தேர்தல் பிரசார நட வடிக்கையில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக இறுதி நேரத்தில் தனது விஜயத்தை ஒத்திவைத்தார். வியாழனன்று யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.