“சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை’ என்ற தலைப்பில் நேற்று “உதயன்’, “சுடர் ஒளி’ பத்திரிகைகளின் முதலாம் பக்கத்தில் வெளியான செய்திகளுக்காக அப்பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தாம் தீர்மானித்திருக்கின்றார் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.
“உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைச் செய்திகளுக்கு எதிராக நஷ்டஈடுகோரி வழக்குத் தாக்கல்’ என்ற பெயரில் அவரது அமைச்சின் கடிதத் தலைப்பில் அவரது ஊடகச் செயலாளர் ஒப்பமிட்டு நேற்றுக் காலை விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்றைய திகதியிட்டு வெளியான அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் இன்றைய தலைப்புச் செய்தியானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது திட்டமிட்டு சுமத்தப் படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் குறிப்பாகத் தேர்தல்களில் இப்பத்திரிகைகள் தருணம் பார்த்துக் காத்திருந்து எங்கள் மீது சேறு பூசும் தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும் இதை நாங்கள் எம்மீது திட்டமிட்ட முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்தல் வன்முறையாகக் கருதவேண்டியுள்ளது என்றும்
யாழ். தேர்தல் களத்தில் சிதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரான சம்பந்தன் குழுவின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சரவணபவன் என்பவருக்குச் சொந்தமான பத்திரிகைகள்தான் இந்த “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைகள் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, இத்தகைய தேர்தல் வன்முறைக்கு எதிராக தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன்
இந்த விடயத்தில் டக்ளஸ் தேவானந்தா மிகவும் அவசரப்பட்டிருப்பதை உணர முடிகின்றது. உண்மையில் தேடப்படும் குற்றவவாளி குமாரசிங்கம் கேசவன் (ஜீவன்) என்பவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் எனபது ஊரிலிருந்து வரும் பல செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஒரு கட்சியின் உறுப்பினரொருவர் தனிப்பட்டரீதியில் செய்யும் குற்றங்களுக்கு, அந்தக் கட்சி பொறுப்பேற்க முடியாது. அப்படித் தனது கட்சியின் உறுப்பினரொருவர் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, அவர் சார்ந்த கட்சியின் தலைமைக்கு தெரியவரும் போது, சம்மந்தப்பட்டவர் மீது கட்சி ஒழுக்காற்று நடடிக்கை எடுத்து அவரைக்கட்சியிலிருந்து நீக்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கலாம். அதைவிடுத்து குமாரசிங்கம் கேசவன் (ஜீவன்) என்பவருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையென்பது போல் டக்ளஸ் தேவானந்தா காட்ட முனைந்தால், குமாரசிங்கம் கேசவனின் (ஜீவன்) குற்றத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் துணை போவதுபோல் நிலைமையை மாற்றிவிடும். எனவே தற்போதைய தேவை சட்ட நடவடிக்கையல்ல சரியான நடவடிக்கையே…..
palli
பார்த்திபன் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான், தோழரை பொறுத்த மட்டில் கொழும்பில்(அரச) எந்தவிதமான மரியாத்தையோ அல்லது செல்வாக்கோ இருக்க போவதில்லை; இது தோழருக்கு முன்பே தெரியும், பல்லியும் முன்பு இதை எழுதினேன், அதேபோல் இபோது இந்த சிறுவனின் கொலையில் தோழர் நிலை தமிழ்மக்களை தோழரை வெறுக்கவே வைக்கிறது,
இதுக்கு பலர் பல காரனம் சொல்லலாம், தோழர் இந்த கொலையாளிகளை மக்கள் மத்தியில் கொடுத்து சட்டத்தின்படி அவர்களுக்கு தண்டனை வேண்டி கொடுக்க வேண்டும்; அல்லது புலிக்கும்(பொட்டருக்கும்) தோழருக்கும் என்ன வேறுபாடு, அது முடியாத பட்ச்சத்தில் உன்மையை ஏற்று கொண்டு தானாக அரசியலை விட்டு விலகுவது மிக நல்லது; இன்றய சூழலில் தோழர் அமைப்பை சேர்ந்தவர்கள் பொட்டரிடம் பயிற்ச்சி எடுத்தவர்கள் போல்தான் நடக்கிறார்கள்? வவுனியாவிலும் தோழரின் தோழர்களுக்கும் கழக தோழர்களுக்கும் இரும்பு (ஆயுதம்) தூக்கும் அளவுக்கு முறுகல் நிலை, சாவகசேரியில் தோழரின் முகாமை மக்கள்சேதம் செய்யும் போது மக்களுக்கு உதவியாக இராணுவம் இருந்ததாய் செய்திகள் வருகின்றன; அதேபோல் தோழரைவிட தோழரால் அரசுக்கு அறிமுகம் செய்யபட்டவர்களையே மகிந்தா குடும்பம் இப்போது மதிக்கிறதாம்; இது பல்லியின் சாத்திரம் அல்ல, தோழர் பகுதியால் வந்த செய்தியே,
santhanam
முள்ளிவாய்க்காலிற்கு பின் எல்லோருக்கும் பல்லு புடுங்கபடுகிறது என்னும் நடக்கும் காத்திருங்கள் டெல்லியை நம்புங்கள் தமிழன் ரோட்டிற்கு வரலாம்.