ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த இந்த பொதுத் தேர்தலில், வெற்றிலை சின்னத்தை வெற்றி பெற செய்வதுடன் மலையக மக்கள் தமது தனித்துவத்தை பேணுவதுடன் அவர்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும், அரச நியமனங்களை பெற்றுக் கொள்வதற்கும் இ. தொ. கா. வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமென்று, இ. தொ. கா. பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.
தேர்தல் தொடர்பாக அவரிடம் கருத்துக்களை கேட்டபோதே இதனைத் தெரிவித்தார். இத் தேர்தலில் இ. தொ. கா. வின் ஆதரவுடன் அரசாங்கம் அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்த அவர், தொடர்ந்து கூறியதாவது:-தேர்தலின் பின்னர் அரசியலமைப்பில் அரசாங்கம் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
நாமும் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் 3179 ஆசிரியர்களும் 500 தபாற்காரர்களும் நியமனம் பெற்றிருக்க மாட்டார்கள். மாறாக இவர்கள் தொழில் தேடி வெளி மாவட்டங்களுக்கு அலைய வேண்டி ஏற்பட்டிருக்கும்.