ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் வாக்காளர்களும் : த ஜெயபாலன்

Karuna_Election_Campaignதற்போது வன்னி யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை அறிவித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் அரசியல் சீட்டுக்கட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக சன்னதம் ஆடியது. ஆனால் இறுதியில் ரிஎன்ஏ சம்பந்தரின் பந்தை லாவகமாக ஆடிய மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் குழு சிக்ஸரே அடித்துவிட்டது. இடதுசாரித் தலைமைகளுடன் இணைந்து ஒரு முற்போக்கு அணி ஒன்றை உருவாக்க முயற்சிக்காமல் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்கப் போகின்றோம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி தமிழ் மக்களின் அரசியலை சாக்கடைக்குள் தள்ளியது ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு. இன்று வீழ்ந்தும் மீசையில் மண்படவில்லையென கதையளக்கின்றனர்.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் ” எனத் தமிழ் மக்கள் தெரிவித்து இருக்கிறார்களாம் என்று கதையளக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பாகவே தமிழ் மக்கள் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டனர். இது காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையே. ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வீழ்ந்த வாக்குகள் மகிந்த சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழிவாங்கும் வாக்குகளே அல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ந்த வாக்குகள் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனவரி 7ல் தேசம்நெற்க்கு தெரிவித்தது போல் ‘இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும்” என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் பார்க்கையில் நாடு முழுவதும் 74 வீதமான மக்கள் வாக்களித்து இருக்கையில் யாழ் மாவட்டத்தில் 15 வீதமான மக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வீழ்ந்துள்ளது. இது தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறும் ”தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம்”  என்பதன் லட்சணம்.

சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் பொன்சேகாவுடன் இணைந்து வடக்கு கிழக்கு – இணைந்த தமிழ் தாயகம் என்றெல்லாம் றீல் விட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டாளிகள் – ஜெனரல் சரத் பொன்சேகா, யூஎன்பி, ஜேவிபி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அறிக்கைகளை வெளியிட்டனர். அது ஒருபுறம் இருக்க லண்டனில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடாத்துகிறார். இலங்கை வாழ் தமிழ் மக்கள் பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பொருளாதார மற்றும் உதவிகளை எதிர்பார்க்கின்றனரே அல்லாமல் தங்களுக்கான அரசியல் தலைமைத்தவத்தையோ அல்லது அரசியல் புத்திஜீவிதத்தையோ எதிர்பார்க்கவில்லை என்பது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் அவரது சகோதரருக்கும் இன்னும் சரிவரப் புரியவரவில்லை. இன்னும் சில புலம்பெயர் புலி ஆதரவு புலி எதிர்ப்பு புத்திஜீவிகளால் இன்னமும் தங்கள் அரசியல் அடையாளத்தை தக்க வைப்பதற்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. அதிஸ்டவசமாக மக்கள் இவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை.

Buses_on_Election_Duty_25thJan10தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான போதும் சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் ஓரளவு அறியப்பட்ட இடதுசாரி அரசியல் வாதிகளைக் காட்டிலும் சில ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். குறிப்பாக சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ன ஆகிய இடதுசாரிக் கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் எம் கெ சிவாஜிலிங்கம் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த வாக்குகளால் எம் கெ சிவாஜிலிங்கம் எவ்வித திருப்தியையும் அடைய முடியாது. குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மையின மக்கள் மாறி மாறி இனவாதத் தலைமைகளைத் தெரிவு செய்வதிலும் அவற்றுடன் கூட்டுவைத்து அரசியல் நடத்துவதிலுமே ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான அரசியல் முதிர்ச்சியும் தூர நோக்கும் அவர்களிடம் இல்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மிக மோசமான அவலத்தை ஏற்படுத்திய வன்னி யுத்தம் முடிவடைந்து சில மாதங்களுக்கு உள்ளாகவே நடைபெற்ற தேர்தலில் தங்கள் அரசியல் இருத்தலை தக்க வைப்பதை மட்டுமே கணக்கில் கொண்டு எய்தவனை நோவதா அம்பை நோவதா என்று அரசியல் பேசியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஜெனரல் சரத்பொன்சேகாவோடு வில்லுடைக்க சுயம்வரம் சென்றவர்கள் தற்போது மண் கவ்வித் திரும்பியுள்ளனர்.

MR_Poster_Jaffnaஇவர்கள் ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்சவின் தோளோடு தோள் நின்ற ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், ரிஎம்விபி மற்றும் கருணா அம்மான் போன்றவர்களுடைய அரசியலும் அம்மணமாக்கப்பட்டு விட்டது. இவர்கள் மக்களில் இருந்து வெகு தொலைவிலேயே உள்ளனர். மீண்டும் பதவிக்கு வரும்போது இவர்களின் ஆயுதங்களைக் களைவேன் என்று மகிந்த ராஜபக்ச ஒரு உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்கி இருந்தாலே மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் அதிகரித்து இருக்கும். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவேன் என அவர் உறுதியழித்து இருந்தது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, வவுனியா போன்ற தமிழ் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களுடன் உரையாடிய போது, அவர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மீது மிகுந்த அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள் பற்றிய அச்சம் அவர்களிடம் நிறையவே உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வன்னி மக்கள் எவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்துகின்றனரோ அதேயளவு வெறுப்பை ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் ரிஎன்ஏ உட்பட எந்தவொரு தமிழ் அரசியல் தலைமை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகளால் அம்மக்கள் மிக மோசமான வாழ்வை எதிர்கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகள் மீதான நம்பிக்கையீனம் பரவலாகக் காணப்படுகின்றது. தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கின்ற தகமையை இழந்துள்ளனர். இதுவே தமிழ் பிரதேசங்களின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • Kusumpu
    Kusumpu

    //இடதுசாரித் தலைமைகளுடன் இணைந்து ஒரு முற்போக்கு அணி ஒன்றை உருவாக்க முயற்சிக்காமல் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்கப் போகின்றோம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி தமிழ் மக்களின் அரசியலை சாக்கடைக்குள் தள்ளியது// தமிழர்களின் அரசியல் வரலாற்றில் என்று தமிழ் அரசியல்கட்சிகள் சரியான முடிவை எடுத்தனர். மக்கள் கொடுத்த தீர்ப்பையோ தொடந்தும் 1977ல் இருந்து தமிழீழம் ஈழம் என்று மக்களுக்கு மொட்டை அடித்தார்களே தவிர உருப்படியாக என்ன செய்தார்கள். மகிந்தவின் அரசியலுக்கும் பொருளாகதார முயற்சிக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்பது மட்டுமல்ல. புலிகளை அழித்ததும்; சிங்களத் தேசியத்தைத் தூக்கி நிறுத்தியதும் மகிந்த என்பதை யாரும் மறுக்க முடியாது. துவேசம் வேரூன்றியிருக்கும் நாட்டில் துவேசிக்கப்படும் கட்சியுடன் சேர்ந்து நிற்கும் கட்சிகளும் துவேசிக்கப்படும் என்ற ஒரு இலகுவான உண்மையை ஏன் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ளவில்லை. மாவை சொன்னார் போரை நிறுத்து என்றோம் மகிந்த ஏறிவிழுந்தாராம். அகதிகளைப்பார்க்க விடு என்றபோது மறுத்தாராம். இது உங்களுக்கு நடந்த அவமானமானமே தவிர முழுச்சமூகத்துக்கும் நடந்த அவமானமாகக் காட்ட முயற்சிப்பது தவறு. இலகுவாக கிடைக்கும் ஒரு பொருளை அடிபட்டு எடுக்க முயக்கிறது தமிழ்தரப்பு என்பது என் தனிக்கருத்து.

    சிலவேளை த.வி.மு மகிந்த பக்கம் நின்றிருந்தால் சரத் வென்றிருப்பார். உண்மையில் தவிமு சரத்தை வெல்ல வைக்க நினைக்கவில்லை என்பது தான் உண்மை. 20சதவீதமான சிறுபான்மையை விட 80சதவீதமான பெரும்பான்மையே இலங்கை அரசியலைத் தீர்மானிக்கிறது என்ற உண்மையை இத்தேர்தல் அடித்துப் பறைசாற்றியுள்ளது.

    Reply
  • kalaignar
    kalaignar

    செங்கல்பட்டு முகாமில் அகதிகள் மீது தமிழக போலீஸ் மிலேச்சத் தாக்குதல்- 13 ஈழ அதிகள் படுகாயம்

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    /….ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வீழ்ந்த வாக்குகள் மகிந்த சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழிவாங்கும் வாக்குகளே அல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ந்த வாக்குகள் அல்ல……./

    எதையோ இடிக்கப் போய் எதுவோ வருகிறதே. சிங்களவர்கள் குடும்ப ஆட்சியை விரும்புகிறார்கள், தமிழர்கள் அல்ல. சிங்களவர்கள் புலிகளின் தோல்வியை நேசித்தார்கள், தமிழர்கள் அல்ல. தமிழ், சிங்களவர்கள் மத்தியில் வேறு வேறான சிந்தனைகள், செயற்பாடுகள். ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனங்களைத் திருகுவோம்.

    Reply
  • suganthy arumugam
    suganthy arumugam

    long live interpretations…. your interpretation about the Jaffna poll …… the difference between you and IRA sampanathan is immense.he is in the ‘killing field’. First priority was to create a space to breath…he had to choose between two devils in in order to create a space…i am sure he may not be right..but he seems to be the only real politician what we have. he maintains a good rapport to other minorities..now…we need a transitional politician and a ‘transitional space’.unfortunately so far the left in the srilankan political field plays insignificant..specially non racist left are always marginalized…pure critique will not help Tamils other than the critic self..

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    தமிழ் அரசியல்வாதிகள் திரு.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள், தூர நோக்கற்ற “அன்றாடம் காய்ச்சிகள்” என்று ஒரு கருத்து வைக்கப்படுகிறது! – அதாவது “யதார்த்த குழப்பம்”. இது திராவிட நாட்டு கோரிக்கையை திராவிட இயக்கங்கள் கைவிட்ட போதும் நடந்த “டிரான்ஸ்ஷிஷனல் பீரியட்” தான். இந்தியா என்பது தமிழ்நாடு மட்டும் அல்ல. “பஞ்சாபி உடை” என்று நீங்கள் கூறுவது தென்னிந்தியாவுக்கு வர பல சகாப்த்தங்கள் பிடித்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு மிடியும், சேர்ட் இலங்கையில் இருக்கும் டும் அணிந்திருந்தவர்களிடம், “சுடிதாரும், நைடியும்” கலாச்சார அங்கமாகிவிட்டது. இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோர் தற்போது “கனடாவில்தான்” இருக்கிறார்கள், “டொரன்டோ” தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் என்கிறார்கள், இதை தவிர்த்துவிட்டு அரசியல் கருத்துக்களை எழுத முடியாது!.

    “சீக்கியர்கள்” என்பது இலங்கையரைவிட விரிவானது, ஆழமானது. இலங்கைப் பிரச்சனை துவங்கிய போது, தமிழகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், “தொப்புள்கொடி” உறவைக் கொண்டிருக்கவில்லை!. இதற்கு சிறிமாவோவின் கொள்கைகள்தான் காரணம். மலையக தமிழர்களின் கோணத்தில் பார்த்தோமென்றால் அது விலகிச்செல்லும் புள்ளியாகவே அமைந்திருந்தது. ஆனால் தற்போது, உலகின் கடைக் கோடியிலிருந்து, ஐஸ் காட்டிலிருந்து (தலைவர் முல்லைதீவு காட்டிலிருந்த போது கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு), தொப்புள்கொடி உறவு “விஜய், ரம்பா” அளவுக்கு நீண்டிருக்கிறது!. நான் உறவுகளுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் தற்போது “மற்ற சிறுபான்மையுடனான புரிந்துணர்வு உறவை ஏற்ப்படுத்தியிருக்கிறார் சம்பந்தன்” என்பது, கனடாவை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?- தெரியாது!. பக்கத்தில் இருக்கும் போது விலகிச்சென்ற “உறவுப் புள்ளிகளை” ஐஸ் காடுகளில் இணைப்பது எதற்காக. வளர்ந்துவிட்ட தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மனங்களை இணைத்ததா?, அல்லது வெறும் இயந்திரங்களை இணைத்ததா?. இதில் கேலிக்குரியது என்னவென்றால், நான் கூறிய “மூட்டை தூக்குகிறவன் உழைத்தால் மூட்டைதான் முன்னேறும் என்பது”!. குறிப்பாக இந்தியாவில் பிரச்சனை என்னவென்றால், “நடுத்தர வர்கங்களின்” ஆன்ம, ஆன்மீக பலத்தை குறைத்து, “சிந்தனையற்ற”, பணத்துக்கான “வெள்ளை காலர்” ஊழியர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது உலகமயமக்கல். இந்த “ஐ.டி. தொழிலாளர்கள்” என்பது, நடுத்தர வர்க்கத்தினை பலப்படுத்தியும் இருக்கிறது, பலவீனப்படுத்தியும் இருக்கிறது.

    “டிரான்ஷிஷனல் பீரியடுக்கு” பிறகு வந்த “தமிழ், தமிழ் என்ற டாமாரக் கும்பல்”, இந்த மத்தியதர வர்கத்தை பலவீனப் படுத்தி, சொத்துக்களை ஒரு இடத்தில் குவிக்கும் திசையிலேயே செல்கிறது. விடுதலைப் புலிகளின்? புலன்பெயர் அமைப்புகளும் இதையே செய்தன!. கலனித்துவ ஆட்சிகாலத்தில் அமைத்த முதலமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும், “அதிகாரங்களை தன்னகத்தே குவித்துக்கொண்டு” அதன் மூலம் பணம் பன்னும் வழியிலேயே உள்ளன!. இதற்கேற்ற வகையில்,”சமுதாயங்கள் வளைக்கப் படுகிறது”. இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் இதையே செய்கின்றன!. இலங்கைத் தமிழ்த் தலைமைகள், விடுதலைப் புலிகளின் வெற்றிடத்தை, அதிகார குவிப்பை, பணக்குவிப்பை, “தமிழ்,தமிழ்” என்ற போர்வையில், மாற்றீடு செய்யவே விரும்புகின்றன. இதற்கு “சீக்கிய பிரஸ்பெக்டிவ்” என்ற இந்தியாவுடனான, வியாபார உறவை “படம் காட்டுகின்றன”. மறைந்த “ரத்தினம்” என்ற, கனடாவில் வாழ்ந்த, பழைய தமிழ் எம்.பி. சாகும் தறுவாயிலும், பழைய “பிரிவியூ கெளன்சிலுக்கு” மறுபடியும் விண்ணப்பிக சொன்னார். ஏனென்றால், “கனடாவின், ஆஸ்திரேலியாவின்” மகாராணியாக தற்போதும், இருப்பது பிரிட்டிஷ் மகாராணியே என்பது!. இது கேலிக்குறியதும்?, தற்போது உள்ள நிலைமைகளை ஆராயும் போது, வரலாற்று இயங்கியலை பின்னோக்கி இழுத்து செல்வது போலாகும். இயங்கியல் என்பது முன்னோக்கிதான் நகரும், இதை யாரும் ஆரூடம் கூற முடியாது…போக,போக,பார்ப்போம்!…

    Reply
  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    தோழர்கள் .. வருத்தமடைவது புரிகிறது ..இலங்கை ஜனநாயக வழிக்கு திரும்பிட்டது. எனவே ஜனநாயக தோழர்கள்.. இலங்கையில் ஊர்வலம் போராட்டம் உண்ணாவிரதம் போன்ற ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றி ஈழதமிழர்களுக்கான உரிமையை எளிதில் பெற்று கொள்ளலாம்.. இதுதான் ஜனநாயக வழிமுறையாகும்…

    புரட்சிகர தமிழ்தேசியன் – திருவண்ணாமலை

    Reply
  • SURESH
    SURESH

    Tamil National Alliance Parliament Committee leader R.Sambanthan stated, he is prepared to function with any party which respects the minority peoples rights. A Sinhala newspaper has published a news item that in this regard the Tamil National Alliance had already had commenced discussions with Sri lanka Muslim Congress.
    He said he is prepared to conduct talks with President in regard to the minority communities’ problems. The minority people’s aspiration towards his party was revealed to the world by the concluded Presidential election was pointed out by him. To safe guard this trust, all activities would be processed with commitment was further mentioned by Sambanthan. The said Sinhala newspaper questioned Sambanthan in regard to his contest at the forthcoming Parliament election, hence such replies was given by him.—Wednesday, 03 February 2010

    Reply
  • Appu hammy
    Appu hammy

    அன்றிலிருந்து இன்று வரைக்கும் தமிழன் தமிழனை அழித்தது தான் வலராற்று உண்மை.

    Reply