புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று குறிப்பிட்ட நபர்கள் கொண்ட குழு இலங்கை சென்று தமது அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி சமைக்கின்றனர். யார் இவர்கள்? கலாநிதி நொயல் நடேசன், கலாநிதி நரேந்திரன் , திரு. கொன்ஸ்ரன்ரைன், திருமதி. ராஜேஸ்பாலா (இவரை அண்மையில் கழற்றி விட்டு விட்டதாக கேள்விப்படுகின்றேன்) ……… போன்றோர். முதலில் இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் என்பதை கருத்திற் கொள்ளாமல் தவிர்க்க முடியவில்லை. இங்கு ஏராளமான நல்ல உள்ளங் கொண்ட நபர்கள், தமது உறவினரின் நலன்களில் மிக அதிக அக்கறை கொண்டவர்கள் இலங்கை அரசுடன் இணக்கப்பாடாக வேலை செய்வதற்கு தயாராக உள்ளனர். ஆனால் ஏதோ மேற்குறிப்பிட்ட நபர்கள் தங்களுக்குத்தான் யதார்த்தம் புரிவதாகவும் மற்றையவர்கள் ஏதோ கேணையர்கள் எனவும் சொல்லிகாட்ட முனைகின்றனர்.
முன்பு தேசம்நெற்றில் எனது நண்பர் வடக்கான் ஆதாம் மேற்குறிப்பிட்ட நபர்களை நீங்கள் யார்? (போர் முடிந்த பின் இலங்கை சென்ற 24 பேர்) என்ன அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கை சென்றீர்கள் என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால் அவற்;றிற்கு மதிப்பிற்குரிய திருவாளர் கொன்ஸ்ரன்ரைன் பதிலளித்தாரில்லை. ஏதாவது சந்தேகம் எழுப்பினால் புலிகளின் பாணியில் ‘எங்கள் மேல் விமர்சனம் வைக்க இவர்கள் யார்” என திட்டி பின்னூட்டம் விடுகின்றார்கள்.
முதலாவதாக யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவோம். இலங்கையின் மற்றைய பல்கலைக்கழகங்களில் எத்தனை வாகனங்கள் உண்டு என முதலில் அறிய வேண்டும். அங்கும் அதே நிலைதான் எனில் எல்லா பல்கலைக்கழகங்களிற்கும் உதவ முன்வர வேண்டுமேயன்றி யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவுவது சரியானதாக எனக்குபடவில்லை. ஏனெனில் யாழ்மாவட்டத்தில் வசதிகள் அதிகம் என அங்கு படித்து விட்டு இங்கு புலி எதிர்ப்பு வாதம் பேசும் நபர்கள் தரப்படுத்தலுக்கு ஆதரவாக பேசிவருவதை நாம் அறிவோம். இது என்னைப் போன்ற பல்கலை அனுமதி கிடைக்கப் பெறாத ஏராளமான வறியவர்களின் பிள்ளைகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டு விடும்.
இதற்கிடையில் திரு கொனஸ்ரன்ரைனுக்கு எதிராக எழுதுவதாக நினைத்து கொண்டு சிலர் பின்னூட்டங்களில் மதங்களுக்கிடையில் பிளவை உண்டுபண்ணும் விதமாக கருத்தெழுதுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மிசனரியின் பாடசாலைகளில் படிக்கலாம். நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் மிசனறிகளை பிடிக்காது என்பவர்களை என்ன சொல்வது? (எனக்கும் எல்லா மதங்களின் மேலும் மிசனறிகள் உட்பட விமர்சனங்கள் உண்டு). மேலும் இணையத்தளங்களிலும் புலிக்கு எதிராக எழுதுகிறோம் என நினைத்து மதரீதியான பிளவுகளை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். மறந்து விடாதீர்கள். புpரபாகரன் ஒரு இந்து மதவாதி. மதமாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்திருப்பார் என எண்ண சாத்தியமில்லை.
வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்ற பொருளில் தொடங்கிவிட்டு பாரம்பரிய பிரதேசம் சம்மந்தமாக அரசியல் பேசுவது நல்லதல்ல. அதை அங்கு இருக்கும் மக்களின் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வரட்டும். இதை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன். மேலும் இந்த விடயம் எனக்கு உங்கள் எண்ண ஓட்டத்தின் மேல் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் பரப்பளவில் (65610கி.மீ) வடக்கு (8884 கி.மீ) கிழக்கு (99996 கி.மீ) மாகாணங்கள் 28 வீதமானவை. 2001 ல் மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழ் முஸ்லிம் மக்களின் தொகை 20 வீதம். போரினால் ஏற்படுத்தப்பட்ட இடப்பெயர்வுகளை கணக்கில் எடுக்க அதிகம் என்பதே உண்மையான விடயம். ஏனெனில் இன்றைய சூழலில் வன்னியின் மக்கள் தொகை என்ன? எனவே சிங்கள குடியேற்றத்திற்கான வேலை தொடங்கி விடுவதா? தயவு செய்து நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் என பின்னூட்டம் விட தொடங்க வேண்டாம். பாவம் அவர்கள். அரசு அவர்களை தனது அரசியலுக்கு பாவித்து கொள்ளுகின்றது. இக் குடியேற்றவாதிகள் மேல் புலிகள் செய்த கொடூரங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. முக்கியமாக சிறுபான்மை இனங்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். பெரும்பான்மை மக்கள் இதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்ரேலியாவில் அங்குள்ள பழங்குடியினருக்கு சில குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது போல் சிறுபான்மையினருக்கு இவ்விடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
இனி முக்கியமான விடயத்திற்கு வருவோம். முதலீடடிற்கும் மேற் குறிப்பிட்ட உதவிகளுக்கும் உள்ள வேறுபாடுகள். லாபம் கருதிய நோக்கில் செய்யப்படும் முதலீடுகளை ஏதோ ‘மக்கள் சேவை” என்ற மட்டத்தில் கொண்டு செல்வது நல்லதல்ல. ரில்கோ, ரைம்ஸ் ரவல் போன்ற புலிவாதிகள் அடிப்படையில் வியாபாரிகள். இந்த வியாபாரிகளுக்கு வரிச்சலுகை, குறைந்த விலையில் இட ஒதுக்கீடு அல்லது இலவச நில ஒதுக்கீடு இத்தியாதி……….! இலங்கை என்ற நாட்டின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்ற முறையில் எங்களால் இதை ஏற்க முடியாது. இங்கு சுப்பர்மாக்கெற்றிலும், பேக்கரிகளிலும் ,ஓட்டல்களிலும், பெற்;றோல் நிலையங்களிலும் வேலை செய்யும் சாமானிய தமிழர்கள் அவர்கள் புலி ஆதரவாளர்களாயினும் புலி எதிர்ப்பாளராயினும் தமது குடும்பங்களுக்கும், சொந்தங்களுக்கும் பணத்தை அனுப்பிக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் உங்களைப் போன்று கணக்கு வழக்கில்லாமல் பணத்தை சேர்த்த நபர்கள் யதார்த்தம் என்ற பெயரில் அரசிற்கு மாத்திரம் வாக்கு போடுங்கள் இல்லை என்றால் அரசு கோபம் கொண்டு விடும் என கூறுவது …..! இது போன்ற ஜனநாயக மறுப்பை மக்கள் மேலும் மேலும் தாங்க மாட்டார்கள்.
மக்களுக்கு சேவை செய்ய அரசுடன் இணைந்து வேலை செய்வதை ஒருவரும் குறை கூறவில்லை. மறுதலையாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மந்திரி பதவிகளுக்காக சிக்கலான பிரச்சனைகளில் தான்தோன்றி தனமாக பேசுவது, எழுதுவது தான் பிழையானது. பொன்சேகாவை ஆதரிப்பது என்பது கூட ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ விரும்புகிறார்கள் என்பதேயாகும். அதை விடுத்து அவருக்கு வாக்களித்தது சிங்கள பெரும்பான்மை இனத்தை மேலும் கோபத்திற்கு உள்ளாக்குவதாக கூறுவதெல்லாம்………
இங்கு கொன்ஸ்ரன்ரைன் இடது சாரிகளை போகின்ற போக்கில் திட்டி விட்டு செல்லுகின்றார். தேசம் ஆசிரியர் குழுவும் ஏதோ ஒரு திட்ட அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவதாக நினைக்கின்றேன். ஏனெனில் முக்கியம் வாய்ந்த பல செய்திகளை வேண்டுமென்றே இவர்கள் தவிர்த்து விட்டனர். இதுபற்றி சோதியுடன் பேசினேன். அவர் இலங்கையில் இருந்துதான் பல விடயங்கள் போடுகின்றார்கள் என ஏதோ கூறினார். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கி போர்ட் மாக்ஸிஸ்டுக்களில் அநேகமானோர் மக்களை விற்பதில்லை. அவர்களின் தந்திரோபாய முறையில் பிழைகள் இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி என்று பேசி சுரண்ட நினைப்பவர்களை விட நல்ல உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் கூறும் பாடசாலை பிரச்சனையில் இருந்து கோவில் பிரச்சனை வரை போர் நடைபெற்ற நாளில் இருந்து ஏன் அதற்கு முன்பிருந்து இருக்கிறது. இப்போது நீங்கள் பேசுபவை எழுதுபவை என்பவற்றைக் கொண்டு பார்த்தால்; உங்களுக்கும் அங்குள்ள மக்களுக்குமான தொடர்பு கடந்த காலங்களில் இல்லை எனபதும்; நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இங்கு மிக வசதியாக நிலைத்து விட்டீர்கள் என்பதும் புரியக் கூடியதாக உள்ளது. இந்த கஸ்ரங்களுக்கான உதவிகளை நீங்கள் அப்போதே செய்திருக்க முடியும். ஏனெனில் 95 லிருந்து யாழ்ப்பாணம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அப்போதும் மக்கள் இதே கஸ்டங்களுடன்தான் இருந்தார்கள்.
நாடு நிலையான சமாதானத்தை எட்டி சுமுகமாக இயங்கும் போதே இப்பிரச்சனைகள் களைந்து எறியப்படும். ஆனால் இங்கு இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள், தனிப்பட்டவர்கள் உதவுகின்றார்கள். உதவ வேண்டும். ஆனால் இந்த சங்கங்களை முன்பு கேலி செய்த நீங்கள் இப்போது உதவி செய்யச் சொல்வதை என்னவென்று சொல்வது?
மொத்தத்தில் தரப்படுத்தலுக்கு காரரணமாக இந்த மேட்டுக்குடிகளும், ஸ்ரேசன் மாஸ்டர், போஸ்ற்மாஸ்ரர் போன்றோரின் குடிகளும் வெளிநாடுகளில் புலியை ஆதரித்து விட்டு அல்லது எதிர்த்து விட்டு இப்போது ஒன்றாக இலங்கை போய் அபிவிருத்தி, யதார்த்தம் என்ற பெயரில் மீண்டும் அவ் ஏழை எளிய மக்களின் தலையில் மிளகாய் அரைக்க தொடங்குகிறார்கள். நண்பர்களே! இவர்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்கள் உறவுகளுக்கு தொடர்ந்து உதவுங்கள். உதவிக் கொண்டே இருங்கள். எமது இந்த வாழ்க்கை ஒரு லட்சம் பிணங்களின் மேல் கட்டப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் தரப்படுத்தல் இல்லாமல் பல்கலைக்கழகம் செல்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
டெல்லி சுரேஷ்பிரேம்
/மொத்தத்தில் தரப்படுத்தலுக்கு காரரணமாக இந்த மேட்டுக்குடிகளும், ஸ்ரேசன் மாஸ்டர், போஸ்ற்மாஸ்ரர் போன்றோரின் குடிகளும் வெளிநாடுகளில் புலியை ஆதரித்து விட்டு அல்லது எதிர்த்து விட்டு இப்போது ஒன்றாக இலங்கை போய் அபிவிருத்தி, யதார்த்தம் என்ற பெயரில் மீண்டும் அவ் ஏழை எளிய மக்களின் தலையில் மிளகாய் அரைக்க தொடங்குகிறார்கள்/–
வரலாற்றின் “யதார்த்த குழப்பங்கள்” எல்லாம் நம்ம ஆளுங்களை ஒன்றும் செய்ய முடியாது! யதார்த்தத்தையெல்லாம் பதார்த்தம் செய்து சாப்பிட்டு விடுவார்கள்! கனாடாவிலிருந்து அவர்கள் பயணிக்கும் “நிகழ்ச்சி நிரல்களுக்கு” அனையவே செல்கின்றனர்! அதாவது “மத்தியதர வர்கங்களை தெற்காசியாவிலிருந்தும், தமிழர் வாழ்விலிருந்தும் இல்லதொழிப்பது”! ஏற்கனவே இது இலங்கைத் தமிழரில் நடத்தியாகிவிட்டது. புலன் பெயர்ந்த சமூகம் இனி, பிரேசில், பிலிப்பைன்ஸ்…போன்று கிரிஸ்தவ மதத்திற்குள் உள்வாங்கப் பட்டுவிடும். இவாஞ்சிலிஸ் ,லூத்திரன்,..போன்றவையும் இந்த “இம்பீரியல் கன்ஸர்வேட்டிவ் அமெரிக்க தேசிய கிரிஸ்தவ வெளியுறவு கொள்கையிலேயே” அடங்கும். இதில் சிறிது மாறுபடுவது, “கறுப்பின கிரிஸ்தவமும்”, “பெந்த கோஸ்டுகளும்தான்”.
கே.பி.என்ற கே.பத்மநாபன் இலங்கை அரசு விருந்தாளியாக இருக்கிறாரா?,அல்லது கைதியாக இருக்கிறாரா? என்பதைப் பொறுத்தே பல விஷயங்கள் ஆராயப்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கும், இந்தியாவிற்கும் சில முரண்பாடுகள் இருப்பது தெரிந்ததே! இதை பெரிய முரண்பாடாக்கும் முயற்சி கே.பி.மூலம் அரங்கேறும் என்பது எதிப்பார்க்க கூடியது. இந்த புலம்பெயர் வர்த்தகர்களின் அணிசேரல் இந்த கோண்த்தில் ஆராயலாம். ஆனால் இங்கே மறுபடியும் பலிகடாவாக ஆகப்போவது எஞ்சியிருக்கும் கே.பி. தான். இவர் கதை முடிந்த பிறகு, முன்பு கொழும்பில் கொட்டைப் போட்டு தற்போது புது டெல்லிக்கு கூடாரம் மாற்றுபவர்களுடன் சேர்ந்துவிடுவர்!. நல்ல தமாசுபா!.
santhanam
//மொத்தத்தில் தரப்படுத்தலுக்கு காரரணமாக இந்த மேட்டுக்குடிகளும் ஸ்ரேசன் மாஸ்டர் போஸ்ற்மாஸ்ரர் போன்றோரின் குடிகளும் வெளிநாடுகளில் புலியை ஆதரித்து விட்டு அல்லது எதிர்த்து விட்டு இப்போது ஒன்றாக இலங்கை போய் அபிவிருத்தி யதார்த்தம் என்ற பெயரில் மீண்டும் அவ் ஏழை எளிய மக்களின் தலையில் மிளகாய் அரைக்க தொடங்குகிறார்கள்//இது யாதார்த்தமான கருத்து
ஏழைகளின் பிள்ளைகளின் இறப்பிலும் அந்த ரத்தத்திலும் சவாரி விட்டு.
Sri vaishnavi
வணக்கம் தோழர் !
/”புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று குறிப்பிட்ட நபர்கள் கொண்ட குழு இலங்கை சென்று தமது அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி சமைக்கின்றனர். யார் இவர்கள்? கலாநிதி நொயல் நடேசன், கலாநிதி நரேந்திரன் , திரு. கொன்ஸ்ரன்ரைன், திருமதி. ராஜேஸ்பாலா (இவரை அண்மையில் கழற்றி விட்டு விட்டதாக கேள்விப்படுகின்றேன்) “//இது தவறான தகவல்.
1. நொயல் நடேசன் கலாநிதி அல்ல. அவர் மிருக வைத்தியர். ஆனால் நரேந்திரன் இரு கலாநிதி பட்டம் பெற்றவர். இவர்களுடன் 15 கும் அதிகமான புலம்பெயர் நிகழ்வில் கலந்து கொண்டனர். அனைவரும் புலத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களாக பணி புரிகின்றனர். இவர்களது நிபுணத்துவம் தற்போது நமது தேசதிற்கு தேவைபடுகிறது. அந்தவகையில் திருமதி. ராஜேஸ்பாலா அவர்கள் இந்த நிகழ்வில் பங்கு பற்றவேண்டிய தேவை இருக்கவில்லை.
2 ./ “இலங்கையின் மற்றைய பல்கலைக்கழகங்களில் எத்தனை வாகனங்கள் உண்டு என முதலில் அறிய வேண்டும்.”//
ஆம், திரு. கொன்ஸ்ரன்ரைன் எழுதியது தவறுதான். அவ் வாகனம் இந்திய தூதரகத்தினால் வழங்கப்பட்டது. அது மெடிகல் மாணவர்களால் பாவிக்கப்படுகிறது. ஆனால் நீங்களும் பலரும், இச் சிறு தவறிற்காக திரு. கொன்ஸ்ரன்ரைன் எழுதியது முழுவதும் தவறு என பார்ப்பது சரியல்ல.
3 . இன்று எமது சமுகம் நீங்கள் நினப்பதுபோல், எல்லார் சொல்லவதையும் கண்மூடி ஏற்று கொள்ளும் சமூகமல்ல. மக்கள் அனுபவத்தால், தெளிந்தவர்கள். எந்த கொம்ம்பனாலும் இன்றுள்ள நிலையில் அவர்களை மாற்ற முடியாது. யனாதிபதி தேர்தல் நல்ல உதாரணம். அகவே நீங்கள் நொயல் நடேசன், கலாநிதி நரேந்திரன், திரு. கொன்ஸ்ரன்ரைன், திருமதி. ராஜேஸ்பாலா பற்றி கவலைப்பட தேவை இல்லை.
4 ./ ” இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் என்பதை கருத்திற் கொள்ளாமல் தவிர்க்க முடியவில்லை………..நல்ல உள்ளங் கொண்ட நபர்கள், தமது உறவினரின் நலன்களில் மிக அதிக அக்கறை கொண்டவர்கள் இலங்கை அரசுடன் இணக்கப்பாடாக வேலை செய்வதற்கு தயாராக உள்ளனர். “//
நீங்கள் ” இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் என்பதை ” எழுத மறந்து விட்டிர்கள். மேலும் யார் அந்த “நல்ல உள்ளங் கொண்ட நபர்கள்………என எழுத முடியுமா ?
5 ./ “இங்கு கொன்ஸ்ரன்ரைன் இடதுசாரிகளை போகின்ற போக்கில் திட்டி விட்டு செல்லுகின்றார்” // அவர் சொல்வதில் என்ன தவறு? இடதுசாரிகளை மக்கள் வாழ்வுக்கு நடைமுறையில் என்ன செய்தார்கள்? ரஜாகரன், ரகுமான் ஜான், அசோக் , ஜென்னி , நாவலன் ect . என்ன செய்தார்கள் ? ஒரு 10 ரூபா , தமது உறவினர் அல்லாதவர்களுக்கு கொடுத்தார்களா?
நீங்கள் மற்றவர்களை குறை சொல்லாமல், நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என எழுதுங்கள் தோழர் !
நட்புடன்
RS. வைஷ்ணவி
pandiyan
“இடதுசாரிகளை மக்கள் வாழ்வுக்கு நடைமுறையில் என்ன செய்தார்கள்? ரஜாகரன், ரகுமான் ஜான், அசோக், ஜென்னி, நாவலன் etc…. என்ன செய்தார்கள் ? ஒரு 10 ரூபா தமது உறவினர் அல்லாதவர்களுக்கு கொடுத்தார்களா?”
தோழர் வைஷ்ணவி! மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. கொடுத்ததை சொல்லுவது அழகில்லை. அன்றைய நாட்களில் புலியின் துப்பாக்கிகள் எம்மை துரத்திய போதும் எமக்கு உதவ யாரும் வரவில்லை. நாங்கள் எங்கள் தகுதிக்கு மீறி கிரடிற்காட் வரை பாவித்து கிள்ளியாவது கொடுத்திருக்கறோம் என சந்தோசப்படுகிறோம். எந்தக் குற்றவுணர்ச்சியும் அற்றிருக்கறோம். நாங்கள் பத்து ரூபா கொடுத்திருந்தால் கலாநிதிகள் (சில கலாநிதிகள் புலிக்குத்தான் அள்ளி கொடுத்தார்கள்) ஆயிரக் கணக்கில் கொடுத்திருக்க வேண்டும். அப்படி கொடுத்ததாக நான் அறியவில்லை. மேலும் இந்த கலாநிதிகளின் அனுபவங்கள் நிபுணத்துவங்கள் பற்றி யாருக்கும் பிரச்சனை இல்லை. இவர்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றார்கள் என்ற நம்பிக்கைதான் பிரச்சனையாகும்.
Sri Lankan Diaspora
நீங்கள் தவறான விமர்சனங்களை இங்கு பதிய முன்னர், கீழ் உள்ளவற்ரையும் கொஞ்சம் வாசித்துவிட்டு கருத்துக்களை பதியுங்கள்
Memorandum to the Government of Sri Lanka from the Sri Lankan Tamil Diaspora
Introduction:
At the conclusion of a two-day dialogue in Colombo from 28th to 29th March 2009, between the Government of Sri Lanka and a group of 21 participants from 09 countries drawn from Sri Lankan Tamil Diaspora, this Memorandum was submitted for the consideration of the Government of Sri Lanka.
Vision:
Making peace is more difficult than making war. But a start has to be made somewhere. It is hoped that this dialogue will be one of many endevours leading to a road map for all communities in Sri Lanka to co-exit in a non-violent environment.
Objective:
The primary Mission is to engage the Sri Lankan Government in realizing the vision as outlined above. The way forward lies in a two pronged approach, namely on the economic and political fronts.
Memorandum:
1.The Diaspora Tamils believe that LTTE gave protection to the Tamil people. In the absence of this “protection” and amidst anti-Tamil rhetoric from certain members of the Government, most Tamils perceive a sense of insecurity to live in Sri Lanka.
2.We recognize the urgent need for a democratic and interactive leadership to evolve amongst the Tamils.
3.The Government of Sri Lanka must make efforts to ensure:
Safety and security of all Tamils in Sri Lanka;
Due process of law and order to become the bedrock;
The re-assurance of the Tamils that they are not a defeated people and that the defeat of the LTTE is not the defeat of the Tamils;
Political and religious leaders should repeatedly assure Tamils that they are equal and valued citizens of Sri Lanka, whose culture and way of life will be permitted to flourish within a united Sri Lanka;
At least the State media – print, radio & TV – to project such perceptions within zeal.
4.The 13th Amendment to the constitution of Sri Lanka as presently enacted should be implemented in letter and spirit to the fullest possible extent, immediately.
5.Short term measures to be implemented in the North:
all efforts should be to taken to serve the lives of the civilians trapped in the conflict area and the surrendering LTTE cadres to be handled compassionately;
re-settlement of IDPs to their original homes and habitations should be handled with reasonable speed and sensitivity;
rehabilitation and rebuilding efforts should start immediately to encourage those who have been dispersed throughout the island to return to their original places of habitation;
elections in the North should be held only after the guns have been silenced and violence ceases; conditions should be created for “true democracy” to come into play before elections are held; a nominated transitional Provincial Council should manage affairs in the North until conditions conducive to conduct democratic elections are established, pending improvements to it by the APRC.
6.The Diaspora should be invited to:
A:
i) play a greater role in the rebuilding of the North and the East;
ii) contribute material and expertise to the rebuilding efforts;
iii) Funds for (a) cultural and educational development, (b) medical and health services, (c) reconstruction and development should be generated in consultation with the Diaspora.
B: The Government should liaise with a constructive group of the Diaspora to continue the dialogue that has been initiated on this occasion and to expand its scope.
-Sri Lankan Diaspora
Sri vaishnavi
தோழர் பாண்டியன் !
பதிலுக்கு நன்றி. ஆனால் எனது மற்ற கேள்விகளுக்கான பதில் என்ன தோழர்.?
“மேலும் //இந்த கலாநிதிகளின் அனுபவங்கள் நிபுணத்துவங்கள் பற்றி யாருக்கும் பிரச்சனை இல்லை. இவர்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றார்கள் என்ற நம்பிக்கைதான் பிரச்சனையாகும்.”// என கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.
எனக்கு தெரிந்த மட்டில்:
பதில். 1 . உள்கட்டுமான அபிவிருத்தி 2 . தொழில் வளர்ச்சியும், பாரம்பரிய தொழில்களை நவீனமயமாக்கல் 3 . கல்வி வளர்ச்சி 4 . உல்லாச பயணதுறை அபிவிருத்தி .
போன்ற விடயங்கள் சம்பந்தமாக இந்த நிபுணர்கள் தமது பணியை செய்ய உள்ளனர் என அறியவருகிறது. மாஒ சொன்னது போல “ஆயிரம் பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும்”. எல்லாம் எம் மக்களுக்கு பயனுள்ளதாக இருகவேண்டும். இந்த நிபுணர்கள் மட்டுமல்ல, மக்களுக்கு உதவ நம் எல்லாராலும் முடியும். அபிவிருத்தி என்பது பணம் சம்பந்தமான விடயம் மட்டுமல்ல. நமது சமுகம் இன்று பல விதத்திலும் பாதிக்கப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவரின் கதையை கேட்பது கூட அம் மனிதனை மனச்சாந்தி படுத்தும். எல்லா மனிதர்களும் இன்று எம் மக்களுக்கு எதோ ஒரு வகையில் உதவ முடியும்.
நட்புடன்
வைஷ்ணவி
சாந்தன்
//…. மாஒ சொன்னது போல “ஆயிரம் பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும்”. ….//
மாஓ ‘நூறு பூக்கள் மலரவிடுதலும் , நூறு வித கருத்தாக்கங்கள் தோன்றவிடுதலும்…….” எனவே சொன்ன்னார். இதை ‘ஆயிரம்’ ஆக்கிவிட்டார்கள்.
எவ்வாறாயினும் சீன எழுத்தாளர் ஜுங் சாங் இன் பதிவுகளின் படி மாஓ இதை ’மாற்றுக்கருத்தாளர்களை’ வெளிப்படையாக இனங்கான ஒரு ‘பொறி‘ யாகவே உபயோகித்தார் எனவும் ‘நூறு’ கருத்துகள் சொன்னவர்களில் தனக்குப் பிடிக்காதவர்களின் ‘கதை’ முடித்தார் எனவும் அறிய முடிகிறது.
இவ்வாறான ‘நூறு பூ, நூறு கருத்து’ விடயம் சரிவராததால் மீண்டும் சீனாவில் கடும்போக்கு கடைப்பிடிக்கப்பட்டது.
Ajith
This is the group that was invited by Rajapakse government went immediately after the end of war to give a certificate about the concentration camp where 300,000 people were cramped without the basics. They signed a document that was prepared by the government praising the conditions of the camp. They are on the pay role of Rajapakse. What else you expect from this group?
These experts and so called tamil marxists talk about building hotels for tourist industry. The so called marxists went Sri Lanka for capagining in support of Rajapakse not only rigged votes but also blasted bombs to stop people voting from election. They think serving to sinhala masters is part of marxism.
A sinhala opinionist said that you cannot do anything without giving something to one of Rajapakse’s. The money they gave to Rajapkse is a bribe to get establish their investment in the North-East.
ramanan
//இதற்கிடையில் திரு கொனஸ்ரன்ரைனுக்கு எதிராக எழுதுவதாக நினைத்து கொண்டு சிலர் பின்னூட்டங்களில் மதங்களுக்கிடையில் பிளவை உண்டுபண்ணும் விதமாக கருத்தெழுதுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. // பாண்டியன் இதேபோல பிரபாகரனுக்கு எதிராக எழுதுவதாக நினைத்துக்கொண்டு சாதியத்தை வளர்த்த துரைநரையன் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் கண்டிக்காமல் மறைத்ததேன்?
தாமிரா மீனாஷி
யார் இவர்கள்? என்று கட்டுரையாளர் கேள்வி எழுப்பி அவர்கள் புலிகளின் வால்களால் எவ்வாறு அழைக்கப் பட்டனர் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயத்தை மீண்டும் தெரியப் படுத்துகிறார்..நொயல் நடேசன் புலியின் அராஜகக் கொள்கைகளைத் தனியொருவராக நின்று எதிர்த்துப் போராடியவர்..அவுஸ்திரேலியாவின் நகரங்களில் பரவிக் கிடக்கும் புலியாதரவு அரைப் பைத்தியங்கள் அவரையும் அவரது குடும்பத்தையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை..படித்த தமிழர்களின் பண்பாட்டுச் சீர்குலைவின் உச்சத்தை அவுஸ்திரேலியாவில் கண்டுணர்ந்த போது தமிழ் சமூகம் தன்னைத்தானே ஆளக் கூடியநிலைக்கு வர இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்ற நினைப்புத் தான் வந்தது..அவர் வாய்மூடிக் கொண்டு எல்லோரும் செய்தது போல் வன்னிக்குப் போய் தலவருடன் நின்று மொபைலில் போட்டோ எடுத்து வந்து மேடை அரசியல் நடத்தியிருக்கலாம்.. அவருக்கு பணம் எதுவும் தேவையாக இல்லை.. தனது கைப்பணததை செலவிட்டு தமிழ் பத்திரிகையொன்றையும் அவர் அங்கே நடாத்துகிறார். தமிழ் இலக்கிய விழாக்கள் நடாத்த உதவுகிறார்…
நான் சொல்ல வருவது என்னவெனில், தனது சமுகம் சார்ந்து ஒரு கருத்தை முன்வைக்கவோ அதனை நடைமுறைப் படுத்தும் முயற்சியில் இறங்கவோ எவருக்கும் உரிமையுண்டு..விடுதலை என்ற பெயரில் ஆயுதம் ஏந்தி சொந்த மக்களையே உயிர்ப்பலி எடுத்தவர்கள் யாருடைய அநுமதியுடன் அதைச் செய்தார்கள்?
ஆயுதத்திற்கு மாற்று கருத்தா முன்வைத்த அனைவரும் யாருடைய அநுமதியுடன் துரோகிகளாககப் பட்டார்கள்? கஞ்சாவுக்கும் விஸ்கிக்கும் புலி வால்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பத்தி எழுதியவர்கள் தான் இவர்களைப் பெயர்கள் சொல்லி அழைத்தார்கள்..
பிரபாகரனை நீங்கள் கடைசியாகக் கண்ட காலத்தில் அவர் ஒரு இந்து வெறியராக இருந்திருக்கலாம்.. அவர் சூரியத்தேவனாக மாறிய பின்பு திருச்சபையின் பணமும் செல்வாக்கும் அவரை நிறைய ஆட்டம் காண வைத்ததில் வியப்பில்லை.. அவர் கெரில்லாத் தலைவரிலிருந்து குறுநில மன்னராகத் தனக்குள் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்பு அவரைப் பல விஷயங்கள் ஆட்டம் காண வைத்தன.. லண்டனில் உணர முடியாத திருச்சபையின் ஆதிக்கத்தை நான் ஆஸ்திரேலியாவில் அப்பட்டமாக உணரக் கூடியதாக இருந்தது..பல அறிவார்ந்த நடுநிலையாளர்கள் என்னிடம் இந்த விடயத்தைச் சொன்ன போது நானும் உங்களைப் போன்றே நினைத்து மெலிதாக எனக்குள் சிரித்துக் கொண்டேன்..
Sri vaishnavi
சாந்தன் !
mao வசனத்தை தவறாக எழுதியதற்கு மனிக்கவும். நான் உங்களை போல எல்லாம் தெரிந்தவர் அல்ல. தயவு செய்து பாண்டியன் கருத்து பற்றி விவாதிக்கவும். என்னால் அவர் கட்டுரை விவாதிக்க படாமல் போவது நியாயம் அல்ல.
அஜீத்,: யார் அந்த மார்சிஸ்ட் என எழுதினால் நன்றாக இருக்கும். எனக்கு தெரிந்த அளவில் அக்குழுவில் எவரும் மார்சிஸ்ட் அல்ல. இங்கு இலங்கையில் இன்று பழைய புலிகள் கூட மார்சிசம் பேச தொடக்கி விட்டார்கள். நீங்கள் மக்களுக்கு எதாவது நல்ல காரியம் செய்பவர்களை, துரோகிகள் என முத்திரை குத்தி என்ன பலன் காண போகிறிர்கள். உங்களுக்கு வேண்டுமானால் இது பொழுது போக்கு. ஆனால் இங்கு வாழும், மக்களுக்கு “யார் குத்தினாலும் அரிசி ஆனால் சரி”.
உங்களில் பலர் ஜனநாயகம் பற்றி வாய்கிழிய அல்லது கீபோர்ட் எழுத்து அழியும் வரை எழுதுகிறிர்கள். ஆனல் ஏன் மற்றவர்களின் அரசியல் தெரிவை கீழ்த்தரமாக விமர்சிக்கிறீர்கள்? புலிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? உங்களிடம் ஆயுதம் இல்லை, என்பது மட்டுமே.
தயவுசெய்து நாட்டுக்கு வந்து பாருங்கள். கற்பனையில் எழுத வேண்டாம்.
மார்சிஸ்ட் என்றால் புனிதர்களும் அல்ல, தியாகிகளும் அல்ல !
நட்புடன்
வைஷ்ணவி
BC
//லண்டனில் உணர முடியாத திருச்சபையின் ஆதிக்கத்தை நான் ஆஸ்திரேலியாவில் அப்பட்டமாக உணரக் கூடியதாக இருந்தது.//
அவுஸ்ரேலியாவில் தமிழர்களை மதம் மாற்றுவது அதிகமாகவே உள்ளதாக நானும் அறிந்தேன். மற்ற நாடுகளில் தமிழர்களை மதம் மாற்றும் போது உதவியாக யேசுவை ஏற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய தமிழர்கள் என்று விடியோ படங்களும் காட்டப்படுகிறதாம்.
BC
//சாந்தன் – நூறு’ கருத்துகள் சொன்னவர்களில்(மாஒ)தனக்குப் பிடிக்காதவர்களின் ‘கதை’ முடித்தார் எனவும் அறிய முடிகிறது.//
அது தான் நடந்த உண்மை.
rohan
//அவுஸ்ரேலியாவில் தமிழர்களை மதம் மாற்றுவது அதிகமாகவே உள்ளதாக நானும் அறிந்தேன்.மற்ற நாடுகளில் தமிழர்களை மதம் மாற்றும் போது உதவியாக யேசுவை ஏற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய தமிழர்கள் என்று விடியோ படங்களும் காட்டப்படுகிறதாம்.//
முதலாவது வரியின் உண்மைத் தன்மை எனது அவுஸ்திரேலிய நண்பர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. தனக்குத் தெரியத் தக்கதாக ஒரு அவுஸ்திரேலியத் தமிழனும் மதம் மாற்றப்படவில்லை என்று அவர்கள் ஒவ்வொருவரும் அடித்துச் சொல்கிறார்கள்.
முதலாவது வரி உண்மை அற்றது என்றால் இரண்டாவது வரி உண்மை அற்றது தானே? தவிர,’காட்டப்படுகிறதாம்’ என்பது ஒரு மென் குற்றச்சாட்டுத் தான் அல்லவா?
தாமிரா மீனாஷி
மதம் மாற்றப்படுவது குறித்து என்னிடம் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. எனது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கூட மதம் மாறியிருக்கிறார்கள். இது அவரவர் நம்பிக்கை சார்ந்த தனிப்பட்ட விஷயம் ( பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில்)இது ஒரு வழிப் பாதை தான் என்பது கவனிக்கப்பட வேண்டியது..) நான் எழுப்பிய கேள்வி மதம் மாற்றப்படுவது பற்றியல்ல. ஈழத்தன் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரக் கிளம்பியவர்களுக்கும் திருச்சபையின் அங்கத்தவர்களுக்கும் இருந்த உறவு பற்றியது. போராளிகளின் தலைமையின் முடிவெடுக்கும் தன்மையில் திருச்சபையின் ஊழியர்களுக்கு இருந்த செல்வாக்கு பற்றியது. உதாரணத்திற்கு, பாதர் கஸ்பரின் கைகளில் ஈழவிடுதலைக்காக மக்கள் கொடுத்த பணம் எவ்வளவு சிக்கியது.? (ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உண்டியல் பணத்தில் இருந்தே அவருக்கு ஐயாயிரம் பவுண்கள் வழங்கப் பட்டதாகப் பேச்சுண்டு..) இன்று மக்கள் அல்லலில் தவிக்கும் நிலையில் ஈழவிடுதலையின் பெயரால் குதியோ குதியென்று குதித்த பாதிரியார் யாருமே மக்கள் நலன் பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதேன்? இன்னமும் அவர்கள் தமது பெயரில் பிரபாகரனைப் புகழ்ந்து புத்தகம் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதேன்? ( இத்தகைய ஒரு புத்தகத்தின் வெளியீட்டு விழா பெரும் பொருட் செலவில் சிட்னியிலும் மெல்பேணிலும் நடைபெற்றது..)
ஈழ மக்களின் விடுதலப் போராட்டம் பாரபட்சமின்றி ஆய்வுசெய்யப்பட வேண்டுமானால்.. எனது கேள்விகளுக்கான பதில்களும் கண்டறியபட வேண்டும்..
சாந்தன்
//…நான் உங்களை போல எல்லாம் தெரிந்தவர் அல்ல. தயவு செய்து பாண்டியன் கருத்து பற்றி விவாதிக்கவும். என்னால் அவர் கட்டுரை விவாதிக்க படாமல் போவது நியாயம் அல்ல. /வைஷ்ணவி,
நீங்கள் சொல்வது போல நான் எல்லாம் தெரிந்தவர் அல்ல. நான் இதை எழுதிய காரணம் எம்மில் பலர் இல்லாத ஒன்றை அல்லது சொல்லப்படாத ஒன்றைக் கூறி கொமினிசத்தை, மாக்சிசத்தை அதன் தலைவர்களை தூக்கிப்பிடிப்பதில் வல்லவர்கள். இவ்வாறே நானும் இலங்கையில் இருக்கும் போது இந்த கோஷ்டியால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். இங்கும் அதே நிலைதான். பாருங்கள் இந்த ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு மாக்சிசவாதி’களை யாராவது சீனாவிலோ அல்லது வட கொரியாவிலோ, கியூபாவிலோ இருக்கிறார்களா? போனால் போகட்டும் ரஷ்யாவிலாவது?
மற்றும்படி இந்த கீபோட் மார்க்சிற்கள் பற்றி எனக்கும் உங்களைப்போன்ற அபிப்பிராயமே உள்ளது. இவர்களுக்கும், மாற்றுக் கருத்தாளர்களுக்கும், புலிகளுக்கும் உள்ள வேறுபாடு இவர்களிடம் துவக்கு வாங்க ‘வசதி’ இல்லாமல் போனதுதான்!
Ajith
வைஷ்ணவி
Marxism is an outdated dead phenomenon.Today, there is no marxism in the world or no one is eligible to called themselves as Marxists. All the so called communist or marxist nations have become capitalists or opportunistics. No one branded those who served to the people as traitors. Where were all these people until the end of war? In order to serve the people, you don’t need to ally with the man who killed over 100,000 people in the day light. You should respect the people’s voice. People rejected this regime during evry elections before and after LTTE. LTTE is the people’s choice. If you have the right to criticise LTTE, we also have the right to criticise those who talk against LTTE. If you want to help people, you don’t need to talk politics or go behind politicians or murderers. If you are personaly against LTTE, keep that away and rend your service to the people. I am not writing for leisure. I love our people more than you all. Don’t think all those who help people should hand over money to Rajapakse or to take photograph with Rajapakse family. You all think tamils in vanni and other areas are only suffering now and only these people are helping.
T Sothilingam
//தேசம் ஆசிரியர் குழுவும் ஏதோ ஒரு திட்ட அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவதாக நினைக்கின்றேன். ஏனெனில் முக்கியம் வாய்ந்த பல செய்திகளை வேண்டுமென்றே இவர்கள் தவிர்த்து விட்டனர். இதுபற்றி சோதியுடன் பேசினேன். அவர் இலங்கையில் இருந்துதான் பல விடயங்கள் போடுகின்றார்கள் என ஏதோ கூறினார்.// பாண்டியன்
பாண்டியன் இங்கே நீங்கள் குறிப்பிடும் ஏதோ என்பது என்ன விடங்களை உள்ளடக்கியது என்பதை விளக்கமாக கூறவும் காரணம் ஏதோ என்பதன் அர்த்தத்தை எப்படியம் திரிக்கலாம் அல்லது யாரும் திரித்து புரிந்து கொள்ளட்டும் என்ற பாணியில் விட்டுள்ளீர்களா?
தேசத்தின் செய்திகளில் பெரும்பான்மையானவை இலங்கையிலிருந்தே ஏற்றப்படுகின்றது ஆனால் ஏதோ ஒரு திட்ட அடிப்படையிலும் செய்திகள் ஏற்றப்படுவதில்லை என்றும் உங்களுக்குக் கூறினேன். செய்திகள் என்றும் முக்கியத்துவமானது. எமக்கு தெரியவரும் செய்திகளை நாமும் ஏற்றுவது வழமை. பாண்டியனுக்கு மட்டுமல்ல வேறு நாடுகளில் இருந்து கதைக்கும் நண்பர்களிடமும் நான் கேட்டிருக்கிறேன் உங்களுக்கு தெரியவரும் செய்திகளை, மற்றும் முக்கியமானவை என்று நீங்கள் கருதுகிறீர்களே அவற்றை எமக்கு தரும்பட்சத்தில் அதை பிரசுரிக்குமென. தேசம் செய்திப்பிரிவில் உங்கள் பெயரில் அவை பதிவிடப்படும்.
வைஷ்ணவி
அஜீத்,
நான், நீங்கள் சொல்வது போல “Don’t think all those who help people should hand over money to Rajapakse or to take photograph with Rajapakse family.” ——நினைக்கவில்லை. பல ஆயிரம் புலம் பெயர்ந்த மக்கள் தமது உறவுகளுக்கு நேரடியாக உதவுகின்றனர். கஜானா காலியான நிலையில் அரசினால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியா நிலையே இங்கு காணப்படுகிறது. இந்திய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணமே இன்று இங்கு பயன்படுத்த படுகிறது.
இன்று பெரும் கஷ்ட நிலையில் இருப்போர் அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10000, புலிகள் என சொல்லப்படும் நமது உறவுகளே. பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். குறிப்பாக பெண் போராளிகள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். புலிகளின் ஆதரவாலனாக உள்ள நீங்கள், அவர்களிடம் பணம் பெற்று நம் சகோதரிகளுக்கு உதவலாம் தானே?!
உங்களை போன்ற புலி ஆதரவாளர்கள் புலிக்கு காசு கொடுத்து போராட்டம் நடத்தினீர்கள். இன்று எல்லாம் அழிந்து விட்டது. இதற்கான தார்மிக பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
அரசாங்கம் இந்த வைக்கப்பட்டுள்ள 10000. புலிகள் என சொல்லப்படும் நாம் உறவுகளுக்கு நேரடியாக உதவுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேசம் ஜெயபாலன் போன்றோர் கூட உங்களுக்கு உதவுவது எப்படி என வழிகாட்டுவார்கள். இன்று எம் மக்களுக்கு தேவை நிம்மதியான வாழ்வு
நட்புடன்
வைஷ்ணவி
BC
Rohan , உமது அவுஸ்திரேலிய நண்பர்கள் ஒரு அவுஸ்திரேலியத் தமிழனும் மதம் மாற்றப்படவில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் அந்த மதம் மாற்றும் கோஷ்டியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவுஸ்திரேலியாவில் தமிழர்களை மதம் மாற்றுவது ஒன்றும் ரகசியமாக நடக்கவில்லை. மதம்மாறிய தமிழர்தான் எப்படி யேசுவின் பெருமைகளை உணர்ந்தேன் என்று ஒரு கவுரவ உரை நிகழ்த்தும்படி தேவாலயத்தில் அழைக்கப்படுவார்.
சைவ பழமான எனது உறவினர் அவுஸ்ரேலியாவில் மதம் மாறிவிட்டார். அவரின் முன்நாள் பாடசாலை நண்பர்கள் எனக்கும் நண்பர்கள். அவர்கள் மூலம் அவுஸ்ரேலியாவில்(NSW) விடயங்களை அறிவேன்.
தாமிரா மீனாஷி, நானும் மதம் மாறுவது தனிப்பட்ட விடயம் என்றுதான் முதலில் நினைத்தேன். போனில் அறுவைகள் தாங்கமுடியவில்லை. உதாரணத்துக்கு காய்ச்சல் வந்தது யேசுவை பிரார்த்தித்தேன் மாறிவிட்டதாம். LOVELY MAIL FROM JESUS என்று இமெயில்கள் வேறு.
rohan
//முதலாவது வரியின் உண்மைத் தன்மை எனது அவுஸ்திரேலிய நண்பர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. தனக்குத் தெரியத் தக்கதாக ஒரு அவுஸ்திரேலியத் தமிழனும் மதம் மாற்றப்படவில்லை என்று அவர்கள் ஒவ்வொருவரும் அடித்துச் சொல்கிறார்கள்.//Rohan
//Rohan , உமது அவுஸ்திரேலிய நண்பர்கள் ஒரு அவுஸ்திரேலியத் தமிழனும் மதம் மாற்றப்படவில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் என்றால்//BC
எனது வரிகளையும் உங்களதையும் வாசித்துப் பாருங்கள்.
Jeyarajah
மகத்தான தத்துவம் மார்க்சிசம் பற்றி கதைப்பதல்ல நோக்கம். இங்கு புரிவது என்னவென்றால் 24 மணி நேரத்திற்குள் இத்தனை லட்சம் மக்களையும் ஆடு மாடுகள் போல் இடம்பெயர வைத்தவர்களுக்கு கொக்கோ கோலா கொடுத்தவர்கள்தான் அந்த மக்கள்.
முள்ளிவாய்க்காலில் இத்தனை இழப்புக்களில் இருந்து ஆறமுடியாமல் 80 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை. ஆனால் நாகவிகாரை பார்க்க வரும் சிங்கள மக்களிடம் பணம் கறக்க தமது உறவுகளையே வீட்டை காலிபண்ணச் சொல்வதும் அம்மக்களே. எனவே இவர்கள் எந்தத் தலைமையை ஏற்பார்கள்? அல்லது இவர்களை எப்படி வெல்வது? அல்லது இவர்களுக்கு தலைமை தாங்குவது யார்? இந்த நிலையில் சகல கட்சிகளும் தவறு புதியவர்கள் வரவேண்டும் என்ற வாதம்.
ஆரம்பங்களில் போராடப் புறப்பட்ட இளைஞர்கள் பற்றுடனும் உறுதியுடனும்தான் புறப்பட்டவர்கள். பின் தவறான வழிசென்று தெரிந்த முகங்களினாலும் தெரியாத முகங்களினாலும் விழுங்கப் பட்டதனால் கதை காலியானது.
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் ‘கூகிள்’ற்குள்ளே மூழ்கிப் போயுள்ளார்கள். அவர்களை புரட்சிக்கு அழைப்பது அவ்வளவு எளிதானதல்ல.
ரகுமான் ஜானுக்கும் ரஜாகரனுக்கும் கொள்கையில் பெரிய வேறுபாடு இருக்கும் என்பதில்லை. ஆனால் இவர்கள் பிரிந்து நிற்கும்போது சிவாஜிலிங்கமும் தங்கேஸ்வரியும் புதுக்கட்சி தொடங்குவது நடந்துகொண்டே இருக்கும்.
பாலஸ்தீனம் என்றொரு நாடு அழிந்தா போய்விட்டது? நல்ல கேள்வி. ஆனால் பாலஸ்தீனம் பூத்துக் குலுங்கவுமில்லை. நவீன துப்பாக்கிகளுக்கு சிறுவர்கள் கல் எறிகிறார்கள் பல வருடங்களாக இதுதான் உண்மை.
மார்க்சிசம் ரொட்சிசம் என்பன ஆராட்சிக்கு உட்படுத்தப் படுவதிலும் பார்க்க கண்முன்னே தெரியும் நோய்களுக்கு மருந்து தேடுவது நல்லது. ழூலையில் இருந்து தத்துவம் எழுதும் கீபோட் மார்க்சிட்டுக்களிலும் பார்க்க ஏதோ தங்களால் முடிந்தவற்றை செய்கிறவர்களை விமர்சிக்க மட்டும்தான் வேண்டும் என்பதல்ல.
லிற்ரில் எய்ட் கொப்பி வாங்கிக் கொடுத்தால் நீங்கள் பென்சிலாவது வாங்கிக் கொடுக்கலாமே.
தாமிரா மீனாஷி
மார்க்சிசம் காலாவதியாகி விட்டது என்று ஆரூடம் கூறுவது அறியாமையினதும் மனக்கசப்பான தனிப்பட்ட அநுபவங்களினதும் விளைவேயன்றி, கற்றுத்தேர்ந்த ஆய்வின் வெளிப்பாடல்ல.. இன்றைய பொருளாதாரச் சிக்கல்களை மட்டுமன்றி, ச்மூகத்தில் ஏற்படும் அனைத்து முரண்பாடுகளையும் மார்க்சிசம் விளக்கியது போல் வேறு எந்த இஸமும் புரிய வைத்ததற்கு சான்றுகள் இல்லை. அரசியலில் மட்டுமன்றி, பொருளியல், தத்துவம், சமூகவியல், வரலாற்றியல், கலை, இலக்கியம், விமர்சனம் போன்ற பல்வேறு அறிவுத்துறைகளில் மார்க்சியம் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு வேறு எந்த சிந்தனை முறையும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு சான்று இல்லை. மார்க்சியம் சமுகத்தின் பிரச்சனைகளைப் புரிய வைத்த விதம் தவறு என்று நிரூபிக்கக் கூடிய அளவுக்கு வேறு எந்த சிந்தனை முறையும் வளரமுடியவில்லை என்பது தான் உண்மை..தலைவருக்கும், திருச்சபைக்கும் மார்க்சிசம் பிடிக்காது என்பதற்காக மார்க்சிசம் காலாவதியாகி விட்டது என்று சொல்லிக்கொள்வது அறியாமையின் வெளிப்பாடே..
கீ போட் மார்க்சிஸ்டுகள் என்ற பதம் விடுதலப் புலிகளின் ஆதரவாளர்களாலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டது.. சில கட்டுரையாளர்களின் வாதங்களில் இருந்த நியாயங்களை அறிவு ரீதியாக எதிர்கொள்ள முடியாதநிலையில் அந்த வாதங்களை முறியடிப்பதற்காகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அது இன்றும் சிந்திக்கச் சோம்பல்படும் தேசியவாதக் குயில்களாலும் பயன்படுத்தப் படுகிறது. முதாலாளிகளின் மிதமிஞ்சிய பேராசையால் உழைக்கும் மக்கள் தமது கஷ்டத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் என்ற உண்மையை யாராவது சொன்னால் உடனே அவரை கீபோட் மார்க்சிஸ்ட் என்று பெயர் சூட்டிவிடுவதன் மூலம் நாம் அவர் சொன்ன விடயத்தில் இருக்கும் உண்மை பற்றி சிந்திப்பதை தவிர்த்து அறியாமைக்குள்ளேயே நிரந்தரமாகத் தங்கி விடுகிறோம்..
pandiyan
தோழர் வைஷ்ணவி
எனக்கு ஆயிரம் பூக்கள் மாத்திரம் மலர விருப்பமில்லை. 600 கோடி (உலக மக்கள்) பூக்கள் மலர்ந்தால் மகிழ்ச்சியே.
நீங்கள் கலாநிதி நரேந்திரன் கொள்கை பரப்புச் செயலாளர் ஆக மாறிவிட்டீர்கள் போலும். ஒருவரது கருத்தை ஆதரித்து துணை நிற்பது ஒன்றும் தவறான விடம் அல்ல. ஆனால் அவர் புலிகளுக்கு எதிராக முழங்கினார் என்பதால் மாத்திரம் அவரது கருத்து நியாயம் ஆகிவிடாது. டீன் புலிகளுக்கு எதிராக மோதினார். புலிகளது அராஜகங்கள் கொலைகள் அட்டூழியங்கள் என எண்ணிலடங்கா பிரச்சனைகளை கருத்திற் கொண்டு அவற்றிற்கு எதிராக போராடினார். இது உண்மை எனில் அக்குற்றங்களின் பெரும் பகுதியை மேற்கொண்ட அரசிற்கு எதிராக அவர் ஒன்றும் கூறவில்லையே. முக்கியமாக வன்னிப் போரில் ஏராளமாக மக்கள் கொல்லப்படவில்லை அல்லது புலிகள் அழிப்பில் படுகொலைகள் தவிர்க்க முடியாது என்று அவர்கள் நினைத்திருந்தால் கருதியிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன். அவர்களும் மேற் கூறிய கொலைகள் நடக்கவில்லை அல்லது தவிர்க்க முடியாது என்ற கருத்தை தமிழ் மக்கள் முன்வைத்து தமிழ் மக்களுக்கு விளக்கம் அளிக்க கோருகின்றேன்.
புலிகள் எப்படி தமிழீழ கொள்கையின் பிடிமானத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்டு மக்களுக்கு எதிரான தமது குற்றங்களை மூடி மறைத்தார்களோ அல்லது நியாயப்படுத்தினார்களோ அதே போல் இலங்கை அரசும் தீவரவவவாத்திற்கு (புலிகளுக்கு) எதிராகவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராடுவதாக கூறிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான தமது குற்றங்களை மறைக்கின்றது. இதை ஜனநாயகவாதிகள் எனக் கூறிக்கொண்டு புலிகளின் குற்றங்களுக்கு எதிராக கோசம் போட்ட குழுக்கள் இலங்கை அரசை ஆதரிப்பதன் மூலம் அதன் குற்றங்களை மூடிமறைக்க முயல்கிறார்கள் அல்லது நியாயப்படுத்த முயல்கின்றார்கள். இது அவர்களின் அடிப்படை கொள்கைக்கு முரணானது.
மருத்துவரான எனது நண்பர் ஒருவர் லண்டனில் இருக்கின்றார். அவரின் தக்பனார் சிறிய தற்தையார் பெரிய தந்தையார் உடபட ஆறு உறவினர்களை புலிகள் பலியெடுத்து விட்டனர். அவரது மனைவியும் மனோதத்துவ நிபுணர். சுனாமி காலத்தில் தமது உயிராபத்துக்களைப் பொருட்படுத்தாது இலங்கை சென்று பணியாற்றியவர்கள். எச்சந்தர்ப்பத்திலும் தமக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தமது கொள்கைகளுக்காக ஏற்க மறுத்தவர்கள்.இவர்களைப் போன்றவர்கள் எங்கே? அரசின் அழைப்பில் இலங்கை சென்ற கலாநிதிகள் கல்வியாளர்கள் எங்கே?
நண்பர் ஒருவர் துரை நரையனின் கட்டுரை பற்றி வினவியிருந்தார். துரை நரையனின் பல கருத்துக்களுடன் எனக்கு முரண்பாடுகள் உண்டு. இவற்றிற்காக அவருடன் கடுமையான விவாதங்களில் ஈடுபட்டுள்ளேன். இதை சமாளிப்பாக உணராமல் உண்மையாக கருத வேண்டும் என கோருகின்றேன். எல்லா வஜடயங்களுக்கும் எழுத முடியவில்லை. அப்படி எழுதிய 4 ,5 கட்டுரைகள் தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் என்னிடம் இருக்கிறது. அத்துடன் இவை இவ்வாறாகப் பிந்திப் போவதால் மிக வேகமாக மாறி வரும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக மேலும் மேலும் பல விடயங்களை சேர்க்கும் போது அவை புத்தகமாக மாறிவிடும் சாத்தியம் உண்டு. பயப்பட வேண்டாம். நான் அந்த வகை சிரமங்களை தரமாட்டேன்.
NANTHA
மார்க்சியம் இலங்கையில் அல்லது இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தைவிட ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் “தொழிலாளர்” பிரச்சனை கிளப்பக் கூடாது என்பதில் இந்த நாடுகள் மிகவும் அவதானமாக உள்ளன. அந்த நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட “சமூக” நலக் கொடுப்பனவுகள், வேலையில்லா காலங்களில் பகுதி/முழு ஊதியம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
இலங்கையில் சுகாதார வசதிகள், கல்வி ஆகிய இரண்டும் அரசினால் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தியாவில் அவை கிடையாது.
ஆனால் மேற்கு நாடுகள் – ஸ்ரீ லங்கா உறவுகளில் பெரும்பாலான மேற்கு நாடுகள் “இந்த இலவச” சேவைகளை” நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுகளைப் பலதடவைகள் வற்புறுத்தியுள்ளன.
மார்க்சியம் சொல்லும் கருத்துக்கள் பலவழிகளில் மேற்கு நாடுகளில் நடைமுறையில் உள்ளன. தொழில் சங்கங்கள் பல பலம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் இலங்கை இந்தியாவில் “தொழில் சங்கங்கள்’ என்பன பல முதாளித்துவ ஆதரவாளர்களால் வெறுக்கப்படுகின்றன. ஆயினும் நம்முடைய முதலாளிகளின் “கடவுள்கள்” போன்ற மேற்கு நாடுகள் அமுல் படுத்தியுள்ள “தொழிலாளர்” சார்பான நடவடிக்கைள் பற்றி மூச்சு விடுவதில்லை. இலங்கையில் உள்ள “தொழிலாளர்” சட்டங்கள் இன்றும் பிரிட்டிஷ் காலத்தில் உண்டாக்கபட்டவையே. மலையகம் அதற்கு ஒரு உதாரணம்.
தொழிலாளர் உரிமைகள் பற்றிய பல சட்ட மூலங்கள் ஜெயவர்த்தனா காலத்தில் இல்லா தொழிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலாளிகள் “வாரிக் கொண்டு போக” வசதியான சட்டங்களும், வலையங்களும் உருவாக்கப்பட்டன. அவை இன்னும் தொடர் கதையாகவே உள்ளன. மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் இலங்கையிலும் “வெளிநாட்டிலுள்ள” அதே மாதிரியான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்பது கிடையாது. மாறாக “ஆதி” காலத்து பிரிட்டிஷ் அடக்கு முறைச் சட்டங்கள் வேண்டும் என்று கூக்குரல் இடுகிறார்கள்.
மேற்கு நாடுகள் மார்க்சிசத்துடன் பல வழிகளில் “சமரசம்” செய்துள்ளனர். ஆயினும் அதே மேற்கு நாடுகள் இலங்கை போன்ற முன்னாள் “காலனித்துவ அடிமைகள்” அந்த சமரசங்களை செய்யும் போது பெருத்த குரல் எழுப்புகிறார்கள். அந்த மேற்கு நாடுகளின் “அடிமை”களாக மாறிய உள்ளூர் வாசிகளும் “உங்கள் நாட்டில் மாத்திரம்” ஏன் அந்த சட்டங்கள் இருக்கின்றன என்று கேள்விகள் கேட்பது கிடையாது. மாறாக கனடா, பிரான்ஸ் “முதலாளித்துவம், திறந்த பொருளாதாரம்” போன்ற கொள்கைகளை வைத்துள்ளதனால்த்தான் முன்னேறி உள்ளன என்று விபரம் புரியாமல் “கம்யூனிச” பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
முதலாளித்துவத்தின் பாதுகாவலனும், ஜேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் பெற்றவர்களும் உள்ளவர்களுமான அமெரிக்கா “கம்யூனிஸ்ட்” சீனாவுடன் எந்த முதலாளித்துவ நாட்டிலும் செய்யாத முதலீடுகளையும் “கோடிக்கணக்கான டாலர் வியாபாரத்தையும் ஏன் செய்து வருகிறது என்று கேள்விகள் கேட்பது கிடையாது. ஆனால் இலங்கை சீனாவுடன் வர்த்தகம், கடன் கொடுக்கல்-வாங்கல் செய்யும் பொழுது “ஓகோ” என்று கூச்சல் கிளப்புகிறார்கள். கீபோர்ட் மார்க்சிஸ்டுகள் என்று குரல் எழுப்புபவர்கள் “அமெரிக்காவை” நோக்கி “சீனாவுடனான” வியாபாரத்தை உடனடியாக நிறுத்தி “முதலாளித்துவத்தை” காப்பாற்ற வேண்டும் என்று ஒபாமாவுக்கு கடிதம் எழுத “கையெழுத்து’ வேட்டையில் இறங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். அல்லது “சீன”, “இந்திய” தூதராலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை அழைத்து “அமெரிக்க” தூதரகங்கள் மீது தாக்குதல் தொடுத்து அமெரிக்கா முதளித்துவத்துக்கு துரோகம் செய்கிறது என்றும் அறிக்கை விடலாம்!
வைஷ்ணவி
தோழமையுடன் பாண்டியன் ;
பதிலிக்கு நன்றி !
நீங்கள் இங்கு எழுதும் நரேந்திரன் வேறு. அம் மாநாட்டில் கலந்து கொண்ட நரேந்திரன் வேறு. மாநாட்டில் கலந்து கொண்டவர், ஆஸ்த்ரேலியா இல் வாழ்கிறார். அவர் மருத்துவத்திலும், கிருமியியலிலும், கலாநிதி பட்டம் பெற்றவர். இவர் உலக அளவில் கைவிட்டு எண்ணக்கூடிய மருத்துவ ஆய்வாளர்களில் ஒருவர். இன்று இவரது சேவை யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு தேவைபடுகின்றது.
இந்த நரேனுக்கும், இலங்கை அரசுக்கு சாமரம் வீசும், அரச கொலைகளை நியாயபடுத்தும் நரேனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் சொல்பவர் முன்பு புலிக்கும் சாமரம் வீசியவர்.
நான் ஆரம்பத்தில் கூறியது போல் அம் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள், தமக்குள்ள அரசியல் ஒத்த கருத்து கொண்டவர்கள் அல்ல. சிலர் அரசு சார்பானவர்கள் என்பது மட்டும் உண்மை. பெரும்பான்மையானவர்கள் மக்களுக்கு தம் நிபுணத்துவம் முலம் உதவி செய்யவே அங்கு சென்றனர். மேலும், உங்களின் பெரும்பான்மையான கருத்துகளுடன் உடன்படுகிறேன் .
நந்தா!
உமது பின்னோட்டம் தோழர் பாண்டியனின் கட்டுரை சார்ந்து இருந்தால் நல்லது. இங்கும் மத விவாதம் வேண்டாமே !
நட்புடன்
வைஷ்ணவி
palli
//புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று குறிப்பிட்ட நபர்கள் கொண்ட குழு இலங்கை சென்று தமது அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி சமைக்கின்றனர். // பாண்டியன்
இது பற்றி பலதடவை தேசத்தில் விவாதித்தோம்; அதில் ஒரு பின்னோட்டம் கூட விடாத பாண்டியன் திடீரென கட்டுரையுடன் வருவது ஏதோ வில்லங்கம் போல் உள்ளது:
//நல்ல உள்ளங் கொண்ட நபர்கள், தமது உறவினரின் நலன்களில் மிக அதிக அக்கறை கொண்டவர்கள் இலங்கை அரசுடன் இணக்கப்பாடாக வேலை செய்வதற்கு தயாராக உள்ளனர். //
அதுதானே பார்த்தேன் நீங்களும் ஒரு குழு அமைத்து போக வேண்டியதுதானே, உங்களை விட்டுவிட்டு போட்டார்கள் என்னும் வருத்தமா? அல்லது போனவர்கள் எதுவும் செய்யவில்லை என்னும் ஆதங்கமா?
// ஏதாவது சந்தேகம் எழுப்பினால் புலிகளின் பாணியில் ‘எங்கள் மேல் விமர்சனம் வைக்க இவர்கள் யார்” என திட்டி பின்னூட்டம் விடுகின்றார்கள்.//
இல்லையே நாமும் இவர்களை விமர்சித்தோம்; அதுக்கு அவர்கள் எம்மை திட்டவில்லை, சிலவேளை உங்களுக்கு தனிபட்ட அரசியல் தகராறு உண்டோ என்னவோ தெரியவில்லை;
//முதலாவதாக யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவோம். இலங்கையின் மற்றைய பல்கலைக்கழகங்களில் எத்தனை வாகனங்கள் உண்டு என முதலில் அறிய வேண்டும். அங்கும் அதே நிலைதான் எனில் எல்லா பல்கலைக்கழகங்களிற்கும் உதவ முன்வர வேண்டுமேயன்றி யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவுவது சரியானதாக எனக்குபடவில்லை//
ஓகோ கதை அப்படி போகுதோ; போனவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு??
//பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மந்திரி பதவிகளுக்காக சிக்கலான பிரச்சனைகளில் தான்தோன்றி தனமாக பேசுவது, எழுதுவது தான் பிழையானது. // இது நியாயமான கருத்து, பல்லியும் உடன்படுகிறேன்;
//திரு கொனஸ்ரன்ரைனுக்கு எதிராக எழுதுவதாக நினைத்து கொண்டு சிலர் பின்னூட்டங்களில் மதங்களுக்கிடையில் பிளவை உண்டுபண்ணும் விதமாக கருத்தெழுதுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. //
இதை அந்த கட்டுரையில் வந்து பின்னோட்டமாக விட்டால் விவாதமாக இருக்குமே; நீங்கள் வேடிக்கை பார்ப்பதால் சிலர் சொல்லும் வாதம் சரியாகிவிடுமே, பின்னோட்டம் விடுபவர்களை தவறென சொல்லுவதை விட அதுக்கான எதிர்கருத்து சொல்ல வேண்டும்;
// தேசம் ஆசிரியர் குழுவும் ஏதோ ஒரு திட்ட அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவதாக நினைக்கின்றேன். ஏனெனில் முக்கியம் வாய்ந்த பல செய்திகளை வேண்டுமென்றே இவர்கள் தவிர்த்து விட்டனர்//
தேச நிர்வாகம் கவனத்தில் எடுப்பது நல்லது; இது பாண்டியனுடன் பல்லியின் கருத்துதான்;
//ஆனால் இங்கு இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள், தனிப்பட்டவர்கள் உதவுகின்றார்கள். உதவ வேண்டும். ஆனால் இந்த சங்கங்களை முன்பு கேலி செய்த நீங்கள் இப்போது உதவி செய்யச் சொல்வதை என்னவென்று சொல்வது?//
பளமைகளை மறந்து செயல்படலாமே; நாமும்தான் புலியை கேலி செய்தோம்; இப்போ எம்மை நாமே எப்படி சொல்வது;
//அதை அங்கு இருக்கும் மக்களின் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வரட்டும். இதை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன். //
இதை மட்டும் வலியுறுத்துவோம்; மன்னவர்கள் எல்லாம் தாமுண்டு தமது வேலைஉண்டு என திரிவார்கள்; வீட்டுகாரன் விழித்துவிட்டால் திருடனுக்கு அங்கு என்ன வேலை; அப்படிதானே பாண்டியா??
//இடதுசாரிகளை மக்கள் வாழ்வுக்கு நடைமுறையில் என்ன செய்தார்கள்? ரஜாகரன், ரகுமான் ஜான், அசோக், ஜென்னி, நாவலன் எட்ச்…. என்ன செய்தார்கள் ? ஒரு 10 ரூபா தமது உறவினர் அல்லாதவர்களுக்கு கொடுத்தார்களா//Sri vaishnavi on February 22, 2010 3:29 pm
இது தவறான கருத்து நாம் மட்டும்தான் எல்லாம் செய்கிறோம் என்பது தவறு, எதுவுமே பேசாத பலர் கூட சின்ன சின்ன உதவிகள் செய்கிறார்கள்? செய்யும் உதவிகள் தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை;
//உங்கள் உறவுகளுக்கு தொடர்ந்து உதவுங்கள். உதவிக் கொண்டே இருங்கள். எமது இந்த வாழ்க்கை ஒரு லட்சம் பிணங்களின் மேல் கட்டப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். // பாண்டியன்
கண்டிப்பாக உதவுவார்கள் நீங்களும் ஏதாவது திட்டங்கள் வைத்திருந்தால் சொல்லுங்கள், எப்படியாவது அந்த மக்களுக்கு உதவிகள் போகட்டும்,
உங்கள் கட்டுரையில் மிக நல்ல எதார்த்த கருத்துகள் உண்டு, இருப்பினும்; இடையிடையே கருத்தை விட்டு ஒருசிலரை திட்டுவதில் கவனம் எடுக்கிறியள்; உங்கள் கட்டுரையின் தலையங்கம் கவர்ச்சி படம்(பெயர்) போல் சுத்துமாத்து என சொல்லியதால் அதுக்கு தகுந்தா போல் கட்டுரை வரைந்துள்ளீர்கள், சுத்துமாத்தை தடுக்க நீங்கள் யதார்த்தைத்தை எழுதுங்கள் என்பதே பல்லியின் கருத்து;
நட்புடன் பல்லி;
seran
(மருத்துவரான எனது நண்பர் ஒருவர் லண்டனில் இருக்கின்றார். அவரின் தக்பனார் சிறிய தற்தையார் பெரிய தந்தையார் உடபட ஆறு உறவினர்களை புலிகள் பலியெடுத்து விட்டனர். அவரது மனைவியும் மனோதத்துவ நிபுணர். சுனாமி காலத்தில் தமது உயிராபத்துக்களைப் பொருட்படுத்தாது இலங்கை சென்று பணியாற்றியவர்கள். எச்சந்தர்ப்பத்திலும் தமக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தமது கொள்கைகளுக்காக ஏற்க மறுத்தவர்கள்.இவர்களைப் போன்றவர்கள் எங்கே? அரசின் அழைப்பில் இலங்கை சென்ற கலாநிதிகள் கல்வியாளர்கள் எங்கே?} பாண்டியன்.
தோழர் பாண்டியன் ஐ.பி.சி கொள்ளைப்பிரமுக மருத்துவருக்காக வக்காளத்தா?
ramanan
பாண்டியன் புனைபெயர் துரைநரையன் உங்களுக்கு தெரிந்தவர். நல்லது. இதற்கு மேல் நீங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த தகவலே பல விடயங்களை தெளிவு படுத்துகிறது நன்றி.
Ajith
உங்களை போன்ற புலி ஆதரவாளர்கள் புலிக்கு காசு கொடுத்து போராட்டம் நடத்தினீர்கள். இன்று எல்லாம் அழிந்து விட்டது. இதற்கான தார்மிக பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
Vaishanavi,
Just read out your statement carefully. Did I ever say that I gave to money to LTTE. How did you find out. Do you know who I am? This short of statements clearly shows your attitude about other tamils. People understand who you are and what sort of person you are. You must understand 95% of the tamil population is behind LTTE and and its stand for freedom of tamils. You are accusing the whole tamil population.
palli
//மார்க்சிசம் காலாவதியாகி விட்டது என்று ஆரூடம் கூறுவது அறியாமையினதும் மனக்கசப்பான தனிப்பட்ட அநுபவங்களினதும் விளைவேயன்றி, கற்றுத்தேர்ந்த ஆய்வின் வெளிப்பாடல்ல.. //
அப்படி சொலமுடியாவிட்டாலும் கால் கை இல்லாதவர்களிடமும் வாழவழி தெரியாதவர்களிடமும் உறவுகளை இழந்தவர்களிடமும் நாம் போய் மார்க்சியம் பேச முடியாது, மார்க்சியம் ஒரு மனிதனின் அறிவை(பொது) உதவலாமே தவிர எடுத்ததுக்கெல்லாம் எம்மை அறிவுஜீகளாய் காட்ட இம்சைகள் வேண்டுமா??
//இன்றைய பொருளாதாரச் சிக்கல்களை மட்டுமன்றி, ச்மூகத்தில் ஏற்படும் அனைத்து முரண்பாடுகளையும் மார்க்சிசம் விளக்கியது போல் வேறு எந்த இஸமும் புரிய வைத்ததற்கு சான்றுகள் இல்லை.//
அப்படியானால் காமராசர் எப்படி தமிழகத்தை நிர்வகித்தார், மார்க்சியம் தேவை என்பதில் எனக்கு பிரச்சனையில்லை அதுமட்டுமே தேவை என்பது சரியானதா, உப்பு தேவையான ஒன்றுதான் அதுக்காக அதிலே தனியாக எதுவும் செய்ய முற்படலாமா?? ஆயுதம் எப்படி ஒரு மனிதனின் கையில் இருக்கும்போது (அவரவர் நிலைபடி) செயல்படுகிறதோ அதே போல்தான் இந்த இஸங்களும் செயல்படும்;
//பொருளியல், தத்துவம், சமூகவியல், வரலாற்றியல், கலை, இலக்கியம், விமர்சனம் போன்ற பல்வேறு அறிவுத்துறைகளில் மார்க்சியம் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு வேறு எந்த சிந்தனை முறையும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு சான்று இல்லை.//
அப்படியாயின் தம்மை மார்க்ச்சிய வாதிகள் என சொல்வோர் இந்த இலக்கிய சந்திப்புகளில் நடத்திய தெருகூத்தை என்ன என சொல்லுவது;
//தலைவருக்கும், திருச்சபைக்கும் மார்க்சிசம் பிடிக்காது என்பதற்காக மார்க்சிசம் காலாவதியாகி விட்டது என்று சொல்லிக்கொள்வது அறியாமையின் வெளிப்பாடே.. //
உமாமகேஸ்வரனும் சந்ததியாரும் மார்க்சியத்தை மொழி பெயர்க்க கூடிய அளவுக்கு கற்று வைத்திருந்தார்களாம்; (கேள்விபட்டதுதான் பொய்யாயின் பல்லி பொறுப்பல்ல) ஆனால் ஒருவரை ஒருவர் கொன்றார்களே?? பாலா அண்ணாவுக்கு மார்க்ச்சியம் தெரியாதா?? மகிந்தாவுக்கு தெரியாதா? மகன்மோகன்சிங் தெரியாதா? இப்படி பலரை சொல்லலாம், கமினிஸ் நாடென தம்மை புகழும் ரஸ்யாவும் சீனாவும் இலங்கை அரசுக்கு ஆயுதம் மேல்கொண்டு பல உதவுகள் வழங்கியது முள்ளிவாய்க்காலில் மார்க்ச்சிய வகுப்பு நடத்தவா??
இதில் உங்களை எடுத்து கொள்ளுங்கள் மதம் மாறுவது அவரவர் விருப்பம் என சொல்லும் நீங்கள் திருசபைமீது கல் எறிவதன் நோக்கம் மார்க்ச்சியமா?? ஏன் திருசபை மட்டும்தான் புலிக்கு உதவியதா?? நீங்கள் ஒரு ஊடகத்தை நடத்துபவர், உங்களுக்கு மக்கள் மனநிலை தெரியாதா? புலிக்கு கோடீஸ்வரனில் இருந்து கூலிகாரன் வரை உதவியது உலகம் அறிந்த செய்திதானே, இதில் திருசபை மட்டும் ஏன் உங்களுக்கு வலிக்குது, எம்மதமும் சம்மதம்தான் என தெரிந்த வழிபோக்கன் எங்கே?? மார்க்ச்சிய வாதிகள் எங்கே??
தொடரும் பல்லி;;
பார்த்திபன்
//Just read out your statement carefully. Did I ever say that I gave to money to LTTE. How did you find out. Do you know who I am? This short of statements clearly shows your attitude about other tamils. People understand who you are and what sort of person you are. You must understand 95% of the tamil population is behind LTTE and and its stand for freedom of tamils. You are accusing the whole tamil population.- Ajith //
வைஷணவி சொன்னதில் என்ன தவறு. அவரின் கூற்று முற்றிலும் உண்மை. உங்களைப் போன்றவர்கள் அளள்ளிக் கொடுத்த பணத்தில் மோகம் கொண்டு தான் புலிகளும் வாண வேடிக்கை காட்ட வெளிக்கிட்டனர். அவர்கள் எதாவது வாண வேடிக்கை காட்டினால்த் தான், உங்களைப் போன்றவர்கள் மேலும் மேலும் அள்ளிக் கொடுப்பீர்கள் என்பதைப் புலிகளும் அறிந்தே வைத்திருந்தனர். அதனால் இன்று தமிழ்ப்பகுதி முழுவவதும் சுடுகாடானது தான் மிச்சம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு 99 வீதமான ஆதரவு வாக்குகள் விழுந்தது என்று கதையளப்பது போல் தான், தமிழ் மக்களில் 95 வீதமானவர்கள் புலிகளின் பின்னால் நின்றார்கள் என்ற தங்களின் கதையளப்பும். இன்று சம்மந்தர் துணிந்து புலிகளால் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை வேட்பாளர் தெரிவில் இடம் இல்லை என்று சொல்லப்பட்டதன் அர்த்தமாவது தங்களுக்குப் புரியவில்லையா?? துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு பெறப்பட்டதெல்லாம் ஆதரவு என்று தாங்கள் எங்கே படித்தீர்கள். முடிந்தால் இலங்கை சென்று புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட அந்த மக்களை நேரடியாகச் சென்று கேளுங்கள். புலிகளின் கொடுமைகளை கதைகதையாகச் சொல்கின்றார்கள்.
NANTHA
தமிழ் என்று சத்தமிட்டால் இலங்கையில் தமிழர்களுக்கு முள்ளி வாய்க்கால்தான் கிடைக்கும் என்பது பல்லிக்கு புரியாதுள்ளது. பல்லிக்கு எனது கருத்து புரியவுமில்லை பதில் எழுத முடியவுமில்லை என்றே எண்ணுகிறேன்., ஆனால் புரியாத, படிக்காத மார்க்சிசத்தை கண்டிக்க எப்படி தெரிகிறது என்பது வெறும் “தமிழ்” பாமரத்தனம்! அல்லது பாதிரிகளின் நன்கொடை.
தமிழுக்கும் திருச்சபைக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் பாதிரிகள் கொலைகாரர்களான புலிகளின் பங்காளிகள். பாதிரிகளுக்கு மார்க்சிசம் மாத்திரமல்ல “தமிழும்” பிடிக்காது என்ற விபரம் பல்லி போன்றவர்களுக்கு புரியாது. பாதிரிகள் தமிழில் கதைப்பது “தமிழர்களின்” உதிரத்தை உறிஞ்சவே என்பதைக் காட்டியுள்ளனர்.
இந்துக்கள் மாத்திரம் “எம்மதமும் சம்மதம்” என்பார்கள். அதன் அர்த்தம் பாதிரிகளை தலை மேல் சுமக்க வேண்டும் என்பதல்ல. எந்த “கிறிஸ்தவனும்” எம்மதமும் சம்மதம் என்று மறந்தும் சொல்லப் போவதில்லை.
கத்தோலிக்கர்கள் தங்கள் மதத்தை மக்களிடம் அல்லது காசுக்காக மாறியவர்களிடம் “தக்க” வைப்பதற்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்று கூறுவதை பல்லி அறிந்திருக்க முடியாது.
பாதிரிகள் மற்றைய மதங்களுக்கு எதிராக விஷம் கக்கும் வேளையில் எப்போதும் யுஎன்பி யின் அடியாட்களாக இலங்கையில் உள்ளது ஏன் என்று கண்டு பிடித்தால் நல்லது.
//கால் கை இல்லாதவர்களிடமும் வாழவழி தெரியாதவர்களிடமும் உறவுகளை இழந்தவர்களிடமும் நாம் போய் மார்க்சியம் பேச முடியாது,//
இதற்கு மார்க்சிசம் எப்படி பொறுப்பு ஆக முடியும்? பாதிரிகளிடம் ” ஜேசு” ஏன் இப்படி பண்ணி விட்டார் என்று கேட்க வேண்டியதுதானே? அல்லது தமிழ் என்று கத்தினால் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல கூச்சமாக உள்ளதோ?
chandran.raja
தொடரும் பல்லி;; என எழுதப்படவிட்டாலும் பல்லி தொடரவே செய்யும். ஆகவே இப்படியான சொல்பிரயோகங்களை வரும் காலங்களில் தவிர்கவும். இதனால் உமக்கென்ன நட்டம் என்று கேட்டால்?. என்னிடம் இருக்கும் பதில் எனக்கு மட்டுமல்ல எமக்கெல்லாம் இதைகேட்டு அலுப்பு சலிப்பு ஆகிவிட்டது.
மாக்ஸியத்தின் கதை மனிதவரலாறு பற்றிய கதை. வடதுருவத்தில் இருக்கும் மனிதனின் தென்துருவத்தில் இருக்கும் மனிதனின் வாழ்வுரிமையைப் பற்றி கதைக்கும் கதை. கூலிஉழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடைவெளியை விபரிக்கும் கதை. மாக்ஸியத்தின் ஆய்வுகள் அறுந்து ஒட்டழிந்து போன சோவியத் யூனியனுக்கோ சீனாவுக்கோ கீயூபாவுக்கோ எழுதப்பட்டவையல்ல. மாக்ஸின் ஆய்வில் அது ஒரு வரலாறே.மிகுதி……
நீங்கள் மாக்ஸியத்தைப்பற்றி ஒரு துளியும் அறிந்திருக்க முடியாத மனிதன். நீங்கள் இதற்கெதிராக தொடுத்த போர் பற்றி ஏற்கவே பதிவாகியிருக்கிறது. உதாரணத்திற்கு; மல்லாந்து பார்த்து துப்புவது. சிகப்புபுத்தகம் சிகப்புபுத்தக அலுமாரி ஒர்யிணசேர்கை இப்படி பலவற்றையும் நான் கூறமுடியும். உங்கள் மனிதவாழ்வு பற்றிய புரிந்துணர்வு அப்படி. அதற்காக நான் உங்களை கீழ்மைப்படுத்தவில்லை. நீங்கள் மற்றவர்களை மாக்ஸிய கருத்தோடு வருபவர்களை கீழ்மைப்படுத்த வேண்டாம். அதை அனுமதிக்கவும் முடியாது. இது நந்தாவுக்கு ஆதரவாக எழுத்தப்பட்டதாக நீங்கள் எண்ணலாம். உண்மையில் அதுவேதான். ஏன்னெனில் உள்ளவற்றில் நல்வற்றை பொறிக்கி எடுக்கவேண்டிய தேவை வரும்கால மாக்ஸிட்டுகளை பயிற்றி எடுப்பதற்கான தேவையிருக்கிறது. இந்த பின்னோட்டம் உங்கள் தனிப்பட்ட தாக்குதல்லாக நீங்கள் நினைப்பீர்களே யானால் அதுவும் உங்கள் தவறு.
மதத்திற்து கெதிராக மதத்தை ஏறவிடுவது என்றும் அறிவே ஆகாது. தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு ஒவ்வொரு மானிடனுக்கும் உரிமையையுண்டு. இதை யாரும் மறுக்கக் கூடாது. மறுக்கவும் முடியாது. எந்த மதம் உயர்ந்தமதம் என்று ஒருவர் கோருவேரானல் அதுவே இந்த உலகத்தில் அதி உயர்ந்த முட்டாள் என்பேன். மதம் மனிதநலன்களுக்காக உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்தவையே!.
பணமுள்ளவன் உலகத்தின் எல்லாவற்றையும் (மூலதனம்) தனக்காக சுவீகரித்து கொண்டது போலவே கிறீஸ்தவமதத்தையும் தன் பக்கம் சுவீகரித்துக் கொண்டது. இந்த மூலதனம் வாளுடனும் பீரங்கியுடனும் இந்த உலகத்தை அடிமைப்படுத்தவில்லை. சகிப்புதன்மை பொறுமை ஈவுஇரக்கம் தியாகம் போன்ற குணாசியங்களையும் கொண்ட “விபிலிய வேதத்தையும்” கொண்டு தான்உலகத்தை தன் பக்கத்தில் ஈர்த்துக்கொண்டது அல்லது மண்டியப் பண்ணியது என்பதை யாரும் உணராதவரை முற்போக்கான படியில் யாரும் ஒருபடியையும் தாண்ட முடியாது.
வைஷ்ணவி
அஜீத்
சரி , நீங்கள் சொல்வது சரி என வைத்து கொள்வோம் .அதாவது 95% மக்கள் புலிகளை ஆதரிகிறார்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இந்த 95 % புலி ஆதரவாளர்களுக்கு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 10000, புலிகள் என சொல்லப்படும் நமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற தார்மிக பொறுப்பு உண்டா இல்லையா என்பதற்கு பதில் சொல்லுங்கள்?.
உங்கள் விருப்புக்காகவும், உங்கள் கிளுகிளுப்புக்காகவும் தானே அவர்கள் போராடினார்கள். இன்று போராட்டம் தோற்று விட்டது. போரில் பங்கெடுத்த போராளிகளுக்கு, அப் போராட்டத்தை ஆதரித்த நீங்கள் தானே, உதவ வேண்டும். எதிரி செய்வான், எல்லாம் என்று எதிர்பார்பது நியாயமாக உங்களுக்கு படுகிறதா?
pandiyan
நண்பர்களுக்கு!
எனது கட்டுரையயின் நோக்கம் சொந்த அரசியல் நலன்களை தேடுவது அல்ல. எனது சொற்களால் யாரும் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். சில நபர்களது தவறான கருத்துக்களிற்கு எனது மறுதலிப்பை எழுதியுள்ளேன். 30 வருட போரும் அது சார்ந்த வாழ்க்கையும் ஏற்படுத்திய உணர்வுகள் மிக கடுமையாகவே எழுதத் தோன்றும் என்பதை மறந்து விடாதீர்கள்.
புலிகளுக்கு எதிரான அரசின் வெற்றிக்கு முன்னரே புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் எனவும் இன்றைய உலக சூழ்நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு அமையும் எனவும் உறுதியாக நம்பி வந்துள்ளேன். புரட்சி…..என்றெல்லாம் கனவுகள் உண்டு. அவை பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.
புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இலங்கை அரசோ எந்தவிதமான அதிகார பரவலாக்கத்தையும் (தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல சிங்கள முஸ்லிம் மக்களுக்குமானது)பற்றி பேச மறுத்து வரும் நிலையில் எந்த நம்பிக்கையை வைத்து நாம் அரசிடம் இணைந்து வேலை செய்வது என்பதே எனது கேள்வியாகும். எந்தவிதமான சுயநல நோக்கங்களுமற்ற தோழர்கள் சொல்கிறார்கள் அரசிற்கு சிறிது கால அவகாசம் வழங்கும்படி. பொறுத்திருந்து பார்ப்போம்.
pandiyan
“தோழர் பாண்டியன் ஐ.பி.சி கொள்ளைப்பிரமுக மருத்துவருக்காக வக்காளத்தா?”
தனது ஆறு உறவுகளை புலி சுட்டு கொன்ற பின்னரும் ஒருவர் ஐ.பி.சி யில் பணியாற்றி இருக்கிறார் என்றார் அவர் எவ்வளவு நல்லவராய் இருக்க வேண்டும்!
palli
// உமக்கென்ன நட்டம் என்று கேட்டால்?. என்னிடம் இருக்கும் பதில் எனக்கு மட்டுமல்ல எமக்கெல்லாம் இதைகேட்டு அலுப்பு சலிப்பு ஆகிவிட்டது.// chandran raja
அப்படியா? பல்லி கவனத்தில் கொள்கிறேன்; ஆனால் ஒரு சில வருடங்களே பல்லி எழுதுவது உங்களுக்கு புளிக்கும்போது பல நூற்றாண்டு விடயத்தை போட்டு தாளிப்பது எமக்கு கசக்காதா?? சந்திரா நீங்கள் நிற்ப்பது கண்ணாடி வீடு நான் இருப்பது ஓலை குடிசை; புரியாவிட்டால் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஒரு பக்கத்தை தட்டுங்கள் ஏதாவது கிடைக்கும்;
//நீங்கள் மாக்ஸியத்தைப்பற்றி ஒரு துளியும் அறிந்திருக்க முடியாத மனிதன்//
உன்மைதான் மனிதம் பற்றி போதியளவு தெரிந்துள்ளேன்; அனுபவங்கள் பல; அதுபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?? தெரியாததை தெரியாது என சொல்லுவதில் பல்லிக்கு வெக்கம் இல்லை; அதேபோல் சந்திராவும்??
//மல்லாந்து பார்த்து துப்புவது. சிகப்புபுத்தகம் சிகப்புபுத்தக அலுமாரி ஒர்யிணசேர்கை இப்படி பலவற்றையும் நான் கூறமுடியும். //
இதெல்லாம் உங்க உறுப்பினர் சமாசாரமே; அதில் நான் எதுக்கு; சந்திரா சிரிப்பு காட்டாதையுங்கோ;;
//நான் உங்களை கீழ்மைப்படுத்தவில்லை. நீங்கள் மற்றவர்களை மாக்ஸிய கருத்தோடு வருபவர்களை கீழ்மைப்படுத்த வேண்டாம். அதை அனுமதிக்கவும் முடியாது.//
நீங்கள் மாக்ஸியத்தைப்பற்றி ஒரு துளியும் அறிந்திருக்க முடியாத மனிதன்!! இது சந்திரராஜா எழுதியது:
இப்போ புரியுதா யதார்த்தத்துக்கும் மார்க்ச்சியத்துக்கும் உள்ள வேறுபாடு; சொன்னா கேட்டால்தானே மல்லாக்க படுத்துகொண்டு துப்புவது இதுதான்;
//நீங்கள் நினைப்பீர்களே யானால் அதுவும் உங்கள் தவறு.//
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்திரா பல்லியை கூழ்பானையில் (உங்கள் பொன்மொழிதான்) விழுத்த முயற்ச்சிப்பது சகஜம்தானே;
//மதத்திற்து கெதிராக மதத்தை ஏறவிடுவது என்றும் அறிவே ஆகாது. தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு ஒவ்வொரு மானிடனுக்கும் உரிமையையுண்டு. இதை யாரும் மறுக்கக் கூடாது. மறுக்கவும் முடியாது. எந்த மதம் உயர்ந்தமதம் என்று ஒருவர் கோருவேரானல் அதுவே இந்த உலகத்தில் அதி உயர்ந்த முட்டாள் என்பேன். மதம் மனிதநலன்களுக்காக உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்தவையே!.//
இது எனக்கா? அல்லது நந்தாவுக்கா?? புரியலையே; மார்க்ச்சியம்தான் பல்லிக்கு புரியாதே புரியும், பாசையில் சொல்லபாடதா??
நந்தா எனக்கு பல விடயம் புரியவில்லை என்பது உன்மை அதில் முக்கியமாய் ஜேயாரின் கடிதங்களையே வாசிக்கும் தகுதி கொண்ட நீங்கள் பல்லியின் கேள்வி என்ன உங்கள் பதில் என்ன என்பதை கவனிக்கவும்; உமாமகேஸ்வரன் சந்ததி கூட உங்களிடம்தான் மார்க்ச்சியம் கற்றார்களோ; ??
//தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு ஒவ்வொரு மானிடனுக்கும் உரிமையையுண்டு.//
இது சந்திரராஜாவின் வாதம்; ஆக விருப்பமில்லாமல் யாரும் மதம் மாற மாட்டார்கள்; புலி தொடங்கியது1983(பலர் தெரிய உங்களுக்கு சில வருடம் முன்பே தெரிந்து இருக்கலாம்) ஆனால் எனது ஊரில் இரண்டு தலைமுறையாய் கத்தோலிக்கராய் இருக்கிறார்கள்; ஏன் உங்கள் நண்பர் துரையப்பாகூட அதுதானாமே இதுபற்றி அவருடன் பேசினீர்களா?? உங்களுக்கு தெரியும் என்பதால் எங்களுக்கு தெரியாது என சொல்வது மிக அருமை, உங்களிடம் ஆயுதம் இருந்தால் நினைக்கவே பயமாக உள்ளது, பல்லிக்கு எது தெரியும் தெரியாது என விவாதிப்பதானால் மதம் இனம் சாதி தவிர்த்து வாங்க பேசுவோம்; (அது மூன்றையும் தவிர்த்தால் நந்தாவால் பேசவருமா??)பல்லிக்கு வரும்;
T Sothilingam
தோழர்களுக்கு
கடந்த 30 வருட புலிகளின் + இயக்க வரலாறுகள் பேச்சு எழுத்து சுதந்திரத்தின் மீது சுமத்திய அராஜகத்தின் பாதிப்பே இன்றும் இந்த கட்டுரைகளின் மீது எழும் கருத்து மோதல்களாகும். இல்லையேல் கடந்த 30 வருடங்களில் எமது சமூகத்திடையே இருந்த சாதியப் பிரச்சினைகள் சமயப்பிரச்சினைகள் இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கான காரணிகள் என்பன பற்றிய கருத்தாடல்களை மிகவும் செழுமையாக நடைபெற்று தமிழ் மக்களுக்கும் சரி இலங்கையில் நிரந்தர சமாதானத்திற்கான அரசியற்பாதை என்ன என்ன என்பதையும் தேர்ந்தெடுத்திருக்க முடிந்திருக்கும். இந்த காரியங்களை பொதுமைப்படுத்தி செய்யமுடியாமைக்கு பயங்கரவாதிகளே முக்கிய காரணமாகி விட்டனர்.
இனியும் புலிகளை காரணம் சொல்லிக் கொண்டிராமல் நாமே மீண்டும் ஆரம்பகாலங்களிலிருந்த சுதந்திரமான கருத்தாடல்களுக்குரிய களங்களை திறக்க வேண்டும். இந்த விடயத்தில் புலிகளின் அழிவு எவ்வளவு தேவையாகிவிட்டது. இனிமேலும் தொடரந்து கருத்தாடல்களை பல தளங்களிலும் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தும் மற்றவர்களின் கருத்துக்கள், கருத்துக்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டும் தொடர்ந்தும் கருத்துக்களை பகிர வேண்டும் பல விடயங்களையும் பற்றியும் பேச வேண்டிய தேவை உள்ளதும் அதற்கான தளங்களில் நாம் நிற்கவும் தயாராக வேண்டும்.
பாண்டியனின் கட்டுரை பல தோழர்களை தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வைத்துள்ளதே. இதன் மூலமே புதியவழி ஒன்று உருவாக முடியும் இந்த புதியவழியை நோக்கி ஒரு அங்குலம் நடந்தாலும் பரவாயில்லை செயற்படுவோம்.
இதில் தேசம்நெற்றும் தனது கடமைகளை செய்யும்.
நேற்றய ஜபிசி ரேடியோவின் நிகழ்ச்சியினை கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் எப்படி மீண்டும் இனவாத பிரிவினைவாதிகளால் மீண்டும் ஒரு முள்ளிவாய்ககால் கட்டப்படுகின்றது என்பதையும் மீண்டும் மக்களின் பணத்தை போராட்டத்தின் பெயரால் மீண்டும் கொள்ளையிட திட்டமிடுகின்றனர் என்பதையும் புரிந்திருக்க முடியும் இதற்காக இன்னோர் தளத்தில் இதை விமர்சிப்போம்.
NANTHA
பல்லி இதுவரை பதில் சொல்லாத கேள்விகள் :
1 . பாதிரிகள் எதற்காக புலிகளுடன் சேர்ந்து வங்கி கொள்ளை முதல் பிள்ளை பிடி வரை நடத்தினார்கள்?
2 . இந்து மதத்துக்கு எதிராக விஷம் கக்கும் பாதிரிகள் 95 % இந்துக்களைக் கொண்ட தமிழ் சமூகத்துக்கு எதனை எடுத்துக் கொடுக்க புறப்பட்டார்கள் ?
3 . ஜே ஆர் இன் கடிதங்கள் என்று குறிப்பிடப்படுவதை விட பாதிரிகளால் எழுதப்பட்ட கடிதம் என்று சொல்ல திருச்சபை தடுக்கிறதோ?
4 . மேற்கு நாடுகள் மார்க்சிசத்துடன் “செய்துள்ள சமரசங்கள்” பற்றி எதுவித பதிலையும் கொடுக்காத நோக்கம் என்ன? (சில வேளைகளில் உங்களுடைய மார்க்சிச எதிர்ப்பு கோஷம் விலை போகாது என்ற பயமோ?)
உமா மகேஸ்வரனும், சந்ததியாரும் “தமிழ்” என்ற வட்டத்துக்குள் நின்று அழிந்து போனவர்கள். மார்க்சிசத்தை பற்றி தெரிந்திருந்தால் “தமிழ்” என்று தொடங்கி கொலை கொள்ளை வரை போயிருக்க மாட்டார்கள். அவர்களை விபரம் புரியாமல் “மார்க்சிஸ்டுகள்” என்று கதை கட்ட பல்லி முயல்வது பரிதாபம்.
எனக்கு இவர்கள் மாத்திரமல்ல பல ” இயக்க தலையாரிகளையும்” கண்டு பேசிய அனுபவம் உண்டு. அப்போதும் இப்போதும் ” தமிழ் என்பது மக்களின் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது. தமிழ் பேசுபவர்களுக்கு மேலும் கஷ்டங்களையே கொடுக்கும்” என்று அடித்து சொல்லுகிறேன்.
தமிழ் என்று கொள்ளை கொலை நடத்தலாம். அதற்கு வெளிநாடுகளிலும் பங்காளிகள் வருவார்கள். தவிர “உன்னுடைய கடவுளை விட என்னுடைய கடவுள் திறம்” என்று கேணைத்தனம் பண்ணும் பாதிரிகளும் இந்த கொலை கொள்ளைகளுக்கு கூட்டுச் சேருவார்கள். தமிழனிடம் உள்ள பொன்னையும் பொருளையும் பிள்ளைகளையும் கொள்ளையிட்டு “இரும்பு” கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிக்கவும் செய்வார்கள்.
மனித வர்க்கம் அனுபவங்களில் இருந்து “பாடங்கள்” படிக்க வேண்டும். இத்துப்போன(பல்லியின் பாஷை) வட்டுக்கோட்டை தீர்மானம் என்று ஆள நினைப்பதில் “தமிழர்களை” இன்னமும் ஏமாற்றலாம் என்ற நம்பிக்கையை கொண்டவர்கள் இன்னமும் முயற்சிக்கிறார்கள். பாடங்கள் படித்ததாக தெரியவில்லை.
Ajith
Vaishanavi,
you must be aware that over 10,000 LTTE suspects were sent abroad after giving a bribe of 25 lacks each for Presiden’t brother.
palli
//பல்லி இதுவரை பதில் சொல்லாத கேள்விகள் ://
பலதை தேசம் தனிக்கை செய்து விட்டது; அதை நான் எழுதியும் உள்ளேன்; அது பல்லி இப்படி எழுதகூடாது என நல்லெண்ணமாக இருக்குமென நான் நினைக்கிறேன்; மார்க்ச்சியம் பற்றி உங்களுடன் மட்டுமல்ல உங்களை கற்பித்த ஆசனுடன் நான் விவாதிப்பேன், காரனம் எனது கருத்துக்கள் கடன் வாங்க பட்டவை அல்ல; எனது கருத்தே(படிப்பல்ல அனுபவம்) உங்களுக்கு தலமை பல தெரியும் என்பது தெரிகிறது, ஜேயாருடனே பழகும் போது இவர்கள் சின்ன பெடியள்தான்; ஆனால் உமாமகேஸ்வரனுக்கு மார்க்ச்சியம் தெரியாது என சொல்வதால் உங்கள் நிலை புரிகிறது, இந்திரா காந்தியே உமாவின் திறமை கண்டு பாராட்டினாராம், கழகத்தினர் சொல்வார்கள்; செயல்பாடு வேறு திறமை வேறு;
முடிந்த மட்டும் உங்கள் கேள்விக்கு எனது பதில்கள்;
//1 . பாதிரிகள் எதற்காக புலிகளுடன் சேர்ந்து வங்கி கொள்ளை முதல் பிள்ளை பிடி வரை நடத்தினார்கள்? //
எந்தெந்த வங்கியை எந்தெந்த பாதிரிகள் கூட்டாய் கொள்ளை அடித்தனர் என்பதை சொன்னால் அதுக்கான விளக்கம் சொல்வேன், இதில் பாதிரிகள் மட்டுமா செயல்பட்டனர், அப்படி இல்லையாயின் ஏன் பாதிரி மீது கொலைவெறி, உங்கள் கேள்வி வங்கிகொள்ளை பற்றியதா? அல்லது ஏன் பாதிரி அதில் கலந்து கொண்டனர் என்பதா?? கருத்துக்கு இந்த பதில் போதும்; ஆனால் உங்கள் கடுப்புக்கு எனது பதில் எழுதினாலும் தேசம் தணிக்கை செய்து விடும்;
//2. இந்து மதத்துக்கு எதிராக விஷம் கக்கும் பாதிரிகள் 95 % இந்துக்களைக் கொண்ட தமிழ் சமூகத்துக்கு எதனை எடுத்துக் கொடுக்க புறப்பட்டார்கள் ? //
இது பாதிரி என்னத்தை கொடுக்கிறார் போறவர்கள் எதை பெற்று கொள்கின்றனர் என நாம் ஆய்வு செய்ய முடியாது; நான் முன்பு ஒரு முறை சொன்னேன் (உங்களுக்கல்ல) எம்மை யார் மதிக்கிறார்களோ அவர்களை மதிப்போம் பின்செல்வோம்; யார் அடிமை படுத்துகிறார்களோ அவர்களை விட்டு ஒதுங்குவோம் என; இதுதானே யதார்த்தம்; தினம் நீங்கள் மிரிப்பதுக்காக நாம் உங்களின் காலுக்குள் படுக்க வேண்டுமா?
//3 . ஜே ஆர் இன் கடிதங்கள் என்று குறிப்பிடப்படுவதை விட பாதிரிகளால் எழுதப்பட்ட கடிதம் என்று சொல்ல திருச்சபை தடுக்கிறதோ?//
இரண்டுமே பொய் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கு தெரியும்; அதனால் நீங்கள் கடுப்பில் சொல்லிய பொய்யைவிட பெருமையாய் சொல்லிய பொய்யை பெருமை படுத்தினேன்; நந்தா நாமும் 30 வருடமாய் நாக்கு முக்கா பாடியவர்கள்தான்; உங்கள் திரைகதையை உங்கள் வீட்டு பேர பிள்ளைகளிடம் சொல்லுங்கள் தூக்கம் வரும்; படிக்கவும் குலனின் உலகமயமாக்கல் கட்டுரையையும் பின்னோட்டங்களையும்; அங்கே இருக்கிறது உன்மை;
//4 . மேற்கு நாடுகள் மார்க்சிசத்துடன் “செய்துள்ள சமரசங்கள்” பற்றி எதுவித பதிலையும் கொடுக்காத நோக்கம் என்ன? (சில வேளைகளில் உங்களுடைய மார்க்சிச எதிர்ப்பு கோஷம் விலை போகாது என்ற பயமோ?)//
அப்படி சொல்லமுடியாது; நான் இன்றுவரை குடியுரிமை எடுக்கவில்லை (விருப்பம் இல்லாமல் இல்லை முடியவில்லை
என சொல்லலாம்) அதனால் பக்கத்துவீட்டில் என்ன நடக்குது என எட்டிபார்ப்பது நாகரிகமல்ல; எமது வீட்டில் பல பிரச்சன்னைகள் இருக்கும் போது நமக்கேன் வம்பு என இருந்து விட்டேன்; ஆனாலும் ரஸ்யாவில் சிலகாலம் தங்க வேண்டி வந்தது (இங்கு வரத்தான்) அப்போது அங்கு நடக்கும் மார்க்ச்சியம் எப்படி உள்ளது அதை மாவியாக்கள் எப்படி செயல்படுத்துகிறார்கள் ஏன தாங்கள் செலவு செய்தால் ஒரு புத்தகம் எழுதலாம்; நான் ரெடி நந்தா எப்படி??
//உமா மகேஸ்வரனும், சந்ததியாரும் “தமிழ்” என்ற வட்டத்துக்குள் நின்று அழிந்து போனவர்கள். மார்க்சிசத்தை பற்றி தெரிந்திருந்தால் “தமிழ்” என்று தொடங்கி கொலை கொள்ளை வரை போயிருக்க மாட்டார்கள். //
அப்படியானால் இலங்கையில் ஒரு நல்ல மார்க்சியவாதி பெயரை சொல்லுங்கள் தெரிந்து கொள்ள ஆவல்;
//எனக்கு இவர்கள் மாத்திரமல்ல பல ” இயக்க தலையாரிகளையும்” கண்டு பேசிய அனுபவம் உண்டு.//
உங்கள் எழுத்தில் அப்படி தெரியவில்லை, எதோ குடுகுடுப்பை சாமிபோல் அல்லவா அருள் சொல்லுறியள்; ஜேயாருடனும் தொடர்பு; இயக்கத்துடனும் தொடர்பு அடேங்கபா; அன்றய நோர்வே நீங்கள் என சொல்லுங்கோ;
//தமிழ் என்று கொள்ளை கொலை நடத்தலாம். அதற்கு வெளிநாடுகளிலும் பங்காளிகள் வருவார்கள். தவிர “உன்னுடைய கடவுளை விட என்னுடைய கடவுள் திறம்” என்று கேணைத்தனம் பண்ணும் பாதிரிகளும் இந்த கொலை கொள்ளைகளுக்கு கூட்டுச் சேருவார்கள். தமிழனிடம் உள்ள பொன்னையும் பொருளையும் பிள்ளைகளையும் கொள்ளையிட்டு “இரும்பு” கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிக்கவும் செய்வார்கள்//
இயக்கம் ஆரம்பித்தது 30வருடம் ஆனால் கத்தோலிக்கர் ஈழவர் பக்கம் வந்தது?? நண்பர்களே இதுக்கு பதில் சொல்லுங்கள் புலி வந்தபின் கத்தோலிக்க கோவில் கட்டியதாய் நான் கேள்விபடவில்லை, அதுக்கு பழிவாங்கதான் இப்போதெல்லாம் பல தமிழர் புலம்பெயர் தேசத்தில் நீங்கள் சொன்னதையும் குடுத்து விட்டு அரச வங்கிகளில் லட்ச்சம் பல சுருட்டி கொண்டு நடந்து போகினமோ;
//மனித வர்க்கம் அனுபவங்களில் இருந்து “பாடங்கள்” படிக்க வேண்டும். இத்துப்போன(பல்லியின் பாஷை) வட்டுக்கோட்டை தீர்மானம் என்று ஆள நினைப்பதில் “தமிழர்களை” இன்னமும் ஏமாற்றலாம் என்ற நம்பிக்கையை கொண்டவர்கள் இன்னமும் முயற்சிக்கிறார்கள். பாடங்கள் படித்ததாக தெரியவில்லை//
அது மக்கள் தவறல்ல உங்களை போன்றோர் காட்டும் விசுவாசம் அவர்களை அவர்கள்தான் தமக்காக செயல்படுவதாக நினைக்க தோன்றும், திருசபைமீது உங்கள் கல்லெறி எத்தனை கத்தோலிக்கர் இனிமேல் புலி மீது அன்புகொள்ள வைக்கும் என்பது கூட தெரியாதா நந்தா எழுதிய கேள்வி அனைத்துக்கும் பல்லி பதில் தந்துள்ளேன்;
rohan
பல்லி// திருசபைமீது உங்கள் கல்லெறி எத்தனை கத்தோலிக்கர் இனிமேல் புலி மீது அன்புகொள்ள வைக்கும் என்பது கூட தெரியாதா நந்தா //
நந்தாவின் எழுத்துக்களுக்குப் பலர் பெரிய ‘வெயிற்’ கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
தம் சிரமமும் உயிர் இழக்கும் நிலைமைகளையும் பாராது பல பாதிரிமார்கள் கடந்த 30 ஆண்டுகளில் சமூகத்துக்குச் செய்த உதவியை தமிழர் அறிவர்.
அவர்கள் போதனையில் கடவுள் செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வது அவர்கள் கடமை. செய்கிறார்கள் – செய்து விட்டுப் போகட்டுமே! போகிற வழியில் பஸ்ஸை விட்டவர்கள் முதல் குடித்து விட்டுக் கிடப்பவர்கள் வரை தமது தேவாலயங்களுக்கு அழைத்துப் போய் உணவும் உட்கந்து சரிய ஒரு இடமும் தந்து விடாத பாதிரிகள் தம் சேவையில் தவறியவர்களாகவே கணிக்கப்பட்டனர்.
மில்லர் இல்லாத மட்டக்களப்பு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யவே முடியவில்லை என்று எனது கிழக்கு நண்பர்கள் சொல்வர்.
புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் பாதிரிகள் வந்து இறங்கிய இடத்தில் அந்தரிக்கும் இளைஞர்களுக்குச் செய்யும் உதவி மகா பெரிது. சைவக் கோயிலுக்கு இளைஞைக் கொண்டு போய் விட்டு விட்டு அவர்கள் வரும் வரையில் காத்திருந்து வீட்டிலும் இறக்கி விடும் இரண்டு பாதிரிமார்களை நான் அறிவேன்.
நன்றி கெட்ட சாதி அல்லாவா நம் சாதி?
மாயா
நந்தா சொல்வதிலும் உண்மையிருக்கிறது. றோகன் சொல்வதிலும் உண்மையிருக்கிறது. இதற்கு உதாரணமாக தமிழர்கள் எல்லாம் புலிகளுமல்ல என பார்க்கலாம். பல மத குருக்கள் நல்லவர்கள் , ஒரு சிலர் மகா மோசமானவர்கள். அதற்காக அந்த மதத்தையோ அல்லது அதை பின்பற்றுவோரையோ மனம் நோகப் பண்ணக் கூடாது. இதுவே என் கருத்தாகும். புலிகளை வளர்த்து , புலிகளின் தேவைக்காக புலிகளாலேயே ஒரு மதகுரு கொல்லப்பட்டார்.
இதேபோல , புலிகளது கொடியை மடு தேவாலய முற்றலில் ஏற்றக் கூடாது என புலிகளை கண்டித்த மதகுருக்களும் , அதற்காக புலிகளுக்கு எதிராக போராடிய மதக்குருக்களும் மன்னார் மாவட்டத்தில் இருக்கிறார்கள். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களை கண்காணித்த மதகுருக்களும் , புலிகளது கண்டிப்புகளையும் மீறி , அவர்களைப் பாதுகாத்தோரும் இருக்கவே செய்கிறார்கள்.
இருந்தாலும் இந்து சமயத்தை விட , பெளத்தம் கிறிஸ்தவ மதத்தை இல்லாமல் செய்துவிடும் எனும் மனநிலை இருந்தது. அதுவும் இப்போது மாறியுள்ளது . காரணம் மகிந்தவின் மனைவி கிறிஸ்தவர். மகிந்த மணமுடித்ததும் கிறிஸ்தவ ஆலயத்தில்தான். மகிந்தவின் வளர்ப்பு மகன் ஒரு தமிழர். இவை சிலதை மீறிய ஒரு செயல்.
என்னைப் பொறுத்தவரை எம் மதமும் சம்மதம். மனிதம் எனும் மதத்துக்கு மேல் எந்த மதமும் வெற்றி பெற முடியாது. எந்த மதமும் , கொலை – கொள்ளை – கெடுதல் செய்யச் சொல்லவில்லை. நல்லதை போதித்தன. அதை கையெழுத்தவர்கள் செய்யும் செயல்கள் அந்த புனிதத்தையே கெடுத்து நிற்கின்றனர். மதம் , மனிதனைப் பிரிக்கும் ஒரு கருவியல்ல. அவை மனிதத்தை நிலை நாட்டவே தோன்றின.
தமிழ்வாதம்
மதம் பிடித்த மனிதர்களே மதத்தை உருவாக்கினார்கள். எம்மதமும் சம்மதமில்லை என்று மனிதன் சிந்திக்கின்றானோ அன்றைக்கே மனிதனுக்கு மனிதத்துவம் தெரியும். இந்த யதார்த்தம் புரிகிற வரையில் சுத்துமாத்துகள் என்பதெல்லாம் தொடர் கதைதான்….
BC
தமிழ்வாதம், மதம் பற்றி சரியாச் சொன்னீர்கள்.
rohan
மாயா //இருந்தாலும் இந்து சமயத்தை விட , பெளத்தம் கிறிஸ்தவ மதத்தை இல்லாமல் செய்துவிடும் எனும் மனநிலை இருந்தது. அதுவும் இப்போது மாறியுள்ளது . காரணம் மகிந்தவின் மனைவி கிறிஸ்தவர். மகிந்த மணமுடித்ததும் கிறிஸ்தவ ஆலயத்தில்தான். மகிந்தவின் வளர்ப்பு மகன் ஒரு தமிழர். இவை சிலதை மீறிய ஒரு செயல்.//
ஒரு சுவையான அவதானத்தின் பகிர்வு இது.
தனிப்பட மகிந்த ஒரு வெறியர் அல்ல என்பது தான் எனது நிலைப்பாடும்.
அவரது சகோதரியின் கணவரும் அபிமானத்துக்குரிய பெறாமகளின் கணவரும் தமிழர்கள்.
தாம் சாப்பிட வழி இல்லாவிட்டாலும் கோடிக் கணக்கில் செலவு செய்து தேர் செய்யும் இனம் நம் இனம். அவர்களது சமயம் அழியாது!
பலவந்தமாக அரச மரங்களும் புத்தர் சிலைகளும் அவற்றைக் காட்டி ‘ஆயுத ஆதரவுடன்’ தமிழர்களிடமிருந்து நிலப் பறிப்புகளுமே எனது விசனத்தின் பின்னணி.
Suman
நந்தா//இந்துக்கள் மாத்திரம் “எம்மதமும் சம்மதம்” என்பார்கள். அதன் அர்த்தம் பாதிரிகளை தலை மேல் சுமக்க வேண்டும் என்பதல்ல. எந்த “கிறிஸ்தவனும்” எம்மதமும் சம்மதம் என்று மறந்தும் சொல்லப் போவதில்லை.// உண்மை. எம்மதமும் சம்மதம் அல்ல எம்மதமே சம்மதம்.
இந்துக்கள் மட்டும் எம்மதமும் சம்மதமாய் வாழந்தபோது மற்ற மதத்தவர்கள் தலையில் ஏறியிருந்த தப்பினார்கள். இனியும் இதை ஏற்ற இயலாது. புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் வீடுவீடாய் சென்று மதம் பிடிக்கவைக்கிறார்கள். கத்தோலிக்கர்கள் இந்துக்கலைகளைத் தமிழ்கலைகள் என்று மாக்சிசமே மார்க்கம் இந்துக்களை ஒழியுங்கள் என்று பரப்புரை செய்கிறார்கள். எந்தக் கிறிஸ்தவனை எடுத்தாலும் இந்துக்களை அழிப்பதில் அக்கறையாக இருக்கிறார்கள். இந்துக்கள் எம்மதமும் சம்மதம் என்று தலையாட்டி அழிந்து போய் கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவகுடுப்பங்களில் பிறந்த எந்தவொரு இலங்கைத்தமிழன் நல்ல மாக்சிட்டாக இருக்க இயலாது. அன்று இந்துமதத்தை அழிக்க ஒருகையில் குரானுடனுடனும் மறுகையில் வாழுடனும் வந்தார்கள். கிறீஸ்தவர்களோ கம்யூனிசத்தை முன்கையிலும் பைபிளை முதுகின் பின்னாலும் கொண்டு திரிகிறார்கள். இந்துக்கள் ஆயுதங்களை இறைவனிடம் கொடுத்துவிட்டு மனநின்மதியுடன் வாழ்ந்தோம். கொடுத்த ஆயுதங்களை இறைவனிடம் இருந்து திருப்பி வாங்கவேண்டும் என்கிறீர்களா? நந்தா கத்தோலிக்கப்பாதிரிகள் மட்டுமல்ல சகல கிறீஸ்தவர்களும்; கிறீஸ்தவப் பாதிரிகளும் நீங்கள் சொன்னதையே செய்தார்கள். இராமர் கோயில் இடிப்பு என்றாலும் சரி ஊர்களில் நடக்கும் மதக்கலவரங்கள் என்றாலும் சரி இந்துக்களை இந்துக்கள் கட்டித்திருக்கிறார்கள். என்றாவது கிறீஸ்தவர்கள் பாதிரிமார்கள் என்றாவது கிறீஸ்தவர்கள் தம்மவர்களைக் கண்டித்தார்களா? நந்தா போன்றவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Suman
சந்திரன் ராஜா: மாக்ஸியத்தின் கதை மனிதவரலாறு பற்றிய கதை; மாக்சிசதத்தை பைபிளைப்போல் ஒரு கதைப்புத்தகம் என்கிறீர்களா. மாக்ஸ் மட்டும் ஆய்வுகள் செய்வில்லை. அவர் செய்த ஆய்வுகளைப்போல் மன்மடங்கு ஆய்வுகள் நடந்து நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்தக் கொமினிஸ்க்கள் என்றும் இந்த மாக்சின் கனவில் இருந்து விடுபடவில்லை. தொடர்ந்தும் ஆண்கள் மாக்ஸ் மாக்ஸ் என்றால் மக்கள் வித்தியாசமாக யோசிக்கப் போகிறார்கள். கவனமாக் கதையுங்கோ
ரோகான்: //அவர்கள் போதனையில் கடவுள் செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வது அவர்கள் கடமை. செய்கிறார்கள் – செய்து விட்டுப் போகட்டுமே! // உப்பிடி செய்துவிட்டுப் போகட்டுமே என்று அன்று விட்டபடியால்தான் இன்று நாம் இப்படி அடிபடுகிறோம். தொடர்ந்து கிறீஸ்தவர்கள் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டால் ஆயுதம் தூக்கும் நிலைகளும் எற்படும். அன்று வெள்ளைக்கார ஐரோப்பியர்கள் கொட்டிவிட்டுப் போனதை இவர்கள் எமக்குத் கொட்ட நிற்கிறார்கள். செய்துவிட்டுப் போனதால் வந்த விளைவுகள் தெரியவில்லையா?
NANTHA
// இரண்டுமே பொய் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கு தெரியும்; அதனால் நீங்கள் கடுப்பில் சொல்லிய பொய்யைவிட பெருமையாய் சொல்லிய பொய்யை பெருமை படுத்தினேன்; நந்தா நாமும் 30 வருடமாய் நாக்கு முக்கா பாடியவர்கள்தான்; உங்கள் திரைகதையை உங்கள் வீட்டு பேர பிள்ளைகளிடம் சொல்லுங்கள் தூக்கம் வரும்; படிக்கவும் குலனின் உலகமயமாக்கல் கட்டுரையையும் பின்னோட்டங்களையும்; அங்கே இருக்கிறது உன்மை;//
நான் சொன்ன விடயம் டாக்டர் ராஜ சுந்தரம் காட்டிய கடிதம் பற்றியது. அது இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியாமல் பந்திக்கணக்கில் உங்கள் “விபரம்” கெட்ட தன்மையை காட்டியிருக்கிறீர்கள். அது “பொய்” என்றால் எப்படி என்று சொல்ல வேண்டும்!
“தமிழ் ஈழம்” என்று சொன்னவுடன் அது சரியா தப்பா நடக்குமா நடக்கக் கூடியதா என்று ஆராயாது இன்னமும் “தமிழ்” என்று சத்தமிடுபவர்களால் “தமிழர்களுக்கு” மீண்டும் உபத்திரவமே ஒழிய உதவி இல்லை. சில வேளைகளில் பாதிரிகளோடு “வெளிநாட்டில்” தமிழ் என்று சத்தமிட்டால் சில்லறை கிடைக்கும்.
உமாமகேஸ்வரன் ஒரு “மார்க்சிஸ்ட்” என்ற கண்டு பிடிப்பு பல்லியால் முடிந்திருக்காது. ஆனால் “பாதிரிகளின்” பிரச்சாரத்தில் புலிகளை எதிர்த்தவர்கள் அனைவரும் மார்க்சிஸ்டுகள் என்று உள்ளது. அதாவது அமெரிக்கர்களின் “மார்க்சிச ஒழிப்பு” என்ற பெயரில் புலிகளின் கொலைகளுக்கு பாதிரிகள் கொடுத்த “ஞான விளக்கம்”. பல்லி போன்றவர்களுக்கு பாதிரிகளின் சொல் நன்றாக ஏறியுள்ளது. பல்லியின் எழுத்துக்களை சீரியஸாக எடுத்தால், ஜெயவர்த்தனாவையும் “மார்க்சிஸ்ட்” என்று சொல்லி அழவேண்டி இருக்கும்.
சம்பந்தப்பட்ட வங்கிகளின் பெயர்களைத் தந்தால் பல்லியும் பாதிரிகளும் நஷ்ட ஈடு கொடுக்கப் போகிறார்களோ?
கொலைகாரர்களோடு பாதிரிகள் சேர்ந்து கொண்டு ஏன் அலைந்தார்கள் என்ற கேள்விக்கு பதில் இன்னமும் இல்லை. ஆனால் “பாதிரிகள்” உத்தம புத்திரர்கள் என்பதன் மூலம் பாதிரிகளின் கொலை வெறிகளை மூடி மறைக்க முடியாது.
தவிர “பதில் எழுதினால் தேசம் தணிக்கை செய்துவிடும்” என்பது நொண்டிச்சாக்கே ஒழிய உங்களிடம் பதில் கிடையாது என்பதுதான் உண்மை.
“பாதிரிகள் மட்டுமா” என்ற எழுத்தில் பல்லிக்கு பாதிரிகளும் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள் என்பது நன்கு தெரிந்துள்ளது.
//2. இந்து மதத்துக்கு எதிராக விஷம் கக்கும் பாதிரிகள் 95 % இந்துக்களைக் கொண்ட தமிழ் சமூகத்துக்கு எதனை எடுத்துக் கொடுக்க புறப்பட்டார்கள் ? //
நீங்கள் இதற்கு பதில் தரவில்லை. ஆனால் மத மாற்றம் பற்றி நான் கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாத வரிகளை எழுதி பாதிரிகள் தமிழ் என்று சத்தமிடுவதன் காரணத்தை சொல்ல முடியாமல் தவிப்பது தெரிகிறது.
//4 . மேற்கு நாடுகள் மார்க்சிசத்துடன் “செய்துள்ள சமரசங்கள்” பற்றி எதுவித பதிலையும் கொடுக்காத நோக்கம் என்ன? (சில வேளைகளில் உங்களுடைய மார்க்சிச எதிர்ப்பு கோஷம் விலை போகாது என்ற பயமோ?)//
அப்படி சொல்லமுடியாது; நான் இன்றுவரை குடியுரிமை எடுக்கவில்லை (விருப்பம் இல்லாமல் இல்லை முடியவில்லைஎன சொல்லலாம்) அதனால் பக்கத்துவீட்டில் என்ன நடக்குது என எட்டிபார்ப்பது நாகரிகமல்ல; எமது வீட்டில் பல பிரச்சன்னைகள் இருக்கும் போது நமக்கேன் வம்பு என இருந்து விட்டேன்; ஆனாலும் ரஸ்யாவில் சிலகாலம் தங்க வேண்டி வந்தது (இங்கு வரத்தான்) அப்போது அங்கு நடக்கும் மார்க்ச்சியம் எப்படி உள்ளது அதை மாவியாக்கள் எப்படி செயல்படுத்துகிறார்கள் ஏன தாங்கள் செலவு செய்தால் ஒரு புத்தகம் எழுதலாம்; நான் ரெடி நந்தா எப்படி??//
மேற்படி பல்லியின் பதிலுக்கும் என் கேள்விக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று படிப்பவர்கள் சொன்னால் நல்லது.
//புலி வந்தபின் கத்தோலிக்க கோவில் கட்டியதாய் நான் கேள்விபடவில்லை, // பாதிரிகளே சிரிக்கப் போகிறார்கள்.
//கத்தோலிக்கர் இனிமேல் புலி மீது அன்புகொள்ள வைக்கும் // இனிமேல்தான் பாதிரிகள் புலி மேல் அன்பு கொள்ளப் போகிறார்களா? புலி எங்கே இப்போது உள்ளது?
பதினைந்து வருடத்துக்கு முன்னரே இம்மானுவல் பாதிரி ” TIGERS ARE THE DIVINE SOLDIERS OF CHRIST” என்று சொன்ன வாசகத்தின் பொருளை யாரிடமாவது கேட்டு விளக்கம் பெற்றால் நல்லது!
NANTHA
//புலிகளின் தேவைக்காக புலிகளாலேயே ஒரு மதகுரு கொல்லப்பட்டார். // அது யார்?
//இதேபோல , புலிகளது கொடியை மடு தேவாலய முற்றலில் ஏற்றக் கூடாது என புலிகளை கண்டித்த மதகுருக்களும் , அதற்காக புலிகளுக்கு எதிராக போராடிய மதக்குருக்களும் மன்னார் மாவட்டத்தில் இருக்கிறார்கள். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களை கண்காணித்த மதகுருக்களும் , புலிகளது கண்டிப்புகளையும் மீறி , அவர்களைப் பாதுகாத்தோரும் இருக்கவே செய்கிறார்கள்.//
இது எனக்கு புது தகவல். அப்படி புலிகள் மடுவில் கொடியேற்றம் செய்ய முனைந்தார்கள் என்பதே நடக்க முடியாத ஒன்று. மன்னார் பாதிரி ராயப்பு மடு மாதாவை தூக்கிக் கொண்டு புலிகளின் எல்லைக்குள் ஓடியது ஏன் என்று மாயா சொன்னால் நல்லது! புலிக் கொடியை தடுத்த பாதிரிகள் எப்படி ராயப்புவை மடு மாதாவுடன் புலிகளின் பகுதிக்குள் ஓட விட்டார்கள்? புரியவில்லையே?
பொட்டு வைத்த ஐயருக்கு பொட்டில் வெடி வைத்து கொன்ற புலிகள் “பாதிரிகளுடன்” சமரசம் செய்தார்கள் என்றால் நம்ப முடியாது. அப்படி நடந்திருந்தால் புலிகள் அந்த பாதிரிகளை எப்படி விட்டு வைத்தார்கள்?
kalaignar
Sri Lanka, a major tea producer, continues to maintain its position as the world’s highest tea export revenue earner although it has lost its number one position to Kenya as the highest exporter in the world, a couple of years ago.
Tea Board of Kenya announced that it had overtaken Sri Lanka as the world’s leading tea exporter after exporting 342 million kilogrammes to 47 world markets, accounting for 22% of the world tea exports last year.
chandran.raja
சுமன்!.மாக்ஸியம் மனிதவரலாற்றின் கதையில்லாமல் செவ்வாய் கிரகத்தைப்பற்றியோ அல்லது ஜேம்ஸ் கமறோனின் “பண்டுரா”வைப் பற்றிய கதையா? கொஞ்சம் பொறுமையாக விளக்கம் தாங்கோவேன். நான் மட்டுமல்ல வாசகர்களும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.
உங்கள் பின்னோட்டம் விளக்கத்தை விட மிரட்டலாகவே கூடுதலாக தொனிக்கிறது.
மாயா
வடகிழக்கு மாகாண மனித உரிமைச் சங்கத்தை வழிநடத்திய கருணாரட்ணம் அடிகளாரை ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்கியது என சொன்னாலும் , அது புலிகளாலேயே நடத்தப்பட்டது. இக் காலத்தில் மனித உரிமை கூட்டமொன்று ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஈழப் பிரச்சனை பேசப்படவும் , புலிகளுக்குள் அவரது செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததால் , அவரை அழிக்கும் நோக்கமும் கொண்டு , ஒரு கல்லில் இரு மாங்காய்களாக இக் கொலையை புலிகள் செய்தனனர்.
//மன்னார் பாதிரி ராயப்பு மடு மாதாவை தூக்கிக் கொண்டு புலிகளின் எல்லைக்குள் ஓடியது ஏன் என்று மாயா சொன்னால் நல்லது! புலிக் கொடியை தடுத்த பாதிரிகள் எப்படி ராயப்புவை மடு மாதாவுடன் புலிகளின் பகுதிக்குள் ஓட விட்டார்கள்? புரியவில்லையே?//
ஜோசப் ராயப்பு பாதிரியல்ல. அவர் மன்னார் ஆயர். இவர் சந்திரிகாவுக்கு மிகவும் நெருக்கமானவர். மடு தேவாலயத்தின் மீது புலிகள் எறிகணைகளை வீசி , மடு சொரூபமும் , கோயிலும் சிதைக்கப்படும் எனும் தன்மையை உருவாக்கினார்கள். இச் செயல் வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும் என தப்புக் கணக்கு போட்டனர். நடந்ததோ வேறு, வெளிநாட்டில் எந்தவொரு தாக்கமும் உருவாகவில்லை. இத்தாலியின் , றோம் ராஜ்யத்தின் வத்திக்கான் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சில மதகுருகள் புலிகளோடு சமரசமானதை உலகமே அறிந்திருந்தது. அவர்களுக்குள்ளும் மரண அச்சுறுத்தலும் , பீதியும் இருக்கவே செய்தன. ஆயுதம் ஏந்திய வெறியர் முன் அகிம்சையாவது , போதனையாவது…..?
Suman
/சுமன்!.மாக்ஸியம் மனிதவரலாற்றின் கதையில்லாமல் செவ்வாய் கிரகத்தைப்பற்றியோ அல்லது ஜேம்ஸ் கமறோனின் “பண்டுரா”வைப் பற்றிய கதையா? கொஞ்சம் பொறுமையாக விளக்கம் தாங்கோவேன்/chandran raja
மாக்சிசம் காலத்துக்கேற்ற மாற்றங்களை உள்வாங்க முடியாது இருப்பதனால் சரித்திரமாகிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. சோவியத் உடைவு; சீனாவின் வலதுசாரித்துவ நுளைவு போன்றவை இதற்கு உதாரணங்கள். ஏட்டுச் சுரக்காய் அனேகமாக கறிக்கு உதவாது. மதங்கள் கொண்டு திரியும் பைபிள்; குரானும் இதற்குள் அடங்கும். தாங்கள்தான் கதை என்று எழுதினீர்கள் அதையே நானும் திருப்பி எழுதுதினேன். நீங்களே “மாக்ஸிசம் மனதவரலாற்றின் கதை” என்றபின் அதற்கு விளக்கம் தரவேண்டியது நானல்ல நீங்கள்தான். வரலாறு என்பது முடிந்தது. கதை என்பது புனைந்தது. எதை எப்படி எழுத்தாலும் எனக்குச் சரிதான். நான் ஒரு இந்துவாக இருந்தாலும் மதத்தை விட நல்ல மாற்றங்களையே விரும்புகிறேன். ஒருவனது சுயமரியாதையை மதிக்காது குத்திக்காட்டலும் குற்றம்சாட்டலும் அதிகமாகும் போது நாம் எமது மதம் சாதி என்பதைத் தேடவேண்டி ஏற்படுகிறது. இதனால்தான் குற்றம்சாட்டல் குத்திக்காட்டல்களை நாம் மறுதலிக்கும் போது எமது அடையாளங்களாக வந்த மதம் சாதி குலம் கோத்திரம் உறவுகள் அடிமனத்தில் இருந்த எழுப்பப்பட்டு விடுகிறன்றன என்பதை யாரும் மறக்கக் கூடாது.
பல்லி
நன்றி சுமன்; உங்கள் விளக்கத்துக்கு;
NANTHA
// வடகிழக்கு மாகாண மனித உரிமைச் சங்கத்தை வழிநடத்திய கருணாரட்ணம் அடிகளாரை ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்கியது//
பாதிரிகள் மனித உரிமை, பத்திரிகை சுதந்திரம், மத சுதந்திரம் என்று சொல்லும் பொழுது எப்பொழுதும் எனக்கு கேள்விகள் எழுவது வழக்கம். ஏனென்றால் பாதிரிகளின் சமயத்தில் அந்தக் கருத்துக்கள் இல்லாது வத்திக்கானிலுள்ள “பெரிய” பாதிரி சொல்வதை அப்படியே நடைமுறைப்படுத்தும் பாதிரிகள் “மனித உரிமை” என்று புறப்படும் போது தங்களின் ‘திருகுதாளங்களை” மறைக்க அல்லது அந்த மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்களோடு தங்களுக்கு இருக்கும் தொடர்புகளை மறைக்க அவர்கள் “அரசியல்” பேசத் தொடங்குகிறார்கள்.
வத்திக்கானின் போப் ஒரு நாசி என்பது உலகறிந்த விடயம். அது மாத்திரமல்ல இந்து சமயம், பவுத்த சமயம் என்பனவற்றுக்கு எதிராக பகிரங்க அறிக்கை விடும் போப் சொல்லுவதை “கத்தோலிக்கர்” மறுதலிக்க முடியாது. அப்படி மறுதலித்து கேள்வி கேட்ட கத்தொலிக்கனை எங்கள் நாட்டில் இதுவரையில் கண்டதில்லை.
அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களின் தலைவர் எப்போதும் “பிரிட்டிஷ் அரசி/அரசன்” என்பது பலருக்கு தெரிவதில்லை.
இலங்கையில் பாதிரிகளின் மனித உரிமை விளையாட்டு “அரசை” பயமுறுத்த எடுக்கப்படும் ஒரு ஆயுதம் மட்டுமே.
இந்த பாதிரிகள் யு என் பி மீது மனித உரிமைகள் மீறல்கள் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. சமாதானம் வேண்டி பிரார்த்தனை மட்டும் செய்தார்கள்.
கிளிநொச்சியில் பாதிரிகள் பிராபாகரனின் படத்தோடு (ஜேசு கிறிஸ்துவின் படத்தோடு அல்ல)அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
//ஜோசப் ராயப்பு பாதிரியல்ல. அவர் மன்னார் ஆயர். இவர் சந்திரிகாவுக்கு மிகவும் நெருக்கமானவர். மடு தேவாலயத்தின் மீது புலிகள் எறிகணைகளை வீசி , மடு சொரூபமும் , கோயிலும் சிதைக்கப்படும் எனும் தன்மையை உருவாக்கினார்கள்.//
ராயப்பு கோவில் பாதிரியாக இருந்து மாவட்ட பாதிரியாக வத்திக்கன் போப்பினால் பதவி உயர்வு கொடுக்கப்பட்ட மாவட்ட பாதிரி . ஆயர் என்பது தமிழில் வேறு அர்த்தம். எ ஜி எ பதவியில் இருந்து ஜி எ பதவி உயர்வு போல!
தவிர ராயப்பு பாதிரிதான் பிரபாகரனுக்கு பிடித்தமான ஆமை இறைச்சி சப்ளையர் என்றும் சில இணையத்தளங்களில் படித்த ஞாபகம்.
பாதிரிகள் வன்னியை படைகள் நெருங்கும் போது “புலிகள்தான் உங்களைப் பாதுகாப்பார்கள். சிங்கள இராணுவம் உங்களைக் கொலை செய்து உங்கள் பெண்களைக் கற்பழிக்க போகிறார்கள் என்று “கப்சா” விட்டு” அந்த கிராம மக்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு போய் சேர்த்தனர். அதில் இந்த ராயப்பு மாத்திரமல்ல, ஜேம்ஸ் பத்திநாதன் உட்பட பல பாதிரிகள் அடக்கம்.
அதனால்த்தான் ராயப்பு மடுமாதாவை புலிகளின் பகுதிக்கு கொண்டு ஓடினார். நீங்கள் சொல்லுவது உண்மை என்றால், அதாவது புலிகளின் செல் தாக்குதல், என்றால் பாதிரி ராயப்பு மடுமாதாவை இராணுவப் பக்கம் தூக்கிக் கொண்டு ஓடியிருக்க வேண்டும். புலிகள் இருக்கும் பொழுது “காரசாரமான” அறிக்கைகள் விட்ட ராயப்பு “புலிகள்” ஒழிந்த பின்னர் மவுன விரதம் கொண்ட மர்மம் என்ன?
வன்னியில் உள்ள இடம் பெயர்ந்த மக்களுக்கு ” ஆத்மீக வழிகாட்டல்” என்ற போர்வையில் வந்த ஆறு கத்தோலிக்க பாதிரிகளில் ராயப்புவும் ஒரு ஆள். ஆனால் ராயப்பு முகாம்கள் பற்றி “மூச்சு” விடவில்லை.
90% இந்துக்களும் நூறு வீதம் தமிழும் பேசும் மக்களைக் கொண்ட அந்த முகாம்களில் ஐந்து சிங்கள பாதிரிகளும் ஒரு தமிழ் பாதிரியும் எதற்கு வந்தனர்? அங்குள்ள மக்களை “அரசு” நன்றாகக் கவனிக்கிறது என்று அந்த சிங்கள பாதிரிகள் அறிக்கை விட்டார்கள். அதனை எந்த தமிழ் பாதிரியும் மறுக்கவில்லை.
அந்த அறிக்கை பற்றி மவுனம் காத்த கத்தோலிக்க தமிழ் பாதிரிகள் பின்னர் “அந்த முகாம்கள்” சித்திரவதை முகாம்கள் என்று கூறியது எப்படி?
இப்போது புலிகள் இல்லை. ஆனால் ராயப்பு மவுனம். நேர்மையான பாதிரி என்றால் இன்று “புலிகளின்” அநியாயங்கள் பற்றி அறிக்கைகள் விட யார் தடுக்கிறார்கள்?
ஆனால் பாதிரி இம்மானுவல் “புலிகளின்” பயங்கரவாத்தை மறந்து விட வேண்டும் என்றும் அரசு பயங்கரவாதம் தொடர்கிறது என்று பொய் கூறுவதன் நோக்கம் என்ன?
புலிகளோடு சமரசம் அல்லது சேர்ந்து ஆடிய எந்த பாதிரிக்கும் எதிராக மாவட்ட பாதிரி ராயப்பு அல்லது தோமா சவுந்தர நாயகம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
ஆனால் ஜேம்ஸ் பத்தினாதனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும்.
NANTHA
சுமன்:
உங்களின் அவதானிப்பு பல உண்மைகளைக் கொண்டுள்ளது. கிறிஸ்தவ மதம் என்பது ஒரு “கம்பனி”. லாபம் கருதி செயல்படும் ஒரு நிறுவனம். அதற்கு “லாபம்” முக்கியமே ஒழிய “மனிதர்கள்” அல்ல.
ரோகன் “கஞ்சி” குடித்த கதைகளை சொல்லுகிறார். வெள்ளையர்கள் எங்கள் ஊருக்கு “வியாபாரத்துக்கு” வந்த பொழுது எங்கள் மக்கள் அடித்து விரட்டவில்லை. சோறு கொடுத்து இருக்க இடமும் கொடுத்தார்கள். பின்னர் அந்த பறங்கிகள் சோறு தந்தவன் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கொள்ளை தொடங்கியபோது எங்கள் மக்கள் நம்பி “மோசம்” போனார்கள்.
இன்னமும் எங்கள் நாடுகளில் பறங்கிகளின் அடியாட்கள் அவர்களுக்காக எங்கள் மக்களை கொலை செய்து கொள்ளை அடித்து பங்கும் கொடுக்கிறார்கள். “தமிழ்” ஈழப் போராட்டம் அது என்பதை சொல்லத் தேவையில்லை.
இந்து மதம் கேவலமானது என்று சொல்லும் பாதிரிகளும் அவர்களுடைய எசமான்களான வத்திக்கான் போப்பும் மகாராணியும் இந்துக்களின் “தாலி” கட்டும் முறையை தொடர விட்டார்கள். ஏனென்றால் தாலியில் “பொன்” உள்ளதே காரணம்.
தைப்பொங்கலுக்கு பொங்கிய சோற்றை தொட்டாலே பாவம் என்று சொல்லும் பாதிரிகள் “இந்துக்களின்” தாலி” கட்ட விட்டதன் நோக்கம் புரிகிறதா? “தாலி” கட்டுவது பாவம் இல்லையோ?
புலிகள் தமிழர்களிடம் “ஒரு பவுன்” தரவேண்டும் என்று கொள்ளையில் இறங்கியதையும், அந்த பவுனுக்கு என்ன நடந்தது என்றும் இதுவரை தெரியாது. அவை பாதிரிகளிடம் உள்ளதா அல்லது வத்திக்கானுக்கு காணிக்கை கொடுத்து விட்டார்களா என்றும் தெரியவில்லை!
புலிகள் இந்து ஐயர்களைக் கொலை செய்தார்கள். பாதிரிகளுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் அந்த கொலைகள் பற்றி மூச்சு விடக் காணோம். இந்து குருமாரைக் கொலை செய்வது நல்லது என்று நினைக்கிறார்கள் போலத் தெரிகிறது.
பல்லி
/மேற்படி பல்லியின் பதிலுக்கும் என் கேள்விக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று படிப்பவர்கள் சொன்னால் நல்லது.// இதுக்காகத்தான் பல்லியும் காவல் இருக்கிறேன்; நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பல்லியின் பதில்கள் அதிகம்தான்;
//தைப்பொங்கலுக்கு பொங்கிய சோற்றை தொட்டாலே பாவம் என்று சொல்லும் பாதிரிகள் “இந்துக்களின்” தாலி” கட்ட விட்டதன் நோக்கம் புரிகிறதா? “தாலி” கட்டுவது பாவம் இல்லையோ?// இதுக்கும் புலிக்கு பாதிரி உதவியதுக்கும் ஏதும் தொடர்பு உண்டோ; ஆக உங்களுக்கு பிரச்சனை பாதிரி மீது அல்ல அவர்கள் தலமைதாங்கும் கத்தோலிக்க மதம் மீதுதான்; இது வேண்டாம் என்பதுதான் எஙருத்து, அண்மையில் நீங்கள் அருள்தந்தை இமானுவல் பற்றி எழுதினீர்கள் நான் ஏதும் மறுப்பு சொல்லவில்லை, அது நியாயமானதாகையால்; ஆனால் நீங்கள் உங்கள் கத்தோலிக்க மத கடுப்புக்காய் கண்டபடி எழுதுவது சரியல்ல, அதுவே உங்களுடன் மல்லு கட்டுகிறேன்;
//புலிகளோடு சமரசம் அல்லது சேர்ந்து ஆடிய எந்த பாதிரிக்கும் எதிராக மாவட்ட பாதிரி ராயப்பு அல்லது தோமா சவுந்தர நாயகம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? //
தவறு விட்ட பாதிரிகளின் பெயர்களை பட்டியலிட்டு ராயாப்புக்கு தங்களோ அல்லது தாங்கள் சார்ந்த அமைப்போ ஒரு கடிதம் போடுங்கள் விளக்கம் கேளுங்கள். அதை விட்டு உங்கள் திறமையை கத்தோலிக்க சமூகத்திடம் காட்ட முற்படாதீர்கள்? அதால் பாதிப்புக்கு ஆளாவது நீங்கள் அல்ல: தமிழ் சமூகம்தான்;
//90% இந்துக்களும் நூறு வீதம் தமிழும் பேசும் மக்களைக் கொண்ட அந்த முகாம்களில் ஐந்து சிங்கள பாதிரிகளும் ஒரு தமிழ் பாதிரியும் எதற்கு வந்தனர்? அங்குள்ள மக்களை “அரசு” நன்றாகக் கவனிக்கிறது என்று அந்த சிங்கள பாதிரிகள் அறிக்கை விட்டார்கள். அதனை எந்த தமிழ் பாதிரியும் மறுக்கவில்லை.
அந்த அறிக்கை பற்றி மவுனம் காத்த கத்தோலிக்க தமிழ் பாதிரிகள் பின்னர் “அந்த முகாம்கள்” சித்திரவதை முகாம்கள் என்று கூறியது எப்படி?//
இதுக்கு சரியான விளக்கம் உங்களையும் பல்லியையும் எடுத்துக்கலாம்; ஆனால் யார் ஜந்து? யார் ஒன்று? என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கோ;
//புலிகள் தமிழர்களிடம் “ஒரு பவுன்” தரவேண்டும் என்று கொள்ளையில் இறங்கியதையும், அந்த பவுனுக்கு என்ன நடந்தது என்றும் இதுவரை தெரியாது. அவை பாதிரிகளிடம் உள்ளதா அல்லது வத்திக்கானுக்கு காணிக்கை கொடுத்து விட்டார்களா என்றும் தெரியவில்லை!//
அதுக்கேன் இப்படி எழுதுவான் அரச பாதுகாப்பில் விருந்தாளியாக இருக்கும் கே பி இடம் கேட்டால் சொல்லுவார்தானே, அல்லது யோகி; இளம்வளுதி இன்னும் இருக்கிறார்கள் விபரம் தேவையா??
பல்லி
//புலிகள் இந்து ஐயர்களைக் கொலை செய்தார்கள். பாதிரிகளுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் அந்த கொலைகள் பற்றி மூச்சு விடக் காணோம். //காளி கோவில் குருக்களை கொலை பற்றி ரி பி சியில் கலக்கோ கலக்கென கலக்கினார்கள். ஆனால் இறுதியில் அது அரச படுகொலையென தெரிந்ததும் அதுக்காய் அன்றய அரசின் அன்புக்குரியவர்கள் பேசப்படாது என ரி பி சியின் வாய் மூடபட்ட சமசாரம் தெரியாதோ நந்தா?; சரி நந்தா உன்மையில் அந்த ஜந்து குருக்களின் கொலை அது யாரால் எப்போது எங்கே செய்யபட்டது என்பதை தேசத்துக்கு எழுதி அனுப்பவும்; சம்பந்தபட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த முடியாவிட்டாலும் சமூகத்துக்கு அறிமுகம் செய்வோம், செய்வீர்கள் என நம்புகிறேன்;
//பாதிரிகள் மனித உரிமை, பத்திரிகை சுதந்திரம், மத சுதந்திரம் என்று சொல்லும் பொழுது எப்பொழுதும் எனக்கு கேள்விகள் எழுவது வழக்கம். ஏனென்றால் பாதிரிகளின் சமயத்தில் அந்தக் கருத்துக்கள் இல்லாது வத்திக்கானிலுள்ள “பெரிய” பாதிரி சொல்வதை அப்படியே நடைமுறைப்படுத்தும் பாதிரிகள் “மனித உரிமை” என்று புறப்படும் போது தங்களின் ‘திருகுதாளங்களை” மறைக்க அல்லது அந்த மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்களோடு தங்களுக்கு இருக்கும் தொடர்புகளை மறைக்க அவர்கள் “அரசியல்” பேசத் தொடங்குகிறார்கள்.//
இது உன்மையாக இருக்கலாம்; அதுபோல்தான் இன்று மகிந்த குடும்பம் எது சொல்லுகிறதோ அதுதான் மாற்றுகருத்து என்பதுபோல் பலர் சிலர்மீது அம்பு விடுகிறார்கள். நந்தாவுக்கும் அது அனுபவமாக இருக்கும் என்பதால் அவர் சொன்னால் அது சரியாகவே இருக்கும்;
//புலிகளோடு சமரசம் அல்லது சேர்ந்து ஆடிய எந்த பாதிரிக்கும் எதிராக மாவட்ட பாதிரி ராயப்பு அல்லது தோமா சவுந்தர நாயகம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? ஆனால் ஜேம்ஸ் பத்தினாதனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும்.// இதை நந்தாவுக்கு சொன்னது மகிந்தவா.? அல்லது பசில் பட்ச்சாவா? கோத்த்ய பட்ச்சாவா??
//உமாமகேஸ்வரன் ஒரு “மார்க்சிஸ்ட்” என்ற கண்டு பிடிப்பு பல்லியால் முடிந்திருக்காது. ஆனால் “பாதிரிகளின்” பிரச்சாரத்தில் புலிகளை எதிர்த்தவர்கள் அனைவரும் மார்க்சிஸ்டுகள் என்று உள்ளது//
பல்லி உன்மையில் உமா மகேஸ்வரனுடன் இந்தியாவில் ஒரு முறை பேசியுள்ளேன்; அவரது பேச்சில் அவரது திறமை தெரிந்தது, ஆனால் நான் அவருடன் அரசியல் பேசவில்லை; அதன்பின் கழக தோழரிடம் அவர் பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன், அப்போது அவர்கள் சொன்னார்கள் உமா ராணுவத்தின் நுட்ப்பங்களையும் கமினிஸ்ட் அரசியல் மார்க்ச்சியம் என பல விடயங்களை கற்று தேர்ந்தவர் என, ஆனால் அவர் ஏன் தோற்றார் என்பது எனக்கு தெரியாது, நான் கேக்கவும் இல்லை, அதுக்கான பதிலை மாயாவிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்; மேலே நான் உமா பற்றி குறிப்பிட்டதுகள் தவறா?? சந்ததிக்கு மார்க்ச்சியம் தெரியாதா?? உங்கள் முகாம்களில் ஜீவா, டொமினிக்;தோழர் (தங்கராஜா) போன்றோரால் கமினிஸ்ட் வகுப்புகள் எடுக்கபடவில்லையா??
நந்தா ஓர் இடத்தில் சொல்லுகிறார் காந்தியம் பற்றி தவறாய் பாதிரிகள் ஜெயவர்த்தனாவுக்கு எழுதிய கடிதத்தை பார்த்தவன் நான் என; காட்டியது யார் என ராயசுந்தரம் பக்கம் கை நீட்டுகிறார், இதில் இந்த கடிதம் யாரால் எழுதபட்டு ஜேயாருக்கு அனுப்ப ராயசுந்தரத்துக்கு கிடைத்தது, இதுக்கான விடையும் மாயாவே சொல்லலாம்; காரனம் உங்களுக்கும் காந்தியத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தது என அறிகிறேன், அப்படியாயின் காந்திய இரட்டையர்கள் ஆன ராயசுந்தரம் டேவிட் ஜயா தொடர்புகள் இருந்திருக்குமே, உயிருடன் இருப்பவர்கள் மீது சாட்டபடும் குற்றங்களை விட இறந்தவர்கள் மீது வைக்கபடும் குற்றங்கள் விபரமாய் இருப்பது நல்லது,
thurai
//புலிகள் தமிழர்களிடம் “ஒரு பவுன்” தரவேண்டும் என்று கொள்ளையில் இறங்கியதையும், அந்த பவுனுக்கு என்ன நடந்தது என்றும் இதுவரை தெரியாது. அவை பாதிரிகளிடம் உள்ளதா அல்லது வத்திக்கானுக்கு காணிக்கை கொடுத்து விட்டார்களா என்றும் தெரியவில்லை!//நந்தா
புலிகழும் போய் புலிகழுடன் சேர்ந்த பாதிரிகளின் கதையும் இலங்கையில் முடிந்து விட்டது. காலாதி காலமாகவும் இன்று புலத்துத் தமிழர் மத்தியிலும் உள்ள இந்து ஆலயங்களிலும், நடைபெறும் நிதி மோசடிகழும் ஏமாற்ருகளையும் தமிழர் எங்கு சொல்வது. இதற்காக விளக்கம் தரவும் தவறுகளிற்கு மன்னிப்புக் கோரவும் யார் உலகில் உள்ளார்கள்.
துரை
chandran.raja
சுமன்! மாக்ஸியத்தை பற்றி விளக்கம் கேட்டால்.. நீங்கள் தமிழ்இலக்கணத்தை பற்றி கதையா? வரலாறா?? என்று பாடம் எடுக்கிறீர்கள். தாய் நாட்டை விட்டு புறப்பட்டு இரண்டு மூன்று தசாப்தங்கள் முடிவடைகிறது. இதில் என்னை மட்டுமல்லமல் இங்கு கருத்தெழுபவர்களின் பலர் எழுத்துக்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இதுவெல்லாம் பெரிய தப்பாகுமா?. இதையெல்லாம் தப்பும் தவறுமாக கணக்கெடுக்காதீர்கள் எடுத்தால் நீங்களே “வேஸ்ட்” ஆகிவிடுவீர்கள்.
கம்யூனீஸ்தைப் பற்றி நீங்கள் எப்படி விளக்கம் கொண்டிருந்தாலும் கம்யூனீசம் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மானிடனுக்கும் சமயுரிமையை கோரிநிற்கிறது. இதில் ஆபிரிக்காகென்ன லத்தீன் அமெரிக்கா என்ன மகியங்கனை வேடுவகுலமாக இருந்தால் என்ன அவர்களுக்குரிய சமயுரிமையை கொடுத்தே ஆகவேண்டும். இதைத்தான் மாக்ஸியம் விஞ்யாணரீதியாக உலகப் பாட்டாளி மக்களுக்கு புரியவைக்கிறது. காலம் கடந்தாலும் உழைப்பாளிமக்கள் இதை புரிந்துகொண்டு தமது வியூபங்களை வகுத்துக் கொள்வார்கள். இந்த நம்பிக்கை தான் மாக்ஸியவாதிகளிடம் இறுக்கமாகப் பற்றி நிற்கிறது.
பாரீஸ் கம்யூனின் தோல்விக்கு பிறகு 1890-1900 காலப்பகுதிகளில் ஐரோப்பிய-அமெரிக்க மத்தியதர புத்தியீவிகள் மாக்ஸியம் கல்லறைக்குள் போய்விட்டது எனஎழுதினார்கள். இதன் பிறகே உலகத்தை உலுப்பி எடுக்கிற வரையில் போல்சிவேஷிகளது புரட்ச்சியும் சீனாவும் மானிடத்தின் சிகப்புநிறத்தை பிரதிநித்துவ படுத்திக்கொண்டு எழும்பி நின்றது. இந்த இருநாடுகள் கண்டங்களின் வாழ்வு-தேய்வுகள் சுலபமாக மறந்து போகக்கூடிய ஒன்றா? உங்களால் உங்களைப் போன்ற முதலாளித்துவ தாசர்களால் மறக்ககப் பட கூடியதொன்றுதான். ஏட்டுச் சுரக்காய் என்றும் வர்ணிப்பீர்கள். தமிழில் கட்டுரை எழுதுவேன். தமிழல் பேட்டி எடுப்பேன். பின்னோட்டம் மட்டும் ஆங்கிலத்தில் விடுவேன். கேட்டால்… எனது கணணி அப்படி என கதையளப்பீர்கள்.
உங்கள் வர்க்கப்புத்தியும் உங்கள் சுயநலமே மனிதநேயத்திற்கு விரோதமாக முதாலித்துவம் செக்ஸ் புதுப்புது பொழுதுபோக்கு விளையாட்டு வெள்ளையங்கி போன்றவற்றை உலகம் முழுகஉலவவிட்டு தமது கைங்கரியங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் சுமன் நீங்கள் எத்தப்பாத்திரம் என்பதை உங்கள் பின்னோட்டத்தின் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள். இனிக்காலத்தில் மானிடத்தின் வாழ்வு-கம்யூனிஸ்றைப் பற்றி மாக்ஸியத்தைப் பற்றி கதைப்பதற்கு அருகதையிருக்க முடியுமா? என்பதைப் பற்றி நீங்களே முடிவு எடுக்க வேண்டும். செய்வீர்களா?. நம்புகிறோம்.
மாயா
//பல்லி உன்மையில் உமா மகேஸ்வரனுடன் இந்தியாவில் ஒரு முறை பேசியுள்ளேன்; அவரது பேச்சில் அவரது திறமை தெரிந்தது, ஆனால் நான் அவருடன் அரசியல் பேசவில்லை; அதன்பின் கழக தோழரிடம் அவர் பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன், அப்போது அவர்கள் சொன்னார்கள் உமா ராணுவத்தின் நுட்பங்களையும் கமினிஸ்ட் அரசியல் மார்க்ச்சியம் என பல விடயங்களை கற்று தேர்ந்தவர் என, ஆனால் அவர் ஏன் தோற்றார் என்பது எனக்கு தெரியாது, நான் கேக்கவும் இல்லை, அதுக்கான பதிலை மாயாவிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் – பல்லி//
ஆனானப்பட்ட சோவியத்யூனியனே தோற்று விட்டது. உடைந்துவிட்டது. உமா மகேஸ்வரன் தோற்பதில் என்ன குற்றம் காண முடியும்? உமாவோடு பேச, இந்திய அரசியல்வாதிகளே அஞ்சினார்கள். “முகுந்தனோடு (உமா) பேசித் தப்ப முடியாது சார் .” என்பார்கள். அரசியல் சித்தாந்தமும் சரி , ஆட்களை கவரும் பாணியும் சரி, பேச்சால் கட்டுப்படுத்தும் பாணியும் சரி. உமாவுக்கு நிகர் உமாதான். எனக்கு பிடித்த விடயங்கள் ஏராளம். பிடிக்காத விடயங்கள் சொற்பம். அதில் முக்கியமானது , தன்னைச் சுற்றி இருந்தவர்களை நம்பியது. அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்தியது. இதுவே உமாவின் அழிவுக்கும் , புளொட்டின் அழிவுக்கும் காரணமாயின.
இவரது தீர்க்க தரிசனம் மட்டும் அனைத்து தமிழராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். 1. தமிழருக்கு தமிழீழம் தீர்வல்ல என்ற கருத்து. எனவேதான் சுவிஸ் போன்ற மாநில சுயாட்சி முறைதான் தமிழருக்கான தீர்வென 1984களிலேயே சொன்னார். போராடுவதாக இருந்தால் , இலங்கை வாழ் பாட்டாளி மக்களை இணைத்துக் கொண்டு போராட வேண்டும். இங்கே சிங்களம் – தமிழ் – இஸ்லாம் என வித்தியாசம் பார்க்கலாகாது என்றார். அதுதான் இன்று மகிந்த சொல்லும் தேசத்தை நேசிப்போர், தேசத்தை நேசிக்காதோர் எனும் பேச்சு. தேசத்தை நேசிப்பவன் , தன் தாயக மக்களை நேசிப்பான். அவனிடம் தமிழ் – சிங்கள – முஸ்லீம் – பறங்கியர் – மலாயர் எனும் வேறுபாடு இருக்காது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் , அல்லது குடிகள். அதுவே இக் கட்சிகளின் அழிவினூடாக நடைமுறையாகவிருக்கிறது.
2. இந்தியாவை , இலங்கை மக்கள் நம்பலாகாது என எண்ணி, சீன கம்யூனிசத்தை உமா பின்பற்றத் தொடங்கியது. இது உமா மேல் , இந்தியாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அதுவே உமாவின் அழிவுக்கு றோ மூலம் வழி அமைக்கப்பட்டது. அதற்கும் புளொட்டின் பலர் உறுதுணையாகவே இருந்திருக்கிறார்கள். உமாவின் உருவப்படம் பொறித்த பெண்டன்களை கழுத்தில் மாட்டிய , பெரியவர் என புகழப்பட்டு, கூட்டத்தால்தான் பெரியவர் உமாவுக்கு சங்கு ஊதப்பட்டது. இதற்கு வேறு இயக்கங்களுக்கோ அல்லது இலங்கை அரசுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. தவறு செய்தவர்களை தண்டிக்காததால் 9ம் நம்பர் எண் கொண்ட உமா , என்னதான் சாணக்கினாக இருந்தும் , சில தவறான தழும்பல்களால் தலைக்கே கத்தியை வைத்துக் கொண்டார். இருந்தாலும் , இன்று இந்தியாவை , சீனாவின் நட்பை வைத்துத்தான் இலங்கை மிரட்டுகிறது. இதுவும் உமாவின் தீர்க்க தரிசன பார்வைதான்.
3. இயக்கங்கள் கை கோர்த்து படம் எடுத்த போது , ” அண்ண, நீங்க செய்யிறது சரியில்லை” என்றேன். ” பாரு , என்ன நடக்கும் என்று. முழியன்ட(பிரபா) கையாலதான் இவங்களுக்கு முடிவு” என்றார். சரியாகத்தான் நடந்தது. இப்படியெல்லாம் சொன் மனுசன் எப்படித் தோன்றார்? எல்லாம் , நம்பின கூட்டத்தின் அராஜகம்தான். சுத்தி நின்றவன் , எல்லா கொலைக்கும் , “பெரியய்யா , உங்களை போட நினைச்சாங்க போட்டுட்டம்” என்றாங்க. பெரியய்யா செத்தவனை இனி காப்பாத்தேலாது. இருக்கிறவனைக் காப்பாத்துவோம் என்று நினைச்சதால வந்த வினை, கடைசியில பெரியய்யாவையே போட்டுத் தள்ளிட்டாங்க. இங்கே உமாவின் சில வீக்னஸ்கள் காரணம். எனவே உமா கொல்லப்பட்ட போது , எனக்கு அழுகை வரவில்லை. எத்தனை அப்பாவிகள் சாகும் போது மெளனம் காத்தீங்க. அதற்காக என்னாலும் மெளனம் காக்கத்தான் முடிந்தது. அதற்காக அவரது திறமையை குறைத்து எவராலும் பேச முடியாது. பிரபாகரன் , செய்த கொலைகளோடு ஒப்பிடும் போது இவை சீரோ. ஆனாலும் ஒரு உயிர் கூட எனக்கு அதிக மதிப்பானது. பிரபாகரன் மாதிரி , மக்களாவது , மண்ணாவது அடிங்கடா என்ற நிலையை உமா எடுத்திருந்தால் , முழு இலங்கையும் சில வேளை தமிழன் கைகளில்தான் இருந்திருக்கும். இலங்கை , ஈழமாக மாறியிருக்கும். காரணம் , சிங்களவரது நம்பிக்கை கூட புளொட் மீது அலாதியாக இருந்தது. அதற்கு புளொட்டின் தமிழ் – சிங்கள – ஆங்கில வானோலிகள் பெரும் பலமாக இருந்தது. அத்தோடு மக்களை உண்மையாகவே நேசித்த பல இளைஞர்கள் புளொட்டில் இருந்தார்கள். அதனால்தான் பாதை தவறிய போது , அதன் இயக்கத்தை இல்லாமல் செய்ய முடிந்தது. இல்லையென்றால் வன்னியில் புலிகள் அழிந்தது போல , ஒட்டு மொத்த புளொட் உறுப்பினர்களும் அழிந்திருப்பார்கள். தளத்திலும் , பின் தளத்திலும் இருந்த பெரும்பாலான தலைமைகள் , தமது உயிரைக் கொடுத்து , சக போராளிகளான தோழர்களை தப்பிச் செல்ல வைத்தார்களே ஒழிய, சாகடிக்கவில்லை. இதில் கரும் புள்ளிகளாயிருந்தோர்தான் மோசமானவர்கள்.
இன்று புளொட்டில் இருப்போரை நம்பி , இருந்தோர் இணையத் தயாராக இல்லை. அதுவே புளொட்டின் சலனம். இன்று புளொட் அரசியலோடு சதிராடுகிறது. அங்கே உமாவின் ஆவி இருக்கலாம். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
காந்தியம் பற்றி சற்று அறிவேன். அதை வைத்து தவறான கருத்துகளை வைக்க இயலாமல் இருக்கிறேன். அதற்கு உடந்தையாக இருந்த டேவிட் ஐயா , இன்னமும் , தமிழகத்தில் வாழ்கிறார். அவர் உமா மேல் கொண்ட கோபத்தோடே வாழ்கிறார். இதுதான் வேதனை?
பல்லி
நன்றி மாயா;
Suman
சந்திரன் ராஜா- நீங்கள் தான் மாக்சிசத்தைகதை என்றீர்கள் பின் வரலாறு என்றீர்கள். அதைதான் நான்விக்கமாக திருப்பிச் சென்னேன். பின் என்தலையில் அதைத் திருப்பிப் போடுகிறீர்களே. மீண்டும் பிழைவிடுகிறீர்களே. மாக்சிசம் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்றுதான். அது பொருளாதார ரீதியில் பொருந்தாத ஒன்று என்று கைவிடப்பட்டு வருகிறது. புலிகளில் பலர் மாக்சிசத்துடன் ஒடித்திரிந்தவர்கள் தான். நல்ல தத்துவங்கள் பல ஜதார்த்தத்துக்கு உதவாததை. மதங்களின் புனிதநூல்களும் அப்படியே. உந்த இசங்களை விட்டு விட்டு நிசங்களைப் பார்ப்போம். அதுதான் எல்லோருக்கும் நல்லது.
//ஏட்டுச் சுரக்காய் என்றும் வர்ணிப்பீர்கள். தமிழில் கட்டுரை எழுதுவேன். தமிழல் பேட்டி எடுப்பேன். பின்னோட்டம் மட்டும் ஆங்கிலத்தில் விடுவேன். கேட்டால்… எனது கணணி அப்படி என கதையளப்பீர்கள்.// என்ன அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள். நாங்களும் தொழிலாளர் வர்க்கத்தவர்கள்தான். ஏடுச் சுரக்காய் தந்துவங்களால் தலைதெறித்துப் போனவர்கள். கொமினிட் நாடுகளில் எப்படி தொழிலாளர்கள் கையாளப்பட்டார்கள் என்பதை அந்நாடுகளைப்பற்றி அறிந்தவர்கள் சொல்வார்கள். கொமினிட்டு அல்லது இடதுசாரித்துவ நாடுகளில் அரசியில் மேல் மட்டத்திலுள்ள அனைவிரும் முதலாளிகளை விட மோசமானவர்கள் அப்படித்தான் நடந்தார்கள். கேட்டால் உங்களைப் போன்றவர்கள் சொல்வார்கள் மாக்சிசம் அப்படிச் சொல்லவில்லை மனிதர்கள் தான் அப்படி நடக்கிறார்கள் என்பீர்கள்.
/இனிக்காலத்தில் மானிடத்தின் வாழ்வு-கம்யூனிஸ்றைப் பற்றி மாக்ஸியத்தைப் பற்றி கதைப்பதற்கு அருகதையிருக்க முடியுமா? // மாக்கிசமே அருகதையில்லாத போது நாம் ஏன் அதற்கு அருகதையாக இருக்கப்போகிறோம். நாம் குப்பைகளைக் கிளறுவதில்லையே. என்பார்வையில் மதமும் ஒன்றுதான் மாக்சும் ஒன்றுதான். நடைமுறையில் மதமும் மாக்சிசமும் ஒன்றே.
NANTHA
பல்லிக்கு பாதிரிகளை எப்படியாவது பாதுகாத்து தமிழரை காக்க வந்த கடவுள் தூதுவர்கள் என்ற எண்ணம் உள்ளது தெரிகிறது. அதனால் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக ஏதேதோ சொல்கிறார்.
தாலிக்கும், தைப்பொங்கலுக்கும் பாதிரிகள் கையாளும் இரட்டை வேஷம் பற்றி கேட்டால் அதற்கு பதிலைக் காணோம்! தாலி கட்டுவது இந்துக்களின் “பாரம்பரியம்” என்பதை பல்லி புரியவில்லை போலிருக்கிறது. இந்து மக்களின் “வாழ்க்கை” முறைகள் தப்பு என்று சொல்லும் பாதிரிகள் “இந்துக்கள் கட்டும் தாலியை கட்டலாம் என்று சொல்வது “பொன்னுக்கு” மாத்திரமே ஆகும். கிறிஸ்தவர்களின் கொள்ளையில் “இந்துக்களின் பொன், பணம் என்பவற்றை விடுவார்களா இந்த பாதிரிகள்!
பாதிரிகள் தனிப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் வத்திக்கானிலுள்ள போப்பின் நியமனக் கடிதம் பெற்று பாதிரிகளாகுபவர்கள். அவர்கள் வத்திக்கானின் (HEAD OF THE ORGANIZATION) உத்தரவுகளை மீற முடியாது. எனவே கத்தோலிக்க மதம் மீது கேள்வி தொடுத்தால் அது தமிழரை பாதிக்காது. கத்தோலிக்க பாதிரிகள் “தமிழ்” என்று கூத்தாடுவது வத்திக்கானின் வேண்டுதல் படியே ஒழிய, தன்னிச்சையாக அல்ல. ஏனென்றால் பைபிளில் “தமிழ்” உரிமைப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
வத்திக்கன் ஒரு மாபிய கும்பல் போன்றது. அதனால்த்தான் பாதிரிகள் கள்ளகடத்தல்காரர்களோடும் கொலை, கொள்ளை செயபவர்களோடும் சேர்ந்து இருக்கிறார்கள். கத்தோலிக்க மதம் “கொலை” செய்வதை” ஆதரிக்கும் ஒரு மதம். அவர்களுடைய மத நம்பிக்கையின்படி “தங்கள் மதத்திலிருந்து” வேறு மதத்துக்கு மாறுபவர்களைக் கொலை செய்யலாம் என்று சொல்லுகிறார்கள். வேற்று மதத்தவர்களை மத மாற்றம் செய்யவேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்றுதான் கத்தோலிக்க மதம் கூறுகிறது.
அதனை பாதிரிகள் “பல போர்வைகளுக்குள்” மறைந்திருந்து இலங்கையில் நிறைவேற்றியுள்ளனர். இவ்வளவும் நந்தாவுக்கு கொதிப்பெற்ற போதுமான விஷயங்கள்!
பல்லி போன இடத்தில் “மதம்” மாறியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எனவே உங்களுக்கு இனிமேல் “இந்துக்களை” எதிர்க்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி. அதனை மீறி “இந்துக்களை” பாராட்டினால் பாதிரிகள் “மரண தண்டனை” கொடுத்துவிடுவார்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் உங்களுக்கு நைசாக சொல்லியிருப்பர்கள்.
ராயப்பு போன்ற கீழ் தரமானவர்களிடம் நான் மன்றாடவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் போலிருக்கிறது!
இம்மனுவலின் கருத்துக்கு உங்களைப்போன்றவர்கள் “மவுனம்” காக்கலாமே ஒழிய “கேள்விகள்” கேட்க முடியாது. கேட்டால் “பாவத்தின் சம்பளம்” கிடைக்கும்.
//ஆனால் யார் ஜந்து? யார் ஒன்று? என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கோ//
சிங்களப் பாதிரிக்கும் தமிழ் பாதிரிக்கும் வேறுவேறு “இயேசு கிறிஸ்துவோ”, வத்திக்கானோ, போப்போ கிடையாது. எல்லாமே ஒரே கும்பல். ஐந்து சொன்னதை ஒன்று ஆமோத்தித்து மவுனம் காக்கிறது. பாதிரி இம்மனுவலின் கருத்துக்களை எந்த சிங்கள பாதிரியும் மறுத்து அறிக்கை விட மாட்டார்கள்!
தாய்லாந்திலிருந்த கே.பி யை விட “இறுதிவரை” முள்ளி வாய்க்காலில் “அமரிக்கா” வரும் என்று கதை விட்ட பாதிரிகளுக்கு “புலிகளின் கொள்ளை அடித்த சொத்துக்கள் எங்கே என்று நன்றாகவே தெரியும்.
அரஸ்
பின்னூட்டங்களை பார்க்கையில் அபிவிருத்தி ,யதார்த்தம் என எழுதியவர்கள் தப்பி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
பல்லி
நந்தா நீங்கள் யார் என்பது பலருக்கும் தெரியும்; அதேபோல் பல்லி யார் என்பது சிலருக்கு தெரியும்; நீங்கள் யாருக்கோ வக்கிலாக செயல்படுவது உன்மை; நானோ என் சமூகம் (தமிழ்) வாழ வேண்டும் என ஆசைபடுகிறேன்; நீங்கள் ஒரு தமிழ் உனர்வாழர் அல்ல என்பதை நான் முடிந்த மட்டும் உறுதி செய்துள்ளேன்; ஆகவே நீங்கள் பல்லிக்கு பதம் பாற்ப்பது கடினம்;
பல்லி
//பல்லி போன இடத்தில் “மதம்” மாறியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எனவே உங்களுக்கு இனிமேல் “இந்துக்களை” எதிர்க்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி.//
நந்தா என்ன வம்புக்கு இழுக்காதையுங்கோ; நான் இந்துதான் அதுவும் ஏழை இந்து எனது கடவுள் வைரவர், காளி, மாமிசம் எல்லாம் சாப்பிடும் கடவுள்தான்; எனது நெற்றியில் இதுவரை திருநீறு உண்டு, காரனம் அது கடவுளுக்காய் அல்ல எனது தாய் எனக்கு கற்று கொடுத்தது, 108 பாகை வெப்பத்தில் காச்சல் வரும்போதும் கூட எமக்கு மருத்துவம் திருநீறு சந்தணம்தான், தேவாரம் இருந்து திருப்புகழ்வரை இதுவரை சாவீட்டில் பாடுகிறேன், பெற்றவர்கள் கற்று கொடுத்ததுதான்; என்வாழ்வு மட்டுமல்ல என் எழுத்திலும் ஏழ்மை தெரியும்; மதம் மாறுவதை விட மனம் மாறுவதே தவறு; இதுவரை எனக்கு இந்து மதத்தின் அல்லது மற்றய மதத்தின் கொள்கை நெறி தெரியாது(இந்து மதம் கூட) காரனம் பணக்கார கோவிலில் எமக்கு அனுமதி இல்லை; என்னிடம் பட்ட படிப்புகள் இல்லை, ஆனால் பலரால் கொடுக்கபட்ட வீர தழும்புகள் உண்டு, ஆகையால் உங்கள் வார்த்தைகள் பல்லிக்கு புதிதல்ல நந்தா;
kalaignar
வவுனியா நெளுக்குளம் தொழில் நுட் பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், 100 பேர் பூஸா தடுப்பு முகாமிற்கு கடந்த 26ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வரு மாறு:
கிளிநொச்சி35, யாழ்ப்பாணம்26, முல் லைத்தீவு13, வவுனியா15, மன்னார்07, மட்டக்களப்பு03, திருகோணமலை01.
இவ்வாறு பூஸாவிற்கு அனுப்பப்பட் டவர்களின் விவரங்களை இன்று புதன் கிழமை முதல் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தில் பார்வையி டலாம் என்று இணைப்பதிகாரி த.கனக ராஜ் தெரிவித்தார்இதேவேளை வவுனியா செட்டிகுளம் தடுப்பு முகாமில் இருந்து பூஸா முகாமிற்கு மாற்றப்பட்ட 104பெண்களின் விவரங்க ளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
rohan
மனசாரச் சொல்லுகிறேன், பல்லி. இப்படி ஒரு தன்னிலை விளக்கம் தர வேண்டிய நிலைமையை நாங்கள் வைத்திருக்கக் கூடாது!
santhanam
பல்லி இந்து மதம் அடிமைத்துவத்தை தான் சொல்கிறது கடவுளிற்கு பிராமணன் அடிமை பிராமணனிற்கு பண்டாரம் அடிமை அந்த படிநிலையில் வணங்குபவனும் எல்லோருக்கும் அடிமை. உங்கள் சுய விமர்சனத்திற்கு நன்றி பல்லி.
பல்லி
புலியை பற்றி பேசினால் அடித்தார்கள் அரசை பற்றி பேசினால் பிறப்பையே மாத்துகிறர்கள். ஆக நாம் (தமிழ் சமூகம்) இப்படி விளக்கம் கொடுக்கத்தான் தகுதியானவர்கள் என நினைக்கிறேன், என்மதத்தை புகழ்ந்து பேசுவதை விட மற்றய மதத்தை தாள்த்தி பேசாமல் இருப்பது நல்லதுதானே; அதுவே என் நிலை;
NANTHA
“தமிழ் உணர்வாளர்கள்” என்று புறப்பட்டவர்கள் தமிழர்களைக் கொலை செய்தும் கொள்ளையடித்தும் தமிழ் சமூகத்தை நாசமாக்கியதுதான் வரலாற்று உண்மை. அதில் பாதிரிகளும் அடக்கம். அந்த உண்மையை பொய் என்று பல்லி சொல்லுகிறார்.
இப்படியான “தமிழ் உணர்வு” எனக்கு கிடையாது. அப்படி ஒரு நாசகாரி அந்தஸ்து எனக்கு தேவையும் இல்லை!
மேலும் கோவில்களுக்குள் அனுமதி இல்லை என்பது பற்றி சில வார்த்தைகள்.
நல்லூர் முருகன் பணக்கார கோவில்தான். திருப்பதி தேவஸ்தானமும் பணக்கார கோவில்தான். அங்கெல்லாம் இந்த அனுமதி பிரச்சனைகள் கிடையாது.
ஆனால் அறுபதுகளிலும் எழுபதுகளில் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டத்தை நீங்கள் “திட்டும்” மார்க்சிச்டுகல்தான் முன்னெடுத்தார்கள். “தமிழ் உணர்வாளர்கள், கிறிஸ்தவ கூட்டங்கள்” அதனை எதிர்த்து அறிக்கைதான் விட்டார்கள். மாவிட்டபுரம் ஆலயப் பிரவேச போராட்டத்தின் போது நந்தாவுக்கு “ஆலய” முன்றலில் சத்தியாக்கிரகம் செய்த அனுபவமும் உண்டு.
தமிழ் உணவாளர் செல்வநாயகம் “அது இந்துக்களின்” பிரச்சனை என்று மெதுவாக கழட்டிக் கொண்டார். அவரது தொகுதியில் இருந்த சாதிமான்களின் வாக்குகளுக்காக அந்த வேஷத்தை அணித்து கொண்டு பதுங்கி விட்டார். அது மாத்திரமல்ல அவரும் ஒரு கிறிஸ்தவ “வெள்ளாளன்” என்பது இன்னொரு காரணம்.
தமிழ் உணர்வாளர் அமிர்தலிங்கம் “வியட்னாம் பிரச்சனை” என்று அந்த போராட்டத்தை நையாண்டி செய்தார்.
அந்த காலகட்டத்தில் “பூணூலை” கழற்றி வீசி மார்க்சிசத்தை வாழ்வு முறையாக பின் பற்றிய ஈ. எம்.எஸ். நம்ப்பூதிரிபாடு என்ற பிராமணனை பற்றி சிந்தனை செய்தேன். அப்படியான “மனிதர்கள் எங்கே? இந்த தமிழ் உணவாளர்கள் அப்படியான “சமத்துவம்” பற்றி போதனை செய்யாமல் இருந்த நோக்கம் எதற்காக?
மரியானுக்கும் மரியாம்பிள்ளைக்கும் உள்ள வேறுபாட்டை பல்லி கண்டு பிடிப்பது நல்லது.
NANTHA
//இந்து மதம் அடிமைத்துவத்தை தான் சொல்கிறது கடவுளிற்கு பிராமணன் அடிமை பிராமணனிற்கு பண்டாரம் அடிமை அந்த படிநிலையில் வணங்குபவனும் எல்லோருக்கும் அடிமை. // santhanam |
இந்து மதம் அப்படி போதனை செய்வதாக எனக்கு தெரியாது. ஆனால் அமெரிக்க வெள்ளை கிறிஸ்தவர்கள் இன்றும் கருப்பர்களை அடிமைகளாக வைத்தது “பைபிளில்” கூறப்பட்ட வாசகங்களின் அடிப்படையில் என்றுதான் வாதிடுகிறார்கள்.
thurai
//என்மதத்தை புகழ்ந்து பேசுவதை விட மற்றய மதத்தை தாள்த்தி பேசாமல் இருப்பது நல்லதுதானே; அதுவே என் நிலை;//பல்லி
இந்துக்களாகவிருந்து புலத்தில் மதம் மாறியவர்களே ஏனைய இந்துக்களைப் பார்த்து பசாசு பிடித்தவர்கள் என அழைக்கின்றார்கள். வேறு மொழிபேசும் ஏனைய மதத்தவர்கள் இந்து மததைப் பற்ரி தவறாகப் பேசவில்லை. புலிப்பற்ராளர்களிற்கு சிஙளவ்ரும் புத்தசம்யமும் பகை. இந்துப் பற்றாள்ர்களிற்கு கிறிஸ்த்தவம் பகை தமிழரை அழிப்பது இந்த பகைமைகளை மூட்டிப் பற்ரவைப்பவர்களேயாகும்.
துரை
santhanam
கறுப்பு – வெள்ளை பிறப்பைப் பற்றி கிறிஸ்தவ மதம் பைபிளில் கொடுக்கும் விளக்கும் இதுபோன்றதே. ஒருநாள் தந்தை மூன்று மகன்களுடனும் அமர்ந்திருக்கும்போது, தந்தையின் உடுப்பு விலகியிருந்ததாம். இதை ஒரு மகன் பார்த்து சிரித்தானாம். மற்றைய மகன் கண்டும் காணாதது போல் இருந்தானாம். மற்றவன் அதை மூடிவிட்டானாம். மூடிவிட்டவன் வெள்ளையனாகவும், கண்டும் காணாதவன் போல் இருந்தவன் மண் நிறப் பிறப்பாகவும் (ஆசியா வகை), மற்றவன் கறுப்பனாகவும் பிறந்ததாக ஆசியக் கிறிஸ்தவம் விளக்குகின்றது. இதுபோல் இன்னொரு ஐரோப்பிய விளக்கம் சாத்தானின் பிறப்பு கறுப்பாகவும், கடவுளின் பிறப்பு வெள்ளையாகவும் இனவெறியுடன் பைபிள் எடுத்துரைக்கின்றது.
மாயா
1958லிருந்து தமிழ் தலைவர்கள் இனவாதத்தை வளர்த்து அரைவாசி தமிழரை அழித்து விட்டார்கள். இங்கே சிலர் , மதவாதத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அது மீதி தமிழரையும் அழிவுக்கு கொண்டு போகத்தான். நாசமாய் போன தமிழினம் நாசமாகப் போகட்டும். சிறீலங்கா பெளத்த சிங்கள நாடாக சிறப்புற்று வாழட்டும். புத்தங் சரணம் கச்சாமி. தம்மங் சரணம் கச்சாமி. புதியன்த சங்கங் சரணம் கச்சாமி.
தமிழர்களே , நீங்கள் பிழைத்துக் கொள்ள உடனடியாக சிங்கள பெளத்தர்களாக மாறுங்கள். சிங்களவர்களால் , தமிழர்களால் ஏற்படக் கூடிய அளவு தீங்கு பெரிதாக ஏற்படாது.
thurai
//தமிழர்களே , நீங்கள் பிழைத்துக் கொள்ள உடனடியாக சிங்கள பெளத்தர்களாக மாறுங்கள். சிங்களவர்களால் , தமிழர்களால் ஏற்படக் கூடிய அளவு தீங்கு பெரிதாக ஏற்படாது.//மாயா
தமிழர்கழும் பெளத்தர்களாக இருந்ததாக அறிகின்றேன். மத மாற்ரங்கள் அரசர்களின் ஆட்சிகழுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதற்கு ஆராட்சியளர்களே பதில் சொல்ல வேண்டும்.
துரை
பல்லி
//தமிழர்களே , நீங்கள் பிழைத்துக் கொள்ள உடனடியாக சிங்கள பெளத்தர்களாக மாறுங்கள். சிங்களவர்களால் , தமிழர்களால் ஏற்படக் கூடிய அளவு தீங்கு பெரிதாக ஏற்படாது.//
மாயா உங்கள்மீது எனக்கு மிகபெரிய அபிமானம் உண்டு, உங்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் கூட, ஆனால் இது எனக்கு கவலை தருகிறது, சிலர் செய்யும் தவறால் பலரை பலிகடா ஆக்க வேண்டுமா?
பல்லி
//நல்லூர் முருகன் பணக்கார கோவில்தான்.//
இது இன்று; ஆனால் இங்கு கூட நாம் அனுமதிக்கபடவில்லை,
//திருப்பதி தேவஸ்தானமும் பணக்கார கோவில்தான். அங்கெல்லாம் இந்த அனுமதி பிரச்சனைகள் கிடையாது.//
இங்கு 2008ல் எனது தாயாரை கூட்டி சென்றேன்; அங்கு தரிசனத்துக்கு பல வரிசைகள்; அது, பொருளாதார வரிசை; நான் மிக வசதியான வரிசையில் எனது தாயரை கூட்டி சென்றேன், ஆனால் தாயார் ஒரு கூச்ச மனபாண்மையுடன் வந்தார், நான் முதல்முதல் என் தாயின் ஆனந்தகண்ணிரை அன்றுதான் பார்த்தேன், இருளில் நின்று அர்ரோகரா சொன்ன என் தாய் வெங்கடசலபதிக்கு அருகாமையில், என் கண்ணிலும் சில துளிகள்; இது திரைகதை அல்ல பல்லிபோல் பல ஈழதமிழர் கண்ட இருட்டின் வெளிச்சம்;
//ஆனால் அறுபதுகளிலும் எழுபதுகளில் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டத்தை நீங்கள் “திட்டும்” மார்க்சிச்டுகல்தான் முன்னெடுத்தார்கள்.// ஆலயம் என்பது பொது சொத்து, ஆனால் அதிலும் ஆலயபிரவேசம்; பலே பலே; மேலாடை போட மேட்டுகுடியுடன் போராடிய என் சமூகம்; கீழ் தட்டு என்பதால் கிழக்கு வீதிக்கு தடை போட்டார்,
//மரியானுக்கும் மரியாம்பிள்ளைக்கும் உள்ள வேறுபாட்டை பல்லி கண்டு பிடிப்பது நல்லது.// மரியானை நீங்கள் மிதித்தியள்; அவனுக்கு யாரோ கை கொடுத்தனர் அவன் எழும்பும் போது ம்ரியம்பிள்ளையாய் எழுந்தான்; இது பல்லியிடம் கேக்கும் கேள்வியல்ல மிரிக்க முன்பு சிந்திக்க வேண்டிய கேள்வி,
//பல்லிக்கு பாதிரிகளை எப்படியாவது பாதுகாத்து தமிழரை காக்க வந்த கடவுள் தூதுவர்கள் என்ற எண்ணம் உள்ளது தெரிகிறது. ::// அப்படி இருந்தால் மகிழ்ச்சி; ஆனால் அப்படி இல்லை; மிரிக்கவில்லை என்பதை சொல்லியதுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி;
//தாலி கட்டுவது இந்துக்களின் “பாரம்பரியம்”// அப்படியானால் மோதிரம் மாற்றுவதும் கேக் வெட்டுவதும் யாருடைய பாரம்பரியம்?? தாலி இல்லாமல் திருமணங்கள் உண்டு ஆனால் கேக் மோதிரம் இல்லாமல் இருக்கா என்ன?
//நந்தாவுக்கு கொதிப்பெற்ற போதுமான விஷயங்கள்!// இருக்கலாம் ஆனால் நந்தாவின் கொதிப்பு ஏழை மக்களை காவு வாங்ககூடாது என்பதுதான் பல்லியின் கவலை; (பாதித்த அனுபவம் பல்லிக்கு உண்டு)
நந்தா உமாமகேஸ்வரன் நிலைபற்றி அவரது உன்மையான நண்பன் மாயா கருத்தை பாருங்கள்? மாயாபோல் பல நண்பர்கள் பல்லிக்கு உண்டு;
NANTHA
//நல்லூர் முருகன் பணக்கார கோவில்தான்.//
இது இன்று; ஆனால் இங்கு கூட நாம் அனுமதிக்கபடவில்லை,//
இதனை நம்ப நான் தயாராக இல்லை. ஏனென்றால் பல்லி நல்லூருக்குப் போகவில்லை என்றே எண்ணுகிறேன். எனது தந்தையார் காலத்துக்கு முன்னரே இல்லாதொழிக்கப்பட்ட பிரச்சனை பல்லி காலத்தில் வந்தது என்றால் பல்லிக்கு குறைந்தது நூறு வயதாவது இருக்குமோ?
//தாலி கட்டுவது இந்துக்களின் “பாரம்பரியம்”// அப்படியானால் மோதிரம் மாற்றுவதும் …
இந்துக்கள் மோதிரம் மாற்றுவது துஷயந்தன் காலத்துப் பிரச்சனை. சாகுந்தலம் தேடி எடுத்து படிக்கவும்.
கேக் வெட்டுவது வெளிநாடுகளில் வந்தவர்களின் பிரச்சனை. யாழ்ப்பாணத்தில் கலியாணங்களில் நான் கண்டதில்லை.
ஆனால் பாதிரிகள் எதற்காக தாலி கட்ட விடுகிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலைக் காணவில்லை!
ஆலயங்கள் எல்லாம் பொதுச் சொத்தல்ல. மாவிட்டபுரம் ஆலயப் பிரவேச பிரச்சனயில் “தமிழ்” சட்டத்தரணிகள் அதன் அடிப்படையில் செய்த வாதம் கோர்ட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில கோவில்களே பொதுச் சொத்தாக உள்ளன. பருத்தித்துறை சிவன் கோவில், கரவெட்டியார் கரு விநாயகர் என்பன சில “பொது” கோவில்களாகும்.
வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் குடும்ப கோவிலில் கூட “தாழ்த்தப்பட்டவர்களுக்கு” அனுமதி கிடையாது.
மரியான் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதிரிகள் வைக்கும் பெயர். மரியாம் பிள்ளை என்பது உயர்சாதிகளுக்கு பாதிரிகள் கொடுக்கும் பெயர். அதனை பல்லி எந்த அர்த்தத்தில் கையாளுகிறார் என்பது தெரியவில்லை. பாதிரிகளும் சாதி பார்க்கிறார்கள் என்பதற்காகவே அதனை குறிப்பிட்டேன்!
பல்லி
நந்தா நல்லூர் கந்தனுக்கு அருகாமையில் காளி கோவில் ஒன்று உண்டு தெரியுமோ அது எமக்காக கட்டபட்டதுதான்; புரிந்தால் சரி; எனது வயது வேண்டாம்; ஆனால் எனது பெற்றோரின் வயது கவனியுங்கள். எல்லோரும் போகும் கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுத்தி கம்பி பூட்டி இருப்பார்கள் அதை தாண்டி யாரும் போக கூடாது(தாம் போகாட்டலும் பரவாயில்லை நாம் போக கூடாதென்பதில் உள்ள கவனம் அது) ஆனால் நமக்கு தடையான கோவில்கள் (பல உண்டு) அவையில் இந்த கம்பி கிடையாது; இதெல்லாம் உங்களுக்கு புரியாது; 1996ம் ஆண்டு தேர் கைற்றில் பிடித்ததுக்காய் அதே இடத்தில் வெட்டிய சம்பவம் நந்தாவுக்கு தெரியுமோ; பாலாவின் பாணியில் பளசுகளை கிளறாதையுங்கோ தாங்க மாட்டியள்; அந்தளவுக்கு நாத்தம் எம்மிடம் இருக்கு;
NANTHA
பல காளி கோவில்கள் இருக்கின்றன. உங்கள் “கதை” எந்த காளி கோவிலில் இடம்பெற்றது என்று விபரித்தால் நல்லது.
ஆனால் நான் நல்லூர் முருகன் கோவில் பற்றிய தகவலுக்கு நீங்கள் எழுதிய “பொய்” க் கதை உங்களின் பாதிரி சார்பு ஏமாற்றுப் பிரச்சாரத்துக்கு ஒரு ஆதாரம். நல்லூர் முருகனிலிருந்து காளி கோவிலுக்கு போய் விட்ட நீங்கள் இனி ஏதாவது வைரவர் பக்கம் போகாமல் இருந்தால் சரி!