பிரதமர் டி. எம். ஜயரட்னவுக்கு கண்டி மாவட்டத்தின் பிரதான நகர்களில் இன்று 26 ஆம் திகதி பாரிய வரவேற்புகள் அளிக்கப்படவிருக்கின்றன. கடுகண்ணாவ, பிலிமத்தலாவ, பேராதனை, கண்டி மாநகர், கெலிஓயா, கம்பளை உட்பட பல நகர்களில் பிரதமரான ஜயரட்னவுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இன்று காலை 8.00 மணியளவில் இவ்வரவேற்பு வைபவங்கள் கடுகண்ணாவவில் ஆரம்பமாகவிருக்கின்றன. இதேநேரம் காலை 9.30 மணியளவில் தலதா மாளிகையில் மத வழிபாடுகளில் ஈடுபடும் பிரதமர் மல்வத்த அஸ்கிரிய பீடாதிபதிகளை நேரில் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளார். அத்தோடு இந்து, இஸ்லாம், கிரிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை தலதா மாளிகையின் வளாகத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் சர்வதேச பெளத்த நூதனசாலையின் மத்திய நிலையத்திற்கு பிற்பகல் 1.00 மணிக்கு பிரதமர் ஜயரட்ன வைபவ ரீதியாக அடிக்கல் நடவுமிருக்கின்றார்.