அநுராதபுர மாவட்டத்தின் வடக்குப் பகுதி எல்லையில் அமைந்துள்ள அறுபது குளங்களைப் புனரமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்துக்கோடி ரூபாவை வட மத்திய மாகாண சபைக்கு ஒதுக்கித் தந்துள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க தெரிவித்தார்.
கடந்த முப்பது வருட காலமாக புனர¨க்கப்படாமலிருந்த இக் குளங்கள் தூர்ந்த நிலையிலிருப்பதை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே ஜனாதிபதி இந் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
முதற் கட்டமாக பட்டிகல, ருவன்மடுவ, மிகஸ்வெவ, கலபிட்டவெவ, கம்பிலியாவ, கிவுள்வெவ ஆகிய குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆறு குளங்களும் புனரமைக்கப்பட்டதும் இப் பகுதியிலுள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் என வட மத்திய மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பீ. எஸ். லியனகே தெரிவித்தார்.