தனித்து இயங்குவதா? அரசுக்கு ஆதரவளிப்பதா? மனோ கணேசனின் கட்சி இன்று தீர்மானம் தனித்து செயற்படுவதா? அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதா? என்பது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவும் மத்திய குழுவும் இன்று சனிக்கிழமை கூடித் தீர்மானம் எடுக்கவுள்ளது.
“எமது இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக நாளை (இன்று) பிற்பகல் நாங்கள் சந்திக்கவுள்ளோம் ” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து தான் வெளியேறுவதாக ஜனநாயக மக்கள் முன்னணி வியாழக்கிழமை கூறியிருந்தது. ஜனநாயக மக்கள் முன்னணிக்கு உறுதியளித்ததன் பிரகாரம் தேசியப் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் இடம் வழங்காததால் ஐக்கிய தேசிய முன்னணியுடனான உறவை ஜனநாயக மக்கள் முன்னணி முறித்துக்கொண்டது