நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆறு ஆசனங்களைத் தனதாக்கி யிருக்கின்றது. மேலும் தேசியப் பட்டியலின் ஊடாக இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் என்றும் அதனுடன் அக்கட்சியின் மொத்த ஆசனங்கள் எட்டாக உயரும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பஷீர் சேகுதாவூத், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எச். எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைஸல் காசிம், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட நூர்தீன் மசூர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவு அறிவிக்கப்படாதபோதிலும், அங்கு சின்ன தௌபீக் வெற்றி பெற்றுள்ளமை ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் 21 வேட்பாளர்களை நாடளாவிய ரீதியில் நிறுத்தியிருந்தது.
ERAVURAN
“”அக்கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பஷீர் சேகுதாவூத், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எச். எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைஸல் காசிம், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட நூர்தீன் மசூர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்””.
ஈரோஸிலிருந்து எம். பியாகி ஈரோஸை யூ.என். பிக்கு காட்டிக் கொடுத்து அதன் பிறகு பின் கதவு வழியாக முஸ்லிம் காங்கிரஸூக்குள் தஞ்சமடைந்து அதில் 3 முறை தேசியப் பட்டியல் நியமனம் பெற்ற பஸீர் மாஸ்டர் இம்முறை முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட(?) எம்.பியாக பாராளுமன்றம் செல்லவிருக்கின்றார்.
இதில் உண்மை என்னவென்றால் இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவடட்டத்தில் ஐ.தே.க யில் போட்டியிட்டு ஓட்டமாவடியைச் சேர்ந்த லெவ்வை ஹாஜி என்பவரே விருப்பு வாக்கில் முன்னனியிலிருந்தார். தனது சொந்த ஊராகிய ஏறாவூரில் வெறும் 4000 வாக்குகளை மாத்திரம் பெற்ற பஸீர் மாஸ்டர் 3வது அல்லது 4வது இடத்திலிருந்தார். காதும் காதும் வைத்தாற் போல் நடந்த திருகுதாளத்தினால்தான் அவரது பெயர் முன்னனிக்கு கொண்டு வரப்பட்டது. இப்போதுதான் இந்தத் தகவல் வெளியில் கசிய ஆரம்பித்து இரண்டு வேட்பாளர்களுக்கும் முறுகல் ஆரம்பித்துள்ளது. முழு விபரங்களும் வெகு விரைவில் வெளிவரவுள்ளது.