சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்தியல்ல என்பதை உணர்த்தி நிற்கும் 6வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: புன்னியாமீன்

mrpr.jpgநடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 57.88 வீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். இவர் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவை விட 1,842,749 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான மேலதிக வாக்குகளைப் பெற்ற  சாதனையையும் படைத்துள்ளார். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ 16 தேர்தல் மாவட்டங்களில் அமோக வெற்றியீட்டியதுடன்,  06 மாவட்டங்களில் தோல்வியினை தழுவியிருந்தார். இந்த 06 மாவட்டங்களும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழும் மாவட்டங்களாகும். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம்,  வன்னி தேர்தல் மாவட்டங்களிலும்,  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,  திகாமடுல்லை,  திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும்,  மத்திய மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் இவர் தோல்வியடைந்தார்.

இதுகாலவரை இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துவந்துள்ளன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவானது பெரும்பான்மை இனத்தவர் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்ற உணர்வினை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலை எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

பொதுவாக பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய மாவட்டங்களிலும், தேர்தல் தொகுதிகளிலும் மஹிந்தவின் வெற்றி சுமார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன்  நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியும் இதனால் வெளிப்படுத்தப்படக்கூடிய உணர்வலைகளும் தற்போதைய மஹிந்தவுக்கு மாத்திரமல்ல எதிர்கால அரசியல் போக்குகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலையிருப்பதை இவ்விடத்தில் சிந்தித்தல் வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் விரும்பிய தலைவனுக்கோ, கட்சிக்கோ வாக்களிக்க முடியும். இதில் யார் யாருக்கு வாக்களித்தார்கள்? என்று ஆராய்வதால் எவ்வித பலனும் கிட்டிவிடப் போவதில்லை. ஆனால்,  இலங்கைப் போன்ற பல்லின மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் குறிப்பாக இனவாத சிந்தனைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இவ்விடயத்தைப் பற்றி இன்னும் தீர்க்கமான முறையில் ஆராயப்பட வேண்டியது அவசியமானதாகும்.

வெளிவந்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகத்தினர் என்றடிப்படையில் தமிழர்கள்,  முஸ்லிம்களின் அரசியல் நடத்தைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இவ்விடத்தில் நோக்குவது அவசியமானதாக இருக்கும். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தவர்களே அதிகமாக வாழ்கின்றனர். தேர்தல் முடிவுகளின் படி வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வட மாகாணம்: யாழ்ப்பாண மாவட்டம்

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  4, 611  46.19%
சரத்பொன்சேக்கா 3,976  39.88 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  53,111
அளிக்கப்பட்ட வாக்குகள்  10,321

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,712  62.68%
மஹிந்த ராஜபக்ஸ 4,247  22.73 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  63,991
அளிக்கப்பட்ட வாக்குகள்  19,436

காங்கேசந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,216  56.90 %
மஹிந்த ராஜபக்ஸ  4,559  31.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  69,082
அளிக்கப்பட்ட வாக்குகள்  14,933

மானிப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,390  62.01 %
மஹிந்த ராஜபக்ஸ  5,749  26.62 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  71,114
அளிக்கப்பட்ட வாக்குகள்  22,475

கோப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,151  64.13 %
மஹிந்த ராஜபக்ஸ  4,538  22.13%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  65,798
அளிக்கப்பட்ட வாக்குகள்  21,133

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,974  67.20 %
மஹிந்த ராஜபக்ஸ  2,545  19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  56,426
அளிக்கப்பட்ட வாக்குகள்  13,955

பருத்தித்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,585  69.30 %
மஹிந்த ராஜபக்ஸ  2,361  19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  48,613
அளிக்கப்பட்ட வாக்குகள்  12,828

சாவகச்சேரி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,599  62.39 %
மஹிந்த ராஜபக்ஸ  4,567  24.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  65,141
அளிக்கப்பட்ட வாக்குகள்  19,450

நல்லூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,543  70.42 %
மஹிந்த ராஜபக்ஸ  3,554  21.68 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  72,588
அளிக்கப்பட்ட வாக்குகள்  16,948

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 7,914  66.17 %
மஹிந்த ராஜபக்ஸ  3,296  27.56 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  64,714
அளிக்கப்பட்ட வாக்குகள்  12,414

கிளிநொச்சி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 4,717  75.11 %
மஹிந்த ராஜபக்ஸ  991  15.78 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  90,811
அளிக்கப்பட்ட வாக்குகள்  6,566

யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகளில் 10 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 113,877   இது  63.84வீதமாகும்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 721,359 ஆகும். இதில் 185,132 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 25.66 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 1.21 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். 1988, 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் முறையே 21.72.  2.97 வீத வாக்காளர்களே வாக்களித்தனர். 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 46.30 வீத வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே 82ம் ஆண்டை அடுத்து வந்த தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்கள் மிகக் குறைவான வாக்கு வீதத்திலே வாக்களித்து வருகின்றனர். முன்னைய காலங்களில் இவர்களின் வாக்களிப்புக்கு சில தடைகள் இருந்திருக்கலாம். தற்போதைய நிலையில் இம்மக்களுக்கு வாக்களிக்க விருப்பற்ற நிலையிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயக நிலையில் இது ஒரு ஆரோக்கியமான நிலையல்ல. 

தேர்தல் முடிவுகளின் படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வன்னி மாவட்டம்

மன்னார் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 20,157  70.19 %
மஹிந்த ராஜபக்ஸ  6,656  23.18 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  85,322
அளிக்கப்பட்ட வாக்குகள்  29,172

வவுனியா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 31,796  66.02 %
மஹிந்த ராஜபக்ஸ  13,742  28.53 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  1,12,924 
அளிக்கப்பட்ட வாக்குகள்  49,498

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 6,882  73.47%
மஹிந்த ராஜபக்ஸ  1,126  18.43%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  68,729
அளிக்கப்பட்ட வாக்குகள்  9,625

வன்னி மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 70,367   ஆகும்  இது 66.86வீதமாகும். வன்னி மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 266,975 ஆகும். இதில் 107,680 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 40.33 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில் மொத்தமாக 34.30 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
 
கிழக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

அம்பாறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  73,389  67.94 %
சரத்பொன்சேக்கா 32,895  30.45 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  145,479
அளிக்கப்பட்ட வாக்குகள்  108,634

சம்மாந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 27,003  55.95%
மஹிந்த ராஜபக்ஸ  19,991  41.42%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  71,442
அளிக்கப்பட்ட வாக்குகள்  48,818

கல்முனை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,946  75.76 %
மஹிந்த ராஜபக்ஸ  9,564  21.95 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  66,135
அளிக்கப்பட்ட வாக்குகள்  44,030

பொத்துவில் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 54,374  59.69 %
மஹிந்த ராஜபக்ஸ  33,979  37.42 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  131,779
அளிக்கப்பட்ட வாக்குகள்  91,862

திகாமடுல்லை மாவட்டத்தில் 04 தேர்தல் தொகுதிகளில் 03 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 153,105  இது  49.94  வீதமாகும்.  திகாமடுல்லை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 309,474 ஆகும். இதில் 306,562 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 73.54 % வீத வாக்குப் பதிவுகளாகும்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 69,975  68.74%
மஹிந்த ராஜபக்ஸ  28,090  27.59%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  1,55,537
அளிக்கப்பட்ட வாக்குகள்  1,03,685

கல்குடா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,608  60.45%
மஹிந்த ராஜபக்ஸ  20,112  34.14%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  97,135
அளிக்கப்பட்ட வாக்குகள்  60,186

பட்டிருப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 36,776  80.12%
மஹிந்த ராஜபக்ஸ   5,968  13.00%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  80,972
அளிக்கப்பட்ட வாக்குகள்  47,065

மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 146,057   ஆகும்  இது 68.93வீதமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333,644 ஆகும். இதில் 216,287 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

திருகோணமலை மாவட்ட தொகுதி ரீதியான முடிவுகள் வருமாறு

மூதூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,631  51.09%
மஹிந்த ராஜபக்ஸ  21,002  38.03%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  85,401
அளிக்கப்பட்ட வாக்குகள்  55,915
 
திருகோணமலை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,887  69.42 %
மஹிந்த ராஜபக்ஸ  13,935  26.9 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  86685
அளிக்கப்பட்ட வாக்குகள்  52748

சேருவில் தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  27,932  63.10 %
சரத்பொன்சேக்கா 15,260  34.47 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  69,047
அளிக்கப்பட்ட வாக்குகள்  44,832

திருகோணமலை மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதிகளில் 02 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 87,661 இது  54.09  வீதமாகும்.  திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 241,133 ஆகும். இதில் 152,428 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அளிக்கப்பட்ட முடிவுகளைப் பார்க்குமிடத்து இங்குள்ள வாக்காளர்களில் அனைவரும் சரத் பொன்சேக்காவுக்கு மாத்திரமே வாக்களித்துள்ளனர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மஹிந்தவுக்கும் சிறுபான்மை வாக்குகள் சென்றடைந்திருக்கும். ஆனால், மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து ஒரு தேர்தல் தொகுதியின் தோல்வி, ஒரு தேர்தல் மாவட்டத்தின் தோல்வி என்று கூறும்பொழுது தமிழ், முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஓர் உணர்வினையே ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். மஹிந்த ராஜபக்ஸ மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்றாலும்கூட, கொழும்பு மாவட்டத்திலும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியுற்றிருந்தமையும் அவதானிக்கத்தக்க ஒன்றாகும்.

இந்நிலைக்கு என்ன காரணம்? என்பதையும் அவதானித்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் வாதப்பிரதிவாதமில்லை. மஹிந்த ராஜபக்ஸ இறுதி யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி. விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஒரு ஆட்சியாளர். இந்நிலையில் மஹிந்த நிராகரிக்கப்பட்டது மக்களின் பார்வையில் நியாயமுண்டு. அதேநேரம், கடைசி யுத்தத்தை முன்னெடுத்த தளபதி பொன்சேக்கா. இவர் தளபதியாக இருக்கும்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் வந்தேறுகுடிகள் என்று பகிரங்கமாக கூறியவர். மேலும், இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே வாழவேண்டும் என்று கூறியவர். யுத்த நிலையுடன் ஒப்புநோக்கும்போது மஹிந்தவைவிட பொன்சேக்கா உயர்ந்தவர் என்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

மறுபுறமாக தமிழர்களின் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்ஸவினால் அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. அதேநேரம், பொன்சேக்கா தான் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய ஒரு தீர்வினை வழங்குவதாக எவ்விடத்திலும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

சர்வதேச ஊடகங்கள் குறிப்பாக மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அமைப்பதில் விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலமாக வெளிப்படுகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியா,  சீனா போன்ற நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான உறவின் காரணமாக மேற்குலக நாடுகள் மஹிந்த அரசாங்கத்தை பலவழிகளிலும் தாக்குதல்களுக்கு உட்படுத்தி வந்தமை அறிந்ததே. பொதுவாக இச்சக்திகள் அனைத்தும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென்பதை விரும்பியது உண்மை. இந்நிலையில் இச்சக்திகளின் தூண்டுதலுக்கு சிறுபான்மையினர் இரையானார்களா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.

இங்கு இன்னுமொரு உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதாவது,  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆளும்கட்சி சார்பாக இருந்த சிறுபான்மை அரசியல் தலைவர்கள் தமது மக்களுக்கு உரிய சேவையினை வழங்க தவறிவிட்டார்கள் என்பதையே இம்முடிவுகள் பெருவாரியாக எடுத்துக் காட்டுகின்றன. வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரியே,  முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரியே தத்தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தாம் சமூகத்தின் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட வியூகங்களும் இங்கு மக்களால் நேரடியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே,  இது விடயம் குறித்து ஆழமான பார்வையொன்றை செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சி அதிகாரத்திலுள்ள எந்தவொரு அமைச்சராலும், எந்தவொரு முதலமைச்சராலும் அவர்களின் ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தல் முடிவு வந்துமுடிந்துவிட்டது. இதனை தற்போது அலசுவதால் எவ்வித நன்மையும் பயக்கப்போவதில்லை. ஆனால்,  ஒரு உண்மையை நாங்கள் இவ்விடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையினரால் ஆட்சியை அமைக்க முடியுமென்ற ஒரு நிலை தற்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இங்கு மஹிந்தவுக்கு இந்நிலை தற்போது சாதகமாக இருககலாம்;. பெரும்பான்மை சமூகத்தினர் ஒன்றிணைய வேண்டும் என்ற ஓர் உணர்வு இனி பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் ஆணித்தரமான கருப்பொருளாக மாற்றமடையக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ஆளும் தரப்பினரால் பெற்றப்பட்ட இந்த வெற்றி எதிர்காலத்தில் எதிரணிகளின் மனங்களிலும் விதைக்கப்படமாட்டாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமுமில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை வழங்கப்பட்ட வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ பெற்ற மேலதிக வாக்குகள் அதிகமானவை. 160 தேர்தல் தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றிபெற்றார். இந்த 130 தேர்தல் தொகுதிகளில் சிங்கள மக்கள் சார்பான தேர்தல் தொகுதிகளே அதிகம். அவர் தோல்வியடைந்த 30 தேர்தல் தொகுதிகளுள் சிறுபான்மை செரிவு அதிகம்.

இத்தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொண்டு இதன் பிற்பாடாவது முஸ்லிம்,  தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களுக்காகவும்,  சமூகத்துக்காகவும் உண்மையான சேவையினை ஆற்ற முன்வர வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். தமது மக்கள் என்றும் கற்பனையுலகில் வாழத் தயாரானவர்கள் அல்ல என்பதை இவர்கள் ஆழமாக தமது மனங்களில் பதித்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் எமக்கு இத்தனைப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். மாகாணசபையில் எமது சமூகத்தை இத்தனைப் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அமைச்சரவையில் எமக்கு இத்தனை அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்று கூறிக் கொள்வதால் சிறுபான்மையினராகிய எமக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. எண்ணிக்கை முக்கியமல்ல,  செயற்றிறன்மிக்க தலைமைத்துவம் தான் இன்றைய சமூகத்தின் முக்கியத்துவம். வாக்காளர்களை என்றும் ஏமாற்ற முடியாது.

இத்தேர்தலால் ஏற்பட்ட வடுக்கள் நிச்சயமாக பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது. இது சடுதியாக ஏற்படாவிட்டாலும்கூட,  ஒரு நீண்ட கால அடிப்படையில் அத்தகைய உணர்வுகள் ஏற்படும். அதற்கான வழியினை இத்தேர்தலில் நாங்கள் காட்டிவிட்டோம். இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவின் எதிரொலியினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் அவதானிக்க முடியும். மஹிந்தவின் இலக்காகக் காணப்படுவது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதே. தற்போதைய தேர்தல் முடிவுகளை ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அந்நிலை உருவாகக் கூடிய சாத்தியம் கணிசமான அளவிற்கு இருக்கின்றது. இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்த சிங்கள வாக்காளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இதைவிட ஒரு ஒன்றிணைப்பைக் காட்டலாம்.

யதார்த்த நிலைகளை தமிழ் மக்களும், சரி முஸ்லிம் மக்களும் சரி உணர்ந்து கொள்ளாவிடின் அல்லது இந்தத் தேர்தல் உதாரணங்களை படிப்பினையாக எடுத்துக் கொள்ளாவிடின் எதிர்காலம் மேலும், மேலும் ஐயப்பாடுமிக்கதாக மாறும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நாம் விமர்சிக்கலாம் ஆனாலும், இவர்களின் குரல்களுக்கு வாக்காளர் மத்தியில் ஒரு மதிப்பு உண்டு என்பதை எம்மால் ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது. எனவே இக்கட்சியினரும் தமது சுயநல நோக்கங்களைக் கைவிட்டுவிட்டு தமது சமூக நலனின்பால் உண்மையானதும்,  யதார்த்த பூர்வமானதுமான ஒரு நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளது. இதனை நாம் ஒவ்வொருவரும் நன்கு ஆலோசித்து சமூகத்தின்பால் உண்மையான நோக்குடன் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். 

மேலதிக வாசிப்புக்கு..

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மையினத்தினரே. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது…? – பீ.எம். புன்னியாமீன் –
http://thesamnet.co.uk/?p=18803

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • Ragi
    Ragi

    Well said,

    I guess, the best way to go forward may be ,

    In the General election , TNA may announce that they will work together with any party who wins the election and should serve the people as well.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Instead of waging a good political and ideological fight, the combined forces of the Opposition – the centre-right United National Party, the ultra-left Janatha Vimukthi Peramuna, the minor league Sri Lanka Freedom Party (Mahajana wing), and the pro-LTTE Tamil National Alliance — showed appalling political judgment in lining up behind a candidate whose agenda for change was so vague, so empty-headed, and so self-contradictory that it made no political sense and, in fact, damaged the credibility of his sponsors. It is by no means clear that a serious UNP candidate like Ranil Wickramasinghe would have fared worse than General Fonseka, who is not even a registered voter, in a presidential contest. After this drama, politics in the island can return to a more normal state ahead of parliamentary elections, which are due in April 2010. The hope is that the campaigning will be on real issues, most importantly, a just and sustainable political solution to the Tamil question based on genuine devolution of power within a united Sri Lanka, and revitalisation and development of the war-ravaged areas of the North.

    Thanks to The Hindu.

    Reply
  • மாயா
    மாயா

    தமிழர்களது வாக்குகளை போட விடாது செய்ததன் மூலம் , மகிந்தவை ஜனாதிபதியாக்கியது புலிகள்தான். அது புலிகள் செய்த வரலாற்று தவறுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். தற்போதும் அதுபோன்ற தவறுக்கு புலிகளும் , தமிழ் கட்சிகளும் பரப்புரைர செய்தன. அது மகிந்தவை தோற்கடிப்பதற்காக. அதுவே பெரும்பான்மை சிங்கள மக்களை ஒன்றிணைத்து வெற்றி பெற வழி செய்துள்ளது. இது இனி தமிழர் வாக்குகள் முக்கியமானவை அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது. அதை அன்றைய எஸ்.டப்ளியூ.பண்டாரநாயக உணர்ந்து, தமது அரசியல் பிரவேசத்தினூடாக செய்தார். அன்றைய அடித்தாளம் இன்று கட்டுமானமாகியுள்ளது.

    அன்று இதுபோன்ற ஒரு யுத்தம் இருக்கவில்லை. ஆனால் இன்று போராட்டம் தோற்கடிக்கப்பட்டு , புலிகள் என்ற சக்தி அழிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தமிழர்கள் சரத் பொண்சேகாவுக்கு அழித்த வாக்குகள் காரணமாக பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை சமூகத்தை ஏறெடுக்த்துப் பார்க்காத ஒரு நிலை மகிந்த அல்லது ஏனைய சிங்கள கட்சிககளின் சிந்தனை மாற்றம் ஒன்றை உருவாக்கலாம். இத் தேர்தலில் மகிந்தவுக்கு ஓரளவு தமிழழர் வாக்குகள் கிடைத்தே இருக்கின்றன. தமிழர் வாக்குகள் கிடைக்கவில்லை என சொல்லிவிட முடியாது. இதை மகிந்த , தனது சாணக்கியமாக இம்முறை கிடைத்த ஜனநாயகத்தை விரும்பும் மக்களால் , ஐசுமுண்ணனிக்கும் , ஐதேகட்சிக்கும் கிடைத்த வாக்குகள் என்று சொல்லியிருக்கிறார். அதை அவர் , சிங்களவருக்கு எதிரான வாக்குகளாக காட்டிக் கொள்ளவில்லை. அதுவும் தமிழ் கட்சிகளுக்கும், இனவாதத்தை தொடரத் துடிக்கும் தமிழருக்கு அடித்த சாவு மணியே ஆகும்.

    அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் கூட , சிங்களவரை குசிப்படுத்தி வாக்குகளை பெறும் நிலை முண்ணனி வகிக்கலாம். அதற்கான தளத்தை தமிழர்கள் போட்டுக் கொடுத்துள்ளார்கள். இங்கும் 3ல் 2 பெருமான்மை இல்லாமல் மகிந்தவால் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என பிதட்டுவோர் இருக்கின்றனர். இந்த 3ல் 2 யாருக்கு தேவை? தமிழருக்கான விடிவொன்றைக் கொண்டு வரவே இது தேவை. அது இல்லாமல் போவதால் , சிங்களவருக்கு கேடு எதுவும் இல்லை. அவர்கள் ஆட்சி செய்து விட்டு போவதற்கு , அவர்களது வெற்றி போதுமானது. நாம் இங்கும் ஒதுக்கப்படுவோம்.

    இது மீண்டும், யுத்த சூழ்நிலையொன்றை உருவாக்கும் என நினைப்பது கானல் நீர்க் கனவு போன்றது. சிங்கள மக்கள் (மோட சிங்களயா), தமிழரை விட புத்திசாலிகள் ஆகி விட்டனர். புத்திசாலித் தமிழர் புத்தி பேதலித்தவர்கள் (மொக்கு தமிழர்) ஆகியுள்ளனர். இதனால்தான் தமிழர்கள் மாற்றம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என, புலிகளை அழித்த தளபதிக்கே வாக்களித்துள்ளனர். இங்கே எல்லாம் ஒன்றுதான். ஆனால் தமிழர் பிரிவுகள் மட்டும் கண்கூடாக தெரிந்து ஒன்றுமை என்ற வார்த்தைகள் சும்மா என உம்மா காட்டியுள்ளது. சரத்தோடு , ஏற்படுத்தப்பட்ட சம்பந்தனின் கூட்டு சிங்களவரை இன்னும் ஐக்கியயப்பட வைத்து, கூத்தமைப்பை கோமாளிகளாக்கியுள்ளது. தென் இந்திய அரசியல்வாதிகளை நோக்கி சொன்ன ” அரசியல் கோமாளிகள்” என்ற வார்த்தை கூட்டணிக்கும் அதிகம் பொருந்தும். அதை சரத் சொல்லும் காலம் தொலைவில் இல்லை. அதற்கு முன் சரத் நாட்டை விட்டு வெளியேறலாம்? பாராளுமன்ற தேர்தல் வரை , சரத் இருக்கப் போவதில்லை. இருந்தாலும் ஏனைய கட்சிகள் இவரது தலைமையில் போட்டியிடப் போவதில்லை.

    கையில் கிடைத்ததை வாயில் போட்டுக் கொள்ள தெரியாத தமிழினம் , தலை குனிந்து நிற்பதற்காக தமிழர் தலைமைகளை தமிழர்கள் ஒதுக்கும் நேரம் உருவாகியுள்ளது என்பதையே இத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதை வெல்ல மாற்று சிந்தனை கொண்ட சிலர் உருவாகுவார்கள். அதுவரை பழசுகளுக்கு ஓய்வு கொடுப்போம். அதுவே இன்றைய தமிழினம் செய்ய வேண்டியது.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    மகிந்தா ரனில் சரத் போன்றோர் ஏதே ஒரு புள்ளியில் சந்திக்கும் நிலையை வைத்திருக்கிறார்கள் இவர்கள் எல்லோரினதும் கூட்டாகவே இந்த தேர்தலை நாம் அவதானிக்க வேண்டும்

    கடந்த கால வரலாற்றில் புலிகளை துண்டாடிய பெருமை ரனில் விக்கிரமசிங்கவுக்கு. பின்னர் ரனில், தான் ஜனாதிபதி தேர்தலில் முன்னிக்காது தனது கட்சி சார்பில் தமிழர்களை புலிகளை அழித்த முக்கிய படைத்தளபதியை நிறுத்தி புலிகளின் அழிப்பில் தனது பங்கான 50 சதவிகிதத்தை பேணிக்கொண்டார். அதிலும் இம்முறை புலிகளை அழித்த சரத்தை புலிகளின் வெளிநாட்டிலுள்ள கோமாளிகளின் ஆதரவையும் பயன்படுத்தி (வியன்னா மாநாடு – சூரிச் மாநாடு லண்டன் ரி ஜ சி சந்திப்புக்கள்) புலிகளை அழித்த சரத்திற்கு வாக்களித்து ஆதரவளித்தின் மூலமே தமிழர்களின் ஒப்புதலை அரசுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

    இனிமேல் தமிழர்கள் என்ன முகத்துடன் தமிழர்களை அழித்த அரசு அல்லது சரத் என்றும் மகிந்தா என்றும் சத்தம் போடுவார் மகிந்தாவிற்கு எதிராக வாக்களித்து தமிர்களை சாந்தப்படுத்தும் ஒரு திட்டமாகவும் இதை பார்க்க வேண்டும்.

    சிறுபான்மையினர் கட்சிகள் இனிமேல் தேர்தலில் நிற்கும்போது வாக்களிக்க முன்வருவோர் மிகவும் குறைவான நிலையை உருவாக்கியுள்ளது இது சிறுபான்மைக்கட்சிகளின் பலமிழக்கவைத்துள்ளது தமிழர்கள் வரலாற்றிலேயே சிறுபான்மை தொகையினர்தான் வாக்களிப்பவர்கள் என்றாலும் பெரும்பான்மையினர் தமக்கும் இந்த இயக்க அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற கலாச்சாரத்ததை தோற்றுவித்துள்ளது. இது புலிகளால் சகோரத இயக்கங்களின் மீதான பயங்கரவாத செயல்களிலிருந்து இந்த மனோ நிலை ஆரம்பமாகியுள்ளது.

    மகிந்தாவின் வெற்றிக்கு இந்தியா எல்லாவழிகளிலும் திட்டம் போட்டுள்ளபோதிலும் குறிப்பாக சம்பந்தர் ரிஎன்ஏ மூலமே கடைசிககால துருப்புச்சீட்டை பாவித்துள்ளது. சம்பந்தர் ஏதே முடிவு எடுக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொண்டு திரிகிறார் சுவிஸ் வியன்னா என்று ஓடுறார் புலிகளை சந்திக்கிறேன் என்று சொல்லுறார் ஆனால் ஒன்றும் முடிவாக சொல்லுகிறார் இல்லையே என்று பல ரிஎன் ஏ உறுப்பினர்கள் திண்டாடினர். பின்னர் தமிழ் காங்கிரஸ் தானாக முடிவு எடுத்ததும் ரெலோவினர் உட்பூசல்களை கிழப்பியதும் சம்பந்தர் தான் ரிஎன்ஏயை விட்டு வெளியேறிவிடுவேன் என்று மிரட்டியதும் (இதே போல சந்திரிகா காலத்தில் கட்சிக்குள்ளே நடாத்தியுள்ளார்).. சம்பந்தர் இதற்கிடையில் அடுத்து 3 நாட்களை இழுத்தடித்து வந்து சரத்துக்க ஆதரவு என்கிறார் சரத்திடம் எமக்கு உடன்பாட வந்துள்ளது என்கிறார் பின்னர் இல்லை என்று மறுக்கிறார் சரத் சம்பந்தர் உடன்படிக்கை என்று செய்திகள் பின்னர் இல்லை என்று செய்திகள்

    இது மகிந்தாவின் முக்கிய துருப்பு சீட்டாகிறது இந்த சரத் தமிழர்க்கு ஏதோ கொடுக்கப்போகிறார் என்றதும் இறுதி 3 நாட்களுக்குள் மகிந்தா ஆதரவு உயர்கிறது.

    சம்பந்தர் ஏன் இழுத்தடித்து இந்த சரத் ஆதரவு கருத்தை வெளியிடுகிறார் சம்பந்தருக்கு பின்னால் யார்? தமிழ்மக்கள் நலனா? எந்த ஆதிக்கசக்திகளின் நலன்? வெளிவருமா?

    Reply
  • Amer
    Amer

    the president and may be the Parliment election can be elected by majority no need to worry the minority voters: the situation araised in SRILANKA

    Reply
  • sumi
    sumi

    பூனையாலும் யானையின் பசியை தீர்க்க முடியாது, யானையாலும் ஒரு பூனையின் பசியை தீர்க்க முடியாதென்பதை யானையும் பூனையும் உணர்ந்தால் மட்டுமே இருவரினதும் பிரச்சினைக்கும் முடிவு கிடைக்கும்.

    Reply
  • kalaam
    kalaam

    ஆசிரியர் புன்னியமீனின் ஆய்வு சரியானது என்றே கருதவேண்டியுள்ளது.

    கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பெரும்பான்மையாக ஆதரிக்கும் விருப்புள்ளவர்கள்.அதற்கான அடிப்படைக் காரணம் தாம் ஆழமாக நேசித்த ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபும்> அவரது திடீர் மரணம் ஏற்பட்ட விதமும் அம்மக்களை மு.காவை விட்டுப் பிரிவதற்குத் தடுக்கிறது. ஆகையால்> ‘அக்கட்சியின் தலைவராக யார்தான் வந்தாலும் மக்கள் மு.காவுக்கே வாக்களிப்பர்’ என்பது இன்றைய கிழக்கு கிராமத்தின் வாலயமான மொழியாகிவிட்டது.

    இந்த உணர்வைப் பயன்படுத்தி ஜனாப் ரவூப் ஹக்கீமும் அவரது கூட்டாளிகளும் தமது சொந்த அபிலாஷைக்கே இடமளித்து வருவதனால்> அவரது அரசியல் வாழ்வும் விரையிவில அஸ்தமித்துவிடப் போகிறது. காரணம்> அவர் மக்களை – அப்பாவி அறியாத மக்களை – ஏமாற்றுவலதால்> எல்லாம் அறிந்த இறைவன் அவரை ஏமாற்றிவிடுவான்.

    எனவே> முஸ்லிம் சமூகதத்திலுள்ள படித்தவர்களும்>புத்திஜீவிகளும் வெறுமனே தலைநகரில் குடியிருந்துகொண்டு அபிப்பிராயம் சொல்வதை விடுத்து> ஆக்கபூர்வமான காய்தல் உவத்தலற்ற ஆய்வுரீதியான முடிவுகளை மக்களுக்குச் சொல்வதோடு> ஜனாப் ஹக்கீமுக்கும் தெளிவை ஏற்படுத்த வேண்டும். இன்றேல்> அனைவரும் எதிர்வரும் தேர்தலிலும் வருந்த நேரிடும். இதே நிலைதான் தமிழ் சமூகத்துக்கும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Reply
  • NANTHA
    NANTHA

    திரு. அஷ்ரப் அவர்களை நேரடியாக தெரிந்தவன் என்ற வகையில் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்.

    அஷ்ரப் எப்போதும் “தமிழ்” என்பதற்கு முன்னிடம் கொடுத்த ஒரு மனிதன். ஆனால் இன்று முஸ்லிம் என்ற மத வாதம் தலை தூக்கியுள்ளது. அது “முஸ்லிம்களையும் தமிழர்களையும்” தூஷித்த பொன்சேகாவிடம் சரணடைய வைத்துள்ளது. அஷ்ரப் எப்போதும் “கொழும்பு” அல்லது கிழக்கு மாகாணத்திட்கு வெளியே உள்ள முஸ்லிம் தலைமைகளை நிராகரித்தவர்.

    அஷ்ரப் அவர்கள் எப்போதும் வட கிழக்கு முன்னேற்றம் பற்றி சிந்தனை செய்தவர். இன்று அவர் உயிருடன் இருந்தால் கண்டிப்பாக மகிந்தவை ஆதரிப்பார் என்றே நம்புகிறேன்.

    Reply