க்க அதிகார வெறியுடனான போராட்டமாகவே அமைந்தது. இந்த அதிகார வெறிக்கான போராட்டத்தில் வே பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றையவர்களை வெற்றி கொண்டு வன்னி மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்து அழித்தொழித்தனர் அல்லது இலங்கையரசு அழித்தொழிப்பதற்கு உதவினர். இந்த அழித்தொழிப்பு வரலாறு அதனுடன் நிற்கவில்லை. ‘தமிழீழத் தேசியத் தலைவர்’ பெற்றுத் தராத தனித்தமிழீழத்தை அவரின் தடங்களைப் பின்பற்றி பெற்றுத் தருகிறேன் என்று மே 18க்குப் பின் உருவான மதிஉரைஞர் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழம் என்று கலையாட ஆரம்பித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் அழிவு இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் அழியும்வரை போராடி முழுத் தமிழர்களையும் இல்லாதொழிக்காமல் பாதுகாக்கப்பதற்கு உதவியுள்ளது என்பது யதார்த்தம். இன்னும் சில பத்து ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்ந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் என்ற இனம் இருந்தது என்பதே வரலாறாகி இருக்கும். அது தற்போது தடுக்கப்பட்டு உள்ளது. அதனால் தற்போது எமக்கு இருக்கின்ற வளங்களை இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இன்று வெளிநாடுகளில் பேசப்படுகின்ற நாடுகடந்த தமிழீழம் என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்களை ஏமாற்றுகின்ற அரசியலின் ஒரு தொடர்ச்சியே. உருத்திரகுமாரனின் சன்றைஸ் வானொலிப் பேட்டியின் போது கூறப்பட்ட கருத்துக்களின்படி புலிகள் ஒரு நிழல் அரசை வைத்திருந்தாகவும் அதன் போராட்ட தொடரச்சியையே இன்று இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற அமைப்பினர் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். தமிழ்ப்பிரதேசங்களில் புலிகளின் படை என்ன செய்தது என்பதும் இன்று வெளிநாடுகளில் இந்த நாடு கடந்த தமிழீழப் படை என்ன நடாத்தி முடிப்பார்கள் என்பதும் எதிர்வுகூறக் கூடியதே.
வணங்கா மண், கண்ணீர் வெள்ளம் போன்ற இன்னோரன்ன நிதி சேகரிப்புக்கும் அதற்குக் கணக்குக் காட்டுவதற்கும் இவ்வாறான அரசியல் சதிராட்டங்கள் அவசியம். ‘நாடு கடந்த தமிழீழம்’ என்றும் ஜனநாயகம் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் தமிழர்களின் நலன்களில் அக்கறை காட்டி தமது சுய தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். இப்படியானவர்களை வணங்கா மண் மூர்த்தி தொடக்கம் இல்போர்ட் பிள்ளையார் கோயில் செல்வராஜா வரை இப்பட்டியல் மிக நீளமானது. நாட்டுக்கு நாடு தனித்தனிப் பட்டியல் உண்டு.
இதைவிட புலிகள் அழிக்கப்பட்டு ஒரு வருடமாகும் இந்த சூழ்நிலைகளை மிகத்தந்திரமாக பயன்படுத்தி நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு ஒரு தேர்தல் வைக்கப்படுகின்றது. ‘தேசியத் தலைவர்’ இன் இறுதியாணை நிறைவேற்றியுள்ளதை காட்டி மீண்டும் நிதி சேகரிக்க ஆரம்பிக்கவே இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ உதவப் போகின்றது என்பதே வெளிப்படையான உண்மை. இதில் பல முன்னணிக் கொள்ளையர்கள் சில உள்ளுர் கொள்ளையர்களை இப்போது அமர்த்தி இந்த நாடு கடந்த அரசு உருவாக்கம் என்ற நாடகத்தை தொடக்கிவிட்டு பின்னர் தாமே நேரடியாக களமிறங்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
சர்வதேச சட்டதிட்டங்களைப் படித்து சர்வதேச ஜனநாயக நாடுகளில் பல வருடங்களாக வாழ்ந்த உருத்திரகுமாரன் மக்கள் அமைப்புக்கள், மக்கள் போராட்டம் என்பது என்ன? மக்களின் பங்களிப்பு என்பது என்ன? என்ற அர்த்தம் புரியாமலே வானொலியில் பேசினாரா? அல்லது இவரும் மோசடியில் இணைந்து செயற்ப்படுகிறாரா? என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.
சன்றைஸ் வானொலியில் ஒருவரின் கேள்வியில் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று கூறும் உருத்திரகமாரன் ஏன் தமிழர்க்கும் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று இருக்காமல் ‘நாடுகடந்த தமிழீழம்’ என்று இயங்குகின்றார்.
இந்த நாடு கடந்த தமிழீழம் என்பது ஆரம்பிக்கப்பட்டது எப்படி? எந்த ஜனநாயக அடிப்படையில் இது உருவாக்கப்படடது? போன்ற விபரங்களை எந்த நாடு கடந்த தேர்தல் வேட்பாளர்களும் பேசுவதாக இல்லை. மாறாக இவர்களது விளம்பரங்களை பார்த்தால் இவர்கள் தமது சுய நலத்தின் அடிப்படையிலே பிரச்சாரங்களை செய்கிறார்கள். இவர்களால் மக்களுக்கு செய்த சேவைகள் பற்றி சொல்லவதற்கு எதுவுமே இல்லை. இவற்றைவிட இதில் சிலர் முன்னணி கிரடிற்காட் மற்றும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள்.
‘புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. போராட்டம் தொடரப்பட வேண்டும்’ என்பதே உருத்திரகுமாரனின் கருத்தாக இருக்கிறது. போராட்டம் எங்கே என்றால் ‘புலம்பெயர்ந்த நாட்டில்’ நடக்குமாம். நாடுகடந்த தமிழீழம் என்பதை தான் உருத்திரகுமார் போராட்டம் என்கிறார். தமிழீழம் யாருக்கு என்றால் என்றால் அது தாயகத்தில் உள்ள மக்களுக்காகவாம். இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு வாய்க்கால் வெட்டுகிறார்கள் என்ற அச்சம் நியாயமானதே. இம்முறை உருத்திரகுமாரன் தலைமையில் இந்த முள்ளிவாய்க்கால் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் புலிகளின் போராட்டம் பற்றிய எந்தவித மதிப்புக்களும் இல்லாமல் புலிகளின் பணங்கள் விபரங்கள் சொத்துக்கள் பற்றியோ யார் இவற்றிக்கெல்லாம் இன்று பொறுப்பானவர்கள் பற்றியோ எந்தவித பேச்சுக்கள் இல்லாமல் சிலர் ஒளித்திருந்து இந்த நாடுகடந்த தமிழீழத்தவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். திரைமறைவில் இருப்பவர்கள் யார்? இவர்கள் யாருடன் தொடர்புடையவர்கள்? போன்ற விபரங்களை வெளிப்படுத்தாவிட்டால் பிறகு எப்படி ஜனநாயக அமைப்பு, அது, இது என்று பேசுகிறார்கள். அது மட்டுமல்ல இவையாவும் மக்கள் போராட்டம் என்று உருத்திரகுமாரன் பேசுகிறார். இது உருத்திரகுமாரனுக்கு மக்கள் போராட்டம் என்றால் என்ன என்று விளங்கவில்லை என்பதேயாகும். இவர் சன்றைஸ் வானொலியில் பேசும் போது ‘புலிப் போராளிகள் மக்களிடமிருந்தே வந்தனர். ஆகவே இது மக்கள்’ போராட்டம் என்றார். இவர் சுருக்கமாக ‘தலைவர்’ தமிழ் மக்களிடமிருந்தே வந்தார் ஆகவே இது மக்கள் போராட்டம் என்று சொல்லியிருக்கலாம்தானே.
இதர தமிழ்க்கட்சிகள் ரிஎன்ஏ மற்றும் திம்பு பேச்சவார்த்ததையில் ஈடுபட்ட அமைப்புக்களிடம் எந்தவித கலந்தாலோசனைகளும் இல்லாமல், இதர தமிழ்க் கட்சிகளுடன் எந்த ஒரு கூட்டிணைவையும் ஏற்படுத்தாமல் அல்லது அதற்கான முயற்சிகளையும் செய்யாமல் நாடு கடந்த தமிழீழம் மீண்டும் ஏகபிரதிநிதித்துவம் பாணியில் புறப்பட்டு உள்ளனர். இந்த நாடுகடந்த தமிழிழத்துக்கான ஆணைபெறல் என்பது புலிகள் பாணியிலான ஏகபோக பிரதிநிதித்துவம் என்ற சண்டித்தனமேயன்றி வேறேதுமில்லை.
‘இந்த நாடு கடந்த தமிழீழத்தை தாயகத்துக்குள் புகுத்துவதற்கு ஒரு இடைவெளியை சர்வதேசம் ஏற்படுத்தும்’ என்றும் ‘இந்த இடைவெளியை உருவாவதற்கு சர்வதேச சமூகத்திலும் இந்திய பிராந்தியத்திலும் உள்ள சர்வதேச மயமாக்கலில் ஏற்படவுள்ள சீன இந்திய உறவு விரிசல்களை உருவாக்கும்’ எனவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார். இவர்கள் இதனை நம்பியே ‘மக்கள் போராட்டத்ததை’ நடாத்துகிறார்கள். இவர்களும் நிலத்தை தொடாத ஆணி வேர்களேயாகும். ‘இன்று நாட்டிலுள்ள தலைமைகள் ரிஎன்ஏ இந்தியாவின் கையாட்கள்’ என்றும் ‘இலங்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லை’ என்றும் ‘வெளிநாடுகளிலேயே இந்த உத்தேச தமிழீழத்தை வளர்க்க வேண்டும்’ என்றும் உருத்திரகுமாரன் கருத்துப்பகிர்வு செய்வதன் மூலம் மக்களைத் தொடாத மக்கள் சம்பந்தப்படாத ஒருவிடயத்தை மக்கள் மீது திணிப்பதாகவே உள்ளது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழ் இளைஞர்க்கு ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே ஆயதப் போராட்டத்தை புலிகள் நடத்தியதாகவும் இன்று அதன் மற்றுமொரு வடிவமாகவே இந்த நாடு கடந்த தமிழீழம் அமைக்கப்படுவதாகவும் உருத்திரகுமாரன் கருத்து தெரிவித்தார்.
‘இந்த ஆயுதப் போராட்டத்திற்கு புலிகளுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஒரு புலிகளின் நிழல் அரசு இருந்ததாகவும் இதில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் இதில் புலிகள் இன்று ஆயுதங்களை மெளனித்துள்ளதாகவும்’ உருத்திரகுமாரன் தெரிவிக்க முயன்று ‘புலிகளின் தலைவர் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார். மக்கள் போராட்டத்தில் மக்கள் தலைவருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லத் துணிவில்லாதவரை நம்பி இத்தனை வேட்பாளர்கள் தமது சுயமரியாதையை இங்கே இழக்க உள்ளனர்.
இதே வானொலி நிகழ்வில் யூத மக்கள் பெருந்தொகையாக கொல்லப்பட்ட பின்பே இஸ்ரேல் உருவானதாகவும் இதேபோல் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருப்தாகவும் தமிழீழம் மலரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் உருத்திரகுமாரன்.
இந்த உருத்திரகுமாரின் பேச்சில் இவரும் முள்ளிவாய்யகாலில் பெருந்தொகையாக மக்கள் கொல்லப்பட்டதிற்கு புலிகள் மக்கள் இருப்புக்களின் மீது தாக்குதல் நடாத்தி மக்களை கொலை செய்ததற்கும் தொடர்புடையரவாகவே தென்படுகின்றுது. ஜபிசி-வானொலி, ஜிரிவி, தீபம் தொலைக்காட்சி சேவையினர் இந்த தமிழ் மக்களை தொகையாக கொலைக்களத்தில் தள்ளியதில் தொடர்புடையவர்களே. இவர்கள் புலம்பெயர்நாட்டில் இருந்து கொண்டு தமது சுயநலனுக்காக இளைய தலைமுறையினரை உசுப்பிவிட்டதில் பெரும்பங்கு கொண்டவர்களாகும். இப்போது இவர்கள் மீண்டும் நாடு கடந்த தமிழிழத்திற்கான குத்தகையை பெற்றுக் கொண்டுள்னர். இன்று இவர்கள் ‘மக்கள் ஆணை’ என்றும் ‘மக்கள் தீர்ப்பு’ என்ற பொய்யான பிரச்சாரங்களை தொடக்கிவிட்டுள்ளனர்.
ஜிரிவி, ஜபிசி, தீபம் அமைப்பினரும் புலிகளால் மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் பங்கு போட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்து இதில் குறிப்பாக முதலாம் கட்ட போர் நிதியிலிருந்து கண்ணீர் வெள்ளம், வணங்காமண், இறுதிக்காலப் போர்நிதி தமிழீழ காப்புறுதி என பலவகைப்பட்ட நிதி சேகரிப்புக்களுக்கு செய்யப்படும் பிரச்சாரங்கள் புலி இணைவு ஊடகங்களான இவர்களாலேயே மக்கள் ஏமாற்றப்பட்டதாகும்.
‘நாடு கடந்த தமிழீழம் கடந்தகால புலிகளின் போராட்ட தொடர்ச்சி’ என்று கூறும் உருத்திரகுமாரன் ‘கடந்த காலத்தில் நடைபெற்றது மக்கள் போராட்டம்’ என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களும் தமிழ்பேசும் மக்களே என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களை ஏன் சுட்டுத்துரத்தினர் என்பது பற்றி மெளனமாகவே உள்ளார்.
முஸ்லீம்கள் தமிழ்பேசும் மக்கள் என்றால் இந்த நாடு கடந்த தமிழீழம் அமைப்பினர் எந்த முஸ்லீம் அமைப்புடன் பிரதிநிதிகளுடன் பேசினர் என்பதை இன்று வரையில் ஏன் வெளியிடவில்லை.
ரிஎன்ஏ தமிழரசுக் கட்சியினர் குறைந்த பட்சம் ஒரு சிங்களவரையென்றாலும் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தி வெற்றியும் பெற்றனர் இந்த 30 வருட மக்கள் போராட்ட ஜனநாயக அனுபவம் என்று கூறும் உருத்திரகுமாரனும் இந்த நாடுகடந்த தமிழீழத்திற்கான அமைப்பினரும் எத்தனை முஸ்லீம்களை இந்த நாடுகடந்த தமிழீழ வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மாறாக இந்த நாடுகடந்த பாராளுமன்றத்திற்கான வேட்பாளர்களில் பலர் முன்னாள் புலிகளும், புலிகளின் பெயரில் தமது சுய தேவைகளை பூர்த்தி செய்தவர்களும் புலிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களிலிருந்து பணங்களை திருடியவர்களும், இதர தமிழ் முஸ்லீம் அமைப்பினரையும் அமைப்புக்களையும் துரோகிகள் என் முத்திரை குத்தியவர்களும், முஸ்லீம்களை தமிழ் இன விரோதிகள் என வர்ணித்து புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் பேசியவர்களும், இதர கட்சிகள், சமூக அமைப்பினர், இயக்கங்கள், சங்கங்களின் மீது பயங்கரவாத்தினை கனடா, ஜரோப்பாவிலும் இலங்கையிலும் நடாத்தியவர்களுமேயாகும்.
இதைவிட வன்னி மக்கள் வன்னி போரின்போது வன்னி மண்ணைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் தலைவுடன் இருந்து பேராட வேண்டியவர்கள் என்றும் போர் கொடுமைகளிலிருந்து தப்பி ஓடியவர்கள் இனத்துரோகிகள் என்றும், தலைவனை விட்டுவிட்டு அரச முகாமிற்கு வந்தவர்களுக்கு (குழந்தைகள், விதவைகள் வயது வந்த முதியவர்கள்) உதவிகள் செய்யக்கூடாது என்றும் இவர்களை அரச முகாம்களிலிருந்து சாக வேண்டியவர்கள் என்றெல்லாம் இந்த நாடு கடந்த தமிழிழத்திறகான வேட்பாளர்களில் பலர் நேரடியாக ஜபிசி, ஜிரிவில் கருத்துக்களை முன்வைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான இவர்கள் தமது கடந்தகால தவறுகளையும் மக்கள் விரோதங்களையும் ஒன்று சேர கூட்டி அள்ளி தமது தலையில் வைத்துக்கொண்டு மீண்டும் மக்கள் முன் பசுத்தோல் போர்த்துக்கொண்டு அப்பாவிகள் போன்று நிற்கிறார்கள் தமிழ், சிங்கள, முஸ்லீம்மக்கள் இவர்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் கடந்தகால புலி ஆதரவு பற்றிய ஒரு முழுமையான விமர்சனமேயாகும். இவர்கள் தமது கடந்தகால புலி ஆதரவு பற்றிய சுய விமர்சனத்தை பொதுவாக மக்கள் முன்வைக்காது மக்கள் முன்வந்து நிற்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை கொடுத்துள்ளது.
‘புலிகள் அமைப்பும் மக்கள் அமைப்பு ஜனநாயக அமைப்பு’ என்று அடிக்கடி கூறும் உருத்திரகுமாரன் ஏன் புலிகளின் கடந்தகாலம் பற்றியோ புலிகளின் நிதிகள் பற்றியோ புலிகளின் சொத்துக்கள் பற்றியோ ஏதும் பேசாமல் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்களின் ஜனநாயகப் பண்பும் வெளிநாடுகள் தம்மை தமது நலனுடன் இணைத்தே ஆதரிப்பர் என்பதும் இந்த அமைப்பு எந்த விடயங்களையும் தமிழ் மக்களின் நலனில் இருந்தோ நாட்டிலுள்ள அரசியல் சூழ்நிலைகிளிலிருந்தோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த நாடு கடந்த அமைப்பின் பேராசிரியர் ஒருவர் தனது கட்டுரையில் இது மக்கள் அமைப்பு என்றும் மக்களிடமிருந்து பணம் வந்தால் மட்டுமே இந்த அமைப்பு இயங்க முடியும் என்றும் எழுதியதும் இந்த அமைப்பும் அமைப்பின் முன்னிணயாளர்களது நோக்கமும் சந்தேகத்தை வளர்த்து விட்டுள்ளது.
கடந்தகால புலிகளின் ‘மக்கள் போராட்டத்தின்’ போது காயப்பட்ட, தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்கள் செய்த பணி என்ன? இந்த நாடு கடந்த வேட்பாளர்களின் பிரசுரங்களில் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவிகள் பற்றி என்ன இருந்தது? தாம் முள்ளிவாய்க்கால் வரையிலான தமது பங்களிப்பின் புலிகளுக்கான ஆதரவின் மதிப்பீடு என்ன? என்ற ஏதாவது கருத்துக்கள் உண்டா? எல்லாமே தமது சுய புராணமும் தமிழர்களின் உரிமைப்போராட்டம் பற்றிய ஆழுமையற்ற கருத்துக்களும் வசனங்களுமேயாகும். இவையாவும் இவர்களில் பலர் போராட்டம் மக்களுக்கான சேவை பற்றிய தப்பான அபிப்பிராயமும் இந்த நாடுகடந்த தமிழீழம் என்ற வாகனத்தில் ஏறி தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிதி சேர்த்துக்கொண்டு தப்பிவிடுவார்கள் என்ற பலமான சந்தேகம் புலம்பெயர்நாடுகளில் தமிழர்களிடையே வளர்ந்து விட்டது – இதே போன்ற சம்பவங்களால் புலிகளின் கடந்தகால போராட்ட வரலாறு நிறைந்துள்ளதும் இதன் அனுபவ அடிப்படையில் தாமும் பணம் திருடும் நோக்கம் இதில் நிறையவே உள்ளதை புலம்பெயர்மக்களில் பலர் உணர்கிறார்கள்.
இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள மக்கள் என்றுமே தலைவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகியதும் அவர்களைத் தூக்கியெறிந்த வரலாறு கொண்டவர்கள். வன்னி யுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் மக்கள் அவர்களைத் தூக்கியெறிந்ததே. அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்களால் தூக்கியெறியப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாடு கடந்த தமிழீழத்தின் தாயகக் கட்சியாக உருவாக்கப்பட இருந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தாயக மக்களால் நிராகரிக்கப்பட்டனர். கொங்கிரஸ் கட்சியில் நின்று புலம்பெயர்ந்த மக்களின் தயவில் போட்டியிட்ட இவர்களை மக்கள் முற்றாக நிராகரித்தனர். உருத்திரகுமாரன் தலைமையில் உள்ள நாடு கடந்த தமிழீழத்தவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.
மானிடம் வெல்லும்.
sam
/கடந்தகால புலிகளின் மக்கள் போராட்டத்தின் போது காயப்பட்ட தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்கள் செய்த பணி என்ன? இந்த நாடு கடந்த வேட்பாளர்களின் பிரசுரங்களில் இந்த யுத்த்ததால் பாதிக்கப்டடவர்களுக்கு செய்த உதவிகள் பற்றி என்ன இருந்தது?///
அததானே அவர்களின் எதிர்காலத்திட்டம் தமது புலம்பெயர்வாழ்வில் தமது குடும்ப நலன் மட்டும்தான் இதை அவர்கள் மீண்டும் நிரூபிப்பர்
மாயா
இத் தேர்தலில் வெல்வோர் என்ன செய்யப் போகிறார்கள்?
எந்த நாட்டில் பாராளுமன்றம் அமைக்கப் போகிறார்கள்?
வன்னிக்கு சென்று போராடும் நோக்கம் இவர்களுக்கு உண்டா?
தேசியத் தலைவர் ஏதாவது வாழ்த்துச் சொன்னாரா? இல்லையென்றால் வாக்களியுங்கள் என்றாவது சொன்னாரா?
ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.
jeevendra
தேர்தலுக்கு வாக்களிக்கம்படி கேட்கும் இவர்கள் போராட்டகால பங்களிப்புக்கள் பற்றி பேசாது இருப்பது சந்தேகத்துக்குரியதே -இவர்கள் விளம்பரங்களில் நீர் எழுதியது போல சுய புராணம் மட்டுமே உள்ளது கனடாவில் இது வீட்டுக்கு வீடாக பெரும் தொல்லைகளாகவே தெரிகிறது – எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்
மாயா
சுவிஸிலிருந்து கிளம்பியுள்ள பூதங்கள்!
தனது ஊர் மக்களுக்கு உதவப் போவதாக கூறிக்கொண்டு ஓர் அமைப்பைத் தொடங்கி சுவிஸ்வாழ் மக்களிடம் காசுகளை கறந்து (இவருடன் இன்னும் சிலரும் இணைந்து) தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, “மேல் மருவத்தூர் அம்மன் கோயில்” என்ற ஒரு கோயிலை நிலம் வாங்கி தான் சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை. தடுப்பு முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய அவலக்குரலில் “முகாரி ராகம்பாடி” அதை இறுவட்டு (சிடி) மூலம் வெளியிட்டு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த இந்த சுரேஸ் தற்போது எமது தேசியத் தலைவரையும், தேசியத்தையும் காட்டி பிழைப்பு நடாத்த புறப்பட்டுள்ளார். மக்களே உசார்!!! “நாடு கடந்த தமிழீழம்” எனும் பெயரில் புலியாதரவாளர்களையும் ஏமாற்றிப் பிழைக்க முனைகிறார் இந்த சுரேஸ்.. தேசமக்களே உசார்!!
– நன்றி: இலக்கு
Subramanaim Masilamany
Full View Transnational Government of Tamil Eelam (TGTE)- What are the features? Forward worldwide
From: worldclasstamil.com Moderator
To: S B Sri-Skanda-Rajah
Sent: Sat, 1 May, 2010 14:47:13
Subject: Transnational Government of Tamil Eelam (TGTE)- What are the features? Forward worldwide
Hello Sri,
Thank you for clearing some of my doubts. My concern is, in Canada, the people who are running for this election on behalf of the TGTE have not given out anything about themselves. We need to know their educational background, their acheivements and capabilities, their social standard and community service, their professinal memberships, their credit history, any criminal records etc.. I looked into their websites and there is virtually none to infer. We do not want another debacle like the LTTE, they wanted our money but not willing to listen to our ideas.We must , like the American system put candidates through a “Steel Making Process” to get the best candidates.If we send, especially, people who cannot hold out an argument or communcation effectively, especially in ENGLISH, we will all look like fools.I have seen Tamils coming on TV and sell out the community. That is not good.
If the people,you have mentioned below are the “Establishment” then they must establish a draft constitution and present to the people for understanding. We want to know the covenants of the association. People cannot simply run for office from their cell phone numbers. To me it looks like another experiement or wild goose chase. With so many thousand educated and experienced people if we cannot formulate a simple document like a “starting constitution” we are not up to modern and international standards. That is what we are doing now, writng a constitution, it may not be the best but it will be good starting point.
We do not want “live” people to be the supreme leader, but written proclamation in steel like the American constitution where the ultimate power is in the constitution but not in natural persons, not like in Sorry Lanka. We need the collective will of the people put in the form of a defining and guidng light. And especialy with Tamils it better be good.
I am going to circulate your “overview” with my “views” to my subscibers for their observations and inferences. I will forward those comments to you.
I am, Subramanaim Masilamany
A World-Class Tamil
FAQs: Transnational Government of Tamil Eelam (TGTE)
Timely Over View of the Transnational Government of Tamil Eelam
Q1. What is meant by a Transnational Government of Tamil Eelam?
The Transnational Government of Tamil Eelam (TGTE) is a political formation to win the freedom of the Tamil people on the basis of their fundamental political principles of Nationhood, Homeland and Right of self-determination. The TGTE is a novel concept both for the Tamil people and the rest of the world. At present the Tamil people have absolutely no prospect of articulating their political aspirations or of exercising their fundamental rights in their homeland itself.
Tamil Diaspora, an integral part of the nation of Tamil Eelam, utilizing democratic means in their respective countries, will establish the Transnational Government of Tamil Eelam (TGTE) as the highest political entity to campaign for the realization of the Tamils’ right to self-determination.
Q2: Why a Transnational Government of Tamil Eelam? What is the necessity for such a government?
The social existence of the Tamil people depends on the preservation of their distinct political, economic and cultural way of life. The Tamils must have the ability to coexist
and be co-partners with other communities around the world. To achieve these goals and to control factors that pose threats to their existence, there is a need for a strong and self governing political entity. These aims were given shape:
in 1976 through the Vaddukkoddai Resolution and
reinforced by the mandate given by the people in the 1977 general elections
the 1985 Thimpu Principles and the 2003 Interim Self-Governing Authority (ISGA) proposals gave added weight to these aims.
Therefore, given the current situation, It has now become necessary to constitute a coordinated and democratic polity to advance these objectives. This polity is the proposed Transnational Government of Tamil Eelam (TGTE).
Q3. Are there differences between a Transnational Government and a Government in Exile? Or are they the same?
Though there are common features, the two governments are in theory different in theory. A government in exile is a temporary government shifted to or formed in a foreign country by exiles who hope to return to their home country when it is liberated. For this, at least the approval and acceptance by one host country is required. A government in exile needs no Diaspora. The concept of a Transnational Government has received the attention of social scientists for more than two decades. It is associated with the transnational life of people and their involvement with transnational politics.
Q4: What are the objectives of TGTE?
TGTE is to promote the interactions in between Tamils of Eelam and Diaspora.
TGTE will create a mechanism for the political unity and the pursuit of the political desires of this transnational community, while respecting the laws of the states which this transnational community inhabits.
It is in the distinct transnational space within which these cross border relationships take place that the Transnational Government seeks to operate by facilitating the promotion of interactions and forging a common political program.
TGTE proposed to be established in the transnational space by Tamils is meant to realize the political aspirations of Tamils in our Homeland.
TGTE will also engage in promoting the social, economic and cultural development of Tamils in the Diaspora.
TGTE will lobby for the support of the international community and its people to find a political solution to the Tamil national question on the basis of Nationhood, Homeland and the Right to Self-determination. It will campaign through political and diplomatic channels.
Q5. Why should the Tamil Diaspora promote efforts to form the Transnational Government? What is their contribution towards the political liberation of the Tamil People?
In today’s context, only the Tamil Diaspora is in a position to advance the political aspirations of our people. Approximately one third of the Eelam Tamil population lives in the Diaspora, so they are not an inconsequential part of the community. Since the political space to pursue Tamil rights has been totally suppressed in Sri Lanka, the struggle to establish these rights has to be moved out of the island into the international space that the Tamil people of Eelam occupy.
This is a factor that adds strength to Eelam Tamils. The 21st century political reality is increasingly getting evolved as Transnational Governance. Irish people who emigrated to America and Canada gave staunch and open support to the Northern Ireland struggle. Likewise, the Jewish Diaspora until today supports the state of Israel politically and financially. On another plane, the Diaspora of countries like Italy, El Salvador, Eritrea, Croatia and Moldova have become an integral part of the politics of their respective countries. Four representatives are elected from the Italian Diaspora to the Italian parliament. In Haiti, a separate electoral riding has been allocated for Haitians living in Diaspora. Further, more than half the countries in the world have recognized dual citizenship. All this evidence points to the importance given to transnational politics in the 21st century. The efforts by the Tamil Diaspora to form a TGTE should be viewed in this perspective.
Q6. Where will the Transnational Government of Tamil Eelam be based? What is the nature of such a government?
The TGTE will not have a territorial base like traditional governments. Enforcement of sovereignty by enacting laws, defense of territory and taxation like traditional governments is not applicable to the TGTE. The primary goals of the TGTE will be the security of the people in our Homeland, full and early realization of their right to self-determination and their social, economic and cultural well-being and development.
Q7. Will the international community recognize the Transnational Government of Tamil Eelam? Is it possible to carry forward TGTE’s plans without such recognition?
As stated above, the concept of a TGTE is an innovative exercise. There is no precedence for such an exercise. The nationalities that fought for their political independence from outside in previous years created Governments in Exile (GE) that functioned outside their countries. For a GE to function it is not necessary to have a strong Diaspora community. However, the proposed TGTE has a strong Diaspora community as along with well-defined political goals. Further, the continued insistence by the international community and friendly forces for the necessity of the Eelam Tamils to abhor armed struggle and carry forward the struggle politically are factors favorable to us.
Q8. How will the Sri Lankan government and Sinhala – Buddhist chauvinists view the Transnational Government of TamilEelam?
Both the Sri Lankan government and its racist rulers view the proposed “Transnational Government of Tamil Eelam” with a sense of apprehension and danger. The reason for such fear is that the hegemony imposed on Eelam Tamils and the Tamil Homeland at present is not a real victory. Neither is it permanent. What they have achieved is military supremacy in the balance of power. This is beneficial only within the island of Sri Lanka. Further, this military supremacy is useful only to counter armed struggles and cannot counter the diplomatic approach.
In this context, the Tamil people’s struggle for the realization of their right to self-determination by unarmed methods carried out in the international arena is viewed with alarm by Sri Lanka’s rulers as one they cannot confront. Sri Lanka’s rulers, therefore, consider that the proposed TGTE project by Eelam Tamils will become a formidable battlefront which they cannot defeat. Sri Lanka and its allied forces have today reached the peak of their power. They are left with no options other than to apply the same old military approaches. Sri Lanka is trying to restrict the mode of struggle of Eelam Tamils to a battlefront that it can win. It is also trying to keep to itself control over setting the rules of the battles to come. The proposed TGTE is a new playing field opened by Eelam Tamils. Sri Lanka cannot decide the rules here. Its military domination and territorial control are of no use in this field of play.
Q9. What impact will the activities of the Transnational Government of Tamil Eelam have on people living in the island of Sri Lanka on matters relating to their political, social, economic, security, rehabilitation, reconstruction and resettlement affairs?
The primary objective of the Transnational Government of Tamil Eelam is to realize the right to self-determination of the Eelam Tamils. Simultaneously, the TGTE will take action on two other fronts. They are:
(1) To take necessary diplomatic steps at international level to end the injustices, discrimination and acts of revenge perpetrated on the Tamils by the Sri Lankan government.
(2) To garner the expertise and resources of Tamil Diaspora to halt the plundering and exploitation of the resources of our Homeland by the Sinhala – Buddhist genocidal forces.
The TGTE will explore suitable alternative structures and create and manage sub organizations in order to successfully fulfill the above stated objectives and to guarantee the security of the Tamils living in the island of Sri Lanka while protecting their rights to local resources. Alternatively, it will appropriately utilize the resources of already existing organizations. When necessary the TGTE will establish cordial rapport and secure the assistance of international donor organizations, aid agencies, and bilateral or multilateral development organizations and work for the resettlement, development and investment, human resources development and environmental health. It will also provide appropriate inputs to the organizations within the island of Sri Lanka that have politically identified with the objectives of Tamil nationals.
Q10. What kind of leadership would the Transnational Government of Tamil Eelam offer to the Tamil Diaspora? Do they need the leadership of the Transnational Government of Tamil Eelam? Is their current social and economic achievement inadequate?
Compared to the various other Diaspora communities in Western Europe, North America and Australia, the Eelam Tamil Diaspora is considered one of the most successful Diaspora communities. Their hard work, education, enterprise, dedication, obedience, austerity, ownership of property, extended family system and the love and devotion to their brethren are traits that are praiseworthy. But, for a community that has been devastated and displaced by war and racial violence and above all one that is fighting for its freedom, these traits alone are not sufficient.
The Eelam Tamils who have courageously faced and survived the threat to life and dangers due to racial violence are averse in coming forward to confront the open market economy. Further, instead of taking their own initiative to rapidly rebuild lost opportunities due to the war, such as banking, human resource development institutions, technical training institutes and service centers, they are seen as a community dependent on the existing structures. This state of affairs has to be changed. The entrepreneurship of the Eelam Tamils should extend internationally to all spheres of activity. The share of involvement of the Eelam Tamils in the creation of investment capital and industrial power should escalate to the extent of wielding influence in the economy of their host countries. The knowledge and technical know-how of Eelam Tamils should be broadened to become indispensable in the highest decision-making centers of each organization in which they work. It is through these means that the march for the liberation of the Eelam Tamils will be expanded and expedited.
The TGTE will attempt to provide the necessary ideological and strategic leadership for this process of success.
Source: http://www.govtamileelam.org Contact TGTE: info@govtamileelam.org
Other:
Who are the members of the TGTE committee:
The committee consists of many experts in different countries.
Professor M Sornarajah (UK)
Professor Francis Boyle (USA)
Professor P. Ramasamy (Malaysia)
Professor Rev A.J.C Chandrakanthan (Canada)
Professor Nadaraja Sriskandarajah (Sweden)
Dr Murugar Gunasingham (Australia)
Dr Sivanendran Seevanayagam (Australia)
Dr A.L. Vasanthakumar (UK)
Ms Karen Parker (USA)
Dr N Jeyalingam (USA)
Mr Selva Sivarajah (Australia)
Mr Paul Williams (Netherlands)
Professor Peter Schalk (Sweden)
======= End ======
sam
தேர்தலுக்கு வாக்களிக்கும்படி ஜிரிவியிலும் தீபத்திலும் கேட்கும் முறைகள் அதில் கூறப்படும் கருரத்துக்கள் யாவும் இந்த வேட்பாளர்கள் இவர்களது இலட்சியப்போக்குகள் என்ன? என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கின்றன? இதில் நிறையவே வியாபாரிகளின் கைகள் தான் முதலீடுகள் செய்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும்.
வியாபாரிகளின் நோக்கம் சொல்லித்தெரிவதில்லை கடந்த காலங்களில் அப்பன் புலிகளின் பெயரால் இன்று நாடுகடந்த தமிழீழம் என்ற பெயரில் மகன் ஜிரிவியிலும் தீபத்திலும் அவதானிக்கலாம்.
அதைவிட இந்த தொலைக்காட்சிகள் நன்றாகவே உழைப்பையும் செய்த் தொடங்கிவிட்டார்கள் இவற்றையெல்லாம் பார்க்குமிடத்து அன்று பாராளுமன்ற முன்றலுக்கு ஆட்களை அழைத்ததும் வன்னியில் யுத்தம் நிறுத்தம் கொண்டுவர தலையால் கிடங்கு கிண்டியவைகள்…..
Ajith
Dear Sothiligam,
Your intention of this article is clear. I expected from you from this now because Dr. Gotapaya recently issued a message about the next steps to win the war against tamil diaspora who are taking forward the liberation struggle for freedom of tamils. We all aware that the intention of the Rajapkse kindom for creating a Sinhala only nation free of tamils. It is not surprise that the timely article by you to serve your continued support like KT Rajasingham do through Asian tribune.
இதைவிட புலிகள் அழிக்கப்பட்டு ஒரு வருடமாகும். You have confirmed that tigers have completely wiped out.So why you are worried about these TGTE and the election. Why don’t you spend your time in the abductions, ransoms, rapes, murders, corruptions happening in the tamil homeland and sinhala homeland under the guardship of Douglas and Rajapakse. It is clear from you that no LTTE there. So, it is proven that it is the leaders that you are working for responsible for these violence and crimes. Are you going to say it is remaining LTTE elements are responsible. Why don’t you talk about billions of corruption by Rajapakse regime which is a proven fact? On the one hand work closely work with Rajpakse to establish a Sinhala buddhhist Sri Lanka and on the hand work against tamils who are considered be a barrier to the establishment of Sinhala buddhist nation.
sam
அஜித் இந்த கட்டுரை கோதபாயாவின் அறிக்கைக்கு முன்பே வெளிவந்துவிட்டது
இன்று டக்ளஸ்ம் ஆனந்த சங்கரியும் நாடகடந்த தமிழீழம் என்பது முட்டள்களால் முட்டதள்த்தனமாக நடாத்தப்படும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்- அவர்களுக்கு தெரியுமா எப்படி வெண்புறா மூர்த்தி வணங்காமண் விட்டவர் என்று அதே போல இப்ப நாடகடந்து ஒரு நாடு அவ்வளவுதான்.
thurai
அஜீத், தமிழர்களை அழிக்கின்றார்கள் சிங்கள மயமாக்குகின்றார்கள் என்று குரல் கொடுக்கும் நீங்கள் புலியின் கொடுமைகளினாலும், வேலை வாய்ப்புத் தேடியும் தெனிலஙகையை நாடி தமிழர் ஓடிய காலத்தில் அதனைத் தடுப்பத்ற்கு எந்தத்தமிழன் குரல் கொடுத்தான்? அல்லது சிஙகளவ்ர் எதிர்த்தார்களா தமிழரின் குடியேற்ரத்தை?
துரை
Canadian Tamils
Canadian Tamils for Peace and Democracy calls on Diasporas to fight against the Transnational Government of Tamil Eelam
Fri, 2010-04-30 00:52 — editor
Toronto, 30 April (Asiantribune.com): The Canadian Tamils for Peace and Democracy (CaTpad) calls on the Sri Lankan Diasporas to unite worldwide to fight against the Transnational Government of Tamil Eelam (TGTE) created by the Terrorist Tamil Tigers.
There is an urgent need to build and mobilize an alliance to oppose and prevent the illegal formation of Transnational Government of the Tamil Eelam (TGTE) in all the ways, the press statement said.
The need of the hour is to unite all the Sri Lankan Diasporas to fight against politically in all the capitals throughout the world. It would be a grave mistake on the part of Sri Lankans abroad to let them go without countering the formation of an illegal de facto Terrorist Government, the statement added.
The political support of some European Union countries and huge monetary earned by illegal means of money laundering, forceful collections, abductions and credit card frauds throughout the world made the Terrorist organization a come back. Though defeated militarily and politically in the recent elections in Sri Lanka, the Tiger Diasporas are becoming more active to disturb the peace achieved in Sri Lanka and create a political uncertainty in the North and East by creating a de facto Terrorist Government abroad.
The ultimate aim of the Tiger Terrorist is to challenge the democratically elected Sri Lankan government and the democracy achieved by the Tamils of the North and East by eradicating terrorism, wiping out the entire leadership of the Vanni regime. It is a well known fact that democracy and peace is intolerable to Vanni regime at all times and has destroyed all democratic institution during their rule. Therefore it is the duty of each and every Sri Lankan and the Sri Lankan Diasporas abroad to unite for a good cause to save the country, the statement read.
“We Canadian Tamils for Peace and Democracy calls upon the Sri Lankan Diaspora to be united for a noble cause to fight separatism abroad and to be committed for a united Sri Lanka,” the statement said.
– Asian Tribune –
santhanam
நாடுகடந்த தமிழீழத் தேர்தல் கூட்டம் ஒரு பார்வை. – பத்மநாதன்
சென்ற 24.04.2010 அன்று வெயிற்வெற்(veitvet) பாடசாலையில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அவர்களது கருத்தை அறிய ஆர்வமாகச் சென்றிருந்தேன்.
அங்கு நடைபெற்ற விரும்பத்தகாத பேச்சுகள் தான் என்னை இது எழுதத் தூண்டியது. இது மக்களவைத் தேர்த்லை நடாத்திய TCC இனால் ஒழுங்கு படுத்தப் பட்டிருந்தது. முதலில் தொடக்கமே பிழையாக இருந்தது. ஒட்டுக்குழுக்களாலும், இலங்கை இராணுவத்தினராலும் கொலை செய்யப் பட்டவர்களிற்கு மௌன அஞ்சலி என்று தொடங்கியது. பின்பு பேசிய திருமதி.யெயசிறி என்பவர் நாடுகடந்த திரு.உருத்திரகுமாரன் அவர்களது ஆதரவாளர்களை ,இலங்கை அரசு , இந்திய அரசு போன்றவற்றின் உளவாளர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர்களையும் துரோகி ஒட்டுக்குழு என்ற சொற்பிரயோகம் நேரடியாகப் பாவிக்காவிட்டலும், இந்திய உளவு , இலங்கை அரசின் சதிக்குள் வீழ்ந்தது என்பது அதையே குறிக்கிறது. மக்களாகிய உங்களால் செய்யக்கூடியது வாக்குப் போடுதல் மட்டுமே என்றும் குறிப்பிட்டு இருந்தார். மக்கள் முட்டாள்களாக இருந்து தாங்கள் செய்வதற்கு தலையாட்டினால் போதும் என்பதே அதன் கருத்து
இந்தப் பெண்ணை விட பல வருடங்கள் விடுதலைப் புலிகளுக்காக வாழ்ந்தவர்களை துரோகி என்று முத்திரை குத்துவது அவரால் எப்படி செய்ய முடிகின்றது. ஒருமாதத்தின் முன்பு திரு.உருத்திரகுமாரன் அவர்கள் நடாத்திய கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் வந்து குழப்பம் செய்தனர். திரு.உருத்திரகுமாரனது பேச்சில்- மக்களவையில்(TCC) புலிகளுடன் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்கள் கூடுதலாக இருப்பதால், நாடுகடந்த தமிழீழத்தில் புலிகளின் நேரடி பதவி வகிக்காதவர்களை பெரும்பான்மையாகக் கொண்டு அமைத்தாலே குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையில் இருந்து வெளிவரமுடியும். என்றும் குறிப்பிட்டிருந்தார். நாடுகடந்த தமிழீழமும், மக்களவையும் ஒற்றுமையாச் செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
நான் நாடுகடந்த தமிழீழத்தையோ, மக்களவையையோ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாடுகடந்த தமிழீழத்தினர் ஜனநாயக வழிக்கு வரும் விருப்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன்.
அவர் யாப்பு ஒன்றும் எழுதி ஜனநாயகத்தைக் கொச்சைப் ப்டுத்தவில்லை. அது வரவேற்கக் கூடியதே. ஆனால் ஜனநாஜகத்தை விரும்பாத மக்களவையினர் அந்தப் பதவிகளையும் தாங்கள் எடுக்க விரும்பியே பொய்ப் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றனர். அவர்களின் குற்றாச்சாட்டு யாப்பு எழுதவில்லையென்பதே.
மக்களவைத் தேர்தலில் யாப்பு எழுதி, மக்களால் தெரிவு செய்யாமல் தாங்களே ஐவரைத் தெரிவு செய்தார்கள். அதிகாரங்கள் இல்லாத மிகுதிபேரையே மக்கள் தெரிவு செய்தார்கள். சில உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று ஜனநாயக விரோத யாப்பு எழுதினார்கள். அங்கு ஜனநாயகம் என்பது வெறும் கேலிக்கூத்தாகவே இருந்தது. இக்கேலிகூத்துக்கு 20 – 25% மக்களே வாக்களித்திருந்தனர்
திரு.உருத்திரகுமாரன் அவர்கள் நினைத்திருந்தால் , தாங்கள் விரும்ம்பியவர்கள் நேரடியாக வரவும், திரு.முரளி போன்றவர்கள்(புலியில் நேரடியாகப் பதவி வகித்தவர்கள்) தேர்தலில் பங்கு பற்றாது இருக்கும்படி யாப்பு அமைத்திருக்க முடியும். அவர் அவ்வாறு ஜனநாயக விரோதச்செயல் செய்யவில்லை. அந்தளவில் வரவேற்கக் கூடியதே. யாப்பு எழுதாதது முரளி போன்றவர்கள் தேர்தலில் நிற்க வளி வகுத்தது.
முரளியின் ஏனைய குற்றச்சாட்டு திரு.பாஸ்கரன் அவர்கள் 50% சம்பளம் பெற்று தமிழ் பாடசாலைக்கு வேலை செய்ய்வது. இந்தப் பெரிய பாடசாலைக்கு திரு.முரளி போன்றவர்கள் ஓரிரு மணித்தியாலங்கள் வேலை செய்து நிர்வாகத்தை நடாத்த முடியாதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவர் இப்பொழுது தான் அந்த வேலையைச் செய்யவில்லை. அந்த 50% ஐ சேமிக்க விரும்பினால் ஏன் இவ்வளவு காலமும் அதை திரு.முரளி போன்றவர்கள் பொறுப்பெடுத்துச் செய்யவில்லை. இபாடியான கீள்த்தர தேர்தல் பிரசாரம் -இருக்கின்ற பாடசாலையையும் இல்லாது செய்துவிடும்
அடுத்த குற்றச்சாட்டு,Rødt கட்சிதான் தமிழீழத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும், SV , Arbeidparti ஆகிய கட்சிகள் தமிழீழத்தை ஆதரிக்காத பொழுதும் ஏன் தமிழர்கள் அந்தக் கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள் என்று ஒருவர் கேட்டார். கேள்விக்கு பதில் அளித்த திரு.முரளி அவர்கள் – தான் SV கட்சியில் அங்கத்தவராக இருந்ததாகவும், அக்க்ட்சி தமிழீழத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் அதிலிருந்து விலகியதாகவும், திரு.பாஸ்கரன், திரு.புலேந்திரன் போன்றவர்களும் விலக வேண்டும் என்று கேட்டிருந்தார்.
முரளி அவர்கள் சாதாரண அங்கத்தவர். அவர் விரும்பினால் சேரலாம், பிரியலாம் . ஆனால் மக்களால் தெரிவு செய்யப் பட்ட புலேந்திரனும், பாஸ்கரனும், ஆதித்தனும் அக்கட்சிகளில் இருந்து பிரிந்தால் பின்பு தமிழருக்காக அரசியல் கதைப்பதற்கு வேறு எவரும் கட்சிகளில் இல்லை. இது இலங்கையா- தந்தை (எனக்கு அல்ல) செல்வநாயக்தின் காலமா- சவால் விட்டு மறு தேர்தல் வைப்பதற்கு? அவர்கள் கட்சிகளில் இருந்தால் தான் எமக்காக ஒரு வார்த்தையாவது கதைக்க முடியும். மற்றவ்ர்களை கதைக்கவிட்டால் என்ன கதைப்பார்கள் என்பது தெரியும் தானே? உஙளுக்குச் சும்மா கதைத்தால் விளங்காது துப்பாக்கி கொண்டு வாறேன் என்று விட்டு வந்து விடுவார்கள். நோர்வேயிய அரசியலில் ஜனநாயக வளியில் பழக்கப் பட்டவர்களே எங்கள் பிரச்சனையை தெளிவாக துப்பாகியில்லாமல் விளங்கப் படுத்த முடியும். இப்படியாக மறு பக்கத்தையும் ஆராயாது கூறிய முரளியின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானதே.
அங்கு பிரச்சாரத்திற்காக் வந்திருந்த பாஸ்கரன் இவர்களின் கூட்டம் காரணமாக பார்வையாளர்களாக வந்திருந்தார். இது கூட நல்லதொரு ஜனநாஜக முன்னேற்றமே. அவரை நோக்கி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அவருக்கு போதிய நேரம் கொடுக்காதது ஜனநாஜக விரோதமே. நண்பன் முரளி அவர்கள் எனது நட்பை தனது பிரச்சாரத் துணைக்கு கொண்டு வந்த படியால் தான் நானும் கதைத்தேன். போதியளவு நேரமிருந்தும் 12:00 மணிக்கு முடிக்க வேண்டிய கூட்டத்தை, 11:30 முடித்து விட்டார்கள். முரளி அவர்களும் அவர்களுக்கு வால் பிடித்தவர்களும் முரளிக்கு சார்பாகக் கதை அல்லது கதையாதே என்ற ஜனநாஜக விரோதப் போக்குடனே நடந்து கொண்டார்கள்.
ஜனநாயகத்தை மறுத்த இவர்களால்(TCC) ஆதரவு அளிக்கப்பட்ட கட்சிகள் கடந்த காலத்தில் படு தோல்வியே அடைந்திருக்கின்றது.ஜெயலலிதாவிற்குக் கொடுத்த ஆதரவால் அவர் படு தோல்வியடைந்தார். அடுத்து இரு ஆசனங்களைப் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறிய பொழுதும் Rødt கட்சியானது இவர்களின் கடைசி நேர வெளிப்படை ஆதரவால் அது படு தோல்வியடைந்தது.பின்பு கடைசித் தேர்தலில் இவர்களது இணையத்தளங்கள் ஆதரவளித்த திருமதி.பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரன் குழுவினர் மண்னைக் கவ்வினர். மக்கள் தற்பொழுது ஜனநாஜக வாதிகளையே விரும்புகின்றன்ர் என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும்.
நான் நாடு கடந்த தமிழீழத்திற்கோ , மக்களவைக்கோ ஆதரவு இல்லை. ஆனால் அவர்கள் விரும்பிய கருத்துக்களை அடைய அமைப்பை உருவாகுவதற்கு அவர்களுக்கு ஜனநாயக்ம் உண்டு. அந்த ஜனநாயகத்திற்காக அவர்களுக்காகக் கொடுக்கும் குரலே இது.
இப்படிக்கு
ஜனநாயக விரும்பி
பத்மநாதன்
charle
குழந்தைகள் தமது வீட்டுக்கோடிக்குள் சிறு வீடு கட்டி விளையாடி மகிழ்வது ஞாபகத்திக்கு வருகிறது.
Ajith
குழந்தைகள் தமது வீட்டுக்கோடிக்குள் சிறு வீடு கட்டி விளையாடி மகிழ்வது ஞாபகத்திக்கு வருகிறது.
We should not forget the same children who play by builting houses in soil are capable of building a nation when they mature. It comes to me that some older foxes worry that the goats are getting wet on the rain”.
santhanam
வாசித்ததில் வேடிக்கையாகவுள்ளது தமிழனின் அவலம்
சந்தானம்
சிங்கத்தின் நாடாளுமன்றக் குகையில் நின்று சீறிய சிறுத்தையே!
வணக்கம்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வடமேற்கு இலண்டனில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நீங்கள் வெற்றியீட்டிய செய்திகேட்டு அகமகிழ்ந்தோம். அதற்கு மேலாக தமிழீழ மக்களின் விடிவிற்காக அயராது உழைப்பதற்கு திடசங்கற்பம்பூண்டு நீங்கள் விடுத்த அறிக்கை கண்டு உள்ளம் பூரித்தோம்.
தமிழீழ தேசியம் என்ற பாசறையில் வளர்ந்த சிறுத்தை நீங்கள். கருணா என்ற பெயரில் பிரதேசவாதப் பூதம் கிளம்பிய பொழுது அதனை எதிர்த்து மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோடு தோள்கொடுத்துக் கிளர்ந்தவர் நீங்கள்.
தமிழீழ தேசியத்தின்பால் நின்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் சந்தித்த சோதனைகளுக்கு கையெறி குண்டுகளால் தகர்க்கப்பட்ட உங்கள் வீட்டின் கற்களே சாட்சி. உங்கள் முற்றமே ஆவணம். விடுதலைக்காக உடன்பிறப்பை உயிர்ப்பலியாகப் பறிகொடுத்தவர் நீங்கள். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட உங்களுக்கு விடுதலையின் விலை நன்கு தெரியும்
அதை நியூயோர்க்கின் உப்பரிகை மாளிகையில் ஒய்யாரமாய் சஞ்சாரம் செய்பவர்களால் விளக்கிவிட முடியாது என்பது உண்மைதான். அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதும் மெய்மைதான்.— நிற்க:
உங்களின் தலைமையில் களமிறங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கிட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே: ஆரோக்கியமானதும் கூடவே.
இருந்தாலும் ஒரு நெருடல்: தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் கைகளில் கிட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சிதறடிப்பதில் இந்திய – சிங்கள அரசுகள் கங்கணம் கட்டிநிற்கும் வேளையில்… அதற்கு உடந்தையாக நியூயோர்க் மதியுரைக் குழுக்களும், தேர்தல் ஆணையங்களும் கச்சையை வரிந்துகட்டிக் கொண்டு நிற்கையில்… தமிழீழ தேசத்தின் எழுச்சியை மழுங்கடித்து தேர்தல் திருவிழாக்களுக்குள் ஈழத்தமிழர்களை மூழ்கடிப்பதில் இந்திய – சிங்கள அரசுகளின் கைக்கூலிகள் முழுமூச்சாய் சதிசெய்யும் இத்தருணத்தில்… எவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படப் போகின்றது?
தேர்தல் மோசடி என்று பூச்சாண்டி காட்டி தமது கைக்கூலிகளை ஆசனங்களில் அமர்த்துவதில் நியூயோர்க் மதியுரைக் குழுக்கள் முற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் என்று கூறியவர் திடீரென வேட்பாளராக மாறிய சூட்சுமமும் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
போர்ஓய்வுக் காலத்தில் வன்னிக்குச் செல்ல மறுத்து முந்தானைக்குள் ஒளிந்துகொண்டவர்களும், தேர்தல் முடிந்ததும் இணைப்பாளர் பதவியில் இருந்து விலகி மக்கள் பிரதிநிதிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஒப்படைக்கப் போவதாகக் கூறியவர்களும் திடீரென ஆசனங்களுக்காக அடிதடிச் சண்டியர்களின் துணையை நாடியிருப்பதும் உங்கள் காதுகளை எட்டியிருக்கும்
இலண்டனில் குண்டர்களைக் களமிறக்கி தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நியூயோர்க் மதியுரைக் குழுக்கள் மிரட்டுவதையும் நீங்கள் கேள்வியுற்றிருப்பீர்கள். வளைந்துபோன ஜனகர்களும், ஒதுங்கிக் கிடந்த உருத்திரபதிகளின் புத்திரசிகாமணிகளும் திடீரென ஆசனங்களுக்காக தாவித் திரிவதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
உங்கள் தலைமையில் தேர்தலில் களமிறங்கிய மருத்துவர் என்.எஸ்.மூர்த்தி ஐயாவும், உங்களோடு தோளோடு தோள் நின்ற மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் புதல்வர் டேவிட் பரராஜசிங்கமும் இலண்டன் ரவுடிகளால் மிரட்டப்பட்டு தேர்தலில் இருந்து பின்வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட செய்தியும் உங்கள் காதுகளை வந்தடைந்திருக்கும்.
இதே கதி பிரான்சிலும், கனடாவிலும் நிகழ்ந்தேறுவதையும் நீங்கள் நிச்சயம் அறிந்தேயிருப்பீர்கள்.
தேர்தல் ஆணையம் என்ற பெயரில் நியூயோர்க் மதியுரைக் குழுக்கள் அரங்கேற்றும் தில்லு முல்லுகளால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருவிலேயே கலைந்து போகும் நிலை காணப்படுவதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இலண்டனில் அல்லது ஜெனீவாவில் நிகழ்ந்தேற வேண்டிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு அமெரிக்காவிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதன் சூட்சுமமும் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
ஒருபுறம் அமெரிக்கா செல்வதற்கான பயண நுழைவனுமதி: மறுபுறம் அமெரிக்கப் பேரரசின் பயங்கரவாதச் சட்டம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அமெரிக்கப் பேரரசு பகிரங்கமாக அறிவித்து விட்டது. அப்படியிருக்க தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அமெரிக்கா செல்வது சத்திய சோதனை என்று நன்கு அறிந்திருந்தும் – தெரிந்திருந்தும், திட்டமிட்டு இறுதிநேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வின் நிகழ்விடத்தை நியூயோர்க் மதியுரைக் குழுக்கள் மாற்றியிருப்பதன் சூட்சுமத்தை புரிவது ஒன்றும் விண்வெளி விஞ்ஞானம் கற்பது அல்ல.
இரண்டு வாக்குகளால் வெற்றிபெற்ற ஒரு அப்புக்காத்துக்காக பல்லாயிரம் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அலைக்கழிக்கப்படுவதன் நியாயத்தைப் புரிந்து கொள்வது கடினமானதும் அல்ல. தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் களமிறக்கமே இவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் பொழுது, இவர்களின் அடிப்படை நிகழ்ச்சி நிரலை வெள்ளிடை மலையாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தமிழீழத் தேசியக் கொடியைக் கைவிட்டவர்கள்… தமிழீழ தாயகத்தை மதரீதியில் துண்டாட முற்பட்டவர்கள்… சூரியத்தேவனுக்கு சவால் விடுப்பவர்கள்… இவர்கள்தான். இவர்களேதான்.
சனநாயகம் பணநாயகமாகியது இந்தியாவில். இன்று சனநாயகம் குண்டர்நாயகமாவது இந்த நியூயோர்க் மதியுரைக் குழுக்களின் வழிநடத்தலில்.
ஓராண்டாக மாயமானை ஏவி உலகத் தமிழினத்தின் மீது சவாரி செய்த இவர்களின் ஏமாற்று வித்தைகளை இனியும் அனுமதிப்பது நீதிக்கு ஆகாது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் சிதறடிக்கப்படுவதை இனியும் நாம் அனுமதிக்கவும் முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் இதனை இனியும் அனுமதிக்கவும் கூடாது.
மட்டுநகரின் சிறுத்தையே!
சூரியத்தேவனின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் உங்களின் பின்னால் தமிழ்த் தேசிய உணர்வாளர் குழாம் அணிநிற்கின்றது. இனியும் காலம் தாழ்த்தாது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தலைமையேற்று வழிநடத்துவதே உங்கள் முன் இருக்கக்கூடிய ஒரேதெரிவு.
சிங்கள ஆட்சியாளர்களையும் அதன் படைகளையும் போர்க்குற்றவாளிகளாக உலக அரங்கில் நிறுத்துவதும், தமிழீழ தாயகத்தில் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவம், தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதும், உங்களின் தலைமையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களின் பணி: கடப்பாடும் கூட!
தயக்கம் வேண்டாம். உரிமையுடன் அழைக்கின்றோம். விரைந்து செயற்படுக
சந்தானம்
palani
Dear Mr Sothilingam,
Past 30 years LTTE had a administration their own and all three forces too you might not know these . Eelam War didn’t derail at the beginning just clear the way to pave the track. Transitional Gov of Tamil eelam is not a rooted tree as you said .
thurai
கடந்த 30 ஆண்டுகளிற்கு மேலாக புலம் பெயர் நாடுகளில் தமிழர் பற்ரிய எந்த விடயங்கழும் புலிகள்தான். இவற்ரினை முன்நின்று செய்தவர்கள் இன்று பயங்கரவாதிகளாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் செயல்களிற்கும் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கும் எந்தவித தொடர்புமிருக்கவில்லை. மிரட்டிப் பணம் பறித்ததே இவர்கள் தொழில்.
இதே போல்தான் இலங்கையிலும் தமிழரின் பிரச்சினை வேறு புலிகள் நடத்திய போராட்டம் வேறு. விடுதலையென்பது ஒவ்வொரு தமிழனின் எண்ணத்திலும் இருந்து தோன்ற வேண்டும். ஆயுத முனையில் தோன்றப்படுவதில்லை.
நாடுகடந்த அரசில் தெரிவு செய்யப்பட்ட சிலர், தமிழை விட வேறு மொழி தெரியாதவரும், தமிழே தெரியாதவர்கழும் உள்ளனர். இவர்களின் தகுதி புலிகளை ஆதரித்தவர்களென்பதே தவிர வேறொன்றுமில்லை. எனவே புலிகளையும் அவர்களின் சொத்துக்கள்,பதவிகள் பணமுதலீடுகளைக் காக்கவே நாடுகடந்த் அரசு.
உலகின் முதலாளித்துவ வாதிகழுடன் கூட்டு சேர்ந்தும் அவர்களிற்கு உடந்தையாக ஆசிய நாட்டினை ஆட்டிப்படைப்பதற்கும் இவ்ர்கள் உதவியும் செய்து உதவியும் பெறுவார்கள்.
ஈழத் தமிழர்களில் ஒருநேரச் சோற்ருக்கு அரசினை எதிபார்ப்பவர்களை சிங்கள அரசிற்கு எதிரானவர்களாக் காட்டி அவர்களின் உயிர்களிற்கும் பாதுகாப்பில்லாமல் செய்வார்கள். அவ்ர்களின் அழிவே இவர்களின் கோசங்களிற்கு உரமாகும். இவர்களில் வேறொன்றுமில்லை. தமிழரின் அழிவில் வாழ்வோரே இவர்கள்.
நாடுகடந்த மக்களின் பணத்தில் அமைவதே நாடுகடந்த அரசு. ஈழத் தமிழரின் எண்ணத்திலும், சிந்தனையிலும் தோன்றவில்லை.
துரை
chandran.raja
துரை சொல்ல மறந்தது. -ஈழத்தில் வாழும் தமிழ்மக்கள் இலங்கையை தமது தாய் நாடாக கொள்ளவேண்டும். புலத்தில் வாழ்பவருக்காக தாம் வாழ எத்தணிக்கக் கூடாது. தங்கள் தலைவிதியை தாமே நிர்ணயிக்க பழக்கப்பட வேண்டும் அல்லது கற்றுக் கொண்டாக வேண்டும்.
முதல் முன்னோறிய சமூகத்தில் அடைக்கலம் தேடிக்கொண்டு தமது பிரஜா உரிமைகளை உறுதி படுத்திக்கொண்டு ஈழத்தில் வாழும் தமது இனத்தை எலும்புகூடுகளாகவும் சந்தணகட்டைகளாகவும் தேயவிட்டதும் அல்லாமல் அதன் அழிவில் மேலதிக சுகங்களை கண்டுகொள்வதற்கு பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். உதாரணம்: ஜிரிவி.தீபம் தொலைக்காட்சி. நாடுகடந்த தமிழீழ அரசு.
இவ்வளவு கால அழிவுகளைவிட இனித்தான் அழிவுகள் ஆரம்பமாகப் போகிறது என கணிப்பிட வேண்டியதாகவுள்ளது. யாரை ஓட்டுண்னி யாரை சமூகத்துரோகி என்றார்களோ அவர்களின் சுயரூபமும் முகமூடிகளும் கிழித்தெறியப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஈழம்வாழ் தமிழ்மக்களே!. இந்த வாக்கியங்களை தவற விட்டுவிடாதீர்கள். இல்லையேல் ஈழத்தில் தமிழினம் சுவடில்லாமல் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது.
சிவம் அமுதசிவம்
நண்பர் சோதிலிங்கம் அவர்களே!
நீங்கள் தமிழைப்படித்த அளவுக்கு , உங்களுக்கு ஆழமான பார்வை இல்லாமல் போய்விட்டது. முதல்வரியிலேயே , வரலாறு பற்றிய உங்கள் தெளிவற்றபார்வை தெரிகிறது.
உலகிலேயே எந்தப்போராட்டம், ‘ ஆரம்பகாலத்திலிருந்தே வெற்றிகரமாகப் போனது? அப்படி ஒன்றிரண்டையாவது உதாரணம் காட்டியிருக்கலாமே!
உங்களால் முடியாது. உலகின் அனைத்து விடுதலைப் போராட்டங்களுமே ஆரம்பத்தில் பற்பல இன்னல்களையும் கடந்துதான் வேரூன்றியிருக்கின்றன.
இந்தியாவை எடுத்துக்கொண்டால், நேதாஜி கட்டியெழுப்பிய ஆயுதப்படைக்கு , அதிகாரவர்க்கத்தினாலும் உள்ளூர் போலி விடுதலைவாதிகளாலும் பல இடைஞ்சல்கள் இருந்துகொண்டுதான் இருந்தது. நேதாஜியை வெல்லவேண்டும் எனும் அதிகாரவெறியுடன் காந்தியார் தனது பாதையை நகர்த்தினார் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா? ஆனால், அதுதான் உண்மை!
காலகதியிலாவது, தாம் உள்நுழையக்கூடியதான ஒரு அரைகுறைத்தீர்வை வழங்குவதற்காக வெள்ளையர்கள் , காந்தியாரை ஆதரிப்பதன்மூலம் நேதாஜியை ஒடுக்கினர். இன்று அதுதானே நிதர்சனமாகியிருக்கிறது இந்தியாவில்? நாளுக்குநாள், அன்னியர்க்கு அடிமைப்படுவதே அரசியலாகி விட்டிருக்கிறதே!
ஏன்? பாலஸ்தீனத்தை எடுத்துக்கொள்ளுங்கள் – அங்கு ஹமாஸ் மட்டும்தான் மேலோங்கிநிற்கிறது. அங்கும் பல ஆயுதக்குழுக்களுக்கிடையில் போட்டி நிலவத்தான் செய்தது. அதற்காக, ஹமாஸ் ஆனது அதிகாரவெறியுடன் நிற்கிறது என்று உங்களால் சொல்லமுடியுமா?
உங்கள் கட்டுரையில் பளிச்சிடுவது, உங்கள் அதிகாரவெறி மட்டும்தான்.
உலத்தமிழர்களே கொண்டாடும் , எமது தேசியத்தலைவரைப் பெயர் சொல்லி அழைப்பதன்மூலம், அந்த வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
// இந்த அதிகார வெறிக்கான போராட்டத்தில் வே பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றையவர்களை வெற்றி கொண்டு வன்னி மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்து அழித்தொழித்தனர் அல்லது இலங்கையரசு அழித்தொழிப்பதற்கு உதவினர். //
வாய்கூசாமல் சொல்கிறீர்களே இதை? –
உங்கள் கருத்துப்படி, ‘ சிங்களன் என்றால், எதையும் செய்யத்தக்கவன்’ அவன் ‘ எள்’ என்றதும் ‘ எண்ணெய்’ ஆக நிற்காத தலைவர் குற்றவாளி!அப்படித்தானே?
சிங்களனின் மன உணர்வைப்புரிந்துகொண்டு – அவன் நினைக்காததையெல்லாம் செய்துமுடிக்கும் கருணா, டக்ளஸ் போன்றோர் , தமிழ்ப் பாதுகாவலர்கள்…. அப்படித்தானே?
இன்று, இப்படியாக இதை ‘ அதிகாரவெறி’ என்று வசைபாடும் நீங்கள் – அன்றே செயலில் இறங்கி, எமது தமிழ்மக்களை – எமது அரும்பெரும் சொத்துக்களைக் காப்பாற்றியிருக்கலாமே!
‘*யாழ். அரசசெயலக முன்றலில், சத்தியாக்கிரகமிருந்த தமிழர்களின் தலையில் , ஜீப்வண்டியோட்டியமை’ அதிகாரவெறி‘யாகத் தெரியவில்லை உங்களுக்கு?-
*யாழ்,வீரசிங்க மண்டப முன்றலில் நிகழ்ந்த , தமிழாராய்ச்சி மாநாட்டில்,தமிழின் சுவையில் மயங்கியிருந்த தமிழர்கள்மீதும் ஆயுதத்தாக்குதல் நடாத்திக்கொன்றது – அதிகாரவெறியாகத் தெரியவில்லை உங்களுக்கு ?-
சரி. உங்கள் கருத்துப்படி – எவனோ ஒரு போக்கிரியின் அதிகாரவெறியை அடக்குவற்காக –
*ஆயிரமாயிரம் அப்பாவித்தமிழர்களை , ஆவணி அமளி, கருப்பு ஆடி என்றெல்லாம் இன்று அழைக்கப்படும் கலவரங்களை உருவாக்கி அரசாங்கமே கொன்றொழித்தமை – அதிகாரவெறியாகத் தெரியவில்லை உங்களுக்கு?-
*உலகத்திலேயே கிடைத்தற்கரிய நூல்களைத் தன்னகத்தே கொண்டிருந்தமையைத்தவிர , வேறுபிழையேதும் செய்திராத, அரிய பொக்கிஷமான , எமது யாழ்.நூலகத்தைத் தீக்கிரையாக்கியமைகூட அதிகாரவெறியாகத் தெரியவில்லை உங்களுக்கு? –
இத்தனை அநியாயங்களில் தொடர்ந்து தமிழினம் அடிவாங்கி அவமானப்பட்டு அழிந்துகொண்டிருந்த வேளையில் , ஆமைபோல் எங்கோ ஒளிந்திருந்துவிட்டு – இன்று – ‘ பூனையில்லா வீட்டில் எலிகள் கொண்டாட்டம்’ என்பதுபோல வந்துவிட்டீர்கள் வேதாந்தம்பேச!
தலைவரையே திட்டுவதிலிருந்து உங்கள் உள்நோக்கம் புரிகிறது. உங்களதும் , உங்களுக்குப் பின்னூட்டம் இட்டவர்களதும் அடிப்படை அதில் வெளிப்படையாகவே தெரிகிறது.
நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் , எதிலும் அதிகாரம் செலுத்த விரும்புகிறீர்கள். பணம்…. பணம்…. பணம். பணத்தைப்பற்றியே அதிகம் பிரஸ்தாபிக்கிறீர்கள். அந்தப் பணத்தை உங்கள் கையில் தந்துவிட்டால், எதுவும் பேசமாட்டீர்கள்.
முதலில், நீங்கள் செயலில் ஒன்றையாவது காட்டுங்கள்!
நமது தேசியத்தலைவரைப்போல வேண்டாம் – அது உங்களால் மட்டுமல்ல –
எவராலும் முடியாது என்பதை நான் சொல்லவில்லை – பல உலகத்தலைவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் – வன்னி நிர்வாகத்தைப்பார்த்து தாமே பலவிடயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று –
திரு. உருத்திரகுமாரன் செய்ததாக நீங்கள் சொல்லும் தவறுகளை நிவர்த்தி செய்து , ஒரு அரசை நீங்களே உருவாக்கிக் காட்டுங்கள் முதலில். அதன்பிறகு பேசவாருங்கள். உங்களுக்கு ’ஜால்ரா’ போடவென்று ஒரு ’வாய்ச்சொல்வீரர் ’ கூட்டத்தையே வைத்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இவ்வளவுபேருமே போதாதா ஒரு அரசு அமைக்க?
’தமிழீழ விடுதலை ஆதரவு’ எனும் போர்வையைப் போர்த்துக்கொண்டே , குழிபறிக்கும் வேலையில் இன்னும் எத்தனைபேர் இறங்கியிருக்கிறீர்கள்?
சிவம் அமுதசிவம்
thurai
//உலத்தமிழர்களே கொண்டாடும் , எமது தேசியத்தலைவரைப் பெயர் சொல்லி அழைப்பதன்மூலம், அந்த வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்//
பிரபாகரனை ஈழம்தவிர்ந்த, உலகமெங்கும் அக்திகளாக குடியேறி இலங்கையின் வடக்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமென அறியாத புலத்தில் வாழும் பல தமிழர்களே தலைவராக் ஏற்றுள்ளனர். தலைவர் தமிழீழம் கண்டாரா? தமிழீழத்தைக் காணும் வழியை கொண்டுநடத்த தனக்குப்பின் யாராவ்து தலைமையை உருவாக்கியுள்ளாரா?
பிரபாகரனின் வழிவந்த வாரிசுகள்தானே கேபியும் மற்ரும் இலங்கையரசிடம் பின்னும் முன்னூம் ஓடித்திரியும் வாரிசுகழும். இவர்களே இப்படியானால் தேசியத்தலைவரெனெ வணங்கும் மற்ரவர்களின் லட்சியம் எப்படியிருக்கும்?
அன்னியநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்வோரிற்கு பிறந்த மண்ணை சுடுகாடாக்கிய ஒருவரை தேசியத்தலைவனென்று அழைப்பதில் எவ்வளவு ஆனந்தம்.
துரை
thurai
இதுவரை தேசியத்தலைவர் தமிழீழப்போராட்டம் என்று கோசம் போட்டதெல்லாம், தமிழரிடையேயிருக்கும் கொடுரமான செயல்களையும் குணங்களையும் காக்கவும், மறைக்கவுமே. தமிழரிடம் சிங்களவரிடமில்லாத கொடூரக் குணங்களுன்டென்பதற்கு பிரபாகரனும், விடுதலைப்புலிகழும் செய்த கொலைகளே சாட்சியம். இவர்களைவிட சிங்களவர் கொடுமையானவர்களா?
முதலில் தமிழர் தாம் ஓர் இனமெபதை வாழ்ந்து காட்டி விட்டு அதன் பின் தமிழர்களிற்கு உருமை வேண்டுமென்று குரல் கொடுக்கவும். தமிழர்களிற்கு உருமைகள் வேண்டும், ஈழ்த்தில் தமிழரின் உருமைகள், தமிழராலும், தமிழரின் உருமைகள் சிங்களவராலும் மறுக்கப்படுகின்றது. இதனை யாரும் மறுக்கமுடியாது.
இதுவரை போரை நடத்தியவர்கழும் பிரபாகரனை தேசியத்தலைவனாக்கியவர்கழும் யார் என்பது இப்போ உலகத்திற்கு வெளிச்சமாகின்றது.
சுயநலமிக்க தன்னினத்தை மதிக்காத, தன்னினம் அழிவதில் ஆனத்தம் கண்ட,அந்த அழிவில் வாழ்வை நடததி உல்லாசமாக வாழ்ந்தவர்களே புலிகள். இந்தக் கொடியவர்களிற்கு சிங்களவர்களைப் பகைவர்களாக்குவத்ன் மூலமே தமது வாழ்வை வழமாக்கமுடியும்.
இவர்கள் சமாதானத்தின் எதிரிகள். முழு உலகிற்குமே ஆபத்தானவர்கள்.
துரை
sam
இத்தனை அநியாயங்களில் தொடர்ந்து தமிழினம் அடிவாங்கி அவமானப்பட்டு அழிந்துகொண்டிருந்த வேளையில் ஆமைபோல் எங்கோ ஒளிந்திருந்துவிட்டு – இன்று – ‘ பூனையில்லா வீட்டில் எலிகள் கொண்டாட்டம்’ என்பதுபோல வந்துவிட்டீர்கள் வேதாந்தம்பேச/
அமுதசிவம் இவர்கள் தொடர்ந்து அரசியலில் இருப்பவர்கள். தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பவர்கள்தான். ஆனால் நீங்கள் போட்டுக்கொண்டிருந்த சத்தத்தில் உங்களுக்கு ஒண்டும் கேக்கேலை. இப்ப கொஞ்சம் அமைதியாய் இருக்கிறியள் அதாலை இந்தச் சத்தம் உங்களுக்குக் கேக்குது. ஆத்திரப்படாதையுங்கோ.
இன்னுமொரு “முள்ளிவாய்க்கால்” தமிழருக்கு கட்டாதேங்கோ இப்ப இலங்கையில் இருக்கும் மிச்சத் தமிழரும் அழிந்து தமிழர் என்ற இனம் இருந்ததன் அடையாளமே இல்லாமல் போயிடும் எண்டு சொன்னால் சரியாய் உணர்ச்சி வசப்படுகிறியள். உணர்ச்சி வசப்பட்டதால வீட்டிலை பூனை இல்லை எண்டு ருத்திரகுமார் வெளியே ஒப்புக் கொண்டதில்லை நீங்கள் போட்டுடைச்சுப் போட்டியள்
shanthan
எப்படி இந்த அரசியல் அறிவு மனிதப் பண்பு இரக்கம் இல்லாத பிரபாகரனை இந்த தமிழனம் ஆதரித்ததோ அதே போல் நாடு கடந்த அரசாங்கத்தையும் ஆதரிக்க கோருகின்றது. பிரபாகரனை ஆதரித்த குற்றத்திற்காக மூன்று லட்சம் தமிழர்கள் மரணத்தை அடைந்து, கைகால்களை இழந்து, முள்ளிவாய்காலில் பிரபாகரனுடைய பிணம் நாதியற்று உரிமை கோர ஒரு ஈ காக்கா கூட இல்லாமல் கோவணத்துடன் கிடந்தது செய்திகளாக வந்து சேர்ந்தது.
முப்பந்தைந்து வருட போராட்டம் அரசியல் பற்றாக்குறையாலும் சர்வாதிகார போக்காலும் தமிழ் மக்களை அநாதையான நிலைக்கு தள்ளிற்று. ஏன் இவ்வாறு தள்ளப்பட்டது என யாராலும் ஆராயப்படவில்லை. ஆனால் புலிப்பினாமிகள் தமிழ் மக்களுக்குள் இருந்த துரோகிகள் தான் காரணம் என வரலாற்றை புரட்டிச் சொல்கிறார்கள். மேலும் பிரபாகனும் அவரது குடும்பமும் தமிழ் மக்களுக்காகத்தான் உயிர் கொடுத்தார்கள் எனவும் சூரிய தேவன், கரிகாலன், ராஐகோபுரம் என்றெல்லாம் புகழ் பாடுகிறார்கள். ஆனால் தலைவரும் புலிகளும் தமது உயிர்கள் பறிக்கப்பட போகின்றன என தெரிந்தும் மோசமான கொடுமைகளை இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுக்கு செய்தார்கள்.
1)மக்களுக்காக அனுப்பப்பட்ட சீனி பருப்பு போன்றவற்றை விற்று காசு பார்த்தார்கள்.
2)சாப்பாட்டிற்கே வழியற்ற குடும்பங்களின் 10, 12 வயது பிள்ளைகளை பிடித்து சென்றார்கள். பெண் குழந்தைகளின் தலைமுடியை கட்டையாக வெட்டி இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தார்கள்.
(3)தாம் தமிழினத்தின் காவலர்கள் என சொல்லி தமது இனத்தை தாமே கொன்று குவித்து போர் குற்றம் செய்தார்கள்.
இலங்கை அரசு போர் குற்றம் செய்தது என கண்டிக்கும் நாம் புலிகள் செய்த போர் குற்றங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சுயநலம் மிக்க தமிழர்கள் தமது மக்கள் மத்தியில் அம்பலமாவார்கள். ஆனால் ஜிரிவி ஒற்றுமை இல்லை எல்லோரும் ஒன்றுபடுவோம் என்றே அறைகூவல் விடுத்துக் கொண்டு இருக்கிறது. ஏன் இவர்கள் ஒன்றுமே தெரியாத ஞான சூனியங்களாக இருக்கிறார்கள். இத்தனை அவலங்கள் நடந்து மக்களை அகதிகளாக முகாம்களிலும் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் செய்திகளை அறிந்து பார்த்த பின்பும் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தங்களை தயார்ப்படுத்தாமல் தமிழீழ அரசாங்கம் என ஒன்று தயாரித்து இருக்கிறார்கள். இவர்களுடைய தயாரிப்புக்களில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் என்ற பிரமாண்டமான படம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு கடலிலே கரைக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்திற்கான சுய விமர்சனம் இவர்களால் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை. ஓன்றுமே நடக்காத மாதிரி இப்போது மே 18 ம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அகிம்சைப் படத்தை திரைக்கு விட்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே இந்தப் படத்திற்கான விமர்சனத்தை முன்வையுங்கள்.
அத்தோடு தமிழ் மக்களே! மற்றவன் தமிழ் ஈழத்தை எடுத்துத் தருவான் நாம் இங்கிருந்து எமது பிள்ளைகளை டாக்டர்களாக்கி பட்டதாரிகளாக்கி உள்ள கலைகளெல்லாம் கற்பித்து அரங்கேற்றங்கள் செய்து, நாங்களும் வீட்டு வாசலில் ஏறினால் கார் இறங்கினால் கார் காஞ்சிபுரம், பனாரஸ் பட்டுவேட்டி -கட்டி கட்டியாய் தங்கம், வறுத்த கோழி, பீட்ஸா என தின்று குடித்து உள்ள சுக போகங்களையும் கைவிடாது- போனால் போகுது இலங்கை அரசாங்கம் இதற்கெல்லாம் ஊருக்கு போகும் போது கோபிக்கவா போகின்றது என வட்டுக் கோட்டை, நாடுகடந்த அரசாங்கம் போன்றவற்றிற்கு கைகளில் மைதடவி வாக்களித்து – ஜிரிவிக்கு தொலைபேசி எடுத்து அரசியல் விமர்சனங்ளைப் பேசிக் கொண்டு துளி இரத்தம் சிந்தாமல் ஐரோப்பாவின் ஜனநாயக உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஈழத்தின் அப்பாவி மக்களின் குருதியிலே வாழ்ந்தது போதும்!
ஐயா புலம்பெயர் தமிழினமே! ஒவ்வொருவரும் முதலில் உங்களது பிள்ளைகளைப் போல் மற்றவர்களுடைய பிள்ளைகளையும் நேசியுங்கள். ஐரோப்பாவில் இருக்கும் புலிப் பினாமிகளே! சுயநல பேய்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட வேலைக்கு உடனடியாகவே லீவு போட்டு விட்டு வைத்தியரிடம் கொண்டு ஓடுகிறீர்கள். சொல்லப் போனால் உங்களுடைய பிள்ளைகள் வைத்தியராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதற்கு துடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆண் பெண் என எந்த பேதமும் பாராமல் புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு போய் பலியிட்ட போது எத்தனை பச்சிளம் பாலகர்கள் குண்டடிபட்டு துடித்திருப்பார்கள். அதை படம் பிடித்து உங்கள் தொலைக்காட்சிகளில் கண்ணுங்கருத்துமாய் ஒளிபரப்பி காசு சேர்த்தீர்கள்.
புலி பினாமிகளே! புலம்பெயர் நாடுகளில் இருந்து எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளை தற்கொடை படைக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். தயவு செய்து பதில் தாருங்கள். ஜிரிவி அறிவிப்பாளர்களே! மிகவும் கவலை தோய்ந்ததாக முகங்களை வைத்துக் கொண்டு உணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்கிறீர்களே உங்களுடைய பிள்ளைகள் யாராவது ஈழத்தில் போராட அனுப்பப்பட்டு கொல்லப்படடுள்ளார்களா? ஈவு இரக்கம் இருந்தால் நீங்கள் விட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.
இறுதியாக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தனிநாடு பிரிந்து தான் ஆக வேண்டும். சந்தர்ப்பம் தன்னலமற்ற தியாகம் நேரம் இவைகள் சரியான தருணங்களில் பாவிக்கப்படும் போது நிச்சயம் ஈழம் மலரும். தயவு செய்து புலப்பினாமிகளே தமிழர் தொலைக்காட்சிகளே நீங்கள் ஈழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் முற்றாக ஒதுங்கி இருக்கும் பட்சத்தில் தரமான நேர்மையான மனிதநேயம் மிகுந்தவர்களால் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
அழகி http://thesamnet.co.uk/?p=20846
nirmalan
சிவம் அமுதசிவம்,
உங்கள் தேசியத்தலைவர் எமக்கு பாசிச வெறியன் என்பது மட்டும் உங்களுக்கு ஏன் புரியவில்லை எத்தனை மக்களின் கொலைகளுக்கு பொறுப்பானவர் பிரபாகரன். எத்தனை போராளிகள் ரெலோ- ஈபி ஆர்எல்எப்- ரெலா- ரெலி-என எல்லோரும் தமிழர்களுக்காக போராடத்தானே வந்தவர்கள் ஏன் மறந்து விட்டீர்கள் இவைதானே போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே தளர்த்தியது என்பது ஏன் உமக்கு புரியவில்லை. காரணம் புலிப்போராட்டம் என்பதே வெளிநாடுகளில் உள்ள புலிப்பினாமிகளுக்குக காசும் காசுக்கான களவுமே தவிர வேறு என்ன? இதற்காக முள்ளிவாய்யக்காலில் தமிழர்களை படுகொலை செய்த்துணிந்தவர்கள்.
மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் பிரபாகரனும் புலிகளும் மக்களை மனிதக்கேடயங்களாக பாவித்திருப்பார்களா? ஏன் மக்கள் இருக்கும் இடங்களில் இருந்து குண்டுகள் ஏவினர் ஏன் தப்பி ஓடியவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்தனர் ஏன் மக்கள் அகதி முகாம்களில் புலிகளை அடித்து கொலை செய்தனர்? ஏன் மக்கள் தமது பிள்ளைகளை பிடித்த புலி இயக்கத்தவர்களை கடந்த மாதம் கிளிநொச்சியில் அடித்து கொலை செய்தனர்?
உங்களுக்கு இவைகள் என்றுமே புரியாது காரணம் புலிகளின் காசில் உங்கள் வயிறு வளர்ந்திருக்கும். இன்னும் உங்கள் பிள்ளைகளின் வயிற்றை உங்கள் உறவுகளின் வயிற்றை வளர்க்கவே திட்டம் (எத்தனையோ புலிகளின் பினாமிகள் தமது தவறினை உணர்ந்து விட்டனர் ஆனால் உங்கள்போல சிலரை திருத்த முடியாது புதியதொரு முள்ளிவாய்ககால் தேவைப்படுகிறது)
கருணா பிள்ளையான் எனப்படுவோர் உங்கள் பாசறையிலேயே வளர்ந்தவர்கள் இன்று எப்படி அவர்கள் எங்கள் வீட்டுப்பிள்ளையாகினார்.
பொறுத்திருங்கள் இந்த நாடுகடந்த தமிழீழத்தவர்களும் இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்வார்கள் அன்றும் உங்களுக்கு ஒன்றுமே புரியாமலே இருப்பீர்கள் வெளிநாட்டில்.
thurai
நாடு கடந்த தமிழீழத் தேர்தல் காலம் கடந்து புலம் பெயர்நாடொன்றின் ஒரு பகுதியில் சென்ற கிழமை நடைபெற்றுள்ளதாக அறிகின்றேன். இதில் புலிகளின் முக்கிய ஆதரவாளர்களே பங்கெடுத்துள்ளார்கள். பொது அறிவிப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆயுதப் போராட்டம்தான் இரகசியமாக ஆரம்பிக்கப்பட்டது, புலிகளிற்கு ஜனநாயகத்தேர்தலும் இரகசியமாக நடத்த வேண்டிய நிலமை வந்துவிட்டதே.
துரை
chandran.raja
நாடுகடந்த தமிழீழம்- நிலம் தொடாத வேர் மட்டுமல்ல தாகம் தீர்க்காத தண்ணீரும் கூட. இலங்கை அரசால் விரட்டப்பட்டு சோதிலிங்கம் வந்து சேரவில்லை. தமிழன் தமிழனினால் விரட்டப்பட்டே அகதியாக ஐரோப்பா வந்து சேர்ந்தார். சிவம் அமுதசிவம் உங்கள் வயதுக்கோளாறும் சுயமோகமுமே இந்த உண்மைகாண தடையாக இருக்கிறது. இதுவே உலகவரலாற்றை அறிந்து கொள்வதிலும் செம்மையில்லாமல் இருக்கிறது.
இங்கு சேர்ந்து விவாதிக்கிறோம் என்றால் அதில் சோதிலிங்கத்தின் கணிசமான உழைப்பும் அடங்கியிருக்கிறது.
இது தம்மினத்தின் மீது கொண்ட பற்றுதனால் அன்றி வெறியாக அல்ல. இதை கவனத்தில் தாங்கள் எடுத்தால் அன்றி எந்தவிதத்திலும் உங்கள் இனத்திற்கு உதவமுடியாது. முள்ளாகவே இருப்பீர்கள்.
T Sothilingam
நாடுகடந்த தமிழீழம் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தேர்தல் இவையாவும் மக்களின் பணத்தை சூறையாடும் நோக்கம் கொண்டவைகளே அன்றி இலங்கைத்தீவில் உள்ள மக்களுக்காக சிந்தனையில் எழுந்தவைகள் அல்ல இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு என்ன நடந்தது எங்கே அவர்கள் ஏன் இவர்களை புலிகளின் ஆட்கள் எதிர்த்தனர்?
உருத்திரகுமார் தமிழர்களின் எதிர்காலத்திற்கு இன்னுமொரு வெள்ளை முள்ளிவாய்க்கால் வெட்டுகிறார் நீங்களும் துணை போகிறீர்கள்
இந்திய பிராந்தியத்தில் நடைபெறும் மாற்றங்களை உள்வாங்க முயற்ச்சியுங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட உங்கள் ஆட்கள் கதைப்பது போல் கதைத்து நாறிவிடாதீர்கள்.