இடைப் பருவப் பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால் இடி, மின்னல் தாக்கம் குறித்து முன்னெடுச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையமும், வானிலை அவதான நிலையமும் நாட்டு மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
இடி, மின்னல் தாக்கம் காரணமாக இம் மாதத்தின் முதல் பத்து தினங்களிலும் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வானிலை அவதான நிலைய த்தின் வானிலையாளர் சமிந்த பெரேரா, குறிப்பிடுகையில், தற்போது இடைப் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலம் ஆரம்பமாகியுள்ளதால் தான் இடி, மின்னல் மோசமாக காணப்படுகின்றது.
இதன் காரணத்தினால் இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது திறந்த வெளியில் நடமாடுவது, விளையாடுவது, நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பது, வீட்டில் மின்சார பொருட்களைப் பாவிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, உயரமான பச்சை மரங்களுக்கு கீழ் நிற்பது என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளுவது மிக, மிக அவசியம் என்றும் அவர் கூறினார்.