ஜனாதிபதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பரப்பப்பட்ட செய்திகளில் உண்மையில்லை: தயானந்த திஸாநாயக்க

election-commisone.jpgதாம் துப்பாக்கி முனையில் பெறுபேறுகளில் கையொப்பமிட்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது தாம் தேர்தல்கள் செயலகத்தில் இருக்கவில்லையென்றும், வெளியாகியதாக செய்திகளில் உண்மையில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த 26ஆம் திகதிக்கு பின்னர் அடுத்த நாள் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  தமது மகள் கடத்தப்பட்டதாகவும் பல்வேறுப்பட்ட கட்டுக்கதைகள் பரப்பட்டதாகவும், இதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜகிரிய, தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக, எந்தவித சந்தேகமும், கொள்ளத்தேவையில்லை எனவும், ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் அனைத்திலும் தமது கையொப்பங்கள் இடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.  தேர்தல் வாக்களிப்புகள் உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சீரான முறையில் இடம்பெற்றன.

இந்தநிலையில், தமது அலுவலக சேவையாளர்கள் மற்றும் ஏனையவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போதும் பணியாற்றப்போவதாக தயாநந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  கடந்த தேர்தல்களின் போது, தம்மால், அநீதியான முறையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் நீதிமன்ற நடவடிக்கைகளை அல்லது உரிய விசாரணைகளை சந்திப்பதற்கும் தாம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply to NANTHA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சில எதிர்க்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி ஊடகங்கள் எடுத்த விட்ட கட்டுக்கதைகளை நம்பி, இங்கு நம்மவர்கள் சிலர் கூட கணணித் திருகுதாளம் செய்து (மென்பொருள் ஊடாக)வெற்றி பெற்றதாக கதையளந்தார்கள். இது போலவே ஐரோப்பிய வானொலி ஒன்று, மகிந்த தமிழ்ப் பிரதேசங்களில் தமிழில் பேசியதையும் அவர் சிங்களத்தில் பேசுவதை, கணணி மென்பொருளொன்று தமிழில் மாற்றி ஒலிபெருக்கிக்கு அனுப்பியே செய்கின்றார்கள் என்று கதையளந்தது. இது உண்மையிலேயே சாத்தியமா என்று கேள்வி கேட்கும் திறன் ஒரு நேயருக்கும் இருக்கவில்லை என்பது வேதனையான விடயம். பந்தயம் பிடி முட்டாள் ஆகின்றேன் என்பதில் எம்மவர் பலருக்கு மகிழ்ச்சி போல.

    Reply
  • BC
    BC

    பார்த்திபன், மகிந்தா தப்பியோட விமானம் தயார் என்றும் ஒரு செய்தி படித்தேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    தேர்தல் ஆணையாளரை அழைத்த மஹிந்தா அவருடன் 6 மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடாத்தி அவை தோல்வியுற அவரை வீட்டுக்குச் செல்லும்படி பணித்து அவரின் மனைவியை அங்கேயே தங்கிச் செல்லுமாறு ‘அன்புடன்’ பணித்ததாகவும் வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்குத் திரும்பிய அவர் அடுத்தநாள் இவ்வறிக்கையை விட்டதாகவும் ”ஸ்ரீலங்கா காடியன்” ஒரு செய்தி வெளியிடுளது. .

    Reply
  • chandran.raja
    chandran.raja

    குதிரைக்கு பணம் கட்டுவதுபோல் தானே எமது நாடுகளில் அநேகமான தேர்தல்கள் நடைபெறுகின்றன. பலகோடிகளை முதலீடு செய்துவிட்டு எது கோட்டைத் தாண்டுகிறது என்பதை ஆவலுடன் பார்த்திருப்பார்கள். இப்படியான நடைமுறைகளுக் கூடாகவே நாம் ஜனநாயகத்தை தரிசிக்க வேண்டியதாக இருக்கிறது. தோற்றவன் உறுமுறதும் செருமுறதும் “மோசடித்தேர்தல்” “ஜனநாயகம் கெட்டுவிட்டது” என்பது போன்ற வாசகங்கள் இலங்கை மக்களுக்கோ இந்தியமக்களுக்கோ கேட்டுக்கேட்டு சலிச்சுப்போன வார்த்தைகளே!. இவர்கள் ஓலம் இடுவது தமது வருவாய் இழப்பை நினைத்தே!. மக்களைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றியோ அல்ல.இதில் சோமவம்சாவோ மனோகணேசனோ ரவூல்கக்கீமோ விதிவிலக்கல்ல.
    இவற்றைப் புறந்தள்ளிவிட்டு அடுத்த ஓட்டத்திற்கு தயாராவது தான் இவர்களுக்கு அழகு.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சந்திரன் ராஜா சொல்வதுபோல தோற்றவன் உறுமுறதும் செருமுறதும் “மோசடித்தேர்தல்” “ஜனநாயகம் கெட்டுவிட்டது” என்பது போன்ற வாசகங்கள் இலங்கை மக்களுக்கோ இந்தியமக்களுக்கோ கேட்டுக்கேட்டு பழகி விட்டது என்பது உண்மைதான். அத்துடன் இலங்கை மக்களுக்கு இப்போது ‘புலம்பெயர் தமிழர் சொற்கேட்டு நடந்துவிட்டனர் தமிழ் வாக்காளர்கள், புலம்பெயர் ஊடகங்கள் குழப்பிவிட்டனர், மேற்குலகம் தலையிடுட்டுவிட்டது போன்ற புதிய வாசகங்களும் பழக்கப்பட்டு வருகிறது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    பத்திரிகைகள் ஆயிரம் செய்திகளைப் போட்டாலும், சில விடயங்களை சொந்தமாகச் சிந்திக்கும் திறன் தங்களுக்கு இருக்குமென்று நம்புகின்றேன். தேர்தல் முடிவின் பின் வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிடும் வரை, ஒவ்வொரு தொகுதிகளிலும் அந்தந்தக் கட்சிகளின் முகவர்கள் இருப்பார்கள். முடிவுகளை அவர்களும் சரிபார்த்து ஒப்பமிட்ட பின் தான் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளுக்கும் தாங்கள் பார்த்த முடிவுகளுக்கும் வேறுபாடிருந்தால், அதனை அந்தந்தத் தொகுதிகளைச் சார்ந்த முகவர்கள் தெளிவுபடுத்தி தேர்தல் ஆணையாளருக்கு புகார் தெரிவித்திருக்கலாமே?? ஆனால் அப்படிச் செய்யாமல் பொத்தம் பொதுவாக அரசு மோசடி செய்கின்றதென்று சொல்வதில் என்ன பயன். அத்துடன் மகிந்த உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருடன் பேச அழைப்பு விடுத்திருந்தால், அவருடன் அவரது மனைவியுமா செல்வார்?? அத்துடன் இன்று தேர்தல் ஆணையாளரே தேர்தல் முடிவுகள் அனைத்தும் சரியானதென்றும், தன்னைப்பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை என்றும் அறிவித்துள்ளாரே?? அப்ப இதுவும் மகிந்தவுடன் நடந்த இன்னொரு 6 மணித்தியாலச் சந்திப்பின் பின் தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவோ??

    Reply
  • msri
    msri

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட தற்போதைய ஜனாதிபதி அமைப்பு முறையால்> ஆணைப் பெண்ணாகவும்> பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாதே தவிர மற்றப்படி எதுவுமே செய்யலாம். புலிகளின் முக்கிய உறுப்பினர்களையே அரசின் காட்டிக் கொடுப்பாளராக்கிய மகிந்தப்புலியால்> கே.பி.யைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவு அறிக்கை விடும் நிலைக்கே> கொண்டுவந்த “பேரினவாதப் பிரபாவிற்கு” தேர்தல் ஆணையாளர் எம்மாத்திரம். எம்மவர்களில் பலரின் நாட்டு நடப்பு தெரியாத்தன்மையை என்னவென்பது> மகிந்தாவிற்கு தலையிடி என்றால் இவர்கள் இங்கே மாத்திரை விழுங்கும் நிலையிலிருந்து கதை சொல்கின்றார்கள்! டக்கிளஸ்-பிள்ளையான்-ஏனைய ஜனநாயக நீரோட்டக்காரர்கள் சிலர் சுவிஸிற்கு வந்து காதோடு காதாய் > சொன்ன மகிந்த மன்னனின்> சோக-நகைச்சுவை கதைகள் ஏராளம்! ஓர் ஜனநாயக நீரோட்ட தலைவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார். வன்னிமக்கள் முட்கமபி வேலிக்குள்ளுள். நாம் மகிந்தச் சிறையில் என்றார்.

    Reply
  • NANTHA
    NANTHA

    MSRI:
    புலிகள் என்றால் என்னமோ “உண்மைக்கும்”, நேர்மைக்கும் உயிரை விடுபவர்கள் என்ற கருத்து உங்கள் எழுத்தில் தெரிகிறது. சரத் பொன்சேகா என்ற மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாம் என்று பத்து சதவீதம் கூட வாக்காளர் பலம் இல்லாத சம்பந்தன் கோஷ்டியும், ஹக்கீமும் மக்களை பைத்தியங்கள் ஆக்கும் பொழுது “இந்த போர்” எப்போது முடியும் என்று எதிர்பார்த்த சிங்கள மக்களின் அமோக ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ராஜபக்ஷவின் கணிப்பு பொய்யாகவில்லை.

    தமிழர்கள், விசேடமாக யாழ் தமிழர்கள் லஞ்சம், மோசடிகள், கள்ளகடத்தல் போன்ற சமூக புற்று நோய்களை எதிர்த்து போராட்டம் நடத்திய பாரம்பரியம் இல்லாதவர்கள். “லஞ்சம்” அதிகம் வாங்கும் அரச ஊழியனுக்கு சீதனம் “அதிகம்” கொடுத்த/கொடுக்கும் ஞானப்பரம்பரைகளுக்கு “குறுக்கு” வழியில்” அதுவும் லட்சக்கணக்கான எதிர்கட்சி அங்கத்தவர்கள், படித்தவர்கள் தேர்தல் முகவர்கள் ஆகியோரின் கண்களில் மண் போட்டு வெற்றி பெறலாம் என்ற “கட்டுக் கதை” பெரு மகிழ்வைக் கொடுக்கலாம். “தமிழ் ஈழம்” என்ற மாரீசத்தை நம்பி மோசம் போனவர்களுக்கு, இந்த செய்திகளும் நம்பக் கூடியவையே!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பார்திபன்,
    நான் சொன்னது ‘லங்கா காடியன்’ செய்தி பறியே. மேலே தேசத்தில் அருட்செல்வன்.வி சொன்னது போல அதுவும் ஒரு செய்திதான். அருட்செல்வன் குறிப்பிட்டுக்காட்டியது போல நானும் லங்கா காடியன் செய்தியை குறிப்பிட்டுச் சொன்னேன். எனக்கு வேறோர் ஊடகத்தில் வந்த செய்தியை மேற்கோள் காட்ட உரிமை இல்லையா? செய்தியை வைத்து என்ன வேண்டுமானாலும் ஊகியுங்கள், அது உங்கள் உரிமை.
    மேலும் எவரும் சும்மா எழுதிக்கொண்டிராமல் ஆதாரங்களை வெளியிடல் வேண்டும் .

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    அருட்செல்வன் தேர்தல் ஆணையாளர் விடுத்த அறிக்கையையே இங்கே தந்துள்ளார். ஆனால் “லங்கா காடியன்” தனது கற்பனையில் செய்திகளைப் போடுகின்றது. இரண்டிற்கும் தங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா?? உங்களுக்கு ஊகங்களும் ஆதாரம் உண்மைகள் அல்ல.

    Reply
  • msri
    msri

    நந்தா!
    நான் புலி-பக்கதனோ>ரசிகனோ இலலை. இதை இரண்டு வரிகளில் கேட்டிருக்கலாம்! எனக்கு புலி மாத்திரமல்ல. ஈழத்திற்கு புறப்பட்டவர்கள்> பின்பு ஜனநாயக நீரோட்டத்தில் நீந்தி களைத்தவர்களின் அரசியல்ல> இவர்கள் புலியை எதிர்த்து இனனொரு புலியான மகிந்தாவிற்கு முன்னால் கைகட்டி-வாய்பொத்தி அரசியலிலும் உடன்பாடில்லை. தமிழ்மக்களின் அபிலாசை வேறு இவர்களின் அரசியல் வேறு! நீர் முன்வைக்கும் யாழ்மக்கள் மீதான குற்றச்சாட்டு> பொத்தாம் பொதுவான> ஒட்டு மொத்த யாழ்மக்களின் குறைபாடல்ல. இதற்கு அப்பாற்பட்ட அடக்கி-ஒடக்கப்பட்ட மக்களின் பஞ்சம் பசி பட்டினி வாழ்வு பலரின் (உயர் இந்து-வேளாளம் என கூறி) பார்வைக்கு தெரிவதில்லை. இது உங்களின் தவறல்ல. நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடியில் பார்ப்பதெல்லாம் யாழ் பழுதென்று தெரிகிறது.

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Com of elections yesterday dispelled many stories spread by the interested parties.Pl read today’s Tamil national dailies.See how Virakesari reported this interview.It says, any body not satisfied can go to Supreme court.This is how Virakesari maintains its neutrality and independent journalism.Virakesari still trys to give a vague news to its readers.This is how the so called Tamil problem has been built up.I have done nearly 10 election duties.Other than the Jaffna district council elections in 1981,other elections were clean.Of course all the governments used the State media and other facilities.But the privat media always worked for UNP and TNA andLTTE. Pl visit to an article-Will sarath Fonseka win on 27th- in Thesamnet.I sent a forecast MR will win with a majority of more than 1 million.My analysis was there.

    Reply