பாராளு மன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான முதலாவது கூட்டம் இன்று பிற்பகல் தேர்தல் திணைக்களத்தில் நடைபெற உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் 24 அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கு பற்ற உள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள் தேர்தல் முறைகேடுகளை தடுப்பது, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தருவிப்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்படும்.