கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இம்மாதம் 19ஆம் திகதி மீளக் குடியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான சகல ஒழுங்குகளையும் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி நா. கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.
கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கனகபுரம், உதய நகர் கிழக்கு, மேற்கு, உருத்திரபுரம் கிழக்கு, திருநகர் வடக்கு, தெற்கு, பெரிய பரந்தன், ஜெயந்தி நகர், ஆனந்தபுரம், விவேகானந்த நகர், கணேச புரம், கிளிநகரம் மேற்குப் பகுதி ஆகிய கிரா மங்களைச் சேர்ந்தவர்கள் இம்மாதம் 19ஆம் திகதி மீள் குடியமர்த்தப்பட உள்ளார்கள்.