சமாதான முறையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமது அரசுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலாளர் பிலிப்கிரவ்லி தெரிவித்துள்ளார். இலங்கையில் 70வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தமை இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துகின்றது எனவும் இதனையிட்டு தான் மகிழச்சியடைவதாகவும் தெரிவித்தார்;.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிலிப்கிரவ்லி மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறுசிறு சம்பவங்கள் தவிர பொதுப்படையாக நோக்குமிடத்து இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்றதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதித் தெரிவு குறித்து எவ்வித பிரச்சினைகளும் தமக்குள் எழவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.