புலத்துத்தமிழா!!
ஊரை எண்ணி உருகினோம்
உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
தாமரை இலைத் தண்ணீர்தானேவேரை தேட முயல்வதனால்
விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
உண்மையின் தரிசனம் தெரியதில்லைபொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோஉடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.சேவல் செத்த தேசத்தில்
சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
எகிறி அலறும் அலாரமிங்கேபூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
தேடிய பணமும் எமைத்தேடாது போகும்வேரை அறுத்து வந்த உனக்கு
வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
உத்தமனாய் விடாதே கணக்குதலைவிதி தன்னை தானே தீர்க்கும்
தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டுபண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்மண்ணை வேண்டிப் போராடி
மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
காதலி தமிழை மனதில் ஊட்டிதமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
எழுந்து வாடா இனத்தை மீட்கபத்துப் பெத்தால் பரிசளிப்போம்
பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
வித்தாய் விழைவோமா புலத்தினிலே
நோர்வே நக்கீரா
27.02 2010
palli
ஊரை எண்ணி உருகினோம்
உயிர்கள் பல தொலைவதனால்
தாரை வார்த்து வந்த பூமி – இன்றும்
தறுதலைகளால் தவள்கிறதே
வேரை தேட முயல்வதனால்
வேளைதோறும் கலங்குகிறோம்
ஊரை எண்ணி உளல்வதனால்
உண்மை சில எழுதுகிறோம்
பொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
போலியாய் சிலர் எழுத
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
திட்டுவார் தினம் தோறும் தமிழ்தொலைக்க
உடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
உயிலெழுதி வைத்து உரிமை என கேப்பார்
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
கடன்காரன் வாழ்வு தமிழனுக்கு ஏனோ
சேவல் செத்த தேசத்தில்
சேதி சொல்லும் தேசமிது
ஏவல் செய்து வாழ்வதற்கு – சாதகமாய்
ஏனோதான் எம்மில் எதிரிகள்
பத்துப் பெத்தால் பரிசளிப்போம்
பாரதி சொல்ல மறந்த
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
முயற்ச்சியிது நக்கீரன் நீ(ங்க) தொடர்க!!
நட்புடன் பல்லி;;
Kurankan
ஆஹா கவிதைப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு- தமிழ் என்னமாய்க் கொஞ்சி விளையாடுகின்றது. முயல்க. வாழ்த்துக்கள். நக்கீரரே பல்லியையும் கவிதைபாட வைத்துவிட்ட உம் தமிழ் வாழ்க- தமிழ் உணர்வு வளர்க.
chandran.raja
தமிழனுக்கு அல்லது நந்தாவின் வார்த்தைகளில் “தமிழுக்கு” கவிதைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா?.
Nackeera
பல்லி! மரபுசார் கவிதைகளில் எதுகையை மட்டும் இரசிக்கிறீர்கள். என்மோனைகளுக்கு மோட்சம் கொடுத்து விடுகிறீர்கள்.
தமிழ்மரபில் கவிதைதான் எமது தமிழ் வரலாறுகளை எமது விழுமியங்களை இன்றும் காவிநிற்கிறது. தமிழர்களின் வரலாற்றுக் கண்டுபிடிப்புக்கள் பல கவிதைகளின் காலங்களை வைத்தே அறியப்பட்டிருக்கிறது. கவிதை ஒரு பலமான ஆயுதம். பக்கம் பக்கமாக: புத்தகம் புத்தகமாகச் சொல்லும் செய்திகளை மிக சுருக்கமாகக் கச்சிதமாக சுவையாகச் செல்லவல்லது. தேசம் அரசியலுக்கும் கட்டுரைக்குமாகத்தான் உள்ளது என்றில்லாமல் கவிதை வளர்பிலும் நடைபோடத் தொடங்கியுள்ளது என்பது வாழ்தலுக்குரியதே.
பல்லி
//பல்லி! மரபுசார் கவிதைகளில் எதுகையை மட்டும் இரசிக்கிறீர்கள். என்மோனைகளுக்கு மோட்சம் கொடுத்து விடுகிறீர்கள்.//
அப்படியெல்லாம் பல்லி வில்லதனம் செய்ய மாட்டேன்; பல்லி ஏற்க்கனவே சொல்லிவிட்டேன் எனக்கு கவிதையின் நடைமுறை பக்குவங்கள் தெரியாது, ஆனாலும் கவிதை எழுத ஆசை தடங்கல்கள் இல்லாவிடில் காலபோக்கில் தேறிவிடுவேன் என நினைக்கிறேன்; அதனால்தான் நக்கிரன் கைபிடித்து நடக்கிறேன்; தவறுகள் திருத்த படலாமே;
Nackeera
குரங்கன்!
குரங்கன் எனப்பெயர் கொண்டாலும்-வாழ்த்தில்
கோடியல்லவா கொட்டிவிட்டீர்
அரங்கம் ஏறும் தேசம் தனிலே
அலாக்காய் எம்மை உயர்த்திவிட்டீர்.
வாழ்த்துக்கள் வாழவைக்கும் என்பதனால்
வாழ்துக்களாய் வாழ்த்துவோம் வாழிவே
ஊற்றுக்கள் நற்தமிழாய் உருப்பெறவே
உயர்ந்திடுவோம்: தமிழை உயர்த்திடுவோம்.
நாம் வாழ்த்தும்போது நாமும் வாழ்விக்கப்படுகிறோம் மனோவியல் சொல்கிறது: இதனால்தானோ என்னவோ மந்திரங்கள் இறைவனை போற்றி போற்றி என்று வாழ்த்துகிறது.
இன்றைய வாழ்நிலையில் வாழ்தலை நாம் தொலைத்துவிட்டு வெள்ளைகாரன் எடுத்ததற்கும் போற்றுகிறான் வாழ்த்துகிறான் என்கிறோம். போற்றலும் வாழ்த்தலும் தமிழில் ஒருகலையாகவே இருந்திருக்கிறது. அரசனைப்போற்றி பொற்கிளி பெறுவது அன்றை வளக்கம். வாழ்த்துதலில் நாம் தமிழர்கள் மூத்தவர்கள்.
குரங்கன் என்ற மறையெயரில் நீங்கள் எழுதினாலும் கவிதைக்குப் பொருத்தமாக இருக்கிறது. காரணம் என்ன வெனில் கவி- என்பது ஆண்குரங்கு. நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல்களில் பலவிடங்களில் காணலாம் கவிதையை எழுதபவன் மட்டுமல்ல கவிஞ்ஞன் அதை சரியாக உணர்ந்து இரசிப்பவனே இரண்டு மடங்கு கவிஞ்ஞனாவான். கவிஞர் எதையோ நினைத்து எழுதினாலும் வாசகர்கள் எத்தனை எத்தனை விதமாக பொருள் கொள்வார்கள் தெரியுமா? இங்கே உண்மைக் கவிஞர்கள் கவிதைகளை விரும்பி வாசிப்பவர்களே. வரம்பு முறிப்பு என்று புதுக்கவிதை உருவானது நலமானது தான். வரம்பு தெரியாமல் வரம்பு முறிப்பது எப்படி என்பது கேள்விக்குரியதே. இலகுபடுத்தப்பட்ட பண்டைய மரபுக்கவிதைகளை மீட்டெடுப்பதும் முக்கியமானது. காரணம் அவை எம்மூதாதையா விட்டுச் சென்ற விழுமியங்கள்.
Nackeera
/அதனால்தான் நக்கிரன் கைபிடித்து நடக்கிறேன்; தவறுகள் திருத்த படலாமே;//பல்லி- பெரிய வார்த்தைகளைப் பாவிக்கிறீர்கள். நான் என்றும் சிறியவனே. சிறியவானாக இருக்கவே விரும்புகிறேன். தாளக்கட்டையும் சிறிது கவனியுங்கள். கூன்எதுகை என்று தமிழில் கூறப்படும் அடிச்சந்தம் கவிதைக்கு அழகானது. பண்டைய மரபுக்கவிதைகளில் ஒரு சொல்லை மூன்றாகப்பிரித்து ஒசை நயத்துக்காக முன்னும் பின்னும் ஒட்டுவார்கள். இதனால் வாசிப்பது மிகக்கடினானது. பிற்காலத்தில் அது மருவிப்போனது. மரபுக்கவிதைகளின் ஒசை நயம் சீர் என்பது முக்கியமானது. பல்லி உங்களிடம் எழுத்து வன்மை இருப்பதனால் புதுக்கவிதைக்கு வீச்சுக் கொடுக்கும் என்பது திண்ணம். தொடர்ந்து எழுதுங்கள். கவிதைகளை வாசியுங்கள்.
மேலும் //என்மோனைகளுக்கு மோட்சம் கொடுத்து விடுகிறீர்கள்// என்மோனைகளுக்கு மோட்சம் கொடுத்துவிட்டீர்களே என்ற பின்னோட்டவரியில் மோட்சம் என்பது கவிநடைப்படி ஒத்துமறுதலித்தல் என்பார்கள். என் மோனைகளுக்கு ஒரு விமோசனம் கொடுத்து விட்டீர்களே என்பதாகவும் மூச்சை நிறுத்தி விட்டீர்களே என்பது போலவும் அமையும். மரபுக்கவிதைகளுக்கு அணிகள் சிறப்பானது. உங்களிடம் மிக ஆளமான சொல்வீச்சு அதாவது எழுத்து வீச்சு இருப்பதனால் உங்களால் நல்லகவிதைகளை உரமாக எழுதமுடியும்.
Nackeera
சந்திரன் ராஜா! //தமிழனுக்கு அல்லது நந்தாவின் வார்த்தைகளில் “தமிழுக்கு” கவிதைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா?//என்ன சொல்லவருகிறீர்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. நந்தாவுடன் என்னை மாட்டிவிடப் போகிறீர்கள் போல் இருக்கிறது. எஸ்கேப்..?
பல்லி
// நக்கீரரே பல்லியையும் கவிதைபாட வைத்துவிட்ட உம் தமிழ் வாழ்க- தமிழ் உணர்வு வளர்க.//
நன்றி kurankan, பல்லி எழுதுவது கவிதை எனில் அதுக்கு நக்கீரந்தான் காரனம்; அது கவிதை போல் எனில் அது பல்லியின் முயற்ச்சிகளில் ஒன்று, நன்றி நக்கீரா நன்றி;
Nackeera
பல்லி! தொடர்ந்து எழுதுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல் எல்லாம் பழகியவையும் பழக்கிக் கொண்டவையுமே. என்கருத்தில் புதுக்கவிதை என்பது கவிதை யில் இருக்கும் “தை” குறிப்பது கவிதைகள் வாசகர்களின் மனங்களைத் தைக்க வேண்டும். “கருவின் விதையே கவிதை”. சுருக்கமாகவும் கச்சிதமாகவும் கவிதைகளைச் சொல்வதற்கே அணிகள் பாவிக்கப்பட்டன. உவமானம் எல்லாம் இவற்றில் ஒன்றே. குறைந்த சொற்களில் பெரியவிடயங்களை படிமமாகவே: அன்றி வேறுவழிமுறைகளிலோ மக்கள் மனதைத் தைக்கும் விதத்தில் வீசுக்கொண்டு எழுதப்படுவன புதுக்கவிதைகள்.
மரபுக்கவிதைகள் மரபில்படி எழுதப்படுவன. அங்கே சொற்கள் பதங்கள் ஓசை கவிமரவு என்று பல இருந்தாலும் காலமாற்றத்தில் கவிதைகளும் மாறிவந்தன. இதனால் இதுதான் தனிமரபுக்கவிதை என்று அடித்துச் சொல்ல இயலாதவண்ணம் வழுக்களை கொண்டிருந்தன. எது எப்படி இருந்தாலும் வடிவங்கள் மாறினாலும் கருத்து எழுத்த உணர்வு உந்துசக்தி வேகம் ஆளுமை ஒசை படிமம் என்பவற்றில் பண்பு மாறாமலேயே இருக்கிறது. நான் எழுதிய கவிதையில் ஓரிரு வரிகளை விளக்கலாம் என்று விளைகிறேன்.
ஊரை எண்ணி உருகினோம்
உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
தாமரை இலைத் தண்ணீர்தானே
ஊரிலுள்ள உண்மை நிலை எது எனச் சரியாக உணராமல் ஊரை நினைத்து கவலை நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உருகினோம் என்ற சொற்பதம் குறிப்பாச் சொல்வது அழிகிறோம் என்பதையே. தாமரை இலைத்தண்ணீர் என்பது உவமானமாகக் கொடுக்கப்பட்ட ஒன்றாகும் இங்கு உவமேயமாக நிற்பது தாரைவார்த்து வந்த பூமி என்பது. அதாவது தாமரை இலைத்தண்ணீர் எப்படி இலையில் ஒட்டாமல் அதன்மேல் இருக்குமோ அதே போன்றதுதான் புலம்பெயர் தமிழர். இவர்களால் இங்கும் ஒட்டமுடியாது அங்கும் ஒட்ட முடியாது.இன்றும் புலத்துத் தமிழனை அங்குள்ள உறவுகள் இரத்த உறவுகள் கூட அண்ணன் தம்பி என்று பார்க்காமல் பணம் பிடுங்கும் மரங்களாகவே பார்க்க முயல்கின்றன. இரண்டாவது வரியிலுள்ள உயரினோம் எனபது அங்குள்ள மக்கள் சொல்வதை அப்படியே நம்புகிறோமே தவிர உண்மை என்ன என்று தேடி அறியும் அளவுக்கு உணரவில்லை என்பதாகும். ஒரு திருமணத்தில் தாரைவார்த்துக் கொடுத்தல் என்பது தாய்தந்தையர் உடன்பட்டு பெண்ணை மாப்பிளையின் கையில் கொடுத்தல் என்பதை சைவதிருமணங்களில் காணலாம். நாமும் அதேபோன்று விரும்பியே விரும்பாமலோ நாட்டை என்னவாவது செய்யுங்கோ என்று விட்டு விட்டு ஓடிவந்தவர்கள்தான் என்பதை நெருடலுடன் காட்டுவதோ தரைவார்த்து வந்த பூமி என்பதாகும். இப்படி ஒருதாமரை இலைத்தண்ணீர் போன்ற வாழ்க்கையில்: புலம்பெயர்வாழ்வில் அடையாளங்கள் உசுப்பேற்றப்படுகிறது இதனால் இங்கே கிடைக்கும் நன்மைகள் மகிழ்ச்சிகளில் கூட ஒன்றாக இணையவோ கலந்து கொள்ளவோ முடியவில்லை. இதற்கான பல உவமானங்கள் சொந்தப்பிள்ளையின் சிரிப்பினும் இலங்கையின் துக்கச்சம்பவமே நினைவுக்கு வருகிறது. அதாவது நாம் வாழ்க்கையைத் தொலைத்துக் கெண்டிருக்கிறோம் என்பதை பல உவமானங்களால் உணர்த்தியுள்ளேன்.
/வேரை தேட முயல்வதனால்
விழுதுகளில் வாழ முடிவதில்லை/
எமது வேர்களைத் தேடமுயல்வதனால் உண்மையாக விழுதுகளில் கிடைக்கும் நன்மைகளைக் கூட அனுபவிக்க முடியவில்லை அதுவும் கசப்பாகவே இருக்கிறது என்பதையே இந்த வடிவத்தில் சொன்னேன். தொடர்ந்து எழுதப்போனால் கட்டுரையாகி விடும். தொடர்ந்து பல்லியின் கவிதைகளை எதிர்பார்த்து நிற்கின்றேன்.
accu
நமது மக்களின் மரணங்களும் அவலங்களும் புதுக் கவிஞர்கள் தம் கவிதைப் புலமைகளை வெளிப்படுத்தவும் பரீட்சிக்கவும் உதவியுள்ளது. ஜமாயுங்கள்!!
NANTHA
பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்
பண்டா தமிழர்கள் ‘தமிழ்” மூலம் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்.
இந்துக்கள் இந்து சமயத்தை பாடசாலைகளில் படிக்க வழி ஏற்படுத்தினார்.
அவை என்ன தப்பான காரியங்களா நக்கீரா?
அதற்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்? பண்டா “பிள்ளை பிடி”, “பவுன் கொடு” என்று யாரையும் மிரட்டியதாகத் தெரியவில்லையே!
கவிதைகளில் எதுகை, மோனை என்பன வரவேண்டும். அதற்காக சம்பந்தமில்லாத சங்கதிகளை சம்பந்தப்படுத்துவது நியாயமாக தெரியவில்லை.
Nackeera
நந்தா!இடமறிந்த பொருள்கொள்வது கவிமரபு இது தொல்காப்பியம். பண்டா பிரபாகரன் இருவேறுபட்ட மனிதர்கள். பண்டா நினைத்த அனைத்தையும் பிரபாரனால் செய்யமுடியாது.ஆனால் ஏதோ ஒன்று பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தபடியால்தான் அதை நான் எழுதியிருக்க வேண்டு என்று புரியவில்லையா? 24மணித்தியாலத்தில் சிங்களச்சட்டம் என சிங்களத்தை அரசகரும மொழியாக்கியவர் பண்டா. இதை முழுமையாக முடித்தது பிரபாகரன். தமிழர்களின் வளமாக இருந்தது கல்வியும் தமிழும் இதை வளரவிடாமல் முட்டுக்கட்டை போடத் தொடங்கியது பண்டா. புலிகள் காலத்தில் தமிழமக்களின் கல்லி பொருளாதாரம் எப்படியானது என்பதை யாவரும் அறித்ததே. கவிதையில் இந்து மத்தைப்பற்றி எங்குமே கதைக்கப்படவில்லை. ஏன் இந்துமதத்தைக் கொண்டு வந்தீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை?ஆங்கிலக்கல்வி முறையில் இருந்த தமிழ்கல்விமுறைக்கு மாற்றவேண்டும் என்ற முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தவர்கள் தமிழ்அரசியல்வாதிகள் அது பண்டாவின் காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். உண்மையில் தமிழ்வளரவேண்டும் என்று பண்டா நினைத்திருந்தால் சிங்களத்தை முதல்மொழியாகவும் அரசகருமொழியாகவும் போராடியிருக்க மாட்டார்.பண்டாவின் விருப்பப்படி தமிழில் படிக்கவேண்டும் சிங்களம் அரசகருமமொழியாக ஆக்கியவரும் அவரோ தமிழில் படித்துவிட்டு சிங்களத்தில் எப்படி வேலை செய்வது? தமிழ்வளர்ச்சியில் பண்டாக்கு அக்கறை இருந்தது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழில் எதுகை மோனைக்குப் பஞ்சம் என்பதால் பண்டா பிரபாவை எடுக்கவில்லை. கருக்களின் விதையே கவிதை. இது எனது வாசகம். ஆதிமொழிகளில் ஒன்றாகி செம்மொழியாக இருக்கும் தமிழில் திசைச்சொற்களாக எத்தயையாயிரம் சொற்கள் வந்து சேர்ந்தன. எத்தனையோ மொழிகளுக்குத் தாய்மொழியாக இருக்கும் தமிழிலா எதுகை மோனைக்குப்பஞ்சம்?
kurankan
பண்டா தமிழர்கள் ‘தமிழ்” மூலம் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். இந்துக்கள் இந்து சமயத்தை பாடசாலைகளில் படிக்க வழி ஏற்படுத்தினார் அவை என்ன தப்பான காரியங்களா நக்கீரா?//
நந்தா வரலாற்றைத் திருத்தி எழுத முனைகிறாரா? அல்லது பண்டாரநாயக்கர்களுக்கு வக்காலத்து வாங்குகிறாரா? நக்கீரரின் கவிதையையும் அதன் உள்ளே பொதிந்துகிடக்கும் அங்கதச் சுவையையும் தேடித்தேடி வாசிக்க முனையும் எங்களுக்கு- கவிதையை ரசிப்பது தான் முதனிலையே யன்றி அரசியல் பாடம் படிப்பதல்ல.
இன்று புகலிடத்தில் வெளிவரும் கவிதைகளை யாக்கும் இளம் கவிஞர்களுக்கு கவிதை சொல்லித்தர யாருமில்லை. இந்த தான்தோன்றிக் கவிஞர்களுக்கு தேசம் ஒரு இலக்கியக் கருத்தாடலை நடத்த விரும்பியோ விரும்பாமலோ களம் தந்திருக்கிறது. இளம் கவிஞர்கள் நிச்சயம் இத்தளத்தில் தமது கவிதைகளை செப்பனிட்டுக்கொள்ள கவித்துவ அறிவை வளர்த்துக்கொள்ள நவீன மின்வழித் தொழில்நுட்பம் எளிதாக தளம் அமைத்திருக்கிறது. தயவுசெய்து வளரும் கவிஞர்களை வளரவிடுங்கள் நந்தா. இதிலும் கொண்டுவந்து அரசியல் சர்ச்சைகளை ஊடாடாதீர்கள்.
ஜெயபாலன் – இன்றைய இளம் கவிஞர்களின் பயில்நிலமாக அமையும் வகையில் நக்கீரன் போன்ற கவிஞர்களின் ஆதரவுடன் நடபுறவுடனான இலக்கியத்தளங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்த்துக்களுடன்
குரங்கன்-(கவிஞன் என்றும் பொருள் கொள்க)
Nackeera
அன்பான கவிஞர் அவர்கட்கு! சமூகநோக்குடன் கூடிய எம்இளம்சமூகத்தின் எதிர்காலம் பற்றிய கரிசனையும் என்னை உண்மையில் மெய்சிலிக்க வைத்தது. நந்தா என்கவிதையிலுள்ள கருத்துடன் உடன்படவில்லை. அதை அவர் விவாதிக்கலாம். ஆனால் எதுகை மோனை வரவேண்டும் என்பதற்காக பண்டாவையும் பிரபாகரனையும் எடுத்தேன் என்பது மனவருத்தத்துக் குரியதே. தட்டிக்கொடுப்பதனூடு ஒரு சமூகத்தை வளர்க்க முடியும். தட்டிக்கொட்டுவது அழகல்ல.நான் எக்கவி எழுதினாலும் பல்லி வந்து ஒரு எதிர்பாட்டு எழுதுவார். அவரிடன் எழுத்து வீச்சும் அடிச்சீரும் திறமாக இருக்கிறது. அதுவே போதும் திறமையான கவிதைகளை வெளிக்கொண்டு வருவதற்கு. பல்லியிடம் சொல்லடுக்கு இருக்கிறது. கவிதை எண்ணம் எந்தவடிவத்தில் இருந்தாலும் அதை அழகாகக் கொண்டுவரும் எழுத்தாற்றல் பல்லியிடம் உண்டு.
நீங்கள் கூறியதுபோல் கவிதை இரசிக்கும் போது கவிஞர் எப்படி எழுதியிருக்கிறார்:என்ன யுக்தியைக் கையாண்டுள்ளார்: ஒருவிடயத்தை அந்தவகையான அணிக்குள் சொல்ல முயல்கிறார் என்பன வெல்லாம் இரசிப்பதற்குரியனவே. உங்கள் கூற்றுப்போல் பலகவிஞர்கள் தேசத்தில் வந்து எழுதவேண்டும்;வளரவேண்டும் இதைப்பார்த்து அனைவரும் பூரிப்படையவேண்டும். இதற்கு தேசம் நிச்சயம் இடம்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
பல்லி! எழுதுங்கள் பல்லி எதிர்பார்த்திருக்கிறேன். உங்களின் கவிதையிலான எதிர்ப்பாட்டைக் காண ஆவலாக இருக்கிறறேன். நான் ஒரு கவிஞனே அல்ல என் உணர்வுகளுக்கு கவிதை என்ற பெயரில் எழுத்து வடிவம் கொடுக்கிறேன். குறைந்த எழுத்துக்களில் பெரிய விடயங்களை சுவைபட தருவது கவிதை.
Nackeera
கவிதை இங்கு இடம்பெற்றபடியால் கவிஞர்களைப்பற்றிக் கதைப்பது பொருந்தமாக இருக்கும். காளமேகம் என்றொரு புலவர் இருந்தால். இவர் சிலேடைக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர். இவரை வசைக்கவி என்றும் அழைப்பர். இவர் ஒரு சிவபக்தராக இருப்பதனால் இவரை பெருமாள் கோவிலுக்குள் விடமாட்டார்கள். இவர் எப்படியாவது கோவிலினுள் போகவேண்டும் பெருமாளைப் பார்க்க வேண்டும் என்று திடசங்கர்ப்பம் எடுத்துக் கொண்டார். பெருமாள் கோவில் வாசலின் நின்று பெருமாளே! கடவுளிலும் நீ பெரிது என்றார். என்ன ஒரு சைவன் பெருமாளைப் பெரிது என்கிறானே என்று எண்ணிய வைணவர்கள் புலவரை உள்ளே விட்டனர். சுற்றிச் சுழன்று கும்பிட்டு முடித்தபின் காளமேகம் சொன்னார். உன்னிலுமே நான் பெரிது என்றார். கொதிப்படைந்த வைணவர்கள் அவரிடம் இப்படிப்பண்ணி விட்டீர்களே என கடிந்து ஏன் இப்பச் சொன்னீர்கள் விளக்கம் தாருங்கள் என்றனர். அதற்கு புலவரின் பதில்: என்கடவுளாகிய சிவனோ பிறப்பிறப்பில்லாதவர். ஆனால் பெருமாளே 10 பிறப்பைக் கொண்டவர். அப்படியானால் என்கடவுளை விட உங்கள் கடவுள் பெரிதுதானே என்றார். அடுத்து வைணவர்கள் கேட்டார்கள் பின்பு நீங்கள் பெரிது என்றீர்களே? உங்கள் கடவுளுக்குப் 10பிறப்பு மட்டும் தான். எனக்கோ இந்தப்பாவச்சுமையை சுமந்து சுமந்து முடிக்க எண்ணிலடங்காத பிறப்புக்கள் உண்டே. செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப நான் எத்தனையோ பிறப்புக்களை பிறந்த இறந்து ஆகவேண்டுமே. நான் பெரியவன் தானே என்றாராம்.
indiani
/நக்கீரரின் கவிதையையும் அதன் உள்ளே பொதிந்துகிடக்கும் அங்கதச் சுவையையும் தேடித்தேடி வாசிக்க முனையும் எங்களுக்கு- கவிதையை ரசிப்பது தான் முதனிலையே யன்றி அரசியல் பாடம் படிப்பதல்ல./kurankan
இந்தக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. கவிதைகளின் ஊடாக கவிஞர்கள் ஏதோ ஒரு விடயத்தை முன்வைப்பார்கள். அவை நேரிடையாக விளங்கிக் கொள்ளக் கூடியதாகவோ அன்றி பூடகமாகவோ அன்றி பல பொருள்படவோ இருக்கும். இந்தக் கவிதையில் அரசியல் கதைக்கப்படுகிறது. அதை நந்தா கேள்விக்குட்படுத்துவதில் தப்பில்லை. தான் மனதில் எதை வைத்துக்கொண்டு எழுதினார் என்பதை நக்கீரா பதிலில் சொல்லட்டும். அதில் நக்கீரா தந்ததும் அரசியல் விளக்கமே.
பண்டா நினைத்ததை (தமிழரை அழிக்க) பிரபாகரன் முடித்தான்;; (தமிழரை அழித்தான்) இப்போ பிரபா அழித்தது போக மிச்ச சொச்ச அரசியல்வாதிகளையும் கூட்டமைப்பு சிதறு தேங்காய் அடிக்கிறது
anwar
பாடிப்பாடியே பரதேசியாகிப் போனவன் தமிழன். பாடுங்கோ.
kurankan
தான் மனதில் எதை வைத்துக்கொண்டு எழுதினார் என்பதை நக்கீரா பதிலில் சொல்லட்டும்.//
இப்படியாகக் கவிதைகளை போஸ்ட்மோர்ட்டம் செய்வதால் அங்கு கவிதை வளராது கருத்து வேறுபாடு தான் வளரும்.
கவிதை இரசிக்கும் போது கவிஞர் எப்படி எழுதியிருக்கிறார்:என்ன யுக்தியைக் கையாண்டுள்ளார்: ஒருவிடயத்தை அந்தவகையான அணிக்குள் சொல்ல முயல்கிறார் என்பன வெல்லாம் இரசிப்பதற்குரியனவே// நக்கீரன்
இந்தியானி கவிதையை கவிதையான கருத்துப்படிமத்திலேயே ரசிக்கப்பழகுங்கள். உங்களுக்கு உடன்பாடில்லாததால் ஒருவரும் உடன்படக்கூடாது என்பது உலகில் சாத்தியமில்லை. கவிஞன் தன் கருத்தைக் கவிதைப்படிமத்தில் சொல்ல அவனுக்கு முழுச்சுதந்திரமும் உண்டு. நக்கீரன் எழுதிய சில கருத்துக்களுடன் எனக்கும்தான் உடன்பாடில்லை. அதற்காக அந்தக் கவிஞனின் கவிதையை எள்ளிநகையாட முடியுமா? நக்கீரனின் கவிதைகளில் துள்ளும் சந்தங்களையும்> அதன் அணிகளையும் ரசிக்கப் புறப்பட்டால் இந்தியானிக்கும் கவிதை வரும். கவிதை ஒரு ஊடகம் அந்த ஊடகத்தை லாவகமாக எடுத்தாளும் திறமையைப் போற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். கண்ணதாசனின் கருத்துக்களுடன் எவ்வளவுபேர் முரண்பட்டோம். போதையிலும் எழுதிய அந்தக் கவிஞனைக் குடிகாரன் என்றோ அவனது காலத்துக்கேற்று பச்சோந்தியாக மாறும் குணாம்சத்தையோ நாம் கண்டு அவனை ஒதுக்காததால் தானே இன்றும் அவன் கவிதைகள் வாழ்கின்றன.
கவிதைகளைக் கவிதையாக-ஒரு இலக்கியமாகப் பார்க்கக் கற்றுக்கொண்டால் அதை அப்படி ரசிக்கக் கற்றுக்கொண்டால் கவிஞனும் அவனது கவிதையும் எமக்கு விருந்தாகும். கல்லில் நீங்கள் நாயையும் காணலாம். கலைவடிவத்தையும் காணலாம். வெறும் கல்லையும் காணலாம். “கல்லைக்கண்டால் நாயைக்காணோம் நாயைக்கண்டால் கல்லைக்காணோம்” என்ற பழமொழியும்> திருமச்திரப் பாடல்களும் இதைத்தானே சொல்லிவைத்திருக்கின்றன.
இதைப் புரிந்துகொண்டால் பல புலிப் போராளிகளின் கவிதைகளையும் கூடதேசம் வாசகர்கள் ரசிக்கப் பழகிக் கொள்வார்கள்.
kurankan
பாடிப்பாடியே பரதேசியாகிப் போனவன் தமிழன். பாடுங்கோ.//
அன்வர் என்ன சொல்ல வருகிறீர்கள். கவிஞர்களைக் கிண்டலடிக்கிறீர்களா அல்லது பரதேசிகளாகிவிட்ட தமிழர்களைக் கிண்டலடிக்கிறீர்களா?
chandran.raja
ஏழைப் புலவன் அரசே! உங்களைப் புகழ்ந்து பாடி பரிசு பெற வந்திருக்கிறேன்.
இப்படியும் ஒரு பக்கத்தால் போகிறது கவிஞர்களின் உலகம். தமிழனின் வீரங்களையும் புறமுதுகாட்டி ஓடா தன்மையும் இலங்கை தமிழருக்கு உசுப்பேத்தி விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆஸ்தான கவிஞன் காசி ஆனந்தன். வறுமையின் நிமித்தம் தனது திருமணம் பல ஆண்டுகாலம் தள்ளிப் போவதைப் பார்த்து இயற்கையைப் பார்த்து அவள் மனதில் இருந்த ஏக்கங்களும் கவலைகளும் கவிதை பொழிந்து கொட்டுகிறது இரு வரிகளுடன் அது…
“வானமே! நீ ஏன் அழுகிறாய்.
உனக்கும் வரதட்சணை கொடுமையோ?” இது சமூகஉணர்வுள்ளவன் ஒவ்வொருவரின் வயிற்றையும் பிழிந்தெடுக்கிறது.
இப்ப வருகிற ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் தஞ்சக் கவிதைகள். தங்களுக்கு வாழ்வு கிடைத்ததிற்காக முதலாளித்துவத்திற்கு நன்றி சொல்லும் கவிதைகள். இதற்காகவும் கவிதைகளில் முழுப்பழியையும் போட்டு விட்டு தமது கடையை விரித்து வைத்து வியாபாரம் நடத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்கத்திலும் ஒரு ஆதரவு-கூட்டம் முண்டியடித்துக் கொண்டேயிருக்கும்.
NANTHA
தமிழர்கள் யாரும் தமிழில் படிக்க வேண்டும் என்று சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ கேட்டது கிடையாது.
1944 ஆம் ஆண்டு களனிய சட்டசபை அங்கத்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா “சிங்களம்” மட்டும்” அரச கரும மொழியாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்த பொழுது அதனை எதிர்த்து எந்த தமிழனும், விசேடமாக யாழ்ப்பாணத்து சட்டசபை அங்கத்தவர்கள், பேசவில்லை. மட்டகளப்பு அங்கத்தவராக இருந்த சாம் தம்பிமுத்து (சீனியர்) அந்த பிரேரணையில் “தமிழும், சிங்களமும்” என்று திருத்தம் கொண்டு வந்தார்.
அப்போது சட்டசபையில் இருந்த தமிழர்களான ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் மவுனமே சாதித்துள்ளனர்.
பின்னர் 1954 ஆம் ஆண்டு களனியாவில் நடந்த யு.என்.பி மாநாட்டில் “24 மணி நேரத்தில்” சிங்களத்தை அரச கரும மொழியாக மாற்றுவதாக அந்தக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
அதுவரையில் அரச கரும மொழி பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் இந்த “24 மணி நேரத்தில் சிங்களம்” என்ற கொள்கைக்கு தாவியது. மக்கள் பெருவாரியாக வாக்களித்து பண்டாவை அரச கட்டிலேற்றினார்கள். யு என் பி யை மக்கள் அந்த தேர்தலில் தெரிவு செய்திருந்தால் இந்த செல்வநாயகம் – பொன்னம்பலம் கோஷ்டி என்ன செய்திருக்கும்? பின்னர் நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகளை நோக்கும் பொது இந்த தமிழ் கோஷ்டிகள் யு என்பி யின் “24 மணி நேரத்தில் சிங்களம்” என்பதற்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
//தமிழர்களின் வளமாக இருந்தது கல்வியும் தமிழும் இதை வளரவிடாமல் முட்டுக்கட்டை போடத் தொடங்கியது பண்டா. //
தமிழில் தமிழர்கள் படிக்கவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது எப்படி “தமிழ் வளர விடாது” தடுத்தது?
தமிழர்களில் வளமாக இருந்தவர்கள் ஆங்கிலம் படித்தவர்கள். “வெள்ளையர்கள்” காலத்தில் “வளம்” தமிழர்களின் ஒரு சிலருக்குத்தான். இருந்தது. தமிழ் மொழி மூலமான கல்வி தமிழ் மக்களின் சகல தரப்பினரையும் படிக்க வைத்தது. தமிழர்கள் சகலரும் படித்தது நக்கீரவுக்கு பிரச்சனை போல் தெரிகிறது. ஆங்கிலம் படித்தவர்களையே தமிழர்கள் “படித்தவர்கள்” என்று சொல்லுவது ஒரு வழக்கம்.
தமிழ் மொழி மூலம் படித்த சாதாரண அல்லது வறிய குடும்பத்து தமிழர்கள் “உத்தியோகம்” பார்க்க தொடங்கியது 1956 இன் பின்னரே என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. “பரம்பரை” பணக்காரர்களின் வாரிசுகளுக்குப் போட்டியாக சாதாரண மக்களின் வாரிசுகளும் உயர் உத்தியோகங்கள் பார்த்ததும் தமிழை பாட மொழியாக்கிய பின்னரே ஆகும். தற்போது பல உயர் பதவிகளை வகிக்கும் தமிழர்களின் குடும்ப வரலாறுகளை நோக்கினால் அது தெரியும்.
தமிழில் படித்தால் “தமிழ்’ வளராது” ,”தமிழுக்கு அநியாயம்” என்று நீங்கள் மாத்திரமல்ல செல்வநாயகம் கோஷ்டியும் அதைத்தான் கண்டு பிடித்தது. தமிழ் வளர தமிழ் படிக்க வேண்டும் என்பது சாதாரண உண்மை. ஆங்கிலத்தில் படித்து விட்டு தமிழ் வளர்க்க முடியாது. தமிழும் வளராது.
அரச ஊழியர்கள் மூன்று வருடத்தில் அரச கரும மொழியில் சித்தியடைய வேண்டும். தமிழர்களில் ஒரு சதவீத சனத்தொகை கூட இல்லாத அரச உத்தியோகத்தர்களில் தொண்ணூறு சதவீதமானவர்களும் “தொழில்” பார்ப்பது சிங்கள மக்களின் மத்தியில் என்பது தெரிய வேண்டும். மக்களுக்குப் புரியாத பாஷையில் அரச இயந்திரம் இயங்க முடியாது. எந்த நாட்டிலும் பெரும்பான்மை மக்களின் மொழிதான் அரச கரும மொழியாக உள்ளது என்ற சாதாரண உண்மை “படித்த” தமிழர்களுக்கு தெரியாமல் போனது எப்படி? ஜனநாயகம் பற்றி கூச்சல் போடுபவர்கள் மக்களில் ஒரு சதவீதமானவர்களின் “பிரச்சனை” முழு மக்களினதும் பிரச்சனை என்று வாதிடுவது கேலிக்குரியதும், கேள்விக்குரியதும் ஆகும்.
தமிழ் வளர்ப்பது பண்டாவின் வேலையல்ல. வீட்டில் தமிழே பேசாத செல்வநாயகம் பரம்பரை “தமிழ்” வளர்க்கிறதா? தமிழ் வந்ததை விட ஆங்கிலம் போய் விட்டது என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. செல்வநாயகமும், கத்தோலிக்க பீடமும் அதற்காக மகா ராணிக்கு தந்தி கொடுத்து தமது ஆங்கில விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள்.
தமிழ் படித்துவிட்டு “சிங்களத்தில்” எப்படி வேலை செய்வது என்பதை தற்போது சிங்களப்பகுதிகளில் வேலை செய்யும் தமிழர்களிடம் கேட்டால் புரியும். அப்படி அரச வேலைகளுக்கு மாத்திரம் படித்தவர்கள் ‘சிங்களத்தையும்’ தமிழர்கள் படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்திருக்க வேண்டும்.
செல்வநாயகம் கோஷ்டி “தமிழுக்காக” பண்டாவுடன் பொருதவில்லை. பண்டாவின் “அந்நியர்களின்” கைகளில் இருந்த சொத்துக்களை அரச சொத்துக்களாக்கியதுதான் வெள்ளையர்களின் வாலாக இருந்தவர்களுக்கு பிரச்சனை. “தமிழ்” என்பது அந்நியர்களின் நன்மைகளுக்கு ஆயுதமாக எடுக்கப்பட்டது. மில்லி பான்ட் போன்றவர்கள் “கதைப்பது” எதற்காக? தமிழ் வளர்க்கவா?
இந்துக்கள் இந்து மதம் பற்றி வரலாற்றில் முதல் முறையாக படிக்க ( 500 வருட கிறிஸ்தவ ஆட்சியின் பின்னர்) அதுவும் அரச செலவில் படிக்க ஆரம்பித்தது பண்டா அரசில் என்பது ஒரு வரலாற்று உண்மை. அதை சாதாரணம் என்று எந்த இந்து தமிழனும் கருத முடியாது. தமிழ் மக்களில் 95 % இந்துக்கள் என்பது தெரிந்திருக்கும். பெரும்பான்மைத் தமிழர்களுக்கு நன்மை செய்த ஒரு ஆளை அல்லது சிங்களவனை ஒரு வெளிநாட்டுக் கூலியும், சயிக்கிள் திருடனும், கொலைகாரனுமான பிரபாகரனோடு சேர்த்து கவிதை பாடுவது “தமிழ்” வளர்க்க அல்ல என்பது புரிகிறது.
NANTHA
//பண்டா நினைத்ததை (தமிழரை அழிக்க) பிரபாகரன் முடித்தான்;; (தமிழரை அழித்தான்) இப்போ பிரபா அழித்தது போக மிச்ச சொச்ச அரசியல்வாதிகளையும் கூட்டமைப்பு சிதறு தேங்காய் அடிக்கிறது//
“செல்வநாயகம் நினைத்ததை பிரபாகரன் முடித்தான் ” என்று எழுதினால் பொருத்தமாக இருக்கும்!
செல்வநாயகத்தின் வாரிசுகள்தான் “கூட்டமைப்பு” என்பது தெரிந்திருக்கும்.
chandran.raja
இல்லை குரங்கு மன்னா! எமது புலவர்கள் பாடிப்பாடியே தமிழ மக்கள் ஆண்டியாகி போய்விட்டார்கள். அதைத்தான் சொல்ல வருகிறார் அன்வர்.
நீங்கள் பொறுமையுடன் கேட்டு……!?.
indiani
கவிதையிலுள்ள அரசியலை நக்கீரா சொல்கிறார். குரங்கன் நீங்கள் என்னை அரசியலுக்கப் போகாதே என்டு சொல்லுகிறீங்கள். மேலும் நான் எழுதியதில் ஒரு துண்டைப் ‘பிய்த்து’ எடுத்து ஏதோ அர்த்தத்தை நோக்கி தாவுகிறீங்களே என்று யோசித்துக் கொண்டே வாசித்தால் கடைசிவரி காரணத்தை தெளிவுபடுத்தியது. அதொண்றே போதும்.
குரங்கன் எனத் தொடங்கி அதை கவிஞன் என மாத்திப் பார்க்கும் பச்சோந்தித்தனம் அல்லது சலனம் எனக்கில்லை.
பல்லி
//பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்//
கவிதையிலுமா நந்தா உங்கள் விசுவாசம்;
செல்வனாயகத்தார் நினைத்ததை_ஆகா!
பிரபாகரன் முடித்தான்;
நம்ம நந்தா கட்டளையை _இன்று
நக்கீரன் நிறைவேற்றுங்க;
//பாடிப்பாடியே பரதேசியாகிப் போனவன் தமிழன்.//
கால் போட்டு சொன்னார்- அன்வர்
பாடி பாடி பரதேசியானான் தமிழன்
கால் விட்டு பாடினால் -பல்லி
படி படியாய் கருத்து உண்டு;
//“வானமே! நீ ஏன் அழுகிறாய்.
உனக்கும் வரதட்சணை கொடுமையோ?” // அருமை
வானமே! தெரியவில்லை- இந்த
வானரகங்கள் செயலாலே,
காடுவரை பிள்ளை கண்ணதாசன் வரிகள்;
கவிதை வரை தொல்லை புலி-வரிகண்டு;
வாழ்த்து சொன்ன குரங்கனுக்கு-(தப்பில்லை)
வார்த்தை சில தேடுகிறேன்;
சில கவிதை தொடர்வேன் -நான்
உன்போன்ற ரசிகர்களுக்காய்;
பல கவிகள் படைத்தவர்தான்
நக்கீரன் பலர் அறிவார்
பண்டாவை சொன்னவுடன் -கோபம்
கவி பாராமல் வருவது சரியோ;
நாக்கு முக்கா பாடலுக்கு
யார் சொன்னார் அர்த்தங்கள்
அதுபோல ரசிக்கலாமே
அர்த்தம் இல்லா அரசியலில்
அர்த்தங்கள் தேடலாமோ
அர்த்தமுள்ள இந்து மதம்
கண்ணதாசன் அனுபவங்கள்
அது போல எமக்கும் சில
அனுபவங்கள் இருக்கலாமே
புரியாவிட்டால் கவிதை என்போர்
புரிந்துவிட்டால் கவிதையா என்பார்
எப்படிதான் எழுதினாலும்-இருக்கும்
எமக்கு பல விமர்சனம்தான்,
தவறுதலாய் பல்லி
Nackeera
பின்னோட்டு விட்டு அனைவருக்கும் நந்தாவுடன் கூடிய நன்றி. என்னைக் குற்றம் சாட்டுவதிலேயே கண்ணாய் இருக்கிறார் நந்தா. அதுவும் ஆரோக்கியமானதுதான். நந்தாவின் கருத்தை நந்தாதான் எழுதவேண்டும் என்னால் எழுத முடியாது. எனது பார்வையில் பண்டா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்றே நந்திருக்கிறார்.
/தமிழர்கள் சகலரும் படித்தது நக்கீரவுக்கு பிரச்சனை போல் தெரிகிறது./இது தவறு நந்தா. ஏழைகளை கூலி வேலை செய்யும் மக்களை நாம் ஆங்கிப் பாண்டித்தியத்திலும் படிக்க விடவில்லை. தமிழ்பாடமான போதும் படிக்க விடவில்லை. முயற்சிகள் எவ்வளவு இருந்தாலும் முடிவே முக்கியமானது. பண்டா எமக்கு முடித்து வைத்தது தமிழ் தமிழர் அழிவு. அதை முமுமையாக நடைமுறைப்படுத்துயது பிரபாகரன். செல்வா நினைத்ததை பிரபாகரன் முடித்தான். என்று உங்கள் வார்ந்தையை இப்படி மாத்துங்கள். “செல்வா நினைத்ததை பிரபா சொல்லாது முடித்தான்” தமிழில் எதுகை மோனைக்குப் பங்சமில்லை. //மட்டகளப்பு அங்கத்தவராக இருந்த சாம் தம்பிமுத்து (சீனியர்) அந்த பிரேரணையில் “தமிழும், சிங்களமும்” என்று திருத்தம் கொண்டு வந்தார்// இது நந்தாவின் வார்த்தைகள். இங்கே கூட இன்னுமொரு கிறிஸ்தவர் தமிழை உயிர்பித்துத்திருக்கிறார் எனும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் கத்தோலிக்காரா இல்லையா என்பதை நந்தா தான் சொல்ல வேண்டும்.
//தமிழில் படித்தால் “தமிழ்’ வளராது” இ”தமிழுக்கு அநியாயம்” என்று நீங்கள் மாத்திரமல்ல செல்வநாயகம் கோஷ்டியும் அதைத்தான் கண்டு பிடித்தது// என்னையறியாத நீங்கள் எப்படி என்னைப்பற்றிக் கணக்கெடுப்பீர்கள் நந்தா. தமிழ்படித்தால் தமிழ்வளராது என்று யான் எங்கும் கூறவில்லை இது உங்கள் எண்ணமே. நீங்களே கேள்வியையும்கேட்டு தெரியாத பதிலையும் சொல்கிறீர்கள். தமிழ் வளரவேண்டும் என நினைத்திருந்தால் பண்டா 24மணித்தியாலத்தில் சிங்களச்சட்டத்துக்குத் துணைபோயிருக்க மாட்டார் என்பதே எனது விவாதம். நந்தாவின் பின்நோட்டத்தில் இருந்த நாம் அறிந்து கொள்வது. பண்டா நல்லவர் நாம் தமிழ்படிப்பதை விட சிங்களம் படிப்பதே தகுதியுடையது என்பதோல் இருக்கிறது எது எப்படியாக இருந்தாலும் அது நந்தாவினுடைய கருத்தே. நந்தா நினைப்பதை என்னால் எழுதமுடியாது. அதையும் நந்தா தான் எழுதவேண்டும்
Nackeera
பல்லி மீண்டும் கவிதைடன் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
சந்திரன் ராஜா! தாங்கள் சீதனம் பற்றி எழுதியதால் பலவருடங்களுக்கு முன் நான் சீதனம் பற்றி எழுதிய ஒரு புதுக்கவிதையை உங்களுக்காகவும் வாசகர்களுக்காகவும் மீண்டும் எழுதுகிறேன். இது எனது தொகுப்பில் வந்தது. குறையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
விளக்கு
விளக்கு விளக்கு என
விளக்கினார்கள்
விளங்கிக் கொண்டதால்
மினுங்கிக் கொண்டாள்.
அகல் விளக்கு
அன்பு விளக்கு
குத்து விளக்கு என
குத்திக் குத்துயே
குடும்பவிளக்கானாள்
முன்பின் அறியா வீட்டில்
குலவிளக்கு ஏற்றத்தானே.
தம்முன்னோரைக்காட்டி
தாழ்வுணர்வை ஊட்டி
பெற்றோர்கள் ஏற்றினார்கள்
கலாச்சாரவிளக்கு.
சீதனம் சீரில்லை என
மண்ணெண்ணை ஊற்றி
மருமகன் ஏற்றுகிறான்
அவ்விளக்கை.
விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
santhanam
கவிதை நன்று ஆனால் செயலில் வீரராக முதலில் இருக்கவும் எழுத்தில் தேசம் பலமாகவுள்ளது ஆனால் செயலில் உறைநிலை??
பல்லி
நக்கீரா எனக்கு எறிந்த கல் சில உம்மீது விழுந்தன என நினைக்கிறேன்;, பல்லி மீது அப்படி அன்பு சிலருக்கு;
இது ஒன்றும் புதிதல்ல்ல பல்லிக்கு; பல்லியின் தொடக்கமே(தேசத்தில்) பலரது சீற்றம்தான்;
//பல்லியைத் தேடினேன் பத்தையிலும்
மெத்தையிலும் பல்லியோ
ஈழத்துச் செத்தையிலும்//
உன் வரிகளுடன் -என்
வரிகளும் இனையட்டும்;
(கவிதைபோல்தான்)
நக்கீரன் கேக்கின்றார்;
எழுது பல்லி என்று;
அடங்காத பல்லி இது;
ஆணவம் எனக்கும் இல்லை;
அனாதைகள் ஆக்கி விட்டு-நம்மை
அவரவரே ஓடி விட்டார்
அகதிகள் முகாம் ஒன்றில்
அம்மாக்கள் கதறல் இது;
அழுகிறது குழந்தை ஒன்று
அம்மாவின் பாலுக்காய்;பசி
அன்புடனே அளைத்தவளோ
அழுகின்றாள் பாலின்றி:
கரு கொலை கதை சொல்லி
கருத்தம்மா படம் உண்டு
கற்ப்புக்கள் கதறி அழும்
கடைதெருதான் வன்னி முகாம்;
நாடுநாடாய் தமிழர் சென்று
நடுதெருவில் ஈழம் வந்து
வெள்ளை கொடி சிவப்பாகி
வெளுத்து போச்சு சதிராட்டம்:
ரூபாவுக்கு மூன்று என
சந்தையிலே விற்ப்பது -போல்
ஈழமதை கூவுகிறார்கள்
புலம் பெயர்ந்த புலியமைப்பு;
ஈழம் கேட்டோர் பலர்-உண்டு
இறுதிவரை யாரும் இல்லை
நாடு கடத்தி தமிழீழம்
நமக்கதுதான் வருமானம்;
பெண்கள் மகா நாட்டில்
உள் ஆடை காய்கிறது
பெண்களின் விடுதலைக்கு
உடுப்புதான் தடை போலும்;
இலக்கிய சந்திப்பில்-புலத்தில்
இலக்கையதைத் தொலைத்து விட்டு
இலக்கணக்கள் தடுமாறி
சச்சரவில் முடிவதுண்டு;
தேடினேன் கருதெழுத
தேறாத தளங்கள் வரை
தேய்பிறையாய் பதில் – சொல்லி
தேர்வின்றி மறுப்பெனக்கு;
எழுதடா பல்லி எழுது -என
என் நண்பர் தளம் காட்ட
நக்கீரன் கோலத்தில்-நான்
தேடும் ஒரு புள்ளி இது;
என் கவியில் யதார்த்தம்
எப்படியும் தலை தூக்கும்
ஏன் என்றும் தெரியவில்லை
என் மனதும் தேடவில்லை:
நட்புடன் பல்லி;
(திருத்ததுக்கு இடம்முண்டு)
NANTHA
// ஏழைகளை கூலி வேலை செய்யும் மக்களை நாம் ஆங்கிப் பாண்டித்தியத்திலும் படிக்க விடவில்லை. தமிழ்பாடமான போதும் படிக்க விடவில்லை. முயற்சிகள் எவ்வளவு இருந்தாலும் முடிவே முக்கியமானது. பண்டா எமக்கு முடித்து வைத்தது தமிழ் தமிழர் அழிவு. அதை முமுமையாக நடைமுறைப்படுத்துயது பிரபாகரன்.//
உங்கள் கருத்துப்படி “பண்டா” தமிழை தமிழர்கள் படிக்கவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தமையால் தமிழர்களுக்கு “அழிவு” வந்துவிட்டது என்கிறீர்கள். செல்வநாயகம்- கிறிஸ்தவ கோஷ்டிகள் போல் “ஆங்கிலம்” படிக்க வேண்டும் என்று இருந்திருந்தால் தமிழும் தமிழர்களும் காப்பாற்றபட்டிருப்பார்களோ?
சாம் தம்பிமுத்து என்றவுடன் ” கிறிஸ்தவ” என்று எகிறுவது ஏன்? யாழ்ப்பாணத்து “ராஜ ராஜ சோழன்கள்” மவுனமாக இருந்தார்கள் ஆனால் ஒரு கிழக்கு மாகாணத்து சாம் தம்பிமுத்து தீர்மானத்துக்கு திருத்தம் கொண்டு வந்தவுடன் “ஆகா” கிறிஸ்தவன் என்று சத்தம் போடுகிறீர்களே! கருணா புலிகளை விட்டு விலகியதும் அப்படித்தான். தமிழ் விடுதலையின் ஏகபோக முதலாளிகள் ‘யாழ்ப்பாணத்தவர்கள் ‘ அல்ல.
யு ஏன் பி யின் 24 மணி நேரத்தில் சிங்களம் என்று தீர்மானம் கொண்டு வந்ததை பற்றி பேச முடியாதோ? பண்டாவின் கட்சி “24 மணி சிங்களம் பற்றி” தொடங்கவில்லை. ஆனால் தமிழ் சூரர்களின்-செல்வநாயகத்தின் கூட்டாளிகளான யு ஏன் பி தான் அந்த சிங்கள பிரச்சனையின் மூல காரணி என்பதை விட்டு விட்டு பண்டா மேல் பாய்வதன் நோக்கம் என்ன? 1965 – 1970 வரை “சிங்களம்” பற்றி பேசாது யு ஏன் பியுடன் கட்டிப் புரண்ட செல்வநாயகம் கோஷ்டி 1970 இல் யு ஏன் பி தோற்றவுடன் ” தமிழ் உரிமை” என்று சத்தம் போடத் தொடங்கிய காரணம் என்ன? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசு வந்தவுடன்தான் “தமிழர்” பிரச்சனையும் வரும். அது பிரபாகரன் காலத்திலும் நீடித்தது.
//தமிழ் வளரவேண்டும் என நினைத்திருந்தால் பண்டா 24மணித்தியாலத்தில் சிங்களச்சட்டத்துக்குத் துணைபோயிருக்க மாட்டார் என்பதே எனது விவாதம்//
தமிழ் வளர செல்வநாயகம் கோஷ்டி என்ன செய்தார்கள் என்று சொல்லுவீர்களா?
அடுத்தது “அரச கரும மொழி” என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையினர் பேசும் மொழிதான் என்ற உண்மையை மறந்து போனீர்களா? நோர்வேயில் தமிழிலா அரசுடன் தொடர்புகளை வைத்திருக்கிறீர்கள்?
santhanam
என்னுடைய -தனிமனிதசுதந்திரம்
உன்னுடைய-அடுத்தமனிதரின்சுதந்திரம்
எங்களுடைய -மக்கள் சுதந்திரம்
நான் -தனிமனிதவழிபாடு
இதன் அர்த்தமா கல்லெறிதல்
chandran.raja
நக்கீரா! என்னக்கு கவிதை பற்றி எதுவும் தெரியாது? யாப்பு எதுகைமோனை எதுமே எனக்கு சூனியம். புரிந்துகொள்ள முடியவில்லை. பத்தொன்பது வயதில் அடிமனத்தில் தோன்றியதை எழுபது என்பது ஆண்டு காலப்பகுதிகளில் வெளிவந்த மித்திரன் பத்திரிக்கைக்கு பன்னிரன்டு வரிபாடல் அனுப்பியிருந்தேன் போட்டுவிட்டார்கள்.
அவ்வளவு தான். எல்லாம் கேள்விஞானத்திற்கு உட்பட்ட விளக்கம் தான். வேறு ஒன்றும் தெரியவே தெரியாது. என்னை விமர்சனம் கேட்டால் எப்படி? ஒன்று மட்டும் உறுதியாக சொல்வேன். கவிதையாக இருக்கட்டும் கட்டுரையாக இருக்கட்டும் அல்லது ஏச்சுப் பேச்சாக இருக்கட்டும் சமூகத்தை உயர்த்துவதாக இருந்தால் வரவேற்பேன். மட்டமான கற்பனையும் தவறான எதிர்பார்களும் இருந்தால் ஒட்டவெறுப்பேன். உதாரணத்திற்கு புலிக்கவிதை
கள். கடைசிச்சொட்டு இரத்தம். இறுதிமூச்சு. ஒருஅங்குலநிலம். இறந்ததும் வானத்தில் இருந்து மலர்வதை பார்கிறது. இப்படியான வார்த்தைகள் அப்பாவிகளை உசுப்பேத்தி அழிவுக்கு கொடுக்கிற வேலை. அபூர்வராகங்கள் என்று ஒருபடம் வந்தது தெரியுமா? பலதடவை பார்த்த படங்களில் அதுவும் ஒன்று. அதில் பெரியஅளவில் புரிந்துகொள்ள முடியாத பாடல்வரி. இப்பொழுது தான் தெளிவாகவும் விபரமாகவும் புரிகிறது.
“இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்”
kurankan
அடுத்தது “அரச கரும மொழி” என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையினர் பேசும் மொழிதான் என்ற உண்மையை மறந்து போனீர்களா? //நந்தா
இந்தோனேசியாவில் அரச கரும மொழி பகசா இந்தோனேஷியா. பெரும்பான்மையினர் பேசும் மலே மொழி அல்ல.- ஒரு தகவலுக்காக.
Nackeera
சந்திரன் ராஜா! என்கவிதை பற்றிய உங்கள் கருத்தைக் கேட்க ஆவலுற்றேன் அவ்வளவுதான். அபூர்வராகங்கள் சிந்துபைரவி இவை ஒரு திரைக்கதை அல்ல. இராகங்களின் கதையை மனிதர்களாக உருவகித்து உருவாக்கப்பட்டது. சிந்து சமூகத்தில் முக்கியமாக தொழிலாளர் மட்டத்தில் பள்ளுப்பாடர்களாக நாட்டார் பாடல்களாக ஏலேலோ பாடல்களாக இருந்தாலும் இராக அந்தஸ்தை சாத்திரீய சங்கீதம் கொடுக்கவில்லை. ஆனால் அது பைரவி எனும் இராகத்துடன் சேர்ந்து சிந்து வைரவி எனும் இராக அந்தஸ்தைப் பெற்று விடுகிறது. ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அந்தஸ்துப்பிரச்சனை எமது இராகங்களுக்கும் தான். கவிதை பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
நந்தா! ஐரொப்பிய நாடுகளில் முக்கியமாக அமெரிக்கர்கள் தமது மொழியிலேயே கடமையாற்றுகிறார்கள். இவர்கள் அரைவீத சனத்தொயை இல்லாதவர்கள். முன்னைய எனது கட்டுரைபின்நோட்டத்திலும் எழுதியிருந்தேன் பல ஆபிரிக்க நாடுகளில் சுகயிலி போன்ற மொழிகள் பெரும்பான்மை மொழியாக இருந்தாலும் அரசமொழிகளாக ஆங்கிலம் பிரெஞ்சு போன்ற மொழிகளே இருக்கின்றன. குரங்கன் சொன்னதும் உண்மையே.
NANTHA
//இந்தோனேசியாவில் அரச கரும மொழி பகசா இந்தோனேஷியா. பெரும்பான்மையினர் பேசும் மலே மொழி அல்ல.- ஒரு தகவலுக்காக.//
பாஷா மலேசியாவுக்கும் பாஷா இந்தோனேசியாவுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லுவீர்களா?
NANTHA
அமெரிக்கர்கள் ஐரோப்பாவில் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம். ஆனால் ஐரோப்பியர்கள் அமரிக்காவில் தங்கள் மொழியில் தொடர்பு கொள்ள முடியாது. அமெரிக்க அரசிய சாசனம் “ஆங்கிலம்” மாத்திரம் அரசகரும மொழி என்று சொல்லுகிறது.
அதே வேளையில் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது மொழியாக எதாவது ஒரு ஐரோப்பிய மொழி கற்பிக்கப்படுகிறது. நீங்கள் இருக்கும் நோர்வேயில் அப்படித்தான். எனவே அங்கு மொழிப் பிரச்சனை “தீர்க்கப்பட்டுள்ளது.”. நோர்வேயின் வடக்கில் வாழும் எஸ்கிமோவர்களின் மொழிக்கு நோர்வே என்ன அந்தஸ்த்து கொடுத்துள்ளது?
ஆபிரிக்காவில் ஸ்வாஹிலி மொழி பரவலாக பேசப்பட்ட போதும் ஆபிரிக்காவை பங்கு (1910 ஆம் ஆண்டு புருசல்ஸ் ஒப்பந்தம்)போட்டுக் கொண்ட ஐரோப்பியர்கள் தங்கள் மொழியைத்தான் அங்கு புகுத்தினார்கள். பாடசாலைகளில் அவர்களுடைய மொழியை படிக்கவும் விடவில்லை. போதிக்கவும் இல்லை. இலங்கையில் ஒரு சதவீத மக்களைக்கூட ஆங்கிலம் பேசுபவர்களாக மாற்ற முடியவில்லை. ஏனென்றால் தமிழும் சிங்களமும் ஆயிரக் கணக்கான வருடங்களாக பேச்சிலும் எழுத்திலும் “முற்றி” இருந்தது.
ஆங்கிலேயர்கள் போய் சேர்ந்த பின்னரும் அவர்களின் மொழியில் மல்லாட வேண்டும் என்பது தலை எழுத்தா?
நீங்கள் வாழும் நோர்வேயில் தமிழை எந்த தலை முறையிலும் அரச செலவில் பாடசாலைகளில் காண முடியாது.
Nackeera
நந்தா! நீங்கள் பண்டாவை ஆதரிப்பதை நான் தடுக்கவில்லை. அதற்கா நான் அவரை ஆதரிக்க வேண்டும் ஐ.தே.க: கூட்டணி; செல்வநாயகம் இவர்களை எதிர்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது தவறானது.பண்டாவைப்பற்றிகதைத்தால் செல்வநாயம் ராஜராஜசோழன் எங்கெங்கே போகிறீர்கள். கருத்துக்குள்ளும் எடுத்த பொருளுக்குள் நின்று கதைப்பது முக்கியமானது பண்டா என்ன பண்ணினாலும் முடிவாக 24மணிததியாலத்தில் அரசியல் பதவிக்காக தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தவர். பண்டாவை பாதுகாக்க எதையும் சொல்லவாம். உண்மை இதுதான்.
நிச்சயமாக நோர்வேயில் தமிழ் அரசகரும மொழியல்ல சிறுபான்னை மொழியான ஆங்கிலமும் அரசகரும மொழியாக இருக்கிறது. மீண்டும் நினைவுபடுத்த எழுதுகிறேன் ஒரு பெரும்பான்மை மொழிதான் அரசகரும மொழியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை: உதாரணம் நான்பட்டுமல்ல குரங்கனும் தந்திருக்கிறார்.
Nackeera
பல்லியின் வரிகளில் புலியில்லை அதனால் ஒரு சிலவரிகளுக்கு விமர்சனம்
/ரூபாவுக்கு மூன்று என
சந்தையிலே விற்ப்பது -போல்
ஈழமதை கூவுகிறார்கள்
புலம் பெயர்ந்த புலியமைப்பு/
முதல் இரண்டுவரியிலும் இருப்பது உவமானம். ஒன்றை இன்னென்றாக விபரிப்பது. உண்மையாகச் சொல்லவந்த விடயம்தான் உவமேயம். அதுதான் 3ம் 4ம் வரிகள். இதை நீங்கள் இன்னும் வேறுமுறையில் வீச்சுள்ளதாகவும் மாற்றி எழுதலாம். இதைத்தான் உவமை அணிஎன்று சொல்வார்கள்.
பல்லி
நன்றி நக்கீரா கண்டிப்பாக முயற்ச்சி செய்கிறேன்; தவறுக்கு வருந்துகிறேன்;
NANTHA
நோர்வேயின் வடக்கில் உள்ள எஸ்கிமொவர்களின் மொழியில் அவர்கள் “கோவிலில்” பூசை” கூடப் பண்ண முடியாது.
செல்வநாயகம் கோஷ்டி தமிழின் பெயரால் ஸ்ரீ அழிப்பு, அரச கரும மொழி என்பவற்றுக்கு எதிர்ப்பு என்ற “தப்பான” துவேஷத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தடித்து சிங்கள பகுதிகளில் உள்ள “துவேஷிகளை” உரமாக்கினார்கள். அதன் விளைவு வரலாறு. பன்னிரண்டு சதவீத மக்களுக்கு போலியான வழிகாட்டல் செய்த செல்வநாயகம் கோஷ்டிகளையும், அவர்களது கூட்டாளிகளான யு என் பி சிங்களவர்கள் பற்றியும் பேச்சைக் காணவில்லை.
இருபத்திநாலு மணி அல்ல 100 மணித்தியாலம் அல்ல பத்து வருடங்களின் பின்னரும் அரச கரும மொழி என்ற சட்டம் வந்தே இருக்கும். அதன் நோக்கம் பற்றி ஆராயாது “சிங்களம்” அரியாசனம் ஏறவிட்டது என்னமோ அணுகுண்டு விழுந்த பிரச்சனை போல எழுதி பண்டாவை திட்டுவதில் தமிழருக்கு எதுவித பயனும் கிடைக்க போவதில்லை.
ஆயினும் பண்டா தமிழை பாடசாலை மொழியாக்கின பெருமகன். தமிழன் என்ற வகையில் அதற்காக எப்போதும் நன்றியுள்ளவனாகவே இருப்பேன்! அதனை எதிர்த்த செல்வநாயகம், கத்தோலிக்க கோஷ்டிகளை மதிக்கவே முடியாது.
Nackeera
நந்தா! எது ஜதார்த்தமோ எது நடந்ததே அதையே வைத்து கவிதை புனையப்பட்டது. செல்வநாயகம் ஐ.தே.கட்சி பற்றியது உங்கள் கருத்து. எனது கருத்து எதோ அதையே எழுதியுள்ளேன். மீண்டும் 24மணித்தியாலத்தில் சிங்களம் அரசகருமமொழி என்று போராடி அமுல்படுத்தியவர் பண்டாதான் சந்தேகம் இல்லை. நன்றி நந்தா
பல்லி! நீங்கள் எழுதியதை நான் தவறு என்று கூறவில்லை. சரியானது என்று தான் விமர்சித்துள்ளேன். ஒன்றை இன்னென்றுக்கு ஒப்பிட்டு எழுதுவது உவமை அணி என்பதாகும். நீங்கள் எழுதியது சரியானதே
Nackeera
//பண்டா நினைத்ததை (தமிழரை அழிக்க) பிரபாகரன் முடித்தான்;; (தமிழரை அழித்தான்) இப்போ பிரபா அழித்தது போக மிச்ச சொச்ச அரசியல்வாதிகளையும் கூட்டமைப்பு சிதறு தேங்காய் அடிக்கிறது//
நன்றி இந்தியானி
NANTHA
//நந்தா! எது ஜதார்த்தமோ எது நடந்ததே அதையே வைத்து கவிதை புனையப்பட்டது. செல்வநாயகம் ஐ.தே.கட்சி பற்றியது உங்கள் கருத்து. //
செல்வநாயகம் – யு என் பி காதலும் யதார்த்தமானதுதான். அது என் கருத்தல்ல. வரலாற்று உண்மை.
thaya
நக்கீரா!
உன் பேனா
நீ எதையும் எழுதலாம்..
நேற்று நீ எழுதிய
கவிதைகளின்
ஈரம் இன்னும்
காயவில்லை…
நீ எழுதியவைகளுக்கான
இரங்கல்களையே
இன்று நீ எழுதுகின்றாய்.
எதோ ஒரு வகையில்
துப்பாக்கிகளை விடவும்
உன் பேனாவும்
உன் இன்றைய
கவிதைகளுக்காக
நேற்று விதை விதைத்திருக்கிறது…
தயவு செய்து
உன் கவிதைகளில்
தமிழ் என்ற சொற்களை
குறைத்துக்கொள்….
எதை யார்
அதிகம் உச்சரித்தார்களே
அது அழிந்து போனது
அதை அதிகமாக|
உச்சரித்தவர்களால்தான்…
Nackeera
நந்தா! நோவேயில் வடக்கில் வசிப்வர்கள் எஸ்கிமோவர்கள் அல்ல. எக்சிமோவர்கள் வாழ்வது கீறீன்லாந்து. இவர்கள் மங்கோலிய அடியைக்கொண்ட குள்ளர்கள். அப்படி ஒரு சட்டம் இருப்பதாக யான் அறியவில்லை. ஆதாரம் இருந்தால் வைக்கமுடியுமா? செல்வநாயகம் யு.என்.பி காதலுக்கும் என்கவிதைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. செல்வநாயகம் மட்டுமல்ல அவர்கள் வழிவந்த த.தே.மு கடைசித்தேர்தலில் அதைத்தானே செய்தது. இப்பவாவது ஒத்துக் கொள்கிறீர்களா பண்டாவை மட்டுமல்ல செல்வா வழித்தோன்றல்கள் த.தே.முயும் கவிதையில் “மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்” இங்கு மன்றாடி என்பது யு.என்.பி விரும்பாவிட்டாலும் இல்லை உங்களுடன்தான் நிற்போம் என்று மன்றாடி யுஎன்பி கூட்டு சரத்துக்காய் இருந்தது. செல்வா மட்டுமல்ல அரசியில் பரம்பரையே யு.என்.பியுடன்தான் கடைசியிலும் நின்றுள்ளது கவிதையின் கடைசிவரியது.
lamba
மண் மண் என்று
போர் மண்ணானது
பிரி பிரி என்று(தனிநாடாய்)
பார் பிரிந்தது(வட-கிழக்காய்)
தமிழ் தமிழ் என்று
தமிழும் போய்விடுமோ-ஜயகோ
தயா வரிகள்
தப்பான வரிகளல்ல
அதிகூர்மை வேண்டாமேயென
அதீத கவனமன்றோவிது
மாயா
//அதனை எதிர்த்த செல்வநாயகம், கத்தோலிக்க கோஷ்டிகளை மதிக்கவே முடியாது. – Nantha//
செல்வநாயகம் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவரல்ல. அவர் கிறிஸ்தவர். இதை நந்தா ஏற்றுக் கொள்ள மாட்டார். அதற்கு ஓரு உதாரணம். இந்துக்களில் ஐயரும் , ஐயங்காரும் வேறு வேறு வழிபாட்டைக் கொண்டவர்கள் என சொன்னால் புரியும் என நினைக்கிறேன். இஸ்லாமியர்களில் கூட பல பிரிவினர் இருக்கின்றனர். எனவேதான் அவர்களுக்குள் யுத்தம் புரிகிறார்கள். உதாரணத்துக்கு ஈராக்கில் மோதிக் கொளள்ளும் சுன்னி-ஷியா ஆகிய பிரிவினர். நமக்கு தெரியாத எத்தனையோ உண்டு. தெரியாததை தெரிந்தது போல் காட்டப் போவதால் , உள்ளதும் கெட்டுப் போகிறது. உண்மைகளும் கசந்து போகிறது.
thurai
//ஆயினும் பண்டா தமிழை பாடசாலை மொழியாக்கின பெருமகன். தமிழன் என்ற வகையில் அதற்காக எப்போதும் நன்றியுள்ளவனாகவே இருப்பேன்! அதனை எதிர்த்த செல்வநாயகம், கத்தோலிக்க கோஷ்டிகளை மதிக்கவே முடியாது.//நந்தா
சிங்கள தமிழ் அரசியல்வாதிகளின் செயல்களால்தான் இவ்வளவு உயிகள் அழிந்தன என்பதே உலகமறிந்த் உண்மை. அதில் பண்டாவும் ஒருவர். இவருக்கு தமிழ் மொழிக்காக நன்றி சொல்பவர்களிற்கும், தமிழின் பெயரால் பிழைப்பு நடத்துவோரிற்கும் என்ன வேறுபாடு.
துரை
Nackeera
தயாவின் அறிவுரைக்கு நன்றி. நேற்று என்பேனா அழுததே முள்ளிவாய்காலில் அழுது முடிந்தது. என்ன செய்வது தயா-கண்ணீர்கள்தானே பேனாவினால் இவ்வளவு காலமும் வழிந்தது. துப்பாக்கிகள் உயர்ந்தபோது பேனாக்கள் சரிந்தன. இன்று துப்பாக்கிகள் சரிந்தபோது போனாக்களாவது நிமிரட்டுமே
மாயா! உண்மை செல்வா மட்டுமல்ல பண்டாவும் கிறீஸ்தவர். நனறிந்தவரை கத்தோலிக்கர்
NANTHA
//அதனை எதிர்த்த செல்வநாயகம், கத்தோலிக்க கோஷ்டிகளை மதிக்கவே முடியாது. – Nantha//
செல்வநாயகம் கத்தொலிக்கரல்ல என்பது எனக்கு தெரியும். அதனால்தான் செல்வநாயகத்தையும், கத்தோலிக்க கோஷ்டிகளையும் தனியத்தனிய எழுதியுள்ளேன்.
பண்டாவும் செல்வநாயகமும் பிரிட்டிஷ் மகாராணியை தலைவராகக் கொண்ட அங்கிலிக்கன் பிரிவை சேர்ந்தவர்கள். பண்டா திருமணத்தின் போது பவுத்தராக மாறினார். அதுதான் அவரது கொலைக்கு காரணமோ தெரியவில்லை. அங்கிலிக்கன் பிரிவினரின் “INQUISITION” முறைப்படி பண்டாவுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டதோ என்றும் ஒரு கேள்வி.
கத்தோலிக்கர்களுக்கும், கிறிஸ்தவகர்களுக்கும் ஒன்று சேர்ந்து பண்டாவுக்கு எதிராக கதைப்பது தமிழ் பிரச்சனையல்ல என்றும் வெறும் மதப் பிரச்சனை என்றும் இப்போது புரிகிறது.
கத்தோலிக்க பாதிரிகள் தமிழ் என்று தொடங்கி இந்து கோவிலில் கொள்ளையடிப்பது வரை போயுள்ள நிலையில் அதனைப்பற்றி “மூச்சு” விடாது பண்டா பற்றி கதைப்பவர்கள் முதலில் தங்கள் பாதிரிகளை திருத்தட்டும். ஆனால் திருத்த முடியாது. “பாவத்தின் சம்பளம்” பயமுறுத்தும்.
NANTHA
நக்கீரா:
நோர்வேயின் வடக்கில் இருக்கும் “SAMI” இனத்தவரின் வரலாற்றைப் பார்க்கவும்.
மாயா:
இலங்கையில் கத்தொலிக்கனுக்கும் அங்க்லிக்கனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? கத்தோலிக்க பாதிரி கலியாணம் முடிக்க வேண்டுமென்றால் அங்கிலிக்கன் பாதிரியாக மாறுவார். புளொட் இயக்கத்தோடு கொஞ்ச காலம் திரிந்த பிரான்சிஸ் சேவியரின் கதை அது. கனடாவுக்கு வந்த இந்த பாதிரி ஆரம்பத்தில் புளொட் என்று இருந்து விட்டு பின்னர் புலியாகி புலி வட்டத்தில் பெரிய புள்ளியாக இருந்த ஆள். சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்து “பிரச்சனை” இல்லாமல் இருக்கும் இந்த பாதிரி புலிகளின் மேடைகளில் “சிங்களவர்களால் பிரச்சனை” என்று பகிரங்கமாக கூறியவர்.
அந்த “ஏடு” தொடக்கலுக்கு இந்து கோவிலுக்குள் போன கத்தோலிக்க பாதிரி சந்திரகாந்தனோடு போன மற்றைய பாதிரி வேறு யாருமல்ல. அதே பிரான்சிஸ் சேவியர்தான். அந்த ஏடு தொடக்கலைக் கண்டித்து ஒரு பிரசுரம் வெளியாகியது. அதில் இந்த பிரான்சிஸ் சேவியரின் வரலாறு, அவருடைய தம்பி பீட்டர் செய்தவை பற்றியும் இருந்தது. அதன் பின்னர் இந்த சேவியரை “காணவில்லை”.
thurai
//கத்தோலிக்கர்களுக்கும், கிறிஸ்தவகர்களுக்கும் ஒன்று சேர்ந்து பண்டாவுக்கு எதிராக கதைப்பது தமிழ் பிரச்சனையல்ல என்றும் வெறும் மதப் பிரச்சனை என்றும் இப்போது புரிகிறது.//நந்தா
கத்தோலிக்கர்களுக்கும், கிறிஸ்தவகர்களுக்கும் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினைக்குக் காரணமாம் அருமையான் க்ண்டுபிடிப்பு. தொடர்ந்து எழுதுங்கள்.
துரை
Nackeera
நந்தா! தெரியாமல் ஒருவிடயத்தை எழுதுவது தப்பு. அது தப்பு என்று கண்டதும் மன்னிப்புக் கோருவது பெருந்தன்மை. நீங்கள் எழுதியதை இங்கு சாட்சியாக வைக்கிறேன்.
//2010 11:02 pஅ நோர்வேயின் வடக்கில் உள்ள எஸ்கிமொவர்களின் மொழியில் அவர்கள் “கோவிலில்” பூசை” கூடப் பண்ண முடியாது//
திரும்ப நீங்கள் எழுதியுள்ளீர்கள் இப்படி //நோர்வேயின் வடக்கில் இருக்கும் “sami” இனத்தவரின் வரலாற்றைப் பார்க்கவும்//
சாமியும் எக்சிமோவரும் ஒன்றல்ல இன:இரத்த:தோற்றங்களால் முற்றிலும் மாறுபட்டவர்கள். சாமர் பற்றி சிறுவரலாற்று ஆய்பு ஒன்றை நோர்வேயில் எழுதி முக்கியமாக மந்திரியான சூல்கை வந்த என்னிடம் தனிப்பட என்கையால்வாங்கிச் சென்ற கட்டுரைதான்” இங்கும் ஒரு இனம் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது” இது எழுதியதற்குக் காரணம் நோர்வே இலங்கைச் சமாதானமுயற்சியில் ஈடுபடும் காலை இக்கட்டுரை நோர்வே தமிழ்சங்கத்தால் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. முடிந்தால் எடுத்து வாசியுங்கள். மேலும் நான் தேசத்துக்கு முன்பு எழுதிய கட்டுரையில் இந்தமக்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இன்று சாமருக்கு இருக்கும் உரிமைகள் எந்த சட்ட வரையறைக்குள் அவர்கள் ஆட்சி நடக்கிறது என்பது பற்றித்தெரியுமா?
Nackeera
//.”. நோர்வேயின் வடக்கில் வாழும் எஸ்கிமோவர்களின் மொழிக்கு நோர்வே என்ன அந்தஸ்த்து கொடுத்துள்ளது// நந்தாவின் இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது கேள்வியே பிழையான. நோவே நாட்டிலுள் சமர்களுக்கு அவர்களின் ஊரிமை மொழி அனைத்தும் அங்கரிக்கப்பட்டு அவர்களுக்கென்று ஒரு தேசியதினம் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதை அறியவில்லையோ? அதுமட்டுமல்ல அவர்களுக்கு என்று தனித்தன்மை கொண்ட கலாச்சார அமைப்பிலான பாரழுமன்றம் அமைந்திருப்பதையும் அறியவில்லையே? இந்த மக்கள் பற்றிய பலஆய்வும் அறிவும் என்னிடம் போதியளவு உள்ளது.
பல்லி
://தயவு செய்து
உன் கவிதைகளில்
தமிழ் என்ற சொற்களை
குறைத்துக்கொள்….
எதை யார்
அதிகம் உச்சரித்தார்களே
அது அழிந்து போனது
அதை அதிகமாக|
உச்சரித்தவர்களால்தான்//
கலகம் அல்லாத கவிதை:
நக்கீராவின் பேனாவில்
சிவப்பு மை துழிகள்.
தயா நிரப்புகிறார்
அவரது பார்வையால்;
புல் மீது பனி துழி
அவள் மீது என் விழி
இப்படி கவியெழுத
நக்கீரன் பெயர் எதுக்கு;
புலிகளை நாம் விமர்சித்தோம்
கொலைகளை வெறுப்பதனால்
அரசை மட்டும் குறை சொன்னால்
அடுக்கடுக்காய் அலைகள் பல;
தமிழுக்கு தடை சொன்னால்
தன்னிறைவு சிலருக்குண்டு
தமிழ் எங்கள் மூச்சில்லை
தாய் மொழி தமிழ்தானே;
தமிழ் மக்கள் நலம் வாழ
நமது பேனா தலை குனியும்
தமிழ் சமூகம் சிந்திக்கவே
நம் பேனாக்கள் அழுகின்றன;
பல்லி;
Nackeera
நக்கீராவின் பேனாவில் சிவப்பு மைத்தளிகள். கவிதையில் உயிர் இதுதான்
NANTHA
நக்கீரா:
“சாமி” மக்களின் நிலை தற்போது மாறியுள்ளது. ஆனால் 1960 க்கு முன்னர் அந்த மக்களின் நிலை என்ன? 1998 இல் ஒஸ்லோ நகரசபை சாமி மக்களின் கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை. இடதுசாரி அரசியல் வாதிகள் சாமி மக்களின் உரிமைக்காக வாதாடினார்கள்.
தவிர டென்மார்க் அரசின் கீழ் நோர்வே இருந்த பொழுது (18 ஆம் நூற்றாண்டு) டானிஷ் அரசகரும மொழியாக இருந்ததும், நோர்வே 1815 இல் தனிநாடாக சுதந்திரப் பிரகடனம் செய்ததும் வரலாறு. ஆயினும் சுவீடனுடன் தொடர்புகளை வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. 1907 ஆம் ஆண்டே நோர்வே சுதந்திர நாடாகியது.
அதன் பின்னரே நோர்வீஜியர்கள் தங்கள் மொழியில் சகல கருமங்களையும் செய்ய தொடங்கினர். ஆனால் “சாமி” மக்கள் உரிமைகளைப் பெற்றனர். ஆனால் அவர்கள் “பெரும்பான்மை” மொழிக்கு எதிராக கொடிதூக்கி நோர்வேயை முன்னர் ஆண்ட டென்மார்க். ஸ்வீடன் மொழிகள் இருக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
இலங்கையில் “தமிழ்” கோஷ்டிகள் சிங்களம் அரச மொழியாக முடியாது என்று குரலெழுப்பியது மாத்திரமின்றி ஆங்கிலம் போய் விட்டதற்கு இப்போதும் அழுது கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் “தமிழை” பாட மொழியாக்கிய பண்டாவை நக்கீரா திட்டுவதன் நோக்கம் என்ன?
1956 ஆம் ஆண்டு அரச கரும மொழிச் சட்டத்தில் “ஒவ்வொரு அரச அலுவலக” தொடர்புகளும் தமிழிலும் சிங்களத்திலும் இருக்க வேண்டும் என்பது பற்றி இதுவரையில் பேசாது மவுனம் சாதிக்கும் உங்களைப் போன்றவர்கள் கவிதை எழுதி துவேஷம் வளர்க்கும் திருப்பணியை நிறுத்தினால் நல்லது.
Nackeera
நந்தா முதலில் சாமரும் எக்சிமோவரும் வேறு வேறு என்பதை முதலில் ஒத்துக் கொள்ளுங்கள். எது துவேசம் பண்டா செய்தது துவேசம் இல்லை. அவர் செய்ததை எழுதினால் துவேசம். நான் தமிழைப் பாடமொழியாக்கியபோது இருந்த பண்டாவை திட்டவில்லை. நான் என்கவிதையில் குறிப்பட்ட பண்டா 24மணித்தியாலத்தில் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்த பண்டாவைத்தான் எழுதினேன். இரண்டும் ஒருவரென்றே நீங்கள் வாதாடலாம் ஆனால் இது பண்டாவின் இருமுகங்கள் இருநாக்குக்கள் என்பதற்கு உதாரணமே.
இனி நோர்வே பற்றி விடயத்துக்கு வருவோம்: நீங்கள் எழுதியதுபோல் 1815ல் நோவே சுதந்திரம் அடையவில்லை. நோவேக்கான அடிப்படைச்சட்டம் எழுதப்பட்ட நாளை இன்றும் மக்கள் வெகுசனமாக விமரிசையாகக் கெண்டாடுகிறார்கள். இந்தநாள்தான் 17.05.1814. நோவே சுதந்திரமாகக் கணிப்பிடும் நாள் 08.05.1945. நோவேயானது பலகாலணித்துங்களின் கீழ் இருந்தது. அதோபோல் வேறுநாடுகளை தன்காலணித்துவத்தின் கீழும் இருந்தது. சாமர்களின் போராட்டம் தமிழில் என்னால் எழுதப்பட்டது என்பதும் என்தாழ்மையான கருத்து. அவர்களின் பிரச்சனைகள் எந்த முறையில் தீர்க்கப்பட்டதோ இதேவழியை கையாண்டிருந்தால் எமது தமிழ்மக்களின் பிரச்சனையும் சுமூகமாகத் தீர்க்கப்பட்டிருக்கும். காலணித்துவ காலப்பகுதியில் பல இனங்கள் மொழிகள் பிரச்சனையைச் சந்திக்கிறது. இன்றும் கூட இந்த 10சதவீதமான சமருக்கு கிடைத்தது போன்ற ஒரு வாழ்வை இன்று தமிழ்சிங்கள தேசியவாதிகள் மக்களின் நலம்கருதிச் செய்யலாம். துவேசம் ஆணிவேரிலேயே ஊற்றி வளர்க்கப்பட்டுள்ளது. இந்த நஞ்சை எடுப்பதே முதல் அவசியமானது. இதேவேளை சாதி மதபேதங்களை எம்மிடையே நாம் தூண்டி விட்டுக்கொண்டு பெரும்பான்மை இனந்துடன் பேரம்பேசுவது என்பது வேடிக்கையானதே. சாமர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட மிக மிக மோசமான அடக்குமுறைகள் பற்றிய விபரத்தை நான் தமிழில் எழுதியுள்றேன் அது அமைச்சரவை மட்டத்தில் இன்றும் இருக்கிறது. அதற்கான நோவேயிமொழி பெயர்ப்பு நடக்கவிருக்கிறது. சாமருக்கான தேசியதினம் அங்கிகரிக்கப்பட்டு நாளுக்கான அமைப்பொழுங்குகளைச் செய்வதில் முக்கிய பங்காற்றியவர்களுள் தமிழன் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட ஒரு நோர்வேயிரும் அடங்குவார். திக்குத்திக்காச் சிதறிக்கிடந்த நோவேயை ஒன்றாக்கிய காரால் கோர்பாகிர: கிறீத்தவத்தை நோவேக்குக் கொடுவந்த புனித ஊலாவும் இந்த நோவேயிப் பெண்ணின் பரம்பரை உறவு. இவரின் பரம்பரை ஆய்வுகளை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். வேறு சிலரால் இது புத்தகமகாகவும் வெளிவந்துள்ளன. சாமக்களின் சீடாக்கள் வெளிக்கெண்டு வருவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். பலஆண்டுகளாக சாமர்பற்றி வரலாறுகளையும் நோர்வேயிய வரலாறுகளையும் வாசித்து வருபவன் என்ற முறையில் அதுபற்றி உத்தியோக பூர்வ உரையாடல்கள் பேச்சுக்களில் கலந்து கொண்டவன் என்ற முறையில் மேற்கூறிய உங்களால் எழுதப்பட் சில பிழையான தகவல்களை என்னால் எற்க இயலாது. ஒரு மனிதவரலாற்றின் சரித்திரத்தை சிலவார்த்தைகளில் பொறுப்பற்ற முறையில் எழுதிவிட்டும் போக இயலாது.
NANTHA
தெரியாமல் அல்ல. எஸ்கிமோவர்கள் என்று நான் குறிப்பிட்டது ஒரு பொதுவான குறியீடு மட்டுமே. அப்படித்தான் துருவபகுதி மக்களினைப் பற்றிய அறிமுகம் எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. அவர்களின் பிரிவுகள் பற்றி தகவல்கள் இப்போதுதான் வெளிவருகிறது.
செவ்விந்தியர்கள் என்றுதான் தமிழில் அமெரிக்க பூர்வீக குடிகளைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களில் நூற்றுக்கணக்கான “இனங்கள்”, “மொழிகள்” உள்ளதும் வேறு விஷயம். அவர்களின் நிலங்களை கபளீகரம் செய்தவர்கள் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறார்கள்.
கனடாவின் துருவப் பகுதி மக்களை முன்னர் எஸ்கிமோவர்கள் என்றார்கள். இன்று இன்னுயிட் (innuit) என்று அழைக்கிறார்கள். வருங் காலங்களில் வேறு பெயர்களும் கொடுக்கப்படலாம்.
ஈழம் என்று பல்லவர்களின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவது “கள்ளு”. ஈழம் என்பது முழு இலங்கைக்கும் கொடுக்கப்பட்ட பெயர். அது ஹெல என்ற வார்த்தையிலிருந்து வந்தது.
ஆனால் தற்போதைய தமிழர்களின் “ஈழம்” பழைய ஈழத்தில் தமிழ் பேசுபவர்களின் பகுதி ஆகியுள்ளது.
எனவே இந்த எஸ்கிமோவர்கள், “சாமி”கள் அல்ல என்று இருப்பினும் அவர்களும் சாமி மக்களுடன் அதிக பொது அம்சங்களைக் கொண்டுள்ளனர்.
ரத்த பரிசோதனைகள் டி என் எ பரீட்சை செய்தால் பல்லாயிரக் கணக்கான தமிழர்களும், சிங்களவர்களும் வம்பில் மாட்டிக் கொள்வார்கள்.
இலங்கையில் நோர்வே சமாதானம் என்று வந்து ஒரு நாளும் ‘சாமி” பிரச்சனை பற்றி பேசியது கிடையாது. ஆனால் புலிகள் மாத்திரம் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று பரிந்தார்கள். புலிகளுக்கு தொலை தொடர்பு சாதனம் தொடக்கம் நீருக்குக் கீழ் யுத்தம் செய்வது பற்றி புலிகளுக்கு பயிற்சி அளித்தார்கள். புலிகளின் அராஜகங்ககளுக்கு துணை போனார்கள். ஈற்றில் துரத்தப்பட்டனர்.
நோர்வே தன்னுடைய “ஒற்றையாட்சி” முறையில் “சாமி”க்கு கொடுத்த உரிமைகள் போல கொடுக்க முயன்ற இந்திய தீர்ப்பை புலிகள் யு என் பி சிங்களவர்களோடு சேர்ந்து துவம்சம் செய்தனர். அதுவும் பண்டாவின் இருபத்திநாலு மணி நேர சிங்களத்தினால் வந்தது என்றும் நீங்கள் கவிதை பாடலாம்.
நோர்வேயில் எத்தனை மணி நேரத்தில் தற்போதுள்ள நோர்வேயின் மொழி அரச கரும மொழியாகியது என்று எழுதினால் நல்லது.
Nackeera
நந்தா!
எக்சிமோவர் எனத்துருவமக்கள் அழைக்கப்பட்டாலும் சாமர் அதற்குள் அடங்கமாட்டார்கள். பூகோளரீதியான இனப்பரம்பல் எக்சிமோவருக்கும் சாமருக்கும் மிக மிக வேறானது. தற்போது தாங்கள் எழுதிய பின்நோட்டமானது நேகடிக்காத தன்மையைத் தாங்கிவராது இருப்பதனால் மகிழ்சியாகப் பதிலளிக்கக் கூடியதாக இருக்கிறது. சாமர்கள்நிலை குறுடிசிய>தமிழர்களுடன் பலவிடயங்களை அரசியல் கலாச்சாரப்பின்னணிகளைடன் ஒப்பிடாலாம்: இவர்கள் எக்சிமோவர்கள் போல் முழுமங்கோலிய முகவமைப்புக் கொண்டவர்கள் அல்ல. இருந்தபோதிலும் இவர்களின் கண்ணாமண்டை பகுதி சிறிது திட்டிகாகவே இருக்கும். இவர்களின் இனப்பரம்பல் இரசியா> பின்லாந்து> ஊடாக ஐலாந்து> சுவீடன்; நாடுகளுடாக நோவேயிலும் வந்துள்ளது. தென்னமெரிக்க வித்தியாசமான ஆதிகுடிகளை நாம் செவ்விந்தியர் என அழைத்தாலும் அவர்களிடம் நிற உருவவெற்றுமைபுக்கள் பெருவேற்றுமையைக் கொடுக்கவில்லை. எக்சிமோவர் சரியான கட்டையர்கள். கலாச்சாரரீதியாக உணவுவிடயங்களிலும் முற்றிலும் மாறுபட்டே உள்ளனர். குறை கூறுவதற்காக எழுதவில்லை மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காகவே எழுதுகிறேன். இதுபற்றி ஒருகட்டுரையை தேசமோ மற்றை இணையத்தளங்களோ கேட்டால் நான் எழுதத்தயாராக இருக்கிறேன். உங்களுடைய இறுதிப்பின்நோட்டம் என்னை மேலும் எழுதத்து}ண்டியுள்ளது அதற்கு நன்றியே.
ஈழம் எனும் சொற்பதத்துக்கான பல்லவகால விளக்கம் தந்தீர்கள். என்றுமே ஈழம் எனும் சொற்பதம் பாடல்களிலும் சரி சரித்திரரீதியாகவும் சரி தமிழர்கள் மட்டம் வாழும் பிரதேசத்துக்கு உரியதாக இருந்ததில்லை. இது எமது தமிழ் அரசியல் பண்டிதர்கள் சூட்டிக் கொண்டவையே. எல் எனும் முற்றுப்பெறாமொழி எமதுநாட்டில் பேசப்பட்டு வந்தது.எல் எலுவாகியது என்றும் அதுவே அல் எனமத்தியகிழக்குவரை பரவியது என்றும் ஒரு வரலாறு உண்டு. எல் என்பது சூரியன் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. இதற்கான சரியான ஆதாரம் கிடையாது. இன்று அல் என்பது மத்திய கிழக்கில் சூரியனாவோ சூரியனுக்குச் சமனான சக்தியாகவோ கருதப்படுகிறது. அல்-கைடா: அல்சகீர் போன்ற பெயர்களையும் இன்றும் காணலாம். எல் எலுவாகி பின் ஈலுவாகி ஈழமானது என்பது பேராசிரியார் குணராசாவின் கருத்து. ஈழவர்வரலாற்றில் இலங்காபுரி-ஈழம் எனும் தலைப்பின் கீழ் பக்கம் 2ல் இப்படிக்குறிப்பிடப்படுகிறது. ஈழம் என்பது உலோக்கட்டிகள் பொன் எனப்பலவாக அர்தப்படுவதாக முதலியார் செ. இராசநாயகம் விளக்கியுள்ளார். இயக்கர் நாகர்கர்களால் பேசப்பட்ட முற்றுப்பெறாதமொழி எலு ஈழுவாகி ஈழம் என்றும் ஈழமண்டலம் என்றும் பெயர் உருவாகிற்று. ஈழம் சிழம் என மருவி பின் சிகழம் ஆகிச் சிங்களமானது என்பதும் வரலாறு.
சீழம் என்ற பெயரில் இருந்தே சீழம்தீப் சேரண்டிப் எனும் அரேபியப்பெயர்களும் சிலாங் சிலோன் எனும் மேலைநாட்டு சொற்களும் உருவானது எனக்கூறினாலும் இது ஊகம் என்தே என்கருத்து. ஈழம் எனும் பெயர் சீறி எனும் வடமொழிச் சொல்லுடன் சேர்ந்து சிறீழம் ஆகி பின் சிம்களம் எனும் வடமொழிச் சொல்லாக மாறியது என்பது பேராசிரியர் சிற்றம்பலம் கருதுகிறார். ஆகமொத்தத்தில் ஈழம் என்பது தனித்தமிழர்களுக்குரியது என்பது தவறே. இதை இத்துடன் நிறுத்திக்கொண்டு மீதிக்குப் போகிறேன்.
உங்கள் கூற்றுப்படி இலங்கை நோர்வே சமாதானம்காலத்தில் சாமி பற்றிப்பேசியது கிடையாது. இது உண்மையான கூற்றே அதனால்தான் நான் எழுதிய கட்டுரை சாமரின் மேலான நோவேயியர்களின் மேலாதிக்கம் பற்றி கடும் குற்றச்சாட்டுகளுடன் எழுதி வெளிவந்தது. சமாதானப்பேச்சு ஆரம்பிக்கப்பட்ட ஒரிருமாதங்களில் புலிகளுக்கு ஒருகடுமையான அறிவித்தலும் விடுத்திருந்தேன். அதுபற்றி நேரமிருக்கும் போது விவாதிக்கலாம்: தாங்கள் கூறும் நோவேயிய அரசுபற்ற சிலகுற்றச்சாட்டுக்களை ஏற்றாலும் ”புலிகளுக்குப் பயிற்சி கொடுத்தார்கள் என்பதை ஏற்பதற்கில்லை.” அரசினரால் வெளியிடப்பட்ட படங்கள் புலிகள் நோர்வேய்க்கு வந்தபோது காட்டப்பட்ட ஒருகண்காட்சியே இதை அரசு திரித்தது என்பதில் சந்தேகமே இல்லை. சில இராஜதந்திர உறவுகளைப் பேணவேண்டுமானால் சிலவிடயங்களைச் செய்தே ஆக வேண்டும். அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறுநீரகம் மாற்றியதை நீங்கள் மறந்து விட்டீர்கள். இதில் இருந்தே இலங்கை சமாதானப்பேச்சு ஆரம்பமானது. இதேபோன்று பெருந்தொகையான பணம் அரசுக்கும் கொடுக்கப்பட்டது என்பதை அறியவில்லையா? சுனாமியினால் அழிக்கப்பட்ட ஒரு புத்தகோவிலின் முழுப்புனருருத்தானத்தை நோவேயே செய்தது.
நந்தா! இதுகவிதை பூடமானது அழகுபடுத்தல் அணிசேர்த்தல் என்பனவுடன் கூடியது. இதைக்கட்டுரைபோல் எடுத்து நுட்பமாக விபரிப்பது என்பது கடினம். பண்டாவை ஐ.தே.க இருந்து வெளிறேறுவதற்கு முன் பின் என இரண்டாகப்பார்த்தால் முன்னுள்ள பண்டா மனிதவர்க்கத்துக்கப்பால் புனிதராகவே பார்க்கலாம். அன்று அவர் பேசியதும் எழுதியதும் அவரின் உள்ளுணர்வின் வெளிப்படை என்றே கருதலாம். 1935ல் தமிழர்கள் பற்றியதும் யாழ்பாணம் பற்றி கட்டுரைகளை சிலகாலத்துக்கு முன் வாசிக்கக் கிடைக்கப்பேற்றேன். அதிர்ச்சி அடைவததைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. என்று அரசியல்சாக்கடையில் குதித்து நீந்தத் தொடங்கினாரோ அன்றிலிருந்து பண்டாவை என்னால் பழைய பண்டாவாகப் பார்க்க முடியவில்லை. மன்னிக்கவும்.
நீங்கள் கூறுவதுபோல் இந்தியாவின் இலங்கைக்கான ஒற்றையாட்சி முன்மொழிவு சாமிக்குக் கொடுக்கப்பட்டது போன்றது என்பதை விட இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் முறைபோன்றது என்பதே கூடுதலாகச் சரியானது என்று எண்ணுகிறேன். மனிதரையும் மனிதவினத்தையும் கையாழும் முறையிலும் அரசியல் தங்கியுள்ளது. சாமர்கள் தென்சாமர் என்று எமது பகுதிகளிலும் பனிமரையுடன் வந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் அடையாளங்கள் காப்பாற்றுமுகமான நடவடிக்கைகள் பல இங்கு உள்ளன. மேலும் சாம இனத்தைச்சேர்ந்த ஒருவர் ஓஸ்லோ பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தால் அவருக்கே முதலுரிமை கொடுக்கப்படுகிறது.
உங்களது கடசிக்கேள்வி மயக்கமானது. இன்று நாம்பேசிக்கொண்டிருக்கும் நோவேயிமொழி நோவேயின் ஆதி மொழியல்ல. இது ஒருபெரும்வரலாறு. மணித்தியாலத்தில் கணக்கிட முடியாதது. இவர்கள் தமதுமொழியை நூறுன்மொழியை சரியாகப் பயன்படுத்தாது விட்டதனால் அது அழிந்து போனது.. இதற்குக் காரணம் டானிஸ் அரசகருமமொழியாக்கப்பட்டதும் ஒரு முக்கியமான காரணம். இதற்கிடையில் கறுப்புச்சாவு எனும் எலித்தொற்றும் இம்மொழியின் அடையாள அழிப்பில் முன்னிற்கிறது என்பது வேதனைக்குரியது. இப்பின்நோட்டத்தை எழுதிக் கொண்ட இருக்கும்போது எனது பிள்ளைகள் வந்த சொன்னார்கள் ”அப்பா!! உலகில் போராட்டம்> பெரும் அழிவுகளின் பின்தான் நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஆனால் எமது நாடுமட்டும்தான் இராஜதந்திரமாக சுதந்திரம் பெற்றது என்றார்கள். முக்கிய குறிப்பு நெப்போலிக் கூட்டுக்குழுப்போரில் டென்மாக் வென்றால் சுவீடனுக்கு நோர்வேயைப் பரிசாக கொடுப்பதாக டென்மாக் வாக்களித்திருந்ததன் பிரகாரம் நோர்வே சுவீடனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் நோவேயியர் தமக்குரிய அடிப்படைச்சட்டத்தை 1814ல் எழுதிவிட்டார்கள். நோவே சுவீடனின் கீழ் வந்தபோதும் நோவேயிய அடிப்படைச்சட்டத்தை அமுல்படுத்த சுவீடன் அனுமதித்தது. இதனால்தான் நோவேயிய மொழியில் சுவீடனை ”சொத்தா பிறூர்” என்று அழைப்பர். அதாவது ” சுவீட் பிறதார்” சுவையான சகோதரன் என்பதாகும்.
பிற்குறிப்பு: பலநாடுகள் இன்று ஸ்கன்டினேவியன் என இணைந்தாலும் அடிப்படை ஸ்கன்ரினேவியன்ஸ் சுவீடனும் நோர்வேயுமே. இரத்த உறவிலும் கூட.
ஈழம் என்பது என்றுமே தனிதாக தமிழர்வாழும் பகுதியைக் குறிக்காது முழு இலங்கையையே சுட்டி நின்றது. தமிழ்ஈழம் என்பது ஈழத்தில் தமிழர்வாழும் பகுதிய என்று கொள்ளலாம் என்பது என் கருத்து. ஈழவிடுதலை இயக்கம் என்ற பொருள் முக்கியமாக இலங்கைவாழ் முழுமக்களுக்கும் தமிழ்:சிங்கள மக்களின் முழுவிடுதலைக்கான இயக்கமாக இருந்திருக்க வேண்டும். அதாவது பெயரின் படி. ஆனால் அது அப்படி அமையவில்லை. இப்படிப்பல இயக்கங்கள் அமைப்புக்கள் பெயர்களை தவாறகவே கொண்டு தவறான பாதையிலும் சென்றன:
thaya
நாங்கள் தமிழுக்காக..
எங்கள் மூச்சிலும்
பேச்சிலும் எழுந்து வருவதும்
தமிழ் ஒன்றே காண் தமிழா!..
உங்கள் கைகளை
கத்தியால் காயப்படுத்தி
எங்கள் நெற்றிகளில்
திலகமிடுங்கள்!…
ஓ!… எங்கள் பேச்சின்
பேரெழுச்சி தீப்பற்றி
நீங்கள் எங்களை விடவும்
உணர்ச்சித்தீயாக
உருக்கொண்டு விட்டீர்கள்…
எங்கள் நெற்றிகளில்
உங்கள் கை இரத்தம்…
இனி தேசமெங்கும்
இரத்தம்தானே ஓடப்போகின்றது!…
சும்மா சொன்னதுக்கு
இப்படியா நீங்கள்!….
அப்புகாமியோடு
பாராளுமன்னத்தில்
சண்டையிட்டு விட்டு
அவர் எஐமான் லொக்கு பண்டாவோடு
நாங்கள் கை குலுக்குவோம்!…
இரத்தத்தை காண
எங்களுக்கு அச்சம்!
எங்களுக்கு தனி நாடு வேண்டாம்
தமிழ் நாட்டில் தனி வீடு
தரப்போகிறார்களாம்….
முடிந்தால் எவனாவது
ஒருவன் எங்கள்
எச்ச சொச்சமாக வருவான்
உங்களிடம்….
அவனோடு சேர்ந்து
இரத்தம் கொட்டுங்கள்…
கொடு முரசு என்று
தமிழையும் பொங்கு தமிழாக
பொங்கி கொட்டுங்கள்
நந்திக்கடலோரம் வரை சென்று
கொட்டி முழங்கிய தமிழையும்
கொட்டிச்சரிக்கும் வரை!….