தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் புதிய கட்சி?

sivaji.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியொன்று உருவாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Show More
Leave a Reply to santhanam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மானாவாரியா கட்சிகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்,A இலிருந்து Z வரை இயக்கங்கள் வளர்த்த பரம்பரையாயிற்றே.

    Reply
  • santhanam
    santhanam

    எனி ஊருக்கொருவர் தேர்தலில் குதிப்பார்கள் வெளிநாட்டு புலம் பெயர் மாக்களின் முதலீடு.

    Reply
  • Ajith
    Ajith

    மானாவாரியா கட்சிகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்,A இலிருந்து Z வரை இயக்கங்கள் வளர்த்த பரம்பரையாயிற்றே.
    It is not the Sinhalese policy to eradicate tamils, it is the policy of India. In 1983, India created hundreds of movements to divide the tamils. Today, it is playing the same tactics to divide the tamils. Mr. Sivagi, please listen to the people’s voice!

    Reply
  • rohan
    rohan

    டக்ளஸ் தோழர் தான் கொஞ்சம் மனவருத்தப்படுவார் என்று நினைக்கிறேன். தீவுப்பகுதி வாக்குகள் அவரைக் கரை சேர்க்குமா?

    Reply
  • sumi
    sumi

    சபாஷ் சரியான போட்டி- வல்லவனுக்கு வல்லவன் வல்வெட்டியிலும் உண்டு.

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழர் நிலமை உடைந்த மண்பானை போலவே இருக்கின்றது. ஒற்ருமையை வளர்ப்பவர்களிலும் பார்க்க வேற்றுமைகளை வளர்ப்போரே கூடுதலாக தமிழர் மத்தியில் வளர்கின்றனர். ஈழத்தமிழர்களின் தலைவர் என்றால் முதலில் தமிழரிடையே ஒற்றுமைக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்க வேண்டும். தமிழர்களின் அழிவிற்கும் இன்றைய நிலைமைக்கும் பதவி ஆசை பிடித்த தமிழர்களே முதல் காரணம்.

    துரை

    Reply
  • palli
    palli

    சிரிப்புக்கு சிவாஜி:
    சில்லறைக்கு கஜேந்திரன்;
    வெறுப்புக்கு சம்பந்தராம்;
    வேலையில்லா சங்கரியர்;

    தோழமைதான் தோழரோ;
    தேறுவாரா சேனாதி;
    கண்டியிலே மனோகனேசா;
    கவலையில்லா சுவிஸ்பிரபா;

    மறுப்பு சொல்லா சித்தாத்தர்;
    மறந்து விட்டரோ சிறிகாந்தா;
    பிரிப்பதிலே பிரேமசந்திரன்;
    பிரியத்துடன் தங்கேஸ்வரி;

    தெற்க்கே ஆதரவுதான்;
    தேர்தலில் தோல்வியேன்;
    எதிர்கட்ச்சி பல சேர்ந்து;
    ஏதேதோ சொல்லுகினம்;

    அதிகார துணையுண்டு;
    ஆனாலும் பயமுண்டு;
    அதனாலே கூட்டுண்டு;
    அனைவருக்கும் வெத்திலைதான்,

    தேறிவிட்டார் பிள்ளையான்;
    தேசியத்தில் கருனாவோ;
    கூட்டமைப்பில் ரத்தினத்தார்;
    கூடியவர்கள் யார் எவரோ;

    சுகந்திரத்தில் ஒரு சிலரும்;
    சுகந்திரமாய் மிக சிலரும்;
    ஊகத்துடன் ஊடகங்கள்;
    உன்மையில்லா தொல்லைகாட்ச்சி;

    தேசத்தில் பலர் எழுத;
    தேவையா பல்லிக்கு இது;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தேவையா பல்லிக்கு இது
    எனத் தேவையின்றி
    நாம் நினைத்தால்
    தேர்தலிலே வானரமும்
    சீற்றுக் கேட்டு வந்துவிடும்.

    Reply