அரச ஊழியர்கள் பெரும் சிரமமின்றி யாழ் சென்றுவர யாழ்ப்பாணத்துக்கும் பூநகரிக்குமிடையில் படகுச் சேவையொன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து தரை மார்க்கமாக பூநகரிக்கு வந்து சேர குறைந்தது இரண்டரை மணி நேரம் செல்கின்றது. இப்பயணத்தில் ஆனையிரவு பரந்தன், ஜயபுரம், ஆகிய இடங்களைத் தாண்டிவரவே இவ்வளவு நேரம் செல்கின்றது.
எனினும் யாழ். பூநகரி படகுச் சேவை மூலம் நேரத்தை மீதப்படுத்த முடிவதோடு வீண் சிரமங்களையும் குறைக்க முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்
ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் மாகாண சபை அதிகாரிகள், போன்றோர் இந்த படகுச் சேவை மூலம் நன்மையடையவுள்ளனர்.
யாழ் மற்றும் பூநகரி மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் படகுகள் இச்சேவையிலீடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது