மகா சங்கத்திற்கு வாய்ப் பூட்டு போட அரசு முயற்சி : பிரபாகரன் கூட செய்யத் துணியா முயற்சி என்கிறார் ரணில்

ranil.jpgஅரசியல் வாதிகள் மீது சேறு பூசிவந்த அரசாங்கம் இன்று மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் மீதும் சேறுபூசும் கலாசாரத்தைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க புத்தசாசனத்துக்கு களங்கமேற்படுத்த யாராவது முனைந்தால் அதனை முறியடிக்க எந்தச் சவாலையும் எதிர் கொள்ளத்தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நீதிக்காக குரல் கொடுக்க முன்வந்த அதி உயர் மகாசங்க உயர் பீடங்களை அச்சுறுத்தி வாய்களுக்கு பூட்டுப் போடும் கைங்கரியத்தை ஆளும் தரப்பு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டு மக்களை பிளவு படுத்தி அரசியல் நடத்தியவர்கள் இன்று படையினரையும், மகா சங்கத்தினரையும் பிரிவு படுத்தி நாட்டை அராஜகத்தின்பால் கொண்டு செல்லத் தொடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சாடினார்.

எதிரணிகளின் பொது முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு செய்யப்பட்டமை அநீதியானதெனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதியை வலியுறுத்தும் மக்கள் மனு கையெழுத்திடும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிரணிகளின் பொது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட இவ்வைபவம் ஜே.ஆர்.ஜயவர்தன கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது; ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான பல போராட்டங்களை நாம் சமகாலத்தில் முன்னெடுத்துவருகின்றோம். இந்த போராட்டங்களில் நாடு முழுவதுமுள்ள மக்கள் ஒன்று பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு எதுவுமின்றி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். எமது நாடு இன்னொரு மியன்மாராக மாறியுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடப்பது உலகிலேயே இதுதான் முதற்தடவையாகும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி தலை தூக்கியிருப்பதற்கு இது ஒன்றே போதுமான சாட்சியாகும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததோடு அது முற்றுப்பெறவில்லை. அவரது மருமகனையும் கை விலங்கு மாட்டத்தேடிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி மருமகனின் தாயாரையும் இரகசியப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி நீதிமன்றில் ஆஜர் செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை பொன்சேகாவின் மரணித்த குடும்பத்தினரின் புதைகுழிகளை தோண்டி அந்த உடல்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம்.இந்த மக்கள் மனு நாடுமுழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் கையொப்பங்கள் திரட்டப்படும். மனுவின் பிரதிகள் தேவைப்படுவோர், ஐ.தே.க., ஜே.வி.பி. தலைமையகங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதிகார வெறிபிடித்த கூட்டம் முதலில் பெரும்பான்மை சிறுபான்மை என்று பிளவுபடுத்தினர். இப்போது சிங்கள மக்களையே இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளது. அத்துடன் படைத்தரப்பிலும் பிளவேற்படுத்தப்பட்டது. இறுதியாக இப்போது பௌத்த மகாசங்கத்தையும் பிளவுபடுத்திவிட்டது.

மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உட்பட நான்கு பீடங்கள் மீதும் களங்கமேற்படுத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் மீது சேறு பூசியவர்கள் பௌத்த மகாசங்கத்தினர் மீதும் அதனைச் செய்ய முற்பட்டுள்ளனர். பிரபாகரனால் செய்ய முடியாததை செய்யமுற்படாததை அரசு செய்து காட்டிவிட்டது. பௌத்த சாசனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிங்கள பௌத்த மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மகாசங்கம் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதற்கெதிராக சிங்கள மக்கள் ஒன்றுபட முன்வர வேண்டும் எனவும் ரணில் அழைப்பு விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • lio
    lio

    அதென்ன பிரபாகரன் கூட செய்யாத என்று உருக்கமாய் ரணில் உருகிறார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நியாயமாகப் பார்த்தால் மஹிந்த செய்தது சரியே. அரசியலுக்கும் மதத்துக்கும் ஒரு சம்பந்தமும் இருக்கக்கூடாது
    ஈழத்தமிழ் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டபோது வாளாவிருந்தது மட்டுமல்ல ஆசீர்வாதம் செய்ததும் கூட இவர்கள் தான். கொல்லப்பட்டபோதும் கூட மெளனம் தான்.

    Reply
  • Ajith
    Ajith

    It is true that Relegion should not involve with politics and Politics should not interfere with Politics. Politicians should not be allowed inside any relegious institutions. How come Rajapakse and Fonseka were allowed inside Dalathamaligava and Nallur temple after killing over 40000 people within a month. The relegious leaders should learn the lessons from this experience. They should not be influenced by politics but they should never allow the politicians to use relegion as means of election campagin. They should teach the people how to get rid of the evils they created in the name of relegion.

    Reply
  • மாயா
    மாயா

    //மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உட்பட நான்கு பீடங்கள் மீதும் களங்கமேற்படுத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் மீது சேறு பூசியவர்கள் பௌத்த மகாசங்கத்தினர் மீதும் அதனைச் செய்ய முற்பட்டுள்ளனர். பிரபாகரனால் செய்ய முடியாததை செய்யமுற்படாததை அரசு செய்து காட்டிவிட்டது. பௌத்த சாசனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிங்கள பௌத்த மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மகாசங்கம் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதற்கெதிராக சிங்கள மக்கள் ஒன்றுபட முன்வர வேண்டும் எனவும் ரணில் அழைப்பு விடுத்தார்.//

    தமிழர் தீர்வுகள் உருவான போதெல்லாம் , இவர்கள் , இந்த பீடாதிபதிகளை வைத்துத்தான் அவற்றைக் கிழித்தெறிந்தார்கள். தமிழனுக்கு மட்டுமல்ல சிறீலங்கா வாழ் அனைவருக்கும் நல் வழி பிறக்க ,இந்த மதங்கள் தடையாக இருக்கக் கூடாது. அதற்கான ஆரம்ப படி இது. மகிந்தவுக்கு எனது வாழ்த்துகள்.

    மதங்கள் கோவிலுக்குள் நிற்கட்டும். பாராளுமன்றம் வரை வர வேண்டாம்.

    Reply
  • Ajith
    Ajith

    தமிழர் தீர்வுகள் உருவான போதெல்லாம் , இவர்கள் , இந்த பீடாதிபதிகளை வைத்துத்தான் அவற்றைக் கிழித்தெறிந்தார்கள். தமிழனுக்கு மட்டுமல்ல சிறீலங்கா வாழ் அனைவருக்கும் நல் வழி பிறக்க ,இந்த மதங்கள் தடையாக இருக்கக் கூடாது. அதற்கான ஆரம்ப படி இது. மகிந்தவுக்கு எனது வாழ்த்துகள்./ மாயா

    So, Rajapakse is ready to find a solution to the tamil problem. What a joke? We all forgot what happened to the All Party proposals. The Rajapakse who convened the APC rejected its proposals. During Presidential election Rajapakse group used TNF’s support to Fonseka as that Fonseka have signed an agreement with TNF to give autonomy to tamils. I agree Buddhists monks and all Sinhala politicians including Rajapakse used relegion for come to the power not to resolve tamil issues. Why cannot Rajapakse put his propsals to his own people who elected him with 57% votes before the general election. Why should he threaten Buddhists monks to stop that conference? It is a democratic right for them to express their view on the arrest of Fonseka.Why still he hold emergency regulations?

    Reply