தனுனவை கைது செய்ய உதவுங்கள்; 10 இலட்சம் ரூபா சன்மானம்

danu.jpgகோட்டை மாஜிஸ்திரேட் நீதவானால் கி 60 / 2010 என்ற வழக்கின் கீழ் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்துவரும் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கு உரிய தகவல்களை வழங்குபவருக்கு 10 இலட்ச ரூபாவை சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேலே உள்ள படத்தில் காணப்படும், 2/12, மங்கள வீதி, மெனிங் டவுன் மாடி வீடு, கொழும்பு – 08 என்ற விலாசத்தில் வசிக்கும் தனுன திலகரட்ன என்ற நபரை கைதுசெய்வதற்கு உரிய தகவலை வழங்குபவருக்கு 10 இல ட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். தகவல் வழங்க விரும்பு பவர்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் -011– 2328138, பணிப்பாளர்-011– 2447319, பொலிஸ் அதிகாரி –011– 2324994, (24 மணி நேரம்), உதவி பொலிஸ் அதிகாரி – 011 – 2440157, கட்டுப் பாட்டு அறை-011-2422176, பெக்ஸ் –011-2380381, பொது எண் –011–2320141-5 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்று அந்த சுவரொட்டியில் கூறப்பட் டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • NADARAJAH SETHURUPAN
    NADARAJAH SETHURUPAN

    நல்ல ஒரு மனிதன். என்னுடன் தேர்தல் காலத்தில் தனது சட்டதரனி ஊடாக கதைத்திருந்தார். ஒரு இணையத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பாக இவருடைய கலந்துரையாடல் இருந்தது. ஆனால் அரசியல் மாறியதால் அவருடைய முகவரியும் மாறிவிட்டது.

    Reply