மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் கஜபா ரொஜிமெண்ட் பிரிவு படை வீரர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின் போது சி-4 ரக வெடி மருந்து 387 கிலோ கிராம் மீட்டெடுத்திருப்பதாக இராணுவ பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த வெடிமருந்து 37 மூடைகளில் பொதியிடப்பட்டு பிளாஸ்ரிக் நீர்த் தாங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே படை வீரர்கள் மீட்டெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். அண்மைக்காலத்தில் பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்த அதிக நிறைகொண்ட வெடிபொருள் இது வாகும் என்றும் குறிப்பிட்டார்.