புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர் களடங்கிய சுமார் 1300 பேர் இன்று முதலாம் திகதி விடுவிக் கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிறுவர் பேராளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர்.
NANTHA
தேசம் நெட் இப்படி செய்திகளை வெளியிட்டு “சோர்ந்து” போயிருக்கும் உண்டியல்காரர்களைப் புதிய கோஷத்துடன் மீண்டும் கதவுகளைத் தட்ட வைக்கிறீர்கள். கடல் கடந்த ஈழம் என்று தண்டலுக்குப் புறப்பட்ட கோஷ்டிகள் தங்களுக்குள் குடுமி பிடிச்சண்டை தொடங்கி “உண்டியல்” தூக்கும் “ஏகப் பிரதிநிதி”கள் யார் என்று போராட்டம் நடத்துபவர்கள் இந்த செய்தியையும் பார்த்துவிட்டு “அங்கவீனமான” போராளிகளுக்கு “பணம்” என்று அலையப் போகிறார்கள். பாவப்பட்ட தமிழ் ஆத்மாக்களே ஜாக்கிரதை!