ஆசியாவின் சிறந்த நடிகை மாலினி பொன்சேகா

malani_fonseka.jpgஇலங் கையின் மூத்த நடிகை யான மாலினி பொன்சேகாவை ஆசியாவின் சிற ந்த நடிகைகளில் ஒருவராக சி. என். என். தெரிவு செய்துள்ளது. ஆசியாவின் 25 சிறந்த நடிக, நடிகையர் பட்டியலில் மாலினி பொன்சேகா இடம்பெற்றுள்ளார்.

சீனா, ஹொங்கொங், ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேஷியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுக ளில் இருந்து 25 சிறந்த நடிக, நடி கையர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் அமிதாப் பச்சன், நர் கிஸ், குரு தத், பிரான், மீனாகுமாரி ஆகியோர் இந்தியாவின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதலாவது இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஆவார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • மாயா
    மாயா

    மாலினி , ஆரம்ப காலத்தில் மரங்களை சுற்றி பாட்டு பாடுபவராக சினிமாவுக்கு அறிமுகமானாலும் , பின்னர் இவர் பல யதார்த்த சினிமாக்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துக் காட்டினார். பைலட் பிரேம்நாத் (இலங்கை இந்திய தயாரிப்பு) திரைப்படத்தில் சிவாஜிக்கு மனைவியாக நடித்தார். இவருக்கு எனது வாழ்த்துகள். en.wikipedia.org/wiki/Malini_Fonseka

    Reply
  • rohan
    rohan

    மாலினியின் வல்லமையிலோ சிங்களப் படைப்பாளிகளின் (காமினி பொன்சேக, லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்) திறமையிலோ எனக்கு ஏதும் சந்தேகம் இல்லை.

    மாலினி மேடை நாடகப் பின்னணியில் வந்தவர். சிங்கள மேடை நாடகங்களின் தரம் எப்போதும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. அது தவிர, அவரது குடும்பமும் திரைப்படங்களுடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது.

    ஆனாலும், இந்தப் பட்டியலில் அவர் வந்தது ஒன்றும் பெரிய விடயம் இல்லை – ஏனென்றால் ஆசியாவில் போட்டி குறைவு.

    மாலினியின் பிரவேசம் சராசரியாக இருந்திருக்கலாம். அவரது ஆரம்பப் படங்கள் அத்தனை மோசமானதாக இருந்ததாக நான் அறியேன். மரத்தைச் சுற்றிப் பாடியதாக நான் சொல்ல மாட்டேன். ஆனால், துரிதமாகவே அவர் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். காமினி – மாலினி இணை ஒரு கலக்குக் கலக்கியது.

    காமினி தனது ஆரம்பப் படங்களிலேயே பேசப்பட்டார். சந்தேசய, கம்ப்ரெலிய போன்றன மிகப் பிரபலமானவை. கம்ப்ரெலிய (சாதி – வகுப்பு வேறுபாடுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது) ஆசியப் படவிழாவில் தங்கத்தாமரை உட்பட சர்வதேச விருதுகளையும் பெற்றிருந்தது என்றுநினைவு.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    மாலினி நல்ல நடிகையோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த சீ.என்.என் இன் இணையத்தளத்தின் ஆசிய பிரிவான சீ.என்.என்.கோ (CNNGo) (அதுவும் Beta version) அடிப்படையாக அந்தப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இருந்து எல்லோருக்கும் பிடித்த நடிகர்களைத்தெரிவு செய்திருப்பதாகவே அறிகிறேன். காரனம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு பரீட்சார்த்தமாக இயங்கும் ஒரு இணையத்தளத்தினை பிரபல்யப்படுத்தும் உத்தியே இது. கூகிளில் சிறந்த இந்திய நடிகர்கள் என தேடினால் வரும் பெயர்களில் பொலிவூட் பெயர்களை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். மேலும் கூகிளில் மலேசிய நடிகர் எனத்தேடினால் லிஸ்ரில் இருக்கும் ஒருவர் பெயர் மட்டுமே வருகிறதாம், பின்னூட்டம் விட்டவர் சொல்லி இருக்கிறார். எனவே அதை சேர்த்திருக்கிறார்கள். அப்போதானே மலேசிய மக்கள் இந்த பரீட்சார்த்த இணையத்தை ஒரு பொருட்டாக மதிப்பர். இந்த விடயத்தில் அவர்கள் ஸ்ரீலங்காவைப்பொறுத்தவரை சாதித்துவிட்டனர் எனவே தோன்றுகிறது. வேண்டுமானால் கூகிளில் cnn + malini fonseka எனத்தேடிப்பாருங்கள். வரும் 3360 லிங்குகளில் ஒரிஜினல் செய்தி போட்ட CNN ஐக்காணோம்! ஆனால் ஸ்ரீலங்காவின் ஊதுகுழல் டெய்லினியூஸ், அரச பிரச்சார அமைச்சின் அறிக்கை என நீளுகிறது.
    இந்திய லிஸ்ற்றில் யார் யார் தெரியுமா?
    அமிதாப், நர்கீஸ், பிரான், மீனா குமாரி அவ்வளது தான். மோகன்லால், மம்முட்டி, கமல்…கிடையாது!
    ஏன் தெரியுமா? CNN கட்டுரை எழுதிய செல்வி லா கார்மினாவுக்கு தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். இவர் தன்னைப்பற்றி எழுதியுள்ள சிறு விளக்கத்தையும் சுயபுராணத்தையும் அவரின் படங்களையும் அவரின் உத்தியோகபூர்வ இணையத்தில் பார்த்து இன்புறுங்கள். கட்டாயம் அவர் எழுதியுள்ள புத்தகங்கள் எவை என்ற லின்கையும் கிளிக் பண்ணுங்கள். சினிமா பற்றிய அவரின் ‘அறிவை’ அளந்து கொள்ளலாம்!
    lacarmina.com/
    cnngo.com/author/la-carmina

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    மாலினி பொண்சோகா , சிறந்த நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்கள் மாலனி , வளர்ந்த பின்னர் உள்ள தகவல்கள். இவரது குடும்பம் சினிமா குடும்பம் அல்ல. மாலனி, அவரது முதல் கணவரோடு முரண்பட்ட பின்னர் , சிறு வேடமொன்றில் சினிமாவுக்குள் கால் பதித்தார். அதற்கு உதவியவர் ஒரு சினிமா இயக்குனர். அப்போதுதான் ஜோ அபேவிக்கிரமவின் பார்வை பட்டது. ஜோ அபேவிக்கிரம , நாடகங்களில் நடித்துக் கொண்டு , திரைப்படங்களில் யதார்த்த சினிமாக்களை கொண்டு வர வேண்டும் என சிங்கள பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த காலம்.அவர் , மாலனியை நாடகங்களுக்குள் நடிக்குமாறும், அது ஒரு பயிற்சியாக இருக்கும் என கருத்து சொன்னார். இவை அன்றைய சிங்கள சினிமா பத்திரிகைகளில் வந்துள்ளன.

    அதன் பிறகு காமினி பொண்சேகா போன்றவர்களது நட்பு கிடைத்தது. இக் கால கட்டத்தில் மாலனிக்கு அசிட் அடிக்கக் கூடிய அளவு கணவரது குடும்பத்தினரால் பிரச்சனைகள் உருவாயின. இக் காலத்தில் மாலினி களனியில் வாழ்ந்தார். இவரது பாதுகாப்புக்கு என மாலினியோடு வந்த உறவினர்கள் , பின்னர் சிலரால் தயாரிப்பாளர்களாக உருவாக்கப்பட்டார்கள். இக் காலத்தில் இவர் நடித்த பல படங்களின் பெயர்கள் விக்கிபீடியாவில் விடுபட்டுள்ளன. இவற்றில் அதத் சூறயா எதத் சுறாய , அபி கொழம்ப காதயோ , சூறயன்கேத் சூறயா போன்ற பல படங்கள் பொழுது போக்கு , இந்திய சினிமா தழுவிய கலப்பு படங்கள். http://www.youtube.com/watch?v=ufJqqrliaPk&feature=related
    இவற்றை மட்டமான சினிமா என சிங்கள சினிமா வர்ணித்தது. சிறிமா ஆட்சியில்தான் யதார்த்த சினிமாவுக்கு உரமூட்டப்பட்டது. அரசு தனியாரிடமிருந்த சினிமாவை, இலங்கை சினிமா கூட்டுஸ்தாபனத்தை உருவாகி, தன்னகப்படுத்தியது. பின்னர் அது யதார்த்த சினிமாவை ஆதரிக்க முற்பட்டது. அதற்கு முன் யதார்த்த சினிமாக்கள் 3 நாட்களுக்குள் திரையை விட்டு ஓடியது. அதற்கு தமிழர்களின் கைகளில் அன்று இருந்த சினிமா கம்பனிகளின் விநியோகமே காரணமாயின. இவர்கள் அதை வேண்டுமென்றே செய்தார்கள். இவர்கள் காசைப் பார்த்தார்களே தவிர கலையை பார்க்கவில்லை. அதுவே இலங்கையில் தமிழ் சினிமா ஒன்று உருவாவதைக் கூட தடுத்தது என்பது வருத்தமான உண்மை.

    மாலனி திரைக்கு வந்த போது நடித்த படங்கள் யதார்த்த சினிமா அல்ல.
    காமினி பொண்சோவுடன் நடித்த படங்களில் இருந்து சில:
    http://www.youtube.com/watch?v=TmlNPNWMloU
    விஜய குமாரணதுங்கவுடன் நடித்த படங்களில் இருந்து சில:
    http://video.google.ch/videosearch?hl=de&q=vije%20malani%20films&um=1&ie=UTF-8&sa=N&tab=wv#emb=0&hl=de&q=vijaya+malani+films&view=0
    நிதானய போன்ற யதார்த்த சினிமாவுக்குள் மாலனி காலம் கடந்தே பிரவேசித்தார்.
    http://www.youtube.com/watch?v=_cL3VeRA9Ks

    Reply