இதுவரை வெளியான 20 மாவட்டங்களின் 180 ஆசனங்களில் 117 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் 46 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியும் 5 ஆசனங்களை ஐனநாயகத் தேசிய முன்னணியும் 12 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பெற்றுள்ளன. வெளியான முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி நகர்வதை நோக்கி உறுதிப்படுத்தி உள்ளது.
வடக்கு கிழக்கில் வெளியான தேர்தல் தொகுதிகளின் முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபிரதிநிதித்துவம் சரிந்துள்ளது. ஆனாலும் அவர்கள் பெரும்பான்மை வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி யுடன் இணைந்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. காலம் சென்ற மகேஸ்வரனை முன்னிறுத்தி தேர்தலில் குதித்த ஐக்கிய தேசியக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.
புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவுடன் களம் இறங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசியத்திற்கான முன்னணி தமிழ் கொங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டது. புலம்பெயர்ந்த மக்களினதும் புலம்பெயர்ந்த ஊடகங்களினதும் பெருமளவு ஆதரவைப் பெற்றிருந்த இக்கட்சி இதுவரை வெளியான முடிவுகளில் எந்தத் தொகுதியிலும் ஆயிரம் வாக்குகளைக் கூடப் பெறவில்லை.
யாழ்ப்பாணத்தில் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி வி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மீண்டும் ஒருமுறை தோல்வியைச் சந்திக்கும் நிலையிலேயே உள்ளது. அவர்கள் கூடுதல் கவனம் செலுத்திய வட்டுக் கோட்டைத் தொகுதியிலேயே அவர்கள் சில நூறு வாக்குகளையே பெற்றுள்ளனர். இத்தேர்தல் முடிவு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரியின் அரசியல் அஸ்தமனமாகவும் அமையலாம்.
கிடைக்கப்பெற்ற ஆசனங்கள்
மாவட்டம் UPFA UNP DNA TNA
BATTICALOA 1 1 3
DIGAMADULLA 4 2 1
JAFFNA 3 1 5
VANNI 2 1 3
MATARA 6 2
HAMBANTOTA 5 2
MONERAGALA 4 1
MATALE 4 1
BADULLA 6 2
KURUNAGALA 10 5
KEGALLE 7 2
RATNAPURA 7 3
KALUTARA 7 2 1
PUTTALAM 6 2
GAMPAHA 12 5 1
NUWARA-ELIYA 5 2
COLOMBO 10 7 2
GALLE 7 2 1
ANURADAPURA 7 2
POLONNARUWA 4 1