வடக்கு கிழக்கில் உல்லாசப் பயணத்துறையின் எதிர்காலம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Jaffna_Mayorதமிழ் பிரதேசங்களின் மீள் புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு குறித்து 12.01.2010 அன்று உயர்மட்ட மாநாடு யாழ். புல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ மற்றும் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Shanmugalingam_Profபேராசிரியர் என் சண்முகலிங்கன், பேராசிரியர் எஸ் சத்தியசீலன், கலாநிதி நொயல் நடேசன் (அவுஸ்திரேலியா), கலாநிதி என் நரேந்திரன் (அவுஸ்திரேலியா), பேராசிரியர் எம் சின்னத்தம்பி, திரு ரி கொன்ஸ்ரன்ரைன் (ஜக்கிய இராட்சியம்), திரு எம் இராமதாசன், பேராசிரியர் வி பி சிவநாதன் ஆகியோர் விஷேட உரைகளை ஆற்றினர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் உல்லாச விடுதிகள் பயணத்துறை தொடர்பாக ரி கொன்ஸ்ரன்ரைனின் உரையும் அதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் www.dailymirror.lk/print/index.php/opinion1/3405

Jaffna_Univercity_Templeவடக்கு கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத் துறையையும் அதனை சந்தைப்படுத்தும் விதி முறைகளையும் எடுத்துக் கொண்டால் அவை வடக்கு மாகாணம் அல்லது கிழக்கு மாகாணம் அல்லது வட-கிழக்கு மாகாணம் என்று ஒரு தனி அலகாகப் பிரித்தெடுத்து சந்தைப்படுத்தவோ இயக்கவோ முடியாது. அதற்குரிய பாரிய தனிப்பட்ட சந்தை இல்லை என்பதே எனது அபிப்பிராயம். எனவே உல்லாசப் பயணத்துறையைப் பொறுத்தவரை தமிழ்ப் பிரதேசங்களின் வியாபாரத் திட்டங்கள் சந்தைப்படுத்தும் திட்டங்கள் முழுவதும் முழுமையான சிறீலங்காவையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

கடந்த வருடம் மட்டும் சிறீலங்காவிற்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளின் தொகை 439 000 ஆக இருந்தது. சிறீலங்காவின் உல்லாசப் பயணத்துறை வரலாற்றில் 2004ம் ஆண்டே அதிகமான உல்லாசப் பயணிகள் வருகை தந்தனர். இத்தொகை 5666 202 ஆக இருந்தது. இதன்மூலம் 2004ம் ஆண்டு நாட்டிற்கு 416 மில்லியன் USடொலர்கள் வருவாயாகக் கிடைத்தது.

அத்துடன் 2004ம் ஆண்டு 112 000 பேர் உல்லாசப் பயணத்துறை தொடர்பான தொழில்வாய்ப்பை பெற்றிருந்தனர். இலங்கை உல்லாசப் பயணத்துறை அமைச்சின் திட்டத்தின்படி 2011ம் ஆண்டு 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் நாட்டிற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இக்கணிப்பு எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்றொரு கேள்வி எழுகின்றபோதிலும் World Tourist Organisation போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் கணிப்பின்படி சிறீலங்காவின் பயணத்துறை பெரிய வளர்ச்சியை வருங்காலங்களில் அடையும் என திட்டவட்டமாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதாவது ஒரு விடயத்தை நாம் சந்தைப் படுத்தும்போது அல்லது தூரநோக்கான வழிமுறைத் திட்டங்களை வகுக்கும்போது அதன் பலம் – பலவீனங்களை ஆராய்வது முக்கிய விடயமாக அமைகின்றது. உலகிலுள்ள பல நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறீலங்காவிற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

North_and_Eastசிறீலங்கா தனது 65 525 சதுர கிலோமீற்ரர் குறுகிய நிலப்பரப்பினுள் சகலவிதமான இயற்கை வழங்களையும் வெப்ப நிலைகளையும் உள்ளடக்கி இருக்கின்றது. மலைப்பிரதேசம், குளிர் பிரதேசம், உலர் பிரதேசம், வனவிலங்குகள் பிரதேசம், மலைப்பிரதேசம், காடுகள், சிற்ப ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள், குளங்கள், ஆறுகள் என பல தரப்பட்ட வித்தியாசமான விடயங்களை ஒரு குறுகிய நிலப்பரப்பினுள் உள்வாங்கி அமைந்துள்ளது. எனவே வடகிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறை வியாபார சந்தைப்படுத்தும் அணுகுமுறைகள் சகல விடயங்களையும் உள்வாங்கி அதன் சிறப்புக்களை ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சந்தைப்படுத்துதல் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. சிறீலங்காவின் உல்லாசப் பயணத்துறை படத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணம் ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கின்றது. இக்கால கட்டத்தில் இச்சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் உல்லாசப் பயணத்துறையை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்களின் கலை, கலாச்சாரம், இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதற்குரிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டு அமைக்கப்படல் வேண்டும்.

சிங்களப் பிரதேசங்களின் உல்லாசப் பயணத்துறை 1966ம் ஆண்டிலிருந்து திட்டமிட்ட முறையில் முன்னேற்றப் பட்டுள்ளது. எசல பெரகரா, Navam Perhera, Kelenyia Duruthu Perhera, New Year Celebration, Vesak, Sri Lanka Pilgremade, போயா தினங்கள் உலக உல்லாசப் பயணத்துறை சந்தைகளில் முதன்மை படுத்திக்கொண்டன.

சிறீலங்காவின் ஏனைய பிரதேசங்களைப்போல வடக்கு கிழக்கு மாகாணமும் உல்லாசப் பயணத்துறையில் ஒரு முக்கிய இடமாக திகழ இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது: புலம்பெயர்ந்த தமிழர்களில் அதிலும் குறிப்பாக இரண்டாவது தலைமுறை தமிழர்களின் பிரயாணமும் அதன் மூலமாக உள்வாங்கப்படும் அந்நிய செலவாணியும்.

இரண்டாவது: இன்று சிறீலங்காவின் அதிகூடிய உல்லாசப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தருகின்றனர். எனவே இந்திய உல்லாசப் பயணிகளை தமிழ்ப் பிரதேசங்களுக்கு வரவழைப்பதற்கு வரலாறு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அதிக வழிமுறைகள் இருக்கின்றன.

தமிழ்ப் பிரதேசங்களின் உல்லாசப்பயண வளர்ச்சியைப் பொறுத்தவரை இப்பகுதியின் அரசியல்வாதிகளும் கல்விமான்களும் ஆரம்பத்திலேயே இருந்து மத்தியுடன் முழுமையாகப் பங்கெடுத்து இப்பிதேசங்கள் சர்வதேச சந்தையில் முக்கியப்படுத்த அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எமது பிரதேசங்களின் இயற்கை வளங்கள் இயற்கைக் காட்சிகள் எம்மவருக்குத்தான் அதிகம் தெரியும்.

இன்று சிறீலங்காவிற்கு வருகை தருபவர்களில் 99.9 வீதமானோர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகவே நாட்டினுள் வருகின்றனர். அமைச்சின் திட்டத்தின்படி வருகின்ற 6 வருடங்களில் உல்லாசப் பயணிகளின் வருகை 8.2 மடங்காக அதிகரிக்க திட்டங்கள் உள்ளது. இத்திட்டம் யதார்த்தமாகக் கருதுமிடத்து 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் விமானம் ஊடாக மட்டும் நாட்டிற்குள் வரமுடியாது. எனவே கடல் மார்க்கமாக போக்குவரத்துகள் விஸ்தரிப்பது இன்றியமையாது.

கடற்பரப்பிலான போக்குவரத்து விஸ்தரிக்கப்படும் போது முதலில் தமிழ்ப் பிரதேசங்கள்தான் இதன்மூலம் பயனடையப் போகின்றது. இலங்கை ஒரு தீவாக இருக்கின்ற போதிலும் 99.9 வீதமான மக்கள் விமானம் மூலம் நாட்டிற்குள் வருவது வழமைக்கு மாறானது.

இந்த நிலைமை அரசியல் காரணங்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் இந்நிலைமை வருங்காலங்களில் மாறுவதற்கு அதிக சந்தர்ப்பம் இருப்பதையும் நாம் முற்றாக உணர வேண்டும்.

உல்லாசப் பயணத்துறையில் உள்ள நன்மைகளை நாம் ஆராயும்போது அதன் பின்னடைவுகளையும் தீமைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். இன்று சிறுவர்களின் பாலியல் செயற்பாடுகளில் சிறீலங்காவின் பெயர் முன்னிலையில் இருக்கின்றது.

போதைவஸ்து விபச்சாரம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள் உலக உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சியின் கடுமையான விளைவுகள். சட்டங்கள் ஆயிரம்தான் ஏற்படுத்தினாலும் மக்களின் பூரண ஒத்துழைப்பு இன்றி இவற்றைத் தடுக்க முடியாது.

அண்மையில் வெளிவந்த கணிப்பின்படி சிறீலங்காவில் 10 000க்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவை மூர்க்கத்தனமாகக் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

Tourist_Map_of_SLஎந்தவொரு வளர்ச்சியும் நாட்டு மக்களின் சுபீட்சத்திற்கு வழிசமைக்க வேண்டுமே தவிர அந்த நாட்டில் அரசியல் பொருளாதார நிலைமையை தகாத முறையில் பாவிக்க இடமளிக்கக் கூடாது. இவ்வாறான குற்றச் செயல்கள் பல நாடுகளை தொடர்புபடுத்தி கூட்டாக செயற்படுவதினால் இவற்றைத் தடுப்பதிலும் நாம் ஏனைய நாடுகளுடன் கூட்டாக செயற்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்வதில் இங்கு தொடர்ச்சியாக வாழ்ந்த மக்களுக்குத்தான் பூரண உரிமை இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்த பணத்தை முதலீடு செய்பவர்கள் இங்குள்ள சட்ட திட்டங்களுக்கும் வழிமுறைகளுக்கும் அமைவாகவே செயற்பட வேண்டுமே தவிர பொருளாதாரத்தின் பலத்தால் அவர்கள் முதன்மை அடையக்கூடாது. எனவே இங்கு வாழும் மக்களும் அதன் கல்விமான்களும் உத்தியோகத்தர்களும் அரசியல்வாதிகளும் கூட்டாக அமைக்கும் திட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாம் எமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 Comments

 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  உல்லாசப் பயணிகள் தங்குவதற்கென அமைக்கப்படும் வீடுகள் கடற்கரைகளில் அமைக்கப் படும் போது உள்ளூர் மீனவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவர் மற்றும் தொழில் வாய்ப்புக்களை இழப்பர். இது போன்ற பல பிரச்சனைகள் சரியான முறையில் திட்டமிடப்படாத உல்லாச பிரயாணத்துறையின் வளர்ச்சியால் ஏற்படும் என்பது பல ஏழை நாடுகளின் அனுபவம். தயவு செய்து திட்டமிடுபவர்களும் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரங்களைக் கொண்டவர்களும் உள்ளூர் மக்களைப் பாதிக்காத விதத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். வானுயர் (ஹோட்டல்) கட்டிடஙளோ, மேம்பாலங்கள் கொண்ட தார்ச் சாலைகளோ அபிவிருத்தியின் அடையாளங்களல்ல .மக்களுக்கு நீண்ட கால வாழ்வாதாரம் அளிக்கக் கூடிய, அவர்களது நாளாந்த வாழ்க்கை தடையின்றி நடைபெற வழி செய்யக் கூடிய திட்டங்களே உண்மையான அபிவிருத்தியை உருவாக்கும். உல்லாசப் பிரயாணத் துறையில் நல்ல ஆலோசனைகளைப் பெற பின்வரும் இணையத் தளத்தை ஒரு முறை சென்று பாருங்கள்: tourismconcern.org.uk

  Reply
 • NANTHA
  NANTHA

  உல்லாச பயணத்துறை என்பது சாதரணமான மக்களின் பிரச்சனை தீர்க்கும் ஒரு நிவாரணி அல்ல. பணக்காரர்கள் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து செய்யம் ஓர் வியாபாரம். அந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்வை மேம்படுத்த அந்த இடங்களில் உள்ள இயற்கை வளங்களை எப்படி அந்த மக்கள் பயன் படுத்தத் வேண்டும் என்பதை ஆராயாமல் ஓர் ஹோட்டல் கட்டி அங்கு வருபவர்களுக்கு சாயம் பூசிய பனையோலைப் பெட்டிகளையும், சாராயத்தையும் பியரையும் விற்றால் அந்த மக்கள் பயனடைய மாட்டார்கள்.

  Reply
 • Constantine
  Constantine

  Whenever a theory appears to you as the only possible one, take this as a sign that you have neither understood the theory nor the problem which it was intended to solve”

  Reply
 • aras
  aras

  விற்க முடியாமல் வாடிப்போய் விவசாயி எறிகின்ற காய்கறிகள் பழங்களை பதனிடவும் சேமிக்கவும் முதலீடு செய்யமாட்டார்கள். மீன் பிடிப்பனுக்கு நவீனமான முறைகளில் பிழைப்பதற்கு முதலிட மாட்டார்கள். இவர்கள் கட்டும் விடுதிகளில் யார் அனுபவிக்கப் போகின்றார்கள். ஒரு விவசாயியோ உத்தியோகத்தனோ அந்த விடுதிகளில் தங்க முடியுமா? மாறாக அங்குள்ளவர்களை வேலைக்கமர்த்தி தாங்கள் போட்ட முதலீட்டின் இலாபத்தை கொள்ளையடிப்பதற்கு பெயர் அபிவிருத்தியா? வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வசதி செய்வது இருக்கட்டும். உள்நாட்டு மக்களை முன்னேற விடுங்கள். மக்கள் தங்களை சுற்றியுள்ள வளங்களை வைத்து முன்னேறுவார்கள். அவர்களுக்கு தேவை உல்லாச விடுதிகளல்ல. உங்கள் பணத்தை பெருக்க எங்கள் மக்களா கிடைத்தார்கள்?

  Reply
 • விசுவன்
  விசுவன்

  விரும்பியோ விரும்பாமலோ தற்போது யாழ் நகர் நோக்கி உல்லாச பயணிகள் படையெடுத்துள்ளனர். இவர்களை விரட்டியடித்து விட்டு தான் மறுவேலை செய்ய வேணுமா? விவசாயிகள் மீனவர்களின் மடியில் கைவைக்காது ஒரு நல்ல வருவாயை கொடுக்கும் தொழிலாக ஏன் உல்லாசத்துறை இருக்க முடியாது என்ற சிந்தனையை விடுத்து வெறும் எதிர்மறைக்கருத்துகள் எந்த ஒரு பலனையும் தரப்பேவதில்லை! யாழ் குடாவை மட்டும் எடுத்தால் அங்கு மீனவர்களோ விவசாயிகளோ இந்த உல்லாசத்துறையால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாகவே உள்ளது. ஆனால் இது பற்றிய ஒரு விரிவான விவாதத்திற்கு போகாது எழுந்தாமானமா மார்க்சிச புத்தக வரிகளை இங்கு பின்னோட்டம் விடுவது அங்கு வாழும் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாது!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  திரு. கொன்ஸ்ரன்ரைன்,

  நீங்கள் ஆங்கிலத்தில் கொடுத்த அறிக்கைகள் (தேசம்நெற்/டெய்லிமிரர்/ரான்ஸ்கரன்ற்ஸ் போன்றவற்றில்) உங்களின் உலாசப்பயணத்துறை பின்னணித்தொடர்புகள் பற்றிய டிஸ்கிளெய்மருடன் வந்துள்ளது ஆனல் தேசத்தில் தமிழாக்கப்பட்ட இவ்வறிக்கைகளில் அவை ஏன் இல்லை என விளக்க முடியுமா?

  Reply
 • aras
  aras

  யாழ் குடாவை மட்டும் எடுத்தால் அங்கு மீனவர்களோ விவசாயிகளோ இந்த உல்லாசத்துறையால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாகவே உள்ளது”

  உங்களுக்கு பணத்தோடு வரும் முதலாளிகளைப் பற்றியும் அவர்களின் அதிகார பலம் பற்றியும் தெரியாது போலிருக்கிறது. நிற்க. எதற்கெடுத்தாலும் மாக்ஸியத்தை ஏன் வம்பிற்கு இழுக்கிறீர்கள்? விவசாயி, மீனவன் ,அன்றாடங்காய்ச்சிகள் பற்றி கவலைப்படவோ சிந்திக்கவோ யாருக்கும் உரிமையில்லையா? உல்லாசம் தேடி வருபவர்களின் வசதிகளைப் பற்றியா கவலைப்படச் சொல்கிறீர்கள்?

  Reply
 • jo
  jo

  உல்லாசத்துறை நிச்சயம் மீன் பிடித்தொழிலை பாதிக்கும். உதாரணம் ஜமெய்க்கா. நல்ல வளம் கொண்ட இத் தீவு இன்று அமெரிக்காவின் அந்தப்புரமாக மாறிவிட்டது. மகிந்தா கியூபா போன்று நாட்டை மாற்றுவாராயின் வரையறுக்கப்பட்ட உல்லாசத்துறை மொத்த தேசிய உற்பத்தியில் குறைந்தது 15 வீதத்தையாவது பெற்றுத் தரும்.

  Reply
 • Constantine
  Constantine

  வெள்ளைக்காரர் ஆட்சி செய்த காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு ரயில் பாதை போடும் திட்டத்தை அறிவித்தார்கள். அப்போது எனது அப்பப்பா ஊரைத் திரட்டி ஊர்வலம் போகத் திட்டமிட்டார். காரணம் ரயில் சத்தம் கேட்டு கோழிகள் மாடுகள் எல்லாம் எழுந்துவிடும் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாது என்பதே அவர்களின் ரயில் எதிர்ப்புக்கான அடிப்படைப் பொருளியல் காரணி. நந்தாவுடன் ஒப்பிடும் போது அப்பப்பா………….

  Reply
 • NANTHA
  NANTHA

  பல தசாப்தங்களாக புகையிரதத்தையே காணாமல் வளர்ந்துள்ள ஒரு சந்ததி வடபகுதியில் உண்டு. புகையிரதம் யாழ் மக்களுக்கு சாதித்தது எதுவென்றே இப்போது தெரியவில்லை.

  தவிர இந்த உல்லாச பயணிகளுக்கும் புகையிரத அறிமுகத்துக்குமான “ஒற்றுமை” எதுவென்றே தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளில் “பணம்” சேர்த்த தமிழர்கள் பலர் “வழக்கம்” போல அங்குள்ள தமிழர்களுக்கு “முதலாளிகள்” என்று வலம் வர முயற்சிப்பது புரிகிறது.

  கனடாவில் “புலி” என்று திரிந்த வியாபாரக் கோஷ்டிகள் இன்று ராஜபக்ஷவுடன் சிரித்துக்கொண்டு எடுத்த பல புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. எந்த தமிழன் தொலைந்தாலும் பரவாயில்லை. எங்கள் பைகள் நிரம்ப வேண்டும் என்ற சிந்தனையில் அலைபவர்களுக்கு சில யதார்த்தங்கள் புரியப்போவதில்லை.

  Reply
 • Constantine
  Constantine

  Shanthan,

  Sorry , I cannot understand what you meant by disclaimer . Kindly carrify.

  Thank you

  Reply
 • aras
  aras

  வெள்ளைக்காரன் எங்கள் மக்கள் மீதான அன்பினால் ரெயில் விட்டான். புலத்து முதலாளிகள் அதே அன்பினால் விடுதிகளை கட்ட வருகிறார்களாக்கும்.!

  Reply
 • Kusumpu
  Kusumpu

  aras! வெள்ளைக்காரன் அன்பால் ரெயில் விடவில்லை. இது வெள்ளையனுக்கும் தாஜா பண்ணும் துதிபாடல். வெள்ளையன் தன்வசதிக்கு பொருட்களை எடுத்து வந்த வியாபாரம் செய்வதற்கும் அதற்காக எமது மக்களை பயன்படுத்தப் பயணம் செய்வதற்குமே ரெயில் விட்டான். அன்பாம் அன்பு இது என்ன வம்பு

  Reply
 • NANTHA
  NANTHA

  இந்த உல்லாச பயணத் துறை என்பது ஓர் “SERVICE INDUSTRY”. தமிழில் “சேவகம் செய்யும் துறை” என்று கூறலாம். இதற்கு முதலில் பலியாவது “உள்ளூர்” கலாச்சாரங்களே ஆகும். இனி டொலர் பலத்தோடு வரும் “வெளிநாட்டவர்களை ” முகம் கோணாமல் உபசரிக்க பல “உபசாரங்கள்” செய்யவேண்டி வரும்.

  1965 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யு என் பி அரசு காலத்தில் இந்த “உல்லாசப் பயணத்துறை” என்பதற்கு இலங்கையின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க துவங்கினார்கள். ஹோட்டல்கள் கட்டப்பட்டன. ஆனால் இன்று வரை இலங்கையின் மொத்த வருமானத்தில் இந்த உல்லாச பயணத்துறை எந்த “தாக்கத்தையும்” விளைவிக்கவில்லை.

  ஆனால் இந்த துறையின் பக்க விளைவான பல துறைகள் தோன்றின. அவற்றின் உபத்திரவங்கள் தாங்க முடியாதவை. சிறுவன், சிறுமிகளை வரும் “அதிதிகளுக்கு” சப்ளை பண்ணுவதிலிருந்து “தூள்” சப்ளை என்பது வரை வியாபித்துள்ளது. இவற்றுக்கு எதிராக போரிட அரசு மக்கள் பணத்தை செலவிடுகிறது. ஆனால் அந்த “பாதாளப் படு குழியிலிருந்து” பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றிய கதைகளைக் காணவில்லை.

  தென்னிலங்கையில் இந்த துறையில் இன்றும் பலிக்கடாக்களாக மாறிக்கொண்டிருப்பவர்கள் “வசதி படைத்தவர்கள்” அல்ல. வறுமையில் வாடும் பொது மக்களே பலியாடுகளாக உள்ளனர்.

  சிங்கபூரை போல் ஆக்கலாம் என்றும் இவர்கள் சரடு விடுவார்கள். இந்த “உல்லாச” பயணிகளின் பணத்துக்காக சிங்கப்பூர் “விபச்சாரத்தை” சட்டபூர்வமாக்கியுள்ளது.

  தற்போது யாழ் குடா நாட்டில் “தமிழ் ஈழம்” பல பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. இந்த சூழ் நிலை “பணத்தை’ அள்ளி வீசி அந்த மக்களில் கணிசமானோரை மவுனமாக்க முடியும்” என்று முன்னர் ஈழத்துக்கு ஆதரவு கொடுத்த அதே ஆட்கள் நம்புகிறார்கள்.

  ARAS கூறுவதைப்போல “காய் கறிகள், மீன் பதனிட” பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவற்றிலிருந்து லாபம் காண நீண்ட நாட்கள் எடுக்கும். அதைவிட “குயிக்” மணி இந்த “உல்லாச” துறையில் கிடைக்கும். அதனை எடுத்துக் கொண்டு ஓடி விடுவதுதான் தற்போது இந்த உல்லாசதுறையில் நடக்கும் நிகழ்வு.

  தமிழீழம் என்ற மாயையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரும் “நஷ்ட ஈடு” கொடுக்கப்போவதில்லை. அதனை வைத்து “சுருட்டியவர்கள்” இன்று நாட்டிலும் இல்லை. ஆனால் அந்த சுருட்டல் கோஷ்டிகள் இன்று புதிய ராகத்துடன் “மீண்டும் ஒரு முறை ஆள” வந்துள்ளார்கள் என்றே நம்புகிறேன்!

  Reply
 • Constantine
  Constantine

  Do gooders – Talk only No Action – None what so ever – Opinion is free enjoy…

  Why dont you go back and implement your wonderful ideas – Probably no benifit system in Sri Lanka

  Reply
 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  திரு. கொன்ஸ்ரன்ரைன்..

  உங்களுடைய ஆங்கிலக் குறிப்புகள் இப்போது உங்களை யாரென்று தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. நந்தா சொல்லும் கருதுக்களை வெறுமனே நிராகரிக்கிறீர்கள். அவருடைய வாதங்கள் நியாயமானவை. அதற்கு சரியான முறையில் பதில் சொல்ல முடியாமல் இருப்பதற்கு உங்களுக்கு பொது அறிவு போதாமல் இருக்க வேண்டும் அல்லது உங்கள் முதலாளிகளுக்கு நீங்கள் செய்ய விரும்பும் சேவை உங்கள் அறிவை ஆக்கிரமித்து இருக்க வேண்டும். உல்லாசப் பயணத் துறையால் முன்னேறிய எந்தவொரு நாட்டையாவது நீங்கள் உதாரணமாக காட்ட முடியுமா? அந்த நாடுகளில் நந்தா சொல்லும் பிரச்சனைகளில் ஒன்றாவது இல்லை என்று சொல்ல முடியுமா? உல்லாச பயணத்துறை என்பது ஏழை நாடுகள் மீது உலக வங்கியால் திணிக்கப்பட்ட ஒரு ஏமாற்று பரிகாரம். தாய்லாந்தின் நிலைமையை நீங்கள் எங்குமே படித்ததில்லையா? சிஙகள மக்கள் தற்போது யாழ்ப்பாணத்திற்கு பெருமளவில் வருவதன் காரணம் உல்லாசப் பயணம் மட்டும் தானா?

  Reply
 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  உங்கள் கட்டுரையில் குறிப்பிடப்படுள்ள மாநாட்டுப் பேச்சாளர் பலர் அபிவிருத்தி பற்றி ஏதும் அறியாதவர்கள். திரு.நோயல் நடேசன் தொழிலால் ஒரு மிருக வைத்தியர். அவர் டாக்டர் நடேசன் என்று சொல்லியதை நீங்கள் கட்டுரையில் கலாநிதி ஆக்கி விட்டிருக்கிறீர்கள். கலாநிதிகள் கூட தமது பாடப் புத்தகங்களை தாண்டி சிந்திப்பதில்லை என்பது தமிழர்களைப் பொறுத்த வரையில் இன்று வெட்ட வெளிச்சம். ராமதாஸ் என்பவர் ஒரு சிவில் எஞ்சினியர், இதுவரை காலமும் புலி குண்டுவைத்து உடைத்த மதகுகளை அரசாங்க கண்ட்ராக்குகளில் கட்டிக் கொண்டிருந்தவர் (டக்ளஸ் தயவில்)டாக்டர், எஞ்சினியர் என்று தமது தொழில்களை பெயருக்கு முன்னால் போட்டு தம்பட்டம் அடிப்பவர்கள் மக்களுக்கு உண்மையான சேவை செய்ய முடியுமா என்பது எனது மனதில் எப்போதும் எழும் கேள்வி. அவர்களுக்கு மக்களுடைய அபிவிருத்தியை விட தமது சொந்த அபிவிருத்தியே முக்கியமாகத் தெரியும்..

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  கொன்ஸ்ரன்ரைன்,

  நீங்கள் எழுதிய/சமர்ப்பித்த உல்லாசப்பயனத்துறை பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் உங்களுக்கும் உல்லாசப்பயணத்துறைக்கும் உள்ள தொடர்புகளை விரிவக குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் தேசம்நெற், ரான்ஸ்கரன்ற்ஸ், டெய்லி மிரர் எல்லாம் அடக்கம். ஆனால் தமிழில் வெளியிட்ட எதிலும் அதைக்காணோம். என்ன காரணம்?

  (Extacts from paper submitted by Mr Tarrin Fellow Member of British Association 0f Hospitality Accountants & Member of Institute of Hospitality. Currently working as the Group Financial Director of Desilu Group (owners & operators of Hotels & Properties) based in United Kingdom and Cyprus,)

  முன்னைய கட்டுரையில் முக்கிய விடயமாக நீங்கள் குறிப்பிட்ட ஒன்று அனானப்பட்ட ‘புலி ஆதரவு’ கோஷ்டியே இப்போது உல்லாசப்பயண துறையில் யாழில் கால் வைக்கிறது வேறென்ன ஜஸ்ரிபிக்கேசன் வேண்டி இருக்கிறது என. புலிஆதரவு கோஷ்டி செய்வதை நீங்கள் உங்களுக்கு சார்பான இண்டஸ்ரி என வரும் போது நியாயப்படுத்துவது மிக ஆச்சரியமாக இருந்தது. பின்னர் ஆங்கிலத்தில் வாசிக்கும் போதுதான் தெரிந்தது ‘கொன்ஃபிளிக்ற் ஒஃப் இன்ரஸ்ற்’ காரணம் என…..

  மேலும் நீங்கள் சொன்ன ரயில் வந்தபோது நடந்த ‘ஜோக்குகள்’ எங்கள் ஊரிலும் பிரசித்தம். ஆனால் அதையெல்லாம் எமது மக்களின் அறியாமையை எள்ளி நகையாட உபயோகிப்பது நல்லதல்ல. அந்த மக்கள் வாழ்ந்த காலத்தில் அவ்வகையான பெரிய ஒலி எழுப்பும் வாகனங்கள் கிடையாது.

  இன்றும் நான் வாழும் பகுதியில் இரவு 12.00க்கு பின்னர் விமானம் செல்ல முடியாது காரணம் நித்திரை குழம்பும் என. மேலும் எமது சந்தியில் பெரியதொரு ஷொப்பிங் கொம்பிளெக்ஸ் கட்ட முயல்கிறார்கள் ஆனால் சனக்கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அதனால் உள்ளூர் வாசிகள் தமது வாகனங்களை வெளியே எடுக்க சிக்கல் என தடை. இத்தனைக்கும் நான் வாழும் பகுது நகரிலேயே உலாசப்பயணிகள் வருவது மிகக்குறந்த பகுதி, உல்லாசப் பயணிகளை கவரும் விடயங்கள் நிறைய உண்டு. ஆனால் உள்ளூர்மக்களின் ‘குவாலிற்றி ஒஃப் லைஃப்’ பாதிப்படையக்கூடாது என.
  எனது மனேஜராக வேலைபார்ப்பவர் தனது ஆரம்பகாலத்தில் எழுதப்பட்ட கம்பியூட்டர் கோடிங் எல்லாம் ‘முதிர் வயது‘ வந்து இறந்து விடும் என நினைத்திருந்தாராம். இத்தனைக்கும் அவர் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வேலை செய்தவர்! இதை வைத்து முன்னைய கம்பியூட்டர் காரரை நக்கல் அடிக்கலாமா?

  எமது மக்களின் ’நித்திரை, என்கின்ற பொருளாதார காரணி’ பற்றி கிண்டல் விடும் நீங்கள் ஏன் உல்லாசப் பயணத்துறைக்கும் உங்கள் ‘பொருளாதார பின்னணிக்கும்’ உள்ள தொடர்பை தமிழில் ஒளித்தீர்கள்? கொன்ஃபிளிக்ற் ஒஃப் இன்ரஸ்ற் தானே? அத்தொடர்பை ‘டிஸ்கிளெய்மர்’ ஆக ஆங்கிலத்தில் போட்டு தமிழில் போடாம விட்டது என்ன காரணம்?
  I may be wrong in using the word ‘disclaimer’, but you got the point. Did you?

  Reply
 • aras
  aras

  Why dont you go back and implement your wonderful ideas
  புலியை பிழை என விமர்சிப்பவர்களைப் பார்த்து உடனடியாக இப்படித்தான் புலி உறுப்பினர்களும் புலியை அண்டிப் பிழைப்பவர்களும் சொல்வார்கள். (இங்கே ஏன் நிற்கிறாய்? போய் போராட வேண்டியது தானே?) அதையே அவரும் குறிப்பிடுகின்றார்-

  தாமிரா மீனாட்சி! எஞ்சினியர் டாக்டர்களைப் பற்றிய உங்கள் கணிப்பீடு அச்சொட்டானது. சமூகத்தைப் பற்றி மினக்கெடுபவனால் எஞ்சினியர் டாக்டர் ஆக முடியாது.

  Reply
 • NANTHA
  NANTHA

  Thamira:
  Thanks for realising my points.
  Engineer Ramadas, who was allied with PLOT in the 80s and hails from Chunnakam, if my memory is correct.

  Constantine:
  I will come to Jaffna soon. Then you will see the impact there.

  Further my writtings hert you a lot because “cat is out of the bag”.

  LTTE robbed/taxed billions of rupees and that haul of money is not recovered but I now feel that money is to be deployed to make the QUICK BUCKS!

  I know well who are the safe keepers of the LTTE loot!

  We will see later.

  Reply
 • aras
  aras

  “ரயில் வந்தபோது நடந்த ‘ஜோக்குகள்’ எங்கள் ஊரிலும் பிரசித்தம். ஆனால் அதையெல்லாம் எமது மக்களின் அறியாமையை எள்ளி நகையாட உபயோகிப்பது நல்லதல்ல.”

  ஆடு மாடு கோழி தான் உலகமாக வாழ்ந்த அம்மக்களை கொன்ஸ்ரன்ரைன் நக்கலடித்திருந்தது என் மனதையும் பாதித்திருந்தது.

  Reply
 • thurai
  thurai

  இலங்கையில் தமிழர்களிற்கென்று பிரச்சினகள் பலவுண்டு. புலிகளினால் தீர்க்ககூடிய பிரச்சினைக தீர்க்கப்படாமலும், பிரச்சினைகளை பேசுவதற்கு ஆளில்லாத நிலமையும் உருவாகிவிட்டது.

  யாழ் மக்களின் வாழ்வு இதுவரை புலத்தில் வாழும் உற்வுகளின் உதவியினிலேயே தங்கியிருந்தது. இனியாவது அந்த மக்கள் சுயதொழில் செய்வதற்கான வாய்புகளை ஆராய்ந்து ,உதவிகளை வழங்குதலே முதலில் தேவையான விடய்ம்.

  புலத்தில் புலிகளின் முகவர்கள் வியாபாரங்களை கட்டுப்படுத்துவது போல, இலங்கையிலும் புலி எதிர்ப்பாளர்க்ழும் வேசம் மாறிய புலிகழும் சேர்ந்து செய்யும் முதலீடுகளே அதிகரிக்கின்றன. இவர்கள் மண்ணையோ, அந்த் மக்களையோ நேசிக்கும் மனிதர்களல்ல.

  அரசாங்கம் இவர்களைப் பற்ரி விசாரிக்காமல் முதலீடு செய்ய விடுகின்றது. காரணம் உல்லாசமா புலத்துப்பண வரவால் வாழ்வோராலும், உல்லாசப் பயணத்துறையாலும் ஈழத்தமிழரின் முதுகுப் பலம் குறையுமென்பது அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரிந்த விடயம்.

  துரை

  Reply
 • மாயா
  மாயா

  //புலத்தில் புலிகளின் முகவர்கள் வியாபாரங்களை கட்டுப்படுத்துவது போல, இலங்கையிலும் புலி எதிர்ப்பாளர்க்ழும் வேசம் மாறிய புலிகழும் சேர்ந்து செய்யும் முதலீடுகளே அதிகரிக்கின்றன. இவர்கள் மண்ணையோ, அந்த மக்களையோ நேசிக்கும் மனிதர்களல்ல.- துரை//

  தன்னைத் தவிர , எவன் தன் மக்களை நேசித்தான்? இப்போது சிறீலங்கா அரசு, அருமையாக பயணிக்கிறது. 1. எதிரிகளுக்கே கதவைத் திறந்து நாட்டை முன்னேற்ற வழி செய்துள்ளது. இவர்களது முதலீடு இருக்கும் பொது, அதன் அழிவுக்கு இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள். விழும் அடி , இவர்களது அடி மடியிலல்லவா? 2. அழித்த புலிகளே , தம் பகுதியை முன்னேற்ற டாலர்களையும் , பவுண்களையும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். 3. இதுவரை புலிகளோடு இருந்தவர்களது உண்மை முகங்களைப் பாருங்கள் என மக்களை சிந்திக்க வைப்பது.

  அமைதியும் , பணப் புழக்கமும் ஏற்படும் போது புரட்சியாவது? புண்ணாக்காவது? மக்கள் சுகமாக வாழவே விரும்புவர். இதுதான் இன்றைய சுதந்திரம்.

  “இப்போது வன்னியில் பாதைகள் செப்பனிடப்பட்டு, லைட்டும் போட்டு பஸ்ஸும் ஓடுது” என ஒரு புலி தொலைபேசியில் என்னிடம் சொல்லி ஆனந்தப்பட்டார். இதுதான் மாற்றத்தின் ஆரம்பம். அடுத்து “வவுனியாவிலிருக்கும் நாங்கள் நாளை கிளிநொச்சி போகப் போறம். பழைய வீடுகளை திருத்த அரசாங்கம் , காசும் தருகினம்” என்றார் அந்த பழைய புலி.

  Reply
 • Ajith
  Ajith

  Dear Mr. Constantine
  I appreciate your interest in developing Sri Lanka and regenerating its fallen tourism industry. I donot understand why you have chosen North-East for exploiting this purpose. A successful tourism industry depends on the stability of the country. the end of war in Sri Lanka did not bring stability or peace in the country. The country is now moving towards a dictatorship and militarisation of the nation. First who is going to benefit from the tourism industry in the North East. What are the benefits to local people, its culture, its development? There are around 100,000 refugees are in India and another 100,000 in Vanni. Over 200,000 people in Vanni are without a place to sleep.Young girls and boys are now in the streets begging for food. Over 100,000 military personal in the region. Do you think these are favourable situations for tourisim.

  Reply
 • ஜெயராஜா
  ஜெயராஜா

  கொன்ஸ்ரன்ரைன் கட்டுரையை தமிழில் எழுதி பின்னோட்டத்தை ஆங்கிலத்தில் விடவேண்டும் என்பதல்ல!
  ஜெயபாலன் ஆங்கிலத்தில் வரும் பின்னோட்டத்திற்கும் தமிழில் பதில் தருவது வரவேற்கத்தக்கது.

  Reply
 • ஜெயராஜா
  ஜெயராஜா

  கிளிநொச்சியில் கிடுகுகளால் கூரை போட்ட பாடசாலைக்கு பழைய வித்துவாங்கள் போய் சொக்கலேட் தொழிற்சாலை கட்டுவது பற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.

  உடனடித்தேவை அந்த மக்கள் பசி தீர்க்கப்பட வேண்டும்- நிரந்தர வசிப்பிடம் வேண்டும். அதற்கு அப்புறம் தாமிரா, அரஸ், நந்தா சொல்வது போன்று மீன்பிடி, விவசாயம், கால்நடை, போக்குவரத்து, பெருந்தெருக்கள் இவை விஸ்தரிக்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் அந்த மக்கள் நீண்டகால நன்மை பெறமுடியும். சுதந்திரக் கட்சிக் காலத்தில் மிளகாயும் புகையிலையும் பயிர்செய்து 40 பவுணில் மனைவிக்கு நகை செய்தார்கள். அதற்கு அப்புறம் நீண்ட வருடங்கள் கழித்து சுவிஸ்ற்கு வந்து 40 பவுணில் மனைவிக்கு தாலிக்கொடி கட்டினார்கள். ஏதோ கொஞ்சமாவது செய்யப் போகிறவர்களை தடுப்பது அல்ல நோக்கம். முதலில் எங்கே ஆரம்பிப்பது என்று சிந்தியுங்கள். மாயா சொல்வது போல் சில உண்மைகளையாவது அந்த மக்கள் உணருவார்கள்.

  கொன்ஸ்ரன்ரைன் அப்பப்பா சூரியனைப் பார்த்தே நேரம் சொல்லுவார்..அன்று நாட்டில் இருந்த செழிப்பு இன்று இல்லை.

  Reply
 • palli
  palli

  உல்லாசபயணம் போனவர்கள் உல்லாச சுற்றுலா தளம் அமைப்பது பற்றி விவாதிப்பது வேடிக்கைதான், இருப்பினும் இப்பதான் யாரும் எதுவும் செய்யலாம் என இருப்பதால்; இந்த பயணிகள் கவனத்துக்கு எதுக்கும் பிரயோசனபடாத கடற்கரை நிலங்கள் பல உண்டு, அவைகளை இந்த சுற்றுலா இடங்களை அலங்கரிக்கலாம், காரனம் மீன் எல்லா இடத்திலும் இராது அதுக்கென சில இடங்கள் உண்டு அது தவிர்ந்த இடங்களை இப்படியான விடயங்களுக்கு பாவிக்கலாம்; இருப்பினும் கடல் தொளிலார்களையும் இப்படியான பேச்சு வார்த்தையில் சேர்ப்பது அவசியம் அதுடன் எந்த காரனம் கொண்டும் விவசாய நிலங்களை காட்ச்சி நிலங்களாய் மாற்றபடாது சொல்லிபுட்டன்,

  Reply
 • santhanam
  santhanam

  என்ன பல்லி இப்ப இழப்பதற்கு எதுவும் இல்லை என்று தெரிந்த பின்பும் அதிகார தொனியில் எழுத்துள்ளது

  Reply
 • Ajith
  Ajith

  I think the better place for tourist develiopment is Mullivaygal in Mullaitivu. It will create a massive inflow of tourists not only indians and diaspora but also Chinese, Iranians, Russians, EU, Americans. It is worth building a museum with the bones and skulls of those 40,000 people killed in the Mullivaygal by our heros Rajapakse and Sarath Fonseka.

  Reply
 • மாயா
  மாயா

  //ஜெயராஜா on February 19, 2010 9:30 pm
  உடனடித்தேவை அந்த மக்கள் பசி தீர்க்கப்பட வேண்டும்- நிரந்தர வசிப்பிடம் வேண்டும்//

  ஜெயராஜா , வன்னியில் பயிற்சி பெற்ற யாழ்பாணத்தில் தாக்குதல் நடத்துவதற்காக காத்திருந்து விட்டு, தற்போது சுவிஸ் வந்துள்ள ஒரு இளைஞனை அண்மையில் சந்தித்தேன். அந்த இளைஞன் சொன்னார் ” ஒரு முறை யாழ்பாணத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடாக இருந்தது. மக்கள் , கொழும்பிலிருந்து முட்டைகள் கொண்டு வந்து தர முடியுமா என ஆமியிடம் கேட்க , ஆமி, முட்டைகளோடு , கோழிக் குஞ்சுகளையும் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டு , அடுத்த முறை நீங்கள் முட்டைகளுக்காக அலையாதீர்கள்” என்றார்களாம்.

  ஒரு வேளை பசி தீர்ப்பதை விட , அவன் வாழ்வு வழமாக வழி காட்டுவதே சிறப்பான உதவி. அதற்கு வேலை வாய்ப்பு மற்றும் அடிப்படை தேவைக்கு வழி காட்ட வேண்டும். உணவு – உறைவிடம் எல்லாம் இலவசமாகும் போது , இவர்கள் சோம்பேறியாகி யார் வாழ்வையாவது கெடுக்கத் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். அது வேண்டாம் என்கிறேன். கோபமில்லையே?

  Reply
 • aras
  aras

  மாயா! ஜெயராஜா இலவச உணவு என்ற பிச்சைக்கார கையேந்தல் நிலையை மனதில் கொண்டு எழுதியிருக்க மாட்டார். வட கிழக்கில் மக்கள் தெரிந்து வைத்துள்ள தொழில்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி கொடுப்பதே அவர்களுக்கு செய்யும் நல்ல உதவியாக அவர்களை கொளரவமாக வாழ வைக்கும்.

  Reply
 • மாயா
  மாயா

  aras , ஜெயராஜாவின் கருத்தை கையேந்தலாக நினைக்கவில்லை. நம்மவர்கள், அதை தவறாக எடுத்துக் கொள்வார்கள். எனக்கு அதில் அனுபவம் உண்டு. சுனாமி காலத்தில் 3 மாதங்கள் ஐரோப்பிய அமைப்புகளோடு சென்று இலங்கை பூராவும் உதவி பணிகளில் ஈடுபட்ட போது கிடைத்த அனுபவம் மறக்க முடியாதது. நாங்கள் , அவர்களுக்காக உதவிகள் செய்து கொண்டிருந்த போது , பாதிக்கப்பட்டவர்கள் உட்கார்ந்து வெட்டிப் பேசிக் கொண்டு , மது போதையில் வேறு இருந்தனர். இது மனதை பாதித்தது.

  “உங்களுக்கு உதவ நாங்கள் வந்திருக்கிறோம். வந்து உதவலாமே?” என்ற போது ” எல்லாம் முடிந்த பிறகு கூப்பிடுங்கோ. பிறகு வருவம்தானே” என்ற பதில் போலவே விசர் பதில்கள் கிடைத்தது. ” உடைந்த வீட்டைக் கட்டி, அதற்கு தேவையான சாமான்களையும் தந்து காசும் தருவீர்கள்தானே?” என்பதெல்லாம் உச்சமாக இருந்தது. ஒரு அமெரிக்கன் சொன்னான் ” நாம் வேலை செய்யிறது. அவங்களுக்கா இல்லை எங்களுக்கா என்று விளங்கவில்லை” என எரிச்சலோடு. எனவே எமது உதவிகள் சிறிமா கொடுத்த 2 கொத்து இலவச அரிசி மாதிரியாகி விடக் கூடாது.

  Reply
 • palli
  palli

  சந்தானம் உங்கள் பின்னோட்டம் புரியவில்லை; திரும்பவும் எழுதவும்; பல்லிக்கு வயதாச்சல்ல; அதனால் சுருக்கமாக எழுதினால் புரிவது கடினமாக உள்ளது;

  Reply
 • தமிழ்வாதம்
  தமிழ்வாதம்

  “உங்களுக்கு உதவ நாங்கள் வந்திருக்கிறோம். வந்து உதவலாமே?”
  ” நாம் வேலை செய்யிறது. அவங்களுக்கா இல்லை எங்களுக்கா என்று விளங்கவில்லை”// மாயா on February 20, 2010 10:39 am

  சுனாமிக்கு சேகரித்த பணம் எல்லாம் அந்த மக்களுக்கே கிடைத்த மாதிரியும்,உதவி என்ற பேரில் உறிஞ்ச வந்தவர்கள் மனமுடைஞ்ச கதை எழுதுகிறதும் உங்கள் சிந்தனை எங்கே போகிறது என்பது ஆச்சரியமாகவில்லை.

  Reply
 • aras
  aras

  உடைந்த வீட்டைக் கட்டி, அதற்கு தேவையான சாமான்களையும் தந்து காசும் தருவீர்கள்தானே”//

  இப்படியொரு மனோபாவத்தை வளர்ப்பதற்காகவும் தான் தன்னார்வக் குழுக்களின் எஜமானர்கள் திட்டமிட்டார்கள். தாம் என்ன செய்கிறோம் ,மக்களின் வாழ்வாதாரங்களை மெல்ல மெல்ல அழிப்பதற்கே செயற்படுகின்றோம் என்பதையெல்லாம் தன்னார்வ தொண்டர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று இல்லை. தன்முனைப்பும் சுய கொளரவமும் அற்றவர்களாக மக்களை மாற்றுவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பவுண்டுகளும் டொலர்களும் தாராளமாக இறைக்கப்பட்டன. எப்போதும் மக்களையே பிழை சொல்லிக் கொண்டிருங்கள்.

  Reply
 • santhanam
  santhanam

  //மாற்றபடாது சொல்லிபுட்டன்//இது தான் பல்லி

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //.. பாதிக்கப்பட்டவர்கள் உட்கார்ந்து வெட்டிப் பேசிக் கொண்டு , மது போதையில் வேறு இருந்தனர். இது மனதை பாதித்தது….//
  இதில் உண்மை உள்ளது. ஆனால் நீங்கள் சொன்னது போல அல்லாமல் அங்கு சென்ற அமெரிக்க குழு திரும்பி வந்து ஏன் அம்மக்கள் அவ்வாறு குடிபோதையில் இருந்தனர் என ஆய்வு செய்போது அம்மக்களில் பலர் ஆண்கள் எனவும் மனைவியரையும் பிள்ளைகளையும் சுனாமியில் பறிகொடுத்தவர்கள் எனவும் தெரிய வந்தது. காரனம் சுனாமி நடந்த நேரம் ஆண்கள் கடலில் இருந்தனர். தப்பினர் பெண்கள்/பிள்ளைகள் வீட்டில் இருந்து இறந்தனர். இந்த ஆண்கள் ஒரு நிமிடத்தில் அனாதைகள் ஆயினர். மனநிலை பாதிக்கப்பட்டனர். அதிகமாக குடித்து விரக்தியில் அவ்வாறு பேசினர் என தெரியவந்தது.

  இந்த் அமெரிக்க மருத்துவக்குழு அடுத்ததாகச் செய்தது என்ன வெனில் உடனடியாக நிதி சேகரித்து மனநல சிகிச்சைப்பிரிவுகளைக் கட்டியது. இவை வன்னியிலும் மட்டக்களப்பிலும் அமைந்தன. மட்டக்களப்பில் பணீயாற்றும் ஒரு வைத்தியரை அமெரிக்காவுக்கு அழைத்து மனநோய் சிகிச்சையில் விசேட பயிற்சி கொடுத்தது மட்டுமல்லாது மீண்டும் பலமுறை அக்குழுவினர் சென்று சிகிச்சை அளித்ததுமாகும். அவர்கள் அமெரிக்கா சென்று தமிழ் மக்களை ஒருபோதும்…மீண்டும் சொல்கிறேன் ஒருபோதும் கூட குறை கூறவில்லை. இக்குழுவில் அதிகமானவர்கள் ஈழத்தமிழர்கள். சிலர் அமெரிக்கர்கள்.

  //…” உடைந்த வீட்டைக் கட்டி, அதற்கு தேவையான சாமான்களையும் தந்து காசும் தருவீர்கள்தானே?” என்பதெல்லாம் உச்சமாக இருந்தது….//இது குறை,
  ஆனால் ‘பழைய புலி’ மஹிந்தா காசு தருகிறார் என்பது கிரடிற், மாற்றத்தின் ஆரம்பமோ?

  மாயா on February 18, 2010 7:00 pm

  …..இதுதான் மாற்றத்தின் ஆரம்பம். அடுத்து “வவுனியாவிலிருக்கும் நாங்கள் நாளை கிளிநொச்சி போகப் போறம். பழைய வீடுகளை திருத்த அரசாங்கம் , காசும் தருகினம்” என்றார் அந்த பழைய புலி. …

  Reply
 • NANTHA
  NANTHA

  1970 இல் இருந்து 1977 வரை இலங்கையில் இந்த “வெளிநாட்டு” தன்னார்வக் குழுக்களையோ மற்றைய யாரையுமோ நாங்கள் கண்டதில்லை. IMF அன்றைய அரசுக்குக் கடன் உதவி கூடச் செய்ய மறுத்து விட்டது. தொடர்ச்சியாக வருடக்கணக்கில் மழை பொய்த்து விவசாயம் பாரிய அளவில் பாதிக்கப்படிருந்த வேளை இந்த “வெளிநாடுக்கரர்கள்” உதவி செய்ய வரவில்லை. ஏனென்றால் “மேற்கு” நாடுகளின் எதிரியாக அப்போதைய அரசாங்கம் கணிக்கப்பட்டிருந்தது.

  யு என் பி அரசு 1977 இல் பதவிக்கு வந்தவுடன் NGO, INGO என்று நூற்றுக்கணக்கான “வெளிநாட்டு ” நிறுவனங்கள் இலங்கையில் முகாமிட்டன. இந்த நிறுவனங்களின் தலையீடு “புலிகளை” வளர்ப்பதில் பாரிய பங்கைச் செலுத்தின.

  சுய உற்பத்தி மூலம் வளமாக இருந்த வன்னி போன்ற மாவட்டங்கள் “கையேந்தும்” பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டன. வடபகுதி உற்பத்திகள் தென்னிலங்கைக்கு செல்வது முற்றாக நிறுத்தப்பட்டது.

  யுத்தத்தின் இறுதி நேரத்தில் சகல “வெளிநாட்டு” நிறுவனக்களும் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ் பகுதிகள் தென்னிலங்கையோடு கொண்டிருந்த வர்த்தக உறவுகள் முற்றாக துண்டிப்பதட்கும், வெளிநாட்டு ஏஜன்சிகளின் தயவில் உயிர் வாழவும் புலிகளூடாக நிர்பந்திக்கப்பட்டனர். விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டன. மக்களின் “உழைத்து” வாழ வேண்டும் என்ற சிந்தனை அறவே நீக்கப்பட்டது. புலிகளில் சேர்ந்தால் வளமாக வாழலாம் என்ற சிந்தனையும் வேரூண்டியது

  இந்த வெளிநாட்டு “விளையாட்டு” இலங்கை மக்களின் அபிவிருத்தியை மனத்தில் கொண்டதல்ல. தற்போது மக்களின் மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கூட அறியாமல் அதே கூட்டங்கள் ஒரு” புது” அத்தியாயத்தை தொடக்க முயற்சிக்கிறார்கள். யாருக்காவது “வேலை” செய்து பிழைத்துக் கொள்ளும் மார்க்கம் மாத்திரம்தான் ஒரே வழி என்ற உபதேசம் காதைப் பிய்க்கிறது.

  Reply
 • மாயா
  மாயா

  சுனாமி நாள் இந்து சமுத்திரம் இப்படி
  http://en.wikipedia.org/wiki/File:2004_Indonesia_Tsunami_Complete.gif

  // காரனம் சுனாமி நடந்த நேரம் ஆண்கள் கடலில் இருந்தனர். தப்பினர் பெண்கள்/பிள்ளைகள் வீட்டில் இருந்து இறந்தனர். இந்த ஆண்கள் ஒரு நிமிடத்தில் அனாதைகள் ஆயினர். மனநிலை பாதிக்கப்பட்டனர். அதிகமாக குடித்து விரக்தியில் அவ்வாறு பேசினர் என தெரியவந்தது.- சாந்தன்//

  சாந்தன், இது சற்று ஓவர் . நத்தாருக்கு அடுத்த நாள் டிசம்பர் 26ம் திகதி சுனாமி இடம் பெற்ற நாள். அன்று கரையில் இருந்தவர்களே இல்லை. அதில், கடலுக்கு சென்ற எவருமே திரும்பி வரவில்லை. அந்த சுனாமியில் , கடலுக்கு போய் தப்பியவர்கள் குடித்தார்கள் என வேறு எழுதியிருக்கிறீர்கள். நத்தார் விடுமுறைக்காக டிசம்பர் 10ம் திகதி இலங்கை சென்ற நான், பின்னர் அந்த பணிகளுக்குள் ஈடுபட்டேன். கடலுக்கு போனவர்கள் திரும்பி வந்த செய்தியே இல்லை. இப்படியிருக்க உங்கள் கருத்து …….?

  சுனாமி எப்படி அடித்தது என பார்க்கவும். இந்த அலையில் தப்ப கடலுக்குள் புலிகள் அமைக்க போன சுரங்க வழி இருந்ததோ என்னவோ?
  இதையும்படித்து விட்டு எழுதுங்கள்:

  http://www.mapsofworld.com/world-news/26-12-2004-srilanka.html

  http://en.wikipedia.org/wiki/2004_Indian_Ocean_earthquake

  அதைவிட சுனாமியை காரணம் காட்டி வெளிநாடு வந்தவர்களில் பெரும்பாலானோர் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு , இன்றும் சரியான நிவாரணம் இல்லை.

  // அமெரிக்க மருத்துவக்குழு அடுத்ததாகச் செய்தது என்ன வெனில் உடனடியாக நிதி சேகரித்து மனநல சிகிச்சைப்பிரிவுகளைக் கட்டியது. //
  இந்த மனநல சிகிச்சைப் பிரிவுகள் எங்கே இருந்தன என தகவல் தர முடியுமா?

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //..1970 இல் இருந்து 1977 வரை இலங்கையில் இந்த “வெளிநாட்டு” தன்னார்வக் குழுக்களையோ மற்றைய யாரையுமோ நாங்கள் கண்டதில்லை….///

  அப்போது NGO/INGO தேவையில்லை, ஏனெனில் அரசாங்கமே கையேந்தி வந்தது. CARE பிஸ்கற் பள்ளிக்கூடத்தில் கொடுத்தார்களே? அது எப்படி?
  ஒஃபிசியலாக சீன நட்புறவுச்சங்கம், ரஷ்ய நட்புறவுச்சங்கம் போன்ற வெளிநாட்டு அரச அமைப்புகளூடக லுமும்பா பல்கலைக்கழகம் போகும் உதவிகள், கொமினிச புத்தகங்கள் 50சதத்துக்கு வழங்கள் போன்ற “பிரச்சார வேலைகள்” நடந்தன.
  இன்னொரு விடயம் அமெரிக்க மக்களின் நன்கொடையாக கோதுமை மா வழங்கியபோது அதை வாங்கி கூப்பன்கடையில் வித்து காசாக்கிய சிறீலங்கா அரசு 1970-1977 இடையில் தான் இருந்தது!
  இந்த கெயர் பிஸ்கற் செய்ய வழங்கப்பட்ட சில சேர்பொருட்களை மெலிபன் பிஸ்கற்றுக்கு விற்று காசாக்கி ஏழை மானவர்களுக்கு ‘புளுக்கள்’ உள்ல மாவில் பிஸ்கற் செய்து ‘வழங்கியது’ யார்? நீங்கள் சொல்லும் 1970-1977 அரசு தானே?

  //…IMF அன்றைய அரசுக்குக் கடன் உதவி கூடச் செய்ய மறுத்து விட்டது. ….//
  IMF திறந்த பொருளாதாரத்தை ஆதரிக்கும் அமைப்பு. அவர்கள் ஒன்றும் காசை அச்சடிப்பதில்லை. அங்கத்துவ நாடுகள் வைப்பிலிடும் தொகையிலேயே கடன் வழங்கப்படும். அந்நாடுகள் விரும்பாத பொருளாதார அமைப்புக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். ஐ.எம்.எஃப் ஒன்றும் சிறீலங்காவிடம் காசை வாங்குங்கள் எனக்கெஞ்சவில்லையே, ஏன் அவர்களைக்குற்ரம் சொல்கிறீர்கள்? மாறாக ஸ்ரீலங்காவின் நண்பர்களான சீனாவும், சோவியத்தும் செய்தது என்ன? ஐ.எம்.எப், உலக வங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியம் போன்றவற்றை எதிர்த்து சுய உற்பத்தியை ஊக்குவிக்குமுகமாக ‘வர்க்கப்போராட்டம்’ கொண்டுவந்த ஜே.வி.பியினரை ஒழித்துக்கட்ட ‘உதவியது’ மட்டும் தான்!

  மேலும் அப்போதைய ஸ்ரீலங்கா இரண்டும் கெட்டான் பொருளாதாரமான ‘கலப்புப் பொருளாதாரம்’ என அழைக்கப்பட்ட ஒரு வகை பொருளாதாரத்தை கொண்டிருந்தது. இது ‘அணிசேரா நாடுகள்’ என்கின்ற இன்னொரு ‘பம்மாத்து’ அமைப்பு போன்றது!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…இந்த மனநல சிகிச்சைப் பிரிவுகள் எங்கே இருந்தன என தகவல் தர முடியுமா?…//

  கிளிநொச்சி பிரதேசத்தில் கட்டியதுக்கு என்ன நடந்தது என்பதை நீங்களே அறிவீர்கள். கீழே வவுனியாவில் கட்டியது. இத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது சுனாமியின் பின்னர். ஆனால் பூர்வாங்க கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது 2006 இல் என நினைக்கிறேன். அதேபோல அம்பாறையிலும் ஒன்று அமைந்துள்ளது.

  வவுனியா, கல்முனை மனநல நிலையப் படங்கள்.
  http://theimho.org/projects/mental-health
  படத்தின்மேலே கிளிக் செய்தீர்களாயின் மேலதிக படங்களைப் பார்க்கலாம்.

  கீழே வவுனியாவில் அமைக்கப்பட்ட ….
  http://theimho.org/blog/18-event-category-in-blog/175-psych-ward-opens

  //…அந்த சுனாமியில் , கடலுக்கு போய் தப்பியவர்கள் குடித்தார்கள் என ….//
  http://www.unicef.org/infobycountry/sri_lanka_37352.html

  எனக்கும் உங்களைப்போல் எம்மக்கள் ‘சோம்பேறிகள்/குடிகாரர்/ஓசியில் கிடைக்க அலைபவர்கள் என எழுத முடியும். ஆனால் நான் அவ்வாறு எழுத மாட்டேன். உங்கள் மனிதாபிமானமெல்லாம் உங்கள் எழுத்தில் தெரிகிறதே!

  இது ஒன்றும் நான் சும்மா சொல்லவில்லை. இவர்களின் கதையை வீடியோவில் பார்த்தேன். இந்த மனநல சிகிச்சை பற்றிய ஒரு கருத்தரங்கிலும் நான் கலந்து கொண்டேன். அப்போது நேரடி அனுபவங்களை அமெரிக்க/இங்கிலாந்து மருத்துவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

  /…சாந்தன், இது சற்று ஓவர்….//
  நீங்கள் சொன்ன ‘காசும் தருவீர்களா’ போன்ற போன்ற ஓவர் என வைத்துக்கொண்டாலும் ஏன் சுனாமியில் அதிகமாக பெண்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கு கொடுக்கப்பட்ட விளக்கமே இது. இந்த அறிக்கையை தயாரித்தது வேறுயாருமல்ல ஐ.நா அபிவிருத்திக்கான அமைப்பான UNDP யும் கொழும்பு பல்கலைக்கழகமும், ஸ்ரீலங்கா மனித உரிமை ஆணையமும். சுனாமி நிகழ்ந்த 1000 கிராமங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளின் விளைவு என அவ்வறிக்கையில் இருந்தது

  Reply
 • தமிழ்வாதம்
  தமிழ்வாதம்

  “1970 இல் இருந்து 1977 வரை இலங்கையில் இந்த “வெளிநாட்டு” தன்னார்வக் குழுக்களையோ மற்றைய யாரையுமோ நாங்கள் கண்டதில்லை.”/ NANTHA
  எழுபதுகளில் காரைநகர்,கரையூர் பகுதிகளில் Cey-Nor என்கிற NGO நிறுவனம் இருந்தது. http://www.ceynor.com/about.htm

  Reply
 • NANTHA
  NANTHA

  // அப்போது NGO/INGO தேவையில்லை, ஏனெனில் அரசாங்கமே கையேந்தி வந்தது. CARE பிஸ்கற் பள்ளிக்கூடத்தில் கொடுத்தார்களே? அது எப்படி? ஒஃபிசியலாக சீன நட்புறவுச்சங்கம், ரஷ்ய நட்புறவுச்சங்கம் போன்ற வெளிநாட்டு அரச அமைப்புகளூடக லுமும்பா பல்கலைக்கழகம் போகும் உதவிகள், கொமினிச புத்தகங்கள் 50சதத்துக்கு வழங்கள் போன்ற “பிரச்சார வேலைகள்” நடந்தன.//

  அப்படியானால் யு என் பி வந்தவுடன் எப்படி NGO/INGO தேவைப்பட்டது?

  யாழ்பாணத்தவர்கள் 1952 இலிருந்து சீனத்து அரிசியைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாதோ? சீன -இலங்கை செய்துகொண்ட ரப்பர்-அரிசி ஒப்பந்தம் பற்றி படித்தால் நல்லது.

  //இன்னொரு விடயம் அமெரிக்க மக்களின் நன்கொடையாக கோதுமை மா வழங்கியபோது அதை வாங்கி கூப்பன்கடையில் வித்து காசாக்கிய சிறீலங்கா அரசு 1970-1977 இடையில் தான் இருந்தது! இந்த கெயர் பிஸ்கற் செய்ய வழங்கப்பட்ட சில சேர்பொருட்களை மெலிபன் பிஸ்கற்றுக்கு விற்று காசாக்கி ஏழை மானவர்களுக்கு ‘புளுக்கள்’ உள்ல மாவில் பிஸ்கற் செய்து ‘வழங்கியது’ யார்? நீங்கள் சொல்லும் 1970-1977 அரசு தானே?//

  இந்த பொய்யை அறியாமல் எழுதினாரா அல்லது அறிந்துகொண்டுதான் எழுதினாரா என்று தெரியவில்லை. கூப்பன் கடையில் (இன்றும்) விற்பனை செய்யப்படும் மா விலைக்கு வாங்கப்படும் மா என்பது தெரியாதா. அமெரிக்கன் மா என்றவுடன் என்னமோ இலவசமாக கொடுத்தார்கள் என்று நினைக்க வேண்டாம்.

  கெயர் நிறுவனம் இதுவரையில் சொல்லாத “புழு” கதையை இவர் அவிழ்த்துவிட்டு யாருக்கு மகிழ்வூட்டுகிறார்? தவிர இன்றும் கெயர் நிறுவனமே தங்கள் உட்பத்திகளுக்குப் பொறுப்பாக உள்ளனர். புலிகள் வன்னியில் அரசு வழங்கிய உணவுப்பொருட்களை தாங்கள் உபயோகித்துக் கொண்டு “புழு” பிடித்த உணவுகளை வன்னி மக்களுக்கு வழங்கிய அனுபவமோ?

  கல்வி திணைக்களத்தில் கெயர் உற்பத்திகள் விநியோகத்துக்கு பொறுப்பாக ஒரு காலத்தில் இருந்த எனக்கு சாந்தன் சொல்கிறார்.

  //‘வர்க்கப்போராட்டம்’ கொண்டுவந்த ஜே.வி.பியினரை ஒழித்துக்கட்ட ‘உதவியது’ மட்டும் தான்!//
  அவர்களின் வர்க்கப் போராட்டம் பொன்சேகாவின் தேர்தலில் அம்பலமானது மாத்திரமல்ல “இந்திய தமிழ் தொழிலாளர்களுக்கு” எதிராக அவர்கள் கக்கிய விஷம் அவர்களின் வர்க்கப் போராட்டத்தை அம்மணமாக்கியது.

  கனடாவும் கலப்பு பொருளாதார முறையை பின்பற்றுவது தெரியாதோ?

  அணிசேரா நாடுகள் மீது இவர் காட்டும் கோபம் இவரின் அமெரிக்க ஆதரவுத்தனத்தை காட்டுகிறது. எந்த நாடும் சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அமெரிக்காவின் வால்களாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கொள்கையை ஆதரிக்கும் இவர் “தமிழரின்” உரிமைகளை எங்கே வாங்கபோகிறார்?

  Reply
 • NANTHA
  NANTHA

  தமிழ்வாதம்
  நோர்வே கோஷ்டிகள் அப்போதே இலங்கையில் திருடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்பது புரிகிறது. அவர்களின் மோசடிகள் புலிகளின் காலத்தில் உச்சக் கட்ட நிலையை அடைந்தன. சீநோர் புரட்டுக்களை சித்தன் கேணியை சேர்ந்த ஆங்கில பத்திரிகையாளரான விக்டர் கருணை ராஜனின் கட்டுரைகளில் உள்ளது!

  Reply
 • மாயா
  மாயா

  சாந்தன் எழுதியுள்ள அமெரிக்க உதவி நிறுவனங்கள் வர வழி செய்தவர்களில் இவர் முக்கிய பொறுப்பானவர். பல காலமாக இலங்கையில் வாழ்கிறார். இலங்கையில் இருக்கும் அமெரிக்க நிறுவனமொன்றில் புரொபஸராகவும் , மனோதத்துவ நிபுணராகவும் கொழும்பில் பணிபுரிபவர். இவர் மணமுடித்திருப்பது இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்த ஒருவரை, உதவிகள் செய்தது வன்னி புலிகளுக்கு….. இவர் குறித்து இவரே எழுதியது: I am Associate Professor, Senior Lecturer and Head of Psychology Programs at ANC Graduate Dean of Eco-Psychology (Institute of Global Studies); Field Expert for Relief International; Counselor and PsychoSocial Trainer; Consciousness Researcher (trance, virtual and paranormal interaction); Author; Photographer/Artist; Human Rights Activist with a Ph.D. in Psychology, BA & MA & ABD in Sociology, medical school ,Certified Child Development Specialist, Ordained Minister, Shamanic Practitioner (Iban Manang), International Publications and Speaker. இவர் குறித்த வேறு தகவல்களையோ பெயரையோ நான் எழுத விரும்பவில்லை. இவரை எனக்கு நன்கு தெரியும். இவரோடு வன்னிக்கு சென்றும் வந்துள்ளேன். இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த போது என் வீட்டிலும் தங்கினார், என்னோடு சென்று பல ஐரோப்பியர்களையும் , புலி சார்ந்தவர்களையும் சந்தித்தார்.

  இந்த நிறுவனங்கள் யுத்தத்தால் மன நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு எனும் போர்வையில் நுழைந்தது. சுனாமிக்கு உதவி செய்திருக்கலாம். அதன் அடிப்படை புலிகளுக்கு உதவுவதேயாகும். இது போன்ற உதவி நிறுவனங்களை கோட்டாபய வெளியேற்றியதன் மூலம் , அரசினால் இலகுவாக வன்னியை வெற்றி பெற முடிந்தது. இல்லாவிட்டால் இந்த அமைப்புகள் புலிகளுக்கு அரணாக இருந்திருப்பார்கள். ஐடீபி முகாம்களுக்குள் செல்ல சில அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதும் இதனால்தான். உதவி நிறுவனங்களாக அல்லது மதம் பரப்புவோராக இலகுவில் இவர்கள் நுழைந்து விடுவார்கள். இவர்கள் அமெரிக்க புலனாய்வுத் துறையான சீஐஏயின் தரகர்கள்.

  அடுத்து சாந்தன் வீடீயோவில் பார்த்ததை வைத்து பேசுகிறீர்கள். நான் நேரில் பார்த்ததை வைத்து பேசுகிறேன். இது தமிழ் பகுதிகளில் மட்டுமல்ல , சிங்கள பகுதிகளிலும் நடந்தவை.

  சோகத்தில் ஆண்கள் மது அருந்தினர் என சொல்லியிருக்கிறீர்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும், புலிகளால் அல்லது புலிகளின் அனுமதியோடு மது விற்கப்பட்டிருக்கிறது என ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். நன்றி.

  Reply
 • palli
  palli

  //என்ன பல்லி இப்ப இழப்பதற்கு எதுவும் இல்லை என்று தெரிந்த பின்பும் அதிகார தொனியில் எழுத்துள்ளது// santhanam
  இழப்பதுக்கு ஏதும் இருக்கும் போது அதுபற்றி சிந்திக்க வேண்டும், ஆனால் இழப்பதுக்கு எதுவுமே இல்லை என்னும் போது சுகந்திரமாக செயல்படலாம் அல்லவா??

  இதே சுகந்திர கட்ச்சியின் ஆட்ச்சியில் (சிறிமா காலம்) விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்ததால் நாட்டின் வளர்ச்சி அனைவரும் அறிந்ததுதான், அதேபோல் புலி போர் முடிந்தவுடன் அரசு மீனவர் தொழிலாளரைதான் கவனத்தில் கொண்டது, (அதுக்காக அரசுக்கு நன்றி) இங்கு பிரச்சனை என்னவெனில் சுற்றிலா பயணிகளை கவனிப்பதுக்காக நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மீன்பிடி நிலங்களில் கைவைக்காமல் இருக்கவேண்டும்; சுற்றிலாவுக்காக எங்கு வேண்டுமானாலும் இடம் அமைத்து அதுக்கான வேலை திட்டங்களை செய்து போக்குவரத்தையும் செய்தால் போதும் (உதாரனத்துக்கு தமிழகத்தில் மகாவலிபுரம்) ஆனால் மீனவர்க்கு எல்லா இடத்திலும் மீன் இருக்காது; அதேபோல் தான் விவசாயமும்; இங்கே இருந்து போகிறவர்களுக்கு திட்டங்கள் பல போட தெரியும்; அதுவும் இப்போதெல்லாம் கனனியில் திடீர் திட்டங்கள் என உள்ளது போல் உள்ளது, எனது கருத்து இதுதான் எந்த ஒரு திட்டத்தை போடும் போதும் திட்டங்கள் வகுக்கு முன் அந்த இடத்துக்கு போய் அங்கே வாழும் மக்கள் வாழ்வு நிலை அவர்களின் பொருள்தார வரவு போக்குவரத்து இப்படி பல விடயங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்; உலகத்தில் உள்ள சுற்றிலா தளங்களில் பம்பாயும் ஒன்று; ஆனால் உலகத்தின் மிகபெரிய சேரிபகுதியும் அதே பம்பாயில்தான் உள்ளது; காரனம் சுற்றிலா பகுதிகளில் அரசு செலுத்தும் கவனம் சேரியாக இருக்கும் பகுதிகளில் அரசு செலுத்துவதில்லை; காரனம் சுற்றிலாவால் வரவு சேரியால் செலவு; (இது நான் எங்கோ வாசித்ததுதான்) அதே நிலமை எம் நாட்டிலும் வராமல் இருக்க வேண்டும்; அதுக்கு சம்பந்த பட்டவர்களைதான் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுத்த வேண்டுமே தவிர வெளினாட்டு பயணிகளாய் சொந்த நாட்டுக்கு போன பெருமக்களையல்ல;

  பசிப்பவனுக்குதான் சாப்பாட்டின் அருமை தெரியும்; சமைப்பவனுக்கு அதன் ருசியே தெரியும்: உல்லாசத்துக்கும் சுற்றிலாவுக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு, எனது கருத்து சுற்றிலா பற்றியதே,

  Reply
 • தமிழ்வாதம்
  தமிழ்வாதம்

  ‘..1970 இல் இருந்து 1977 வரை இலங்கையில் இந்த “வெளிநாட்டு” தன்னார்வக் குழுக்களையோ மற்றைய யாரையுமோ நாங்கள் கண்டதில்லை.’

  பிழையான தரவுகளினடிப்படையில் கருத்துகள் வரைதலின் அறிவு அபாயகரமானது.

  Reply
 • NANTHA
  NANTHA

  சீநோர் என்பது இலங்கை அரசும், நோர்வே அரசு ஆதரிக்கும் சில அமைப்புக்களும் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. அது இறுதியில் காரை நகரில் உள்ள மீன் பிடிச் சமூகத்துக்கு வெறும்” வேலையாட்கள்” என்ற அந்தஸ்த்தை வழங்கியதுடன் நோர்வே வெள்ளையர்களுக்கும் கொழும்பு அரசு அதிகாரிகளுக்கும் “ஒரு உல்லாச” விளையாட்டாகவே மாறியது.

  அதனை கண்டவர்கள் இன்னமும் உயிரோடு உள்ளனர்.

  தவிர சீநோர் என்பதில் கிடைத்த லாபத்தை விட வன்னியில் புலிகளின் கப்பத்தில் கிடைத்த பங்கு பல மடங்கு. அதனால்த்தான் நோர்வே சீநோர் ஐ பின்னர் கண்டு கொள்ளவே இல்லை!

  Reply
 • NANTHA
  NANTHA

  //இந்த நிறுவனங்கள் யுத்தத்தால் மன நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு எனும் போர்வையில் நுழைந்தது. சுனாமிக்கு உதவி செய்திருக்கலாம். அதன் அடிப்படை புலிகளுக்கு உதவுவதேயாகும். இது போன்ற உதவி நிறுவனங்களை கோட்டாபய வெளியேற்றியதன் மூலம் , அரசினால் இலகுவாக வன்னியை வெற்றி பெற முடிந்தது. இல்லாவிட்டால் இந்த அமைப்புகள் புலிகளுக்கு அரணாக இருந்திருப்பார்கள். ஐடீபி முகாம்களுக்குள் செல்ல சில அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதும் இதனால்தான். உதவி நிறுவனங்களாக அல்லது மதம் பரப்புவோராக இலகுவில் இவர்கள் நுழைந்து விடுவார்கள். இவர்கள் அமெரிக்க புலனாய்வுத் துறையான சீஐஏயின் தரகர்கள்.//

  மேல் குறிப்பிட்ட தகவல்களோடு எனக்கு பூரண உடன்பாடு உண்டு. சாவகச்சேரியில் அன்று டக்லஸ் தேவானந்தாவால் கைது செய்யப்பட்ட சி ஐ எ உளவாளிகளான அலன் தம்பதிகள் அதற்கு ஒரு ஆதாரம். இந்த அமெரிக்க தம்பதிகள் “நன்னீர்” திட்டம் என்ற பெயரில் பெரும் தொகை பணத்துடன் வந்திறங்கியவர்கள். அவர்கள் “பல” ஈழம் குழுக்களுக்கு இரகசியமாக பண விநியோகம் செய்தனர் என்பதும் இன்னொரு உண்மை.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….அப்படியானால் யு என் பி வந்தவுடன் எப்படி NGO/INGO தேவைப்பட்டது? …..//
  ஏனென்றால் சீனா/ரஷ்யா ‘உதவி’ என்கின்ற போர்வையில் கொடுக்க முடியாது எனச் சொல்லி விட்டது யூ.என்.பி. எனெவே என்.ஜி.ஓ என்கின்ற பெயர்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்து விட்டன. நீங்கள் சொன்னது போல இரண்டும் ஒன்றுதான்.

  //…யாழ்பாணத்தவர்கள் 1952 இலிருந்து சீனத்து அரிசியைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாதோ? சீன -இலங்கை செய்துகொண்ட ரப்பர்-அரிசி ஒப்பந்தம் பற்றி படித்தால் நல்லது…..//
  அப்போ வன்னி விவசாயத்தில் செழித்து வளர்ந்தது. பாதிரி கெடுத்து விட்டது என்பதெல்லாம் பொய்யோ? அதேபோல சவூதி பேரீச்சம்பழம்/தேயிலை ஒப்பந்தத்தையும் படியுங்கள்.

  //….இந்த பொய்யை அறியாமல் எழுதினாரா அல்லது அறிந்துகொண்டுதான் எழுதினாரா என்று தெரியவில்லை. கூப்பன் கடையில் (இன்றும்) விற்பனை செய்யப்படும் மா விலைக்கு வாங்கப்படும் மா என்பது தெரியாதா. அமெரிக்கன் மா என்றவுடன் என்னமோ இலவசமாக கொடுத்தார்கள் என்று நினைக்க வேண்டாம். ….//
  இது அமெரிக்க மக்களின் உதவி என நீலக்கலரில் எழுதிய சாக்குகளில் வரும். இது உலக உணவுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்கியது. ஸ்ரீலங்கா உதவி இலக்கம் 614 இன் கீழ் வரும் என நினைக்கிறேன். சங்கக்கடைகளில் கண்டிருக்கிறேன்.

  //…கெயர் நிறுவனம் இதுவரையில் சொல்லாத “புழு” கதையை இவர் அவிழ்த்துவிட்டு யாருக்கு மகிழ்வூட்டுகிறார்? தவிர இன்றும் கெயர் நிறுவனமே தங்கள் உட்பத்திகளுக்குப் பொறுப்பாக உள்ளனர்….//
  நான் தான் பள்ளிக்கூடத்தில் இந்த பிஸ்கற்றுகளை இடைவேளைக்கு வினியோகிக்கும் பொறுப்பில் இருந்தேன். இதொன்றும் மகிழ்வூட்டல் இல்லை. பெட்டிகளில் வரும் பிஸ்கற்றுகளை பிரித்தால் புழுக்களின் முட்டைகள் இருக்கும்.

  //…புலிகள் வன்னியில் அரசு வழங்கிய உணவுப்பொருட்களை தாங்கள் உபயோகித்துக் கொண்டு “புழு” பிடித்த உணவுகளை வன்னி மக்களுக்கு வழங்கிய அனுபவமோ?…// புலிகள் வந்தது 1980 களில் ஆனால் நான் பிஸ்கற் தின்றது 1974 இல்.

  //..கல்வி திணைக்களத்தில் கெயர் உற்பத்திகள் விநியோகத்துக்கு பொறுப்பாக ஒரு காலத்தில் இருந்த எனக்கு சாந்தன் சொல்கிறார்…..//
  அப்ப உங்களுக்கு கட்டாயம் இது தெரிந்திருக்க வேண்டுமே? கெயருக்கு பொறுப்பாக இருந்திருக்கிறீர்கள் ஆனால் என்.ஜி.ஓ பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்கிறீர்கள். நன்றாகத்தான் வேலை செய்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது.

  //.அவர்களின் வர்க்கப் போராட்டம் பொன்சேகாவின் தேர்தலில் அம்பலமானது மாத்திரமல்ல “இந்திய தமிழ் தொழிலாளர்களுக்கு” எதிராக அவர்கள் கக்கிய விஷம் அவர்களின் வர்க்கப் போராட்டத்தை அம்மணமாக்கியது…..//
  ஒரே இரவில் நாடற்றவர்களாக்கப்பட்ட ’தொழிலாளர்’ களைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன் சரிதானே நந்தா?

  //…..கனடாவும் கலப்பு பொருளாதார முறையை பின்பற்றுவது தெரியாதோ?…./
  சிறீலங்காவின் ஒபிசியல் பெயர் ‘சிறீலங்கா சோசலிச ஜனநாயகக் குடியரசு’ இதைபோஒய் கனடாவுடன் ஒப்பிடுகிறீர்கள் மிக நல்லது

  //…..அணிசேரா நாடுகள் மீது இவர் காட்டும் கோபம் இவரின் அமெரிக்க ஆதரவுத்தனத்தை காட்டுகிறது….//
  அணிசேரா நாடுகள் அமெரிக்க/சோவியத் சாராதவை என்றல்லவா நினைத்தேன். அப்படிப்பார்த்தால் நான் ஏன் சோவியத் ஆதரவாளன் எனச்சொல்லாமல் அமெரிக்காவை மட்டும் இழுக்கிறீர்கள். வழமையான கீபோட் மாக்சிஸவாதிகள் போல வாழ்க்கை அமெரிக்க /இங்கிலாந்து/ஜேர்மனி/பிரான்ஸ்/கனடா/அவுஸ்திரேலியா/இத்தாலி போன்ற நாடுகளில் ஆனால் கீபோட்டில் மட்டும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்போ?
  என்கோபத்தை விடுங்கள். இவ்வமைப்புகளைச் சார்ந்த முக்கிய நாடுகளான இந்தியா, யூகோஸ்லாவியா, எகிப்து போன்ற நாடுகளே அமெரிக்காவின் காலடியில்.

  //….. எந்த நாடும் சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அமெரிக்காவின் வால்களாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கொள்கையை ஆதரிக்கும் இவர் “தமிழரின்” உரிமைகளை எங்கே வாங்கபோகிறார்?….//
  தமிழருக்கு உரிமைகள் இல்லையா? எல்லாம் சுபம் என்றல்லவா நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அமெரிக்க காசு வேண்டும் என்றால் அவன் சொற்படி ஆடத்தானே வேண்டும்?

  //…நோர்வே கோஷ்டிகள் அப்போதே இலங்கையில் திருடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்பது புரிகிறது. அவர்களின் மோசடிகள் புலிகளின் காலத்தில் உச்சக் கட்ட நிலையை அடைந்தன. சீநோர் புரட்டுக்களை சித்தன் கேணியை சேர்ந்த ஆங்கில பத்திரிகையாளரான விக்டர் கருணை ராஜனின் கட்டுரைகளில் உள்ளது!….//
  இங்கே பொயின்ற் அதல்ல நீங்கள் சொன்ன என்.ஜி.ஓக்கள் என்று கேள்விப்படவே இல்லை என்கின்ற வாதம்.

  மாயா,
  //…..….. I am Associate Professor, Senior Lecturer and Head of Psychology Programs at ANC Graduate Dean of Eco-Psychology (Institute of Global Studies); Field Expert for Relief International; Counselor and PsychoSocial Trainer; Consciousness Researcher (trance, virtual and paranormal interaction); Author; Photographer/Artist; Human Rights Activist with a Ph.D. in Psychology, BA & MA & ABD in Sociology, medical school ,Certified Child Development Specialist, Ordained Minister, Shamanic Practitioner (Iban Manang), International Publications and Speaker. ….///
  எங்கே இவர் தான் அமெரிக்காக் காரனைக்கூட்டி வந்த்து என்றும், புலிக்கு உதவியதென்றும் கூறி இருக்கிறார்? தனது தகமைகளைக்கூறி இருக்கிறார், அவ்வளவுதானே?
  //….இவர் குறித்த வேறு தகவல்களையோ பெயரையோ நான் எழுத விரும்பவில்லை. இவரை எனக்கு நன்கு தெரியும். இவரோடு வன்னிக்கு சென்றும் வந்துள்ளேன். இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த போது என் வீட்டிலும் தங்கினார், என்னோடு சென்று பல ஐரோப்பியர்களையும் , புலி சார்ந்தவர்களையும் சந்தித்தார். …//

  யாருக்குப் பயப்படுகிறீர்கள்? வெளிவிட வேண்டியதுதானே? உலகப் ‘புலிப்பினாமிகளை’ நோக்கி வாள் வீசும் நீங்கள் ஏன் உங்கள் ‘நண்பனான’ புலிப்பினாமியை பாதுகாக்கிறீர்கள்? வெளிவிடுங்கள் மாயா? நாமும் அறிவோம் புலிப்பினாமிகளை!

  //….இந்த நிறுவனங்கள் யுத்தத்தால் மன நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு எனும் போர்வையில் நுழைந்தது. சுனாமிக்கு உதவி செய்திருக்கலாம்…..//
  அப்போ நீங்கள் மட்டும் தான் நல்மனதோடு சென்று அதுவும் ஒரு அமெரிக்கனுடன் வேலை செய்தீர்களாக்கும் மேலும் அந்த அமெரிக்கன் எமது மக்களைப்பற்றி ‘எரிச்சலோடு’ சொன்னதை வேதவாக்காக எடுத்து “ஒரு அமெரிக்கன் சொன்னான் ” நாம் வேலை செய்யிறது. அவங்களுக்கா இல்லை எங்களுக்கா என்று விளங்கவில்லை” என எரிச்சலோடு” என பெருமையுடன் பதிவு செய்திருக்கிறீர்களாக்கும்?

  //….இவர்கள் அமெரிக்க புலனாய்வுத் துறையான சீஐஏயின் தரகர்கள்…..// ஒஹோ அப்படியா? அப்போ உங்களின் அருகில் இருந்த அமெரிக்கன் என்ன கே.ஜீ.பி இன் ஆளா?

  // சாந்தன் வீடீயோவில் பார்த்ததை வைத்து பேசுகிறீர்கள். நான் நேரில் பார்த்ததை வைத்து பேசுகிறேன். இது தமிழ் பகுதிகளில் மட்டுமல்ல , சிங்கள பகுதிகளிலும் நடந்தவை…..//
  நான் வீடியோவில் பார்த்த்தை வைத்தும் கொழும்பு பல்கலைக்கழக ஆய்வறிக்கைகளில் உள்லதையும் வைத்து அம்மக்களின் விரக்தி வேதனையை விளங்கிக்கொள்ள் முற்படுகிறேன் ஆனால் நீஙகளோ சி.ஐ.ஏயின் ‘இடைத்தரகர்’ அமெரிக்கன் எமது மக்கள் சோம்பேறிகள் என ‘எரிச்ச்லோடு’ சொன்னதை நேரில் பார்த்தும் நம்பி இங்கே பதிவிடுகிறீர்கள்,. இது தான் எனக்கும் உங்களுக்கும் வேறுபாடு!
  அமெரிக்கன் எமது ஏழை மக்களை சோம்பேறி எனச் சொன்னவுடன் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், ’பழைய புலி’ மஹிந்தா ‘காசு தருகினம்’ என்றவுடன் ‘புது யுகம்’ பிறந்து விட்ட்தோ என ’ஐயமகிழ்வு’ கொள்கிறீர்கள்! இது தான் எனக்கும் உங்களுக்கும் வேறுபாடு!

  //….சோகத்தில் ஆண்கள் மது அருந்தினர் என சொல்லியிருக்கிறீர்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும், புலிகளால் அல்லது புலிகளின் அனுமதியோடு மது விற்கப்பட்டிருக்கிறது என ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். …//
  அமெரிக்கன் சி.ஐ.ஏ, தரகுக்காரனுடன் வேலை செய்து அவன் சொன்ன சோம்பேறிப்பட்ட்த்தை எம்மக்களுக்கு சூட்டியதிலும் விட புலி கள்ளு வித்த்து எவ்வளவோ மேல்!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  மாயா,
  //…இவர் குறித்த வேறு தகவல்களையோ பெயரையோ நான் எழுத விரும்பவில்லை. இவரை எனக்கு நன்கு தெரியும். இவரோடு வன்னிக்கு சென்றும் வந்துள்ளேன்….//
  நீங்கள் ஒன்றும் வெளியிடத் தேவையில்லை. அவரே சொல்லி இருக்கிறார். கீழே உள்ள லிங்குக்கு சென்று பாருங்கள். அவரின் ஈ-மெயில் விசாசம் கூடக் கொடுத்திருக்கிறார். http://cid-ae2d1498678460b2.profile.live.com/details/

  Reply
 • NANTHA
  NANTHA

  1970 -1977 காலப் பகுதியில் இந்த என் ஜி ஓக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கவில்லை என்றுதான் குறிப்பிட்டேன். அதனை விட்டு விட்டு சம்பந்தமில்லாத கதைகளைப் பேசுவதில் பயனில்லை.

  தவிர குளங்கள் நிரம்பி வழிந்த வேலையில் வன்னியில் விவசாயம் புலிகளினாலும் பாதிரிகளினாலும் முடக்கப்பட்டு அவர்களின் பிள்ளைகள் புலிகளினாலும் பாதிரிகளினாலும் இழுத்துச் செல்லப்பட்டனர். அது மாத்திரமல்ல அந்த காலகட்டத்தில் என் ஜி ஓ படை எடுப்பு வன்னிக்கு தேவையற்றது. அதனைப் புரிந்து கொண்டால் சரி! புலிகளும் பாதிரிகளும் குளங்களை குண்டு வைத்து “போராட்டம்” நடத்தினார்களே தவிர குளத்து நீரை விவசாயிகள் பாவிக்க விடாது தடுத்து ஒரு “செயற்கை” பஞ்ச நிலையை உண்டு பண்ணினார்கள்.

  சீநோர் அல்லது கெயர் எந்தக் காலத்திலும் வரட்சி நிவாரணங்களில் ஈடுபடவில்லை. இரண்டும் அரசாங்கத்தின் முதலீடுகளுடன் பங்குதாரர் என்ற வகையில்த்தான் இயங்கினார்கள்.

  //இது அமெரிக்க மக்களின் உதவி என நீலக்கலரில் எழுதிய சாக்குகளில் வரும். இது உலக உணவுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்கியது. ஸ்ரீலங்கா உதவி இலக்கம் 614 இன் கீழ் வரும் என நினைக்கிறேன். சங்கக்கடைகளில் கண்டிருக்கிறேன்//

  கண்டிப்பாக சங்கக் கடைகளில் கண்டிருக்க முடியாது.

  //பெட்டிகளில் வரும் பிஸ்கற்றுகளை பிரித்தால் புழுக்களின் முட்டைகள் இருக்கும்.//
  புழுவிலிருந்து முட்டைக்கு இறங்கியாகிவிட்டது. நல்லது. மூன்று மாதத்துக்கொருமுறைதான் இந்த விநியோகம் நடைபெறும். சிலவேளைகளில் பாடசாலைகளில் இருந்த சேமிப்பு வசதிகள், ஆசிரியர்களின் அக்கறையின்மை போன்றவற்றால் இந்த புழுப் பிரச்சனை வந்திருக்கலாம். ஆனால் கல்வித் திணைக்களத்துக்கு எந்த முறைப்பாடும் வந்தது கிடையாது.

  //…புலிகள் வன்னியில் அரசு வழங்கிய உணவுப்பொருட்களை தாங்கள் உபயோகித்துக் கொண்டு “புழு” பிடித்த உணவுகளை வன்னி மக்களுக்கு வழங்கிய அனுபவமோ?…// புலிகள் வந்தது 1980 களில் ஆனால் நான் பிஸ்கற் தின்றது 1974 இல்.

  புலிகள் புளுபிடித்த மாவையும் மற்றும் பொருட்களையும் வழங்கினார்கள் என்று சொல்ல உங்களுக்கு கஷ்டம். ஏனென்றால் உங்கள் பாதிரிகளும் அந்த செயல்பாட்டில் பங்காளிகள்.

  மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இலங்கை அரசுடையது. அதில் கெயரும் பங்களித்தது. தவிர இந்த என் ஜி ஓ என்ற நாமகரணம் அப்போது இல்லை. இந்தியாவில் கெயர் விசுக்கோத்து வழங்குவதில்லை.

  கெயரின் பிரவேசம் 1957 க்குப் பின்னரே என்று நினைக்கிறேன். அமெரிக்க தொண்டர் நிறுவனங்கள் அமெரிக்க அரசின் அங்கீகாரமும் உதவியும் பெறுபவை. அவை ஒரு நாளும் அமெரிக்க கொள்கைகளை விமர்சிப்பதில்லை. விமர்சிக்கவும் முடியாது. அதனூடாக அமெரிக்க ஆதரவு அரசியல் செய்யப்பட்டதுதான் வரலாறு.

  //சிறீலங்காவின் ஒபிசியல் பெயர் ‘சிறீலங்கா சோசலிச ஜனநாயகக் குடியரசு’ இதைபோஒய் கனடாவுடன் ஒப்பிடுகிறீர்கள் மிக நல்லது//
  இந்த பெயர் எப்போது வந்தது, எந்த அரசின் காலத்தில் சூட்டப்பட்டது என்று ஒரு தரம் தேடிப்பார்ப்பது நல்லது.

  //…..அணிசேரா நாடுகள் மீது இவர் காட்டும் கோபம் இவரின் அமெரிக்க ஆதரவுத்தனத்தை காட்டுகிறது….//
  அணிசேரா நாடுகள் அமெரிக்க/சோவியத் சாராதவை என்றல்லவா நினைத்தேன். அப்படிப்பார்த்தால் நான் ஏன் சோவியத் ஆதரவாளன் எனச்சொல்லாமல் அமெரிக்காவை மட்டும் இழுக்கிறீர்கள். வழமையான கீபோட் மாக்சிஸவாதிகள் போல வாழ்க்கை அமெரிக்க/ இங்கிலாந்து/ ஜேர்மனி/ பிரான்ஸ்/ கனடா/அவுஸ்திரேலியா/இத்தாலி போன்ற நாடுகளில் ஆனால் கீபோட்டில் மட்டும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்போ?
  என்கோபத்தை விடுங்கள். இவ்வமைப்புகளைச் சார்ந்த முக்கிய நாடுகளான இந்தியா, யூகோஸ்லாவியா, எகிப்து போன்ற நாடுகளே அமெரிக்காவின் காலடியில்.//
  அணி சேரா நாடுகள் என்ற அமைப்பு எதற்காக அமெரிக்க ஆதரவுகளுக்கு எரிச்சல் ஊட்ட வேண்டும்?

  கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை பார்த்தால் அவர்கள் யாவரும் அணி சேரா நாட்டு தலைவர்கள் என்பது தெரியும்! இந்தியா, யூகோஸ்லாவியா, எகிப்து ஆகிய நாட்டு தலைவர்கள் அணிசேரா நாடுகள் அமைப்பின் முக்கிய பங்காளிகள். இந்திய, எகிப்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். இன்று அன்றைய யூகோஸ்லாவியா இல்லை.

  இனிமேல் ஒருபோதும் இலங்கைக்கு போக விரும்பாதவர்களும் அவர்களது வாரிசுகளும் “கடல் கடந்த ஈழத்துக்கு” தேர்தல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படி? அமரிக்கா வந்து ஈழம் பிடித்து தரும் என்ற நம்பிக்கை காரணமாகவோ?

  //தமிழருக்கு உரிமைகள் இல்லையா? எல்லாம் சுபம் என்றல்லவா நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அமெரிக்க காசு வேண்டும் என்றால் அவன் சொற்படி ஆடத்தானே வேண்டும்? //
  காசுக்காக மதம் மாறுபவர்களின் சித்தாந்தம் “உரிமை” பற்றியதல்ல. உங்கள் சித்தாந்தம் கூலிக்கு மாரடித்தல் என்பதுதான். அமெரிக்கன் கொலை பண்ண சொன்னான் என்றால் உங்களுக்கு அதுவும் நியாயம்தான். அப்படி போன புலிகளின் கதி பற்றி அறிந்தால் நல்லது. அதனால் இழந்த உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உங்கள் அமெரிக்கா நஷ்ட ஈடு கொடுக்கப் போவதில்லை. அமெரிக்க, ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து வரும் நிறுவனங்கள் “தொண்டர்களாக” இருந்தால் நல்லது. “குண்டர்களோடு” கும்மியடித்தால் துரத்த வேண்டும் என்பது இப்போது நாங்கள் கற்றுக் கொண்ட பாடம்!

  தமிழர்களின் பிரச்சனை என்ன என்றே தமிழ் கட்சிகளால் இன்னமும் சொல்ல முடியவில்லை. தமிழர்களின் உரிமைகள் பற்றி அமெரிக்கனுக்கு “தமிழர்களை” விட அதிகம் தெரியும் என்று பாதிரிகள் கண்டு பிடித்திருப்பார்கள்.

  கூலிக் கொலைகாரர்களான புலிகளோடு சேர்ந்தவர்கள்தான் பாதிரிகள். அவர்களுக்கு கண்டிப்பாக அமெரிக்கப் பணம் கிடைத்துள்ளது! அதுதான் பாதிரிகளின் “தமிழ் நாட்டியம்”.

  Reply
 • தமிழ்வாதம்
  தமிழ்வாதம்

  ‘1970 இல் இருந்து 1977 வரை இலங்கையில் இந்த “வெளிநாட்டு” தன்னார்வக் குழுக்களையோ மற்றைய யாரையுமோ நாங்கள் கண்டதில்லை.’
  NANTHA on February 20, 2010 6:01 pm

  ‘1970 -1977 காலப் பகுதியில் இந்த என் ஜி ஓக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கவில்லை என்றுதான் குறிப்பிட்டேன். ‘
  NANTHA on February 22, 2010 12:28 pm

  மீண்டும் …….
  மேலும் வரட்சிக்காக வந்த ரெட்பானா,ஒக்ஸ்பாம் போன்ற நிறுவனங்கள் பற்றி, வன்னியிலிருந்தவர்களுக்குத் தெரியும்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //.சீநோர் அல்லது கெயர் எந்தக் காலத்திலும் வரட்சி நிவாரணங்களில் ஈடுபடவில்லை. இரண்டும் அரசாங்கத்தின் முதலீடுகளுடன் பங்குதாரர் என்ற வகையில்த்தான் இயங்கினார்கள்..//
  கெயர் எந்த அரசாங்கத்தின் பங்குதாரர், பொருளாதார பங்குதாரரா இல்லை சமூக நலப் பங்குதாரரா? கெயர் நிறுவனத்தின் இணையத்தளத்தில் தாம் உலக பட்டினியைப்போக்க இயங்கும் ஒரு தனிப்பட்ட உதவி நிறுவனம் எனச்சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் எந்த அரசினதும் பங்குதாரர் இல்லை!

  //..புழுவிலிருந்து முட்டைக்கு இறங்கியாகிவிட்டது. நல்லது……// புழுவில் இருந்துதான் முட்டைவரும்!

  //. ஆனால் கல்வித் திணைக்களத்துக்கு எந்த முறைப்பாடும் வந்தது கிடையாது….//
  கல்வித்திணைக்களம் ‘கல்வி’ சம்பந்தமான முறைபாடுகளுக்கே ஒழுங்காக பதில் சொல்வதில்லை. பிஸ்கற் புழு/பூச்சிக்கு பதில் சொல்லப் போகுதாக்கும்!

  //..மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இலங்கை அரசுடையது. அதில் கெயரும் பங்களித்தது. தவிர இந்த என் ஜி ஓ என்ற நாமகரணம் அப்போது இல்லை. இந்தியாவில் கெயர் விசுக்கோத்து வழங்குவதில்லை….//
  எம்.ஜி.ஆரின் சத்துணவுத்திட்டம் உண்டு. கெயர் இந்தியாவில் விசுக்கோத்து கொடுக்கவில்லை என்பதற்காக அவர்கள் இந்தியாவில் இயங்குவதில்லை எனச் சொல்ல முடியாது. இந்தியாவில் கெயர் விசுக்கோத்தை ‘நிறுத்திய’ இந்திரா காந்தியின் நண்பிதானே ஸ்ரீமா அம்மையார். இந்திராவின் ஐடியாவை பின்பற்றாமல் ஏன் ‘அமெரிக்க வாலுகளின்’ விசுக்கோத்தை பிடித்தவர்?
  நாமகரணம் இல்லை என்றால் ஆள் இல்லை என்றாகிவிடுமா?

  //..கெயரின் பிரவேசம் 1957 க்குப் பின்னரே என்று நினைக்கிறேன். அமெரிக்க தொண்டர் நிறுவனங்கள் அமெரிக்க அரசின் அங்கீகாரமும் உதவியும் பெறுபவை. அவை ஒரு நாளும் அமெரிக்க கொள்கைகளை விமர்சிப்பதில்லை. விமர்சிக்கவும் முடியாது. அதனூடாக அமெரிக்க ஆதரவு அரசியல் செய்யப்பட்டதுதான் வரலாறு. …//
  அப்போ ஏன் அவர்களின் ‘விசுக்கோத்தை’ வாங்கினார்கள். அணிசேராநாட்டு விசுக்கொத்து, ரஷ்ய ‘விசுக்கோத்து வாங்கி இருக்கலாம் தானே?

  Reply
 • rohan
  rohan

  /”1970 இல் இருந்து 1977 வரை இலங்கையில் இந்த “வெளிநாட்டு” தன்னார்வக் குழுக்களையோ மற்றைய யாரையுமோ நாங்கள் கண்டதில்லை.”// நந்தா.
  செடாக், கறிதாஸ் போன்ற அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளாகத் தான் கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்குத் சமயப் பின்னணி இருக்கலாம். ஆனால், அவர்களின் சேவையில் என்னால் பழுது காண முடியவில்லை. 1977இல் மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தபோது புளொட், காந்தியம் போன்றவையுடன் செடாக், கறிதாஸ் போன்ற அமைப்புகளும் தோளோடு தோள் நின்றன.

  Reply
 • NANTHA
  NANTHA

  // கெயர் நிறுவனத்தின் இணையத்தளத்தில் தாம் உலக பட்டினியைப்போக்க இயங்கும் ஒரு தனிப்பட்ட உதவி நிறுவனம் எனச்சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் எந்த அரசினதும் பங்குதாரர் இல்லை! //
  அப்படியா? அப்படியாயின் உங்களுடைய “புழு” விசுக்கொத்துக்கும் கெயருக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் ஏன் கெயரிடம் “புழு” விசுக்கோத்து பற்றி விசாரிக்க முடியாமல் பொய்களை அள்ளி வீசுகிறீர்கள்? பொய்ப்பிரச்சாரம செய்வதும் உங்கள் “கிறிஸ்தவ” கடவுள் கேட்கும் “திருப்பணியோ? கெயரிடம் கேட்டு பதிலை பிரசுரிக்கவும்.

  //கல்வித்திணைக்களம் ‘கல்வி’ சம்பந்தமான முறைபாடுகளுக்கே ஒழுங்காக பதில் சொல்வதில்லை. பிஸ்கற் புழு/பூச்சிக்கு பதில் சொல்லப் போகுதாக்கும்!//
  பொய்களை அள்ளி வீசுபவர்கள் வழமையாக கதைக்கும் கதைதான். கெயர் நிறுவனத்துக்கு கூட முறைப்பாடு செய்யாத உங்கள் பேச்சை மற்றவர்கள் நம்புவார்கள் என்ற எதிர்பார்ப்போ?

  இந்தியாவில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ கெயரின் திட்டங்களுக்கு பணம் வழங்க மறுத்துவிட்டன. அதனால்தான் அங்கு “விசுக்கோத்து” கிடையாது. எம் ஜி ஆரின் திட்டத்துக்கும் “உங்கள்” திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?

  இலங்கை அரசு கெயரின் திட்டங்களுக்கு “செலவுகள்” செய்ய சம்மதித்த படியால்த்தான் விபரம் தெரியாமல் என்னமோ “அமெரிக்கன்’ அள்ளி தருகிறான் என்று “கதை” விட்டு ஊரை ஏமாற்றாமல் இருக்க முயற்சிக்கவும்!

  சிறிமாவோ, இந்திரா ஆகியோர் நண்பர்களாக இருந்தார்களோ இல்லையோ ஒருவர் அமெரிக்க கூலிகளால் கொல்லப்பட்டார். மற்றவர் குடியுரிமை இழந்தார். இந்த “மனிதாபிமானம்” அமெரிக்கனைத்தவிர வேறு யாருக்கு வரும்? சிறிமாவோ காலத்தில் விசுக்கோத்து வரவில்லை என்ற தகவல் கூட தெரியாமல் “எதிராக” கதைக்கவேண்டும் என்பதற்காக பொய்களை அள்ளி விட உங்களுக்கு பாதிரிகள் பணம் தருகிறார்கள் என்றே நம்புகிறேன்!

  அமெரிக்க விசுக்கொத்தை வாங்கி முள்ளி வாய்க்காலில் சமாதியான கதை அதற்குள் மறந்து போனதோ? ரஷ்யா அல்லது சீனா அமெரிக்கன் போல “கீழ்த்தரமான” செயல்களில் இலங்கையில் ஈடுபட்டது கிடையாது.

  Reply
 • NANTHA
  NANTHA

  //1977இல் மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தபோது புளொட், காந்தியம் போன்றவையுடன் செடாக், கறிதாஸ் போன்ற அமைப்புகளும் தோளோடு தோள் நின்றன.//

  கத்தோலிக்க பாதிரிகள் காந்தியத்துக்கு எதிராக ஜெயவர்த்தனாவுக்கு அனுப்பிய பெட்டீசத்தை நேரடியாக பார்த்த எனக்கு “தோளோடு” நின்றார்களா அல்லது பாதிரிகள் காலை வாரினார்களா என்பதும் தெரியும்.

  செடாக், கறிதாஸ் என்ற பாதிரி அமைப்புக்கள் “கத்தோலிக்கர்களை” மாத்திரம் குடியேற்றினார்கள். அதுவும் “வவுனியாவில் நிரந்தரமாக குடியிருந்தவர்களையே குடியேற்ற வெளிநாட்டு பணத்தை பயன் படுத்தினார்கள்.

  //மேலும் வரட்சிக்காக வந்த ரெட்பானா,ஒக்ஸ்பாம் போன்ற நிறுவனங்கள் பற்றி, வன்னியிலிருந்தவர்களுக்குத் தெரியும்.//
  வன்னியில் இருந்த எனக்கு உங்கள் கதை அம்புலிமாமா கதைதான்.

  Reply
 • rohan
  rohan

  நந்தா//செடாக், கறிதாஸ் என்ற பாதிரி அமைப்புக்கள் “கத்தோலிக்கர்களை” மாத்திரம் குடியேற்றினார்கள். அதுவும் “வவுனியாவில் நிரந்தரமாக குடியிருந்தவர்களையே குடியேற்ற வெளிநாட்டு பணத்தை பயன் படுத்தினார்கள்.//
  கிளிநொச்சியில் சிவபாத கலையகம் என்று ஒன்று இருக்கிறது, தெரியுமா? அதன் பின்னணி என்ன, யார் அதை எதற்காகக் கட்டினார்கள் என்று தெரியுமா?

  நந்தா//கத்தோலிக்க பாதிரிகள் காந்தியத்துக்கு எதிராக ஜெயவர்த்தனாவுக்கு அனுப்பிய பெட்டீசத்தை நேரடியாக பார்த்த எனக்கு…//
  //வன்னியில் இருந்த எனக்கு உங்கள் கதை அம்புலிமாமா கதைதான்// தங்கள் ஆதாரம் அற்ற வரிகளுக்கு, ‘பக்கத்தில் நின்றேன்’, ‘பொறுப்பாக இருந்தேன்’ என்று முண்டு கொடுத்தல்கள் வேறு.

  Reply
 • palli
  palli

  //தங்கள் ஆதாரம் அற்ற வரிகளுக்கு, ‘பக்கத்தில் நின்றேன்’, ‘பொறுப்பாக இருந்தேன்’ என்று முண்டு கொடுத்தல்கள் வேறு.//
  இதுகூட நல்லாய்தான் இருக்கு;

  Reply
 • palli
  palli

  //நந்தா//கத்தோலிக்க பாதிரிகள் காந்தியத்துக்கு எதிராக ஜெயவர்த்தனாவுக்கு அனுப்பிய பெட்டீசத்தை நேரடியாக பார்த்த எனக்கு…//

  சறோசினி; சன்முகநாதன்; உடுப்பிட்டி பேபி, கணவதிபிள்ளை, குகதாசன்; பூபாலசிங்கம்; டேவிட் வன்னியசிங்கம்; இன்னும் தொடரலாம்; இவர்கள் உயிருடன் இருப்பதை நந்தா மறக்கலாமா?? தேவையேற்படின் உங்கள் புருடாவுக்காய் அவர்களை அறிமுகம் செய்யலாம்;

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…அப்படியாயின் உங்களுடைய “புழு” விசுக்கொத்துக்கும் கெயருக்கும் என்ன சம்பந்தம்?….//
  உங்களுக்கு முன்னர் எழுதிய கேள்வி ஒன்றில் கெயருக்கும் அரசுக்கும் உள்ள சம்பந்தம் எவ்வகையது எனக்கேட்டிருந்தேன். அதற்குப் பதில் எழுதியிருந்தீர்களாயின் இதற்கும் பதில் தெரிந்திருக்கும். கெயருக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் உள்ள உறவு நீங்கள் சொல்வதுபோல ‘காசு கொடுக்கும்’ உறவல்ல, மாறாக ‘நிர்வாக’ உறவு. கெயர் கொடுக்கும் பொருளாதார உதவியை தாமே ‘நிர்வகிப்போம்’ என ஒற்றைக்காலில் நிற்கும் ஸ்ரீலங்காவுக்குமான உறவு. ஆகவே ‘புழு/முட்டை’ பொறுப்பு கெயர் அல்ல

  //… கெயர் நிறுவனத்துக்கு கூட முறைப்பாடு செய்யாத உங்கள் பேச்சை மற்றவர்கள் நம்புவார்கள் என்ற எதிர்பார்ப்போ?….//
  அப்போதெல்லாம் எமக்கு இன்ரநெற்றுமில்லை, ஈமெயிலுமில்லை கெயர்ருக்கு கடிதம் எழுத எம்மிடம் வசதியுமில்லை. அதனால் தான் கொடுத்த ‘ப்ழு’ பிஸ்கற்றை லைனில் நின்று தின்ன வேண்டி வந்தது. பொலிஸ் ஸ்ரேசனுக்கு போய் அரசுக்கு எதிராக கொம்பிளெய்ன் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியும் தானே? இதில் முறைபாடு, பெட்டிசன் என்கிறியள்.

  ///…சிறிமாவோ காலத்தில் விசுக்கோத்து வரவில்லை என்ற தகவல் கூட தெரியாமல் “எதிராக” கதைக்கவேண்டும் என்பதற்காக பொய்களை அள்ளி விட உங்களுக்கு பாதிரிகள் பணம் தருகிறார்கள் என்றே நம்புகிறேன்!….//
  அப்படியா? அப்போ நான் தின்றது ‘பாதிரியின்’ ரொட்டியாக இருக்குமோ? ‘புழு’ப்ப்பிடித்த பிஸ்கற்றைத் தின்றுகொண்டே ‘ஸ்ரீமாவோ பண்டாரனாயக்காவின்’ அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியிம் அவரின் கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி யின் ‘கனவுகளை’ நனவாக்கும் திட்டம் குறித்தும் கட்டுரை எழுதினேன் அல்லவா? எல்லாம் பாதிரி தரும் பணம் செய்யும் வேலை!
  நன்றி நந்தா!

  Reply
 • NANTHA
  NANTHA

  //கெயருக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் உள்ள உறவு நீங்கள் சொல்வதுபோல ‘காசு கொடுக்கும்’ உறவல்ல, மாறாக ‘நிர்வாக’ உறவு. கெயர் கொடுக்கும் பொருளாதார உதவியை தாமே ‘நிர்வகிப்போம்’ என ஒற்றைக்காலில் நிற்கும் ஸ்ரீலங்காவுக்குமான உறவு. ஆகவே ‘புழு/முட்டை’ பொறுப்பு கெயர் அல்ல.//
  இந்த எழுத்தில் அமெரிக்க கெயர் தாபனம் பொறுப்பல்ல என்றும் உங்கள் பொய்யான குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற தொனி உள்ளது. அது எப்படி என்று சொன்னால் நல்லது. புலிகளினால் கொல்லப்பட்டவர்களுக்கு டக்லஸ் தேவானந்தா காரணம் என்றும் இனி கதை விடுவீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன்!

  அது என்ன நிர்வாக உறவு? இலங்கை அரசு கெயரை நிர்வாகம் செய்யவில்லை. அதன் உற்பத்திகளில் தலையிடவும் இல்லை. விநியோகம் செய்யும் பொறுப்புகளையும் செலவுகளையும் மாத்திரம் அரசு செய்தது.

  முதலில் கெயர் நிறுவனம் “ஒரு தனிப்பட்ட உதவி நிறுவனம் எனச்சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் எந்த அரசினதும் பங்குதாரர் இல்லை” என்று சொன்ன நீங்கள் இப்போது “உறவு” உண்டு என்று சொல்லுகிறீர்கள்.

  எனவே பொருளின் உற்பத்தியாளர்கள் “உத்தமர்கள்” விநியோகம் செய்தவர்கள் கெட்டவர்கள் என்று சொல்வது உங்கள் தலையில் ஏற்கனவே ஏற்றி வைத்துள்ள துவேஷத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை. உங்களுடைய “வெள்ளை” எசமானர்களின் நாட்டில் கூட ஒரு பொருளின் உற்பத்தியாளர்களைத்தான் தப்புக்காக விசாரிப்பார்கள். மற்றவர்களை அல்ல.

  உங்களுக்கு கெயருக்கும், அரசுக்கும் உள்ள “ஒப்பந்தம்” பற்றி அறியாமல் பாதிரிகளின் ” சொர்க்க ராஜ்ஜியம்” பற்றிய கற்பனையில் சொன்ன பொய்யை சரி என்று வாதிடுவதன் மூலம் பாதிரிகளின் ஆள் என்ற அந்தஸ்த்தை அடைகிறீர்கள்!

  //பொலிஸ் ஸ்ரேசனுக்கு போய் அரசுக்கு எதிராக கொம்பிளெய்ன் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியும் தானே? இதில் முறைபாடு, பெட்டிசன் என்கிறியள்.//
  உணவுப் பிரச்னைக்கு போலீசில் புகார் செய்வதில்லை. யாழ்ப்பாணத்தில் சானிட்டரி இன்ஸ்பெக்டர்கள் என்று ஒரு பதவி உள்ளது. அவர்கள்தான் உணவு பற்றிய புகார்களை கையாளுகிறார்கள்.

  //அமெரிக்க காசு வேண்டும் என்றால் அவன் சொற்படி ஆடத்தானே வேண்டும்? // என்று எழுதும் உங்களுக்கு அமெரிக்காவின் கெயர் நிறுவனத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் “அமெரிக்கனுக்காக எழுதவேண்டும்” என்று இலங்கையில் நடைபெறாத சம்பவங்களை “பொய்” யாக எழுதி பணம் பெறுகிறீர்கள் என்பதில் எனக்கு எதுவித ஐயமும் இல்லை!

  Reply
 • NANTHA
  NANTHA

  //சறோசினி; சன்முகநாதன்; உடுப்பிட்டி பேபி, கணவதிபிள்ளை, குகதாசன்; பூபாலசிங்கம்; டேவிட் வன்னியசிங்கம்; இன்னும் தொடரலாம்; இவர்கள் உயிருடன் இருப்பதை நந்தா மறக்கலாமா?? தேவையேற்படின் உங்கள் புருடாவுக்காய் அவர்களை அறிமுகம் செய்யலாம்;// palli

  நல்ல காரியம். அவர்களைப் பற்றியும் எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் அல்லவா!

  //கிளிநொச்சியில் சிவபாத கலையகம் என்று ஒன்று இருக்கிறது, தெரியுமா? அதன் பின்னணி என்ன, யார் அதை எதற்காகக் கட்டினார்கள் என்று தெரியுமா?//
  இப்போதும் உள்ளதா? அல்லது அவர்கள் என்ன செய்தார்கள் என்றாவது சொல்ல முடியுமா?

  Reply
 • palli
  palli

  //இப்போதும் உள்ளதா? அல்லது அவர்கள் என்ன செய்தார்கள் என்றாவது சொல்ல முடியுமா?//
  அதுமட்டுமல்ல உத்தராகை எனவும் ஒன்று பூனகரியில் உண்டு அது எல்லாம் துரையப்பாவுடன் குடும்பகதை பேசியவர்களுக்கும் ஜெயவர்த்தனாவின் கடிதங்களை தணிக்கை செய்தவர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை; இதுவரை நந்தா புலி ,மலையாளை மதம் இதுதவிர
  ஏதும் எழுதியதாக எனக்கு படவில்லை; இருப்பினும் இவரது இத்துபோன பிரச்சனைக்கெல்லாம் சாந்தன் சளைக்காமல் மறுப்பு தெரிவிப்பது திறமைதான்:

  நந்தா மதம் மாறுவோர் பற்றி கவலைபடும் நீங்கள் குடியுரிமை மாறுவோர் பற்றி பேசாதது ஏனோ? தாங்களும் மாற்றியாச்சா?? காந்தியம்
  பற்றி பேசுமுன் டேவிட் ஜயாவின் இன்றயநிலை பற்றி பாருங்கள்; இன்றும் காந்தியமாக வாழ்கிறார், அவர் நினைத்தால் இன்று கூட அமெரிக்கா குடியுரிமை பெறலாம்; இதெல்லாம் ஜேயாரின் கடிதங்கள் பார்க்கும் உங்களுக்கு புரியாது; இதுவரை நீங்கள் மக்கள் படும் துன்பம் பற்றி எழுதிய பின்னோட்டத்தை சுட்டி காட்டவும்; பார்க்க ஆவலாக உள்ளது,

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  /…இந்த எழுத்தில் அமெரிக்க கெயர் தாபனம் பொறுப்பல்ல என்றும் உங்கள் பொய்யான குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற தொனி உள்ளது. அது எப்படி என்று சொன்னால் நல்லது.//
  அதுதான் சொன்னேனே கெயரிடன் காசுவாங்கி பிஸ்கற்றை வினியொகம் செய்யும்போது வரும் பிழைகளுக்கு வினியோகஸ்தரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். மேலும் ஸ்ரீலங்காவில் மனிதாபிமான உதவிகளைக்கூட ‘வரி’ விதித்து பணம் சம்பாதிக்கும் உத்தியாக கொள்வார்கள். அண்மைய உதாரனங்கள் இரண்டு….
  சுனாமி காலத்தில் சென்ற உதவிகள்/பணம் போன்ரவற்றுக்கு வரி அறவிட்டது.
  அண்மையில் யாழிற்கும் வவுனியாவிற்கும் அனுப்பப்பட்ட மருந்துப்பொருட்களை தடுத்து பணத்தைத் தம்மிடம் கொடுக்கும் படியும் தாமே தமது மருந்துக்கூட்டுத்தாபனத்தில் வாங்கி (என்ன லொஜிக்கோ?) யாழில் கொடுப்போம் என்றும் உத்தரவு பிறப்பித்த்து. இதுபோலவே கெயருக்கும் நடந்தது.
  //. புலிகளினால் கொல்லப்பட்டவர்களுக்கு டக்லஸ் தேவானந்தா காரணம் என்றும் இனி கதை விடுவீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன்!.//
  நான் ஏன் அப்படி விடவேண்டும்? மக்கள் தான் தேர்தலில் அவருக்கு ‘நல்ல’ பதில் சொல்லி இருந்தனரே!

  //….அது என்ன நிர்வாக உறவு? இலங்கை அரசு கெயரை நிர்வாகம் செய்யவில்லை. அதன் உற்பத்திகளில் தலையிடவும் இல்லை. விநியோகம் செய்யும் பொறுப்புகளையும் செலவுகளையும் மாத்திரம் அரசு செய்தது…..//
  அது என்ன நிர்வாக உறவு எனும் கேள்விக்குப் பதில் உங்கள் பதிலிலேயே உண்டு. நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் ”விநியோகம் செய்யும் பொறுப்புகளையும் செலவுகளையும் மாத்திரம் அரசு செய்தது” என்று. வினியோகம் செய்வது திட்டத்தை நிர்வாகிக்கும் பொறுப்புள் வருவ்து ‘கல்வித்திணைக்கள’ அலுவலருக்கு தெரியாதது வேதனையே!

  //…முதலில் கெயர் நிறுவனம் “ஒரு தனிப்பட்ட உதவி நிறுவனம் எனச்சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் எந்த அரசினதும் பங்குதாரர் இல்லை” என்று சொன்ன நீங்கள் இப்போது “உறவு” உண்டு என்று சொல்லுகிறீர்கள்…..//
  இந்த ‘சிக்கலுக்கு’ நல்ல உதாரனம் ஸ்ரீலங்கா. எந்த அரசுசாரா உதவி நிறுவனமும் தமக்கு கீழேயே வேலை செய்யவேண்டும் என ‘ஒற்றைக்காலில்’ நிற்பார்கள். உதவி நிறுவனங்களும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்ள வேண்டி வரும்.

  //….உங்களுக்கு கெயருக்கும், அரசுக்கும் உள்ள “ஒப்பந்தம்” பற்றி அறியாமல் பாதிரிகளின் ” சொர்க்க ராஜ்ஜியம்” பற்றிய கற்பனையில் சொன்ன பொய்யை சரி என்று வாதிடுவதன் மூலம் பாதிரிகளின் ஆள் என்ற அந்தஸ்த்தை அடைகிறீர்கள்!…//
  ஆரம்பித்து விட்டீர்கள்….

  //…உணவுப் பிரச்னைக்கு போலீசில் புகார் செய்வதில்லை. யாழ்ப்பாணத்தில் சானிட்டரி இன்ஸ்பெக்டர்கள் என்று ஒரு பதவி உள்ளது. அவர்கள்தான் உணவு பற்றிய புகார்களை கையாளுகிறார்கள்…..// மலேரியாவுக்க அடிக்க வேண்டிய மருந்தே ஒழுங்காக வருகுதில்லை என அந்தாள் அழுது கொண்டு திரிந்தவர். நீங்கள் போய் உங்கள் ‘கல்வித்திணைக்கள் புழு’ பிரச்சினைக்கும் அவரை இழுக்கிறீர்கள். சொல்லப்போனால் சங்கக்கடையில் புழுப்பிடித்த மாவை விற்பது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என எமது பிரதேச சனிற்ரரியிடம் கேட்க அது என் வேலை அல்ல. நான் சுகாதாரத் திணைக்களம் நீங்கள் போக வேண்டியது கோப்பிறட்டி பொறுப்பாலரிட்டச் சொல்லுங்கோ எனச் சொன்ன நிகழ்வும் நடந்தது.

  //…நிறுவனத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் “அமெரிக்கனுக்காக எழுதவேண்டும்” என்று இலங்கையில் நடைபெறாத சம்பவங்களை “பொய்” யாக எழுதி பணம் பெறுகிறீர்கள் என்பதில் எனக்கு எதுவித ஐயமும் இல்லை!….// நல்லது !

  Reply
 • SRI
  SRI

  :://அன்பின் கங்கை, அன்னை திரேசா: இளவாலை அமுது (இயற்பெயர்- அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997. (லண்டன்: வாசன் அச்சகம்)
  (16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00. அளவு: 20X14.5 சமீ.

  அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது//

  Reply
 • NANTHA
  NANTHA

  // அதுதான் சொன்னேனே கெயரிடன் காசுவாங்கி//
  கெயர் காசு யாருக்கு கொடுத்தது? கெயர் என்ன வங்கியா நடத்துகிறது?

  கெயர் கொடுப்பது அமெரிக்காவில் உற்பத்தியாகும், கொழுப்பு நீக்கிய பால்மாவும், கோதுமை மாவும் மாத்திரமே. நீங்கள் சொன்ன “புழு” அமெரிக்கன் புழு அல்லது சாந்தனின் புளுகு என்றுதான் இப்போது தெரிகிறது. கெயர் அல்லது இலங்கை அரசின் திணைக்களங்கள் பற்றி எதுவித அறிவும் இல்லாமல் எழுதும் எழுத்துக்கள் வெறும் துவேஷமே தவிர வேறொன்றும் இல்லை.

  சுனாமி காலத்தில் புலிகளுக்கு போன உதவிகள் என்ன ஆனது என்பதையும் சொன்னால் நல்லது. தவிர “சுனாமி” என்று “பினாமி”களுக்கு அனுப்பும் பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது என்று சொல்வது “கள்ளக்கடத்தல்” காரங்கள் நாட்டுக்கு சேவை செய்கிறார்கள் என்ற கதைதான்.

  //வவுனியாவிற்கும் அனுப்பப்பட்ட மருந்துப்பொருட்களை //
  யார் அனுப்பினார்கள்? யாருக்கு அனுப்பினார்கள்?

  யாழ் தேர்தல் முடிவுகளுக்கும் உங்கள் பொய்களுக்கும் என்ன சம்பந்தம்? தவிர தீவு பகுதிகளில் டக்ளசின் வாக்குகளில் மாற்றம் இல்லையே!

  //வினியோகம் செய்வது திட்டத்தை நிர்வாகிக்கும் பொறுப்புள் வருவ்து ‘கல்வித்திணைக்கள’ அலுவலருக்கு தெரியாதது வேதனையே!//
  நிர்வாகம். விநியோகம் என்பவற்றின் தமிழ் அர்த்தங்கள் புரியாமல் இருந்தால் தமிழைப் படிப்பது நல்லது. அடுத்தது “விபரம்” தெரியாது பொய்களை அவிழ்த்து விட்டு பயன்கிட்டாது. கல்வித்திணைக்களம் பற்றி சாந்தன் என்ற விபரம் தெரியாத ஆள் பேசுவது வேடிக்கை!

  அடுத்த புளுகு கீழே உள்ளது:
  //பிரதேச சனிற்ரரியிடம் கேட்க அது என் வேலை அல்ல. நான் சுகாதாரத் திணைக்களம் நீங்கள் போக வேண்டியது கோப்பிறட்டி பொறுப்பாலரிட்டச் சொல்லுங்கோ //
  சானிட்டரி இன்ஸ்பெக்டர் எந்த திணைக்களத்துக்குக் கீழ் வேலை செய்கிறார் என்று தெரியாத உங்களால் கல்வித்திணைக்களம், அல்லது அரசினைப் பற்றி அதன் நிர்வாகம் பற்றி பேச முடியாது.

  Reply
 • NANTHA
  NANTHA

  மதம் மாறுபவர்களுக்கும் குடியுரிமைக்கும் என்ன சம்பந்தம் என்று பல்லி விளக்கினால் நல்லது!

  காந்தீயம் பற்றி “எங்கோ” கேட்டவைகளை எழுதி பிரயோசனம் இல்லை. தமிழர்களின் இன்றைய நிலைமை உங்களைபோல “தமிழ்” என்று கூறி கொலைகள் கொள்ளைகள் வரை செய்தவர்களினால் உண்டாக்கப்பட்டது. அதே கதையை தொடர உங்கள் போன்றவர்கள் இன்னமும் முயற்சிக்கிறார்கள்.

  தமிழர்களை தமிழின் பெயரால் கொன்றவர்களையும் கொள்ளையடித்தவர்கள் பற்றியும் எழுத முடியாமல் உள்ள நீங்கள் “தமிழ்” என்று” குரலெழுப்பி மீண்டும் தமிழர்களை மூடர்களாக்கவே முயல்வது புரிகிறது.

  Reply
 • thurai
  thurai

  //மதம் மாறுபவர்களுக்கும் குடியுரிமைக்கும் என்ன சம்பந்தம் என்று பல்லி விளக்கினால் நல்லது!//நந்தா

  பிற மதங்களைப் பற்ரியும், நிறுவனங்களைப் பற்ரியும் இங்கு தாழ்த்திப் பேசுவோர் எங்கு வாழ்கிறார்களென்பது எனக்குத் தெரியாது. இலங்கையை விட்டு மேல் நாடுகளில் வாழும் நாங்கள் ஒட்டி வாழும் குருவிச்சை இனத்திற்கு ஒப்பானவர்களே என்பதை மனதில் கொண்டால் நல்லது.
  குருவிச்சை மாமரத்தில் ஒட்டி வாழும்போது மாமரத்தை பார்த்து ஏழனம் செய்வதில்லை, ஆனால் தமிழர்கள் சிலரிற்கு ஏன் இந்த குணமோ?

  இலங்கையில் வாழும் மக்கள் தங்கள் சுயநலங்ளிற்காக மதம் மாறுவதுபோலவே, புலத்தில் வாழ்வோரும் அந்தந்த நாட்டு குடியுருமையைப் பெற்று அரசாங்க சலுகைகளைப் பெறுகிறார்கள். அன்று சமயம் இன்று குடியுருமை. திருமணம் பேசுபவர்கள் கேட்கும் முதல் கேள்வி அன்று என்ன மதம் என்று, இன்று ஆணோ, பெண்ணோ வசிக்கும் நாட்டின் குடியுருமை பெற்ரவர்களா என்பதே.

  துரை

  Reply
 • palli
  palli

  //. திருமணம் பேசுபவர்கள் கேட்கும் முதல் கேள்வி அன்று என்ன மதம் என்று, இன்று ஆணோ, பெண்ணோ வசிக்கும் நாட்டின் குடியுருமை பெற்ரவர்களா என்பதே./

  சுய தேவை கருதியே அன்று அது, இன்று இது, இவைகூட புரியாமல் என்ன நந்தா?

  காந்தீயம் பற்றி “எங்கோ” கேட்டவைகளை எழுதி பிரயோசனம் இல்லை. :://
  பல்லி காந்தியம் பற்றி தொடங்கவில்லை, நந்தா விடுவம் றீல் என தொடங்கினார் இப்போ அது புளிக்குமாம்; நான் சொன்னவர்களே கந்தியத்தின் மிக முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள்; இவர்களுடன் பாலமோட்டை சிவத்தையும் சேர்க்கும்படி எனது நண்பன் சொன்னார் (பெரியமெண்டிஸ்) நந்தா பல்லி பின்னோட்டத்தில் தவறும் போது நண்பர்கள் உடன் சுட்டிகாட்டுவார்கள், அது சரியாயின் திருத்தி கொள்வேன் அடம்பிடிக்க மாட்டேன், சின்னபிள்ளைதனமாய்;
  பல்லி தொடரும்;;

  Reply
 • NANTHA
  NANTHA

  பல்லி:
  மதம் மாறுவது என்பது “காசுக்கும், பொருளுக்குமே ஒழிய” வேறு எதற்கும் கிடையாது.

  குடியுரிமைக்கும், மதம் மாறுவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு இன்னமும் பதில் தராமல் வீண் வார்த்தை ஜாலங்கள் வேண்டாம்!

  காந்தியம் என்பது டாக்டர் ராஜசுந்தரம் தனது பெயரில் பதிவு செய்த ஒரு நிறுவனம். அதற்குள் “தமிழ்” வீரர்கள் புகுந்து அதனை நாசமாகினார்கள் என்பது பெரியதொரு உண்மை. டேவிட் போன்ற கட்டிடக் கலைஞர் இந்த “தமிழ்” பிரச்சனையுள் அள்ளுண்டு தனது சொந்த உழைப்பினால் தேடிய தேட்டங்களையும் இழந்து இன்று “அநாதை”யாக சென்னையில் இருக்கிறார். உமாமகேஸ்வரன் அவரைப் பிடித்து வான் மூலம் கடத்தியதும் தெரியும். அண்ணாநகர் கதைகள் படு சோகம்.

  டேவிட்டுக்கு அமெரிக்கா எப்படி குடியுரிமை கொடுக்கும் என்பது தெரியாது. ஆனால் அமெரிக்கா இலங்கைத் தமிழர்களை “அகதிகளாக” ஏற்றுக்கொள்வது கிடையாது என்பது தெரியும்.

  டேவிட்டின் ரத்தத்தை உறிஞ்சிய கூட்டங்களின் பெயர்களைப் பிரலாபித்து என்ன செய்யப்போகிறீர்கள்?

  Reply