யாழ்.மாவட்ட மக்கள் வாக்களிக்க மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் தேர்தல் ஆணையாளரிடம் சம்பந்தன் கோரிக்கை

sampanthar.jpgயாழ். குடாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் இச்சம்பவங்களால் யாழ்.மாவட்ட வாக்களிப்பு பாதிக்கப்பட்டால் அங்குள்ள வாக்காளர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமான முறையில் பயன்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தேர்தல் ஆணையாளருக்கு பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளனர். மூன்று சம்பவங்கள் குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது; யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பல பகுதிகளில் செவ்வாய் காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவங்களினால் சிலர் பாதிக்கப்பட்டனர் என்று சொல்லப்படுகின்றது. வாக்காளரிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி நியாயமானதும் சுதந்திமானதுமான தேர்தலை தடுக்கும் திட்டமிட்ட நோக்குடன் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைவரம் யாழ்ப்பாண வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்க முடியும். யாழ்.தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் தங்களுக்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய அக்கறையுள்ள குழுக்களே இக்குண்டு வெடிப்புச் சம்பவங்களை மேற்கொண்டன என்பது வெளிப்படை. இவை குறித்துத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இவ்வாறான சம்பவங்களால் யாழ்.மாவட்ட தேர்தல் வாக்களிப்பு பாதிக்கப்பட்டால், யாழ் வாக்காளர்கள் சுதந்திரமாகத் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவது முறைப்பாடு, வவுனியாவில் உள்ள ஆனந்த குமாரசாமி முகாம் மற்றும் வலயம் 2 முகாம் ஆகியவற்றின் வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்காதது பற்றியதாகும்.

அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முகாம்களுக்கு வெளியே காலை ஏழு மணியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு பஸ்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு நிற்பதாக வவுனியா ஆனந்தகுமாரசாமி முகாம், வலயம் இரண்டு முகாம் ஆகிய வற்றைச் சேர்ந்த வாக்காளர்கள் முறையிட்டுள்ளனர். அவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என்று தேர்தல் செயலகமும் வவுனியா அரச அதிபரும் உறுதியளித்திருந்தனர். இரண்டு பஸ்கள் மூலம் 140 வாக்காளர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். 3000 வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்கான பஸ்கள் நண்பகல் 12 மணி வரை சென்றடையவில்லை. இதனால் காத்து நின்ற வாக்காளர்கள் முகாம்களுக்குத் திரும்பியுள்ளனர். உங்களுடன் வவுனியா அரச அதிபருடன் இவ்விடயம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.வாக்காளர்களை முகாம்களுக்குச் சென்று பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுமென எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவ் பஸ்கள் உரிய நேரத்துக்கு சென்று பெருந்தொகையான வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு சரியான நேரத்தில் விடுவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாக்காளர்கள் வாக்களிக்க சட்ட பூர்வமான உரித்துடையவர்கள். இவர்கள் இன்று வாக்களிக்க முடியாது போனால் தேர்தலின் இறுதி முடிவை அறிவிக்கும் முன்பதாக இவ்வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்.

மூன்றாவது முறைப்பாடு வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கிரனேற் தாக்குதல் பற்றியதாகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்த போது இரண்டு கிரனேற்றுக்கள் வீசப்பட்டுள்ளன. இதனால் வாக்களிப்பு பாதிக்கப்பட்டது. வாக்களிப்பு தங்களின் வேட்பாளருக்கு சாதகமாக இல்லை என்பதை தெரிந்து கொண்டவர்களே வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இத்தாக்குதலை மேற்கொண்டனர் என்பது வெளிப்படை. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலே தேவை எனவே இது குறித்து ஒழுங்கான விசாரணை நடத்தி முறையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று மூன்றாவது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • Rohan
    Rohan

    பட்டது பட இருப்பதுமே போதும் ஐயா.

    தனது நன்மைக்காக ஆட்சி மாற்றத்தில் நம்பிக்கை வைத்து சரத்துக்கு வாக்களித்தான் தமிழன். புத்திசாலித் தமிழன் போய் இம் முறை போய் மகிந்தவுக்குத் தான் வாக்களிப்பான்.

    ஏனையா மூக்கை உடைத்துத் தான் ஆவேன் என்று நிற்கிறீகள்?

    Reply
  • puligesi
    puligesi

    ரொகான், ஐயா சொல்லுறது தான் சரி.
    நாங்கள் மகிந்த பக்கம் என்றதை உறுதிப்படுத்த இது ஒரு சந்தர்ப்பம்.

    Reply
  • Ra.ruban.
    Ra.ruban.

    சம்பந்தர் தான் சனத்தின்ர யாழ் புத்திஜவியளோடு கலந்து களநிலைமை அறிஞ்சுதான் சரத்துக்கு ஆதரவளிச்சதா சொன்னவர். பிறகு இப்ப ஏதோ தாங்கள் சொல்லித்தான் சனம் வோட்பண்ணினதா மேலயும் கீழயும் எம்பிக்குதிக்கிறார்.

    Reply
  • london boy
    london boy

    தேர்தல் சுமுகமாக நடந்ததாக தேர்தல் ஆணையாளர் மட்டுமல்ல ரணிலும் கூட சொல்லிப்போட்டார். திரும்ப வாக்கெடுப்பு நடக்காது என்று சம்பந்தருக்கத் தெளிவாகத் தெரியும்

    தமிழர்க்கு இவர்தான் சரியான ஜனாதிபதி என்று சம்பந்தன் சரத்தைக்காட்ட அவரோ தோற்றஅடுத்த நாளே நாட்டை விட்டு ஓடுறன் என்று அறிக்கை விடுகிறார்.

    மும்மூர்த்திகளும் மீசை மண்ணைத் தட்டிப் போட்டு தமது இருப்பைக் காட்டுவதற்காக ஏதாவது இடக்காக சொல்லிக்கொண்டு திரியவேண்டும் என்பதற்காக இப்படியான முட்டாள்த்தனமான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பாங்கள்.

    மூக்குடைபட்ட சூரிச் வியன்னா புத்திசீவிகளும் வெளிநாட்டில் தமது இருப்பைக் காட்டுவதற்காக புதிதாக ஒரு சுத்துமாத்தைக் கண்டு பிடித்து பெருஞ்செலவில் கூட்டமொன்றை ஒழுங்குசெய்து சம்பந்தரை அழைக்கும்வரை அவர் இப்படி தொடர்ச்சியாக ஏதாவது பிரளி பண்ணிக் கொண்டேயிருப்பார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // சம்பந்தர் தான் சனத்தின்ர யாழ் புத்திஜவியளோடு கலந்து களநிலைமை அறிஞ்சுதான் சரத்துக்கு ஆதரவளிச்சதா சொன்னவர். பிறகு இப்ப ஏதோ தாங்கள் சொல்லித்தான் சனம் வோட்பண்ணினதா மேலயும் கீழயும் எம்பிக்குதிக்கிறார். //

    ஆனால் தீபம் தொலைக்காட்சியில், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பிரித்தானியாவில் இன்று இருக்கும் ஜெயானந்தமூர்த்தி, வெளிநாட்டில் தம்மை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கும் சில தமிழர்களின் அழுத்தங்களினால்த் தான், சம்மந்தர் சரத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை எடுத்தாரென்று கூறியுள்ளாரே……….

    Reply
  • saraniyan
    saraniyan

    தேர்தல் வேளையில் மக்கள் தமது வாக்குரிமையை ஐயமின்றிப் பயன் படுத்தவதற்காக சரத்துக்கும் கூத்தமைப்புக்குமான ஒப்பந்தத்தை விளாவாரியாகச் சொல்லி வைத்த நேர்மையின் சின்னம் சம்பந்தன் தேர்தல் நேர்மை பற்றிப் பேசும் மிகவும் சுத்தமானவர்.

    வடக்குக் கிழக்கில் விழுந்த வாக்குகள் சரத்துக்கோ மகிந்தவுக்கோ தேசிய அரசியல் கட்சிகள் சுட்டிக் காட்டிய தலமைகளுக்கு விழுந்தவை. எனவே இவர்களுக்கு நாடி விழுந்துவிட்டது. இனிமேல் தமிழ் தமிழ் என்று சனத்தை சூடாக்கி முதலில்லாமல் உழைக்க இருந்த சந்தர்ப்பம் அம்போ ஆகிவிட்டது. தேசியக் கட்சிகளுள் மக்கள் இணையவும் உள்வாங்கப்படவும் போகிறார்கள்.

    நாடாளுமன்றத்தை அவசரமாகக் கலைத்தால் பென்சனும் இல்லை எல்லாம் சிக்கல் தான். மானம் ரோசம் என்ற மனித உணர்வுகள் ஏதும் இல்லாத ஜென்மங்கள் இனியும் வாய் திறந்து பேச அறிக்கைவிட மக்கள் மத்தியில் வருவது உண்மையில் எமக்கு வேதனையாகவுள்ளது.

    Reply
  • sekaran
    sekaran

    அன்பின் வடகிழக்கின் தமிழ் மக்களுக்கு எழுதுவது: இந்த முறை சரத்துக்கு சிங்கள மக்கள் அமோகமாய் முடி சூட்டி மகிழ்வார்கள் என்கிற நினைப்பில் நீங்களும் செய்யப்போய்…. கண்ராவி! அதை விடுங்கள். எப்போதுமே நாம் சொந்தமாய் சிந்தித்ததில்லை. நம்மை விட சிங்கள மக்களுக்கு பகுத்தறிவை ஆண்டவன் கூடுதலாய் கொடுத்திருக்கிறார், என்ன செய்ய? ஆனாலும் ஆண்டவன் நல்லவர். இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இன்னும் தானா தேயன்னா பிளஸ் புலம் பெயர் சொந்தங்களின் கதைகளை நம்பி தேர்தல் நாளில் (வீட்டுக்குள்ளே பதுங்கியிருந்து வீண் கதை பேசாமல்) கூட்டமாய் போய் வோட்டுப் போடுங்கள். குறிப்பிடப்பட்டவர்கள் எப்படியோ பிழைத்துக் கொள்ளுவார்கள். நீங்கள் தான் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யவேண்டும். ஒன்று வெல்லவேண்டும். தோற்றுவிட்டால் எதிரி கையை அல்லது காலைப் பிடித்தாவது நின்று பிடிக்க நினைக்கவேண்டும். முதலில் உயிர் வாழவேண்டும். நல்ல திடகாத்திரம், மனம் வேண்டும். மற்றதெல்லாம் அதுக்குப் பிறகு தான். இன்றைய நிலையில் யாருக்குப் போடவேண்டும் என்று உங்களுக்கு ஆண்டவன் ஒரு டிப்ஸ் கொடுத்திருக்கிறார். பேயோடு தான் நம் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அதுக்காக பூசாரியிடம் போய் புலம்புவதை விட, நேரடியாய் பேயுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுவது புத்திசாலித்தனம். விட்டு விடாதீர்கள். கடைசி சான்ஸ்.

    Reply
  • BC
    BC

    சேகரன், சுவையான கடிதம். இலங்கையில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையோருக்கு இக் கடிதம் பயனுள்ளதாக இருக்கும்.

    Reply
  • palli
    palli

    // பேயோடு தான் நம் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. // உன்மைதான் சந்தேகமே இல்லை;

    // ஆண்டவன் நல்லவர்::// அதுதான் தெரியுமே; அதனால் தான் மீண்டும் ஆள வந்துள்ளார்,

    நம்மை விட சிங்கள மக்களுக்கு பகுத்தறிவை மட்டுமல்ல வாழ்வையும்தான் ஆண்டவன் கூடுதலாய் கொடுத்திருக்கிறார்,
    //ஆண்டவன் ஒரு டிப்ஸ் கொடுத்திருக்கிறார். ::// வன்னி மக்களையும் முகாம்களையும் தானே சொல்லுறியள்;

    //எப்போதுமே நாம் சொந்தமாய் சிந்தித்ததில்லை.// யார் விட்டா அதுக்கு தமிழ் ஆண்டவர்கள் அப்படி பளக்க படுத்தி போட்டார்கள் போலும்;

    அடிக்கடி கடிதம் போடுங்கோ; மக்கள் எதிர்பார்ப்பார்கள், அதுசரி ஆண்டவர் தெரியும்; பூசாரியும் தெரிகிறது; ஆனால் இந்த பேய்தான் யாரென
    தெரியவில்லை, ஏதாவது டிப்ஸ் தரபடதா???

    Reply
  • மாயா
    மாயா

    பல்லி உங்கள் வேதனை புரிகிறது. உங்களைப் போன்றவர்களுக்கு இது சமர்ப்பணம்.

    இனவாதத்தையோ வீணான கலவரங்களையோ தூண்டும் வகையில் எவரும் செயற்படக் கூடாது, ஊடகங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஜனாதிபதி……….thenee.com/html/290110-4.html

    Reply
  • NANTHA
    NANTHA

    அதுதானே பாராளுமன்றத் தேர்தல் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளாரே. பின்னர் என்ன வேண்டுதல்? “தமிழ்” என்று புலம்பி பாராளுமன்றம் போவதன் மூலம் கிடைக்கும் சவ்பாக்கியங்கள் கிடைக்காது என்ற பயம் வந்து விட்டதோ? டிப்லோமடிக் பாஸ்போட் போன்ற வசதிகள் இல்லாது போனால் “தமிழர்” பிரச்சனை பற்றி இந்திய தலைவர்களுடன் ஆலோசனை என்று இந்தியா போய் “மனைவி, மக்களின், சேமநலன்கள். புலிகளின் நிதியால் இந்தியாவில் வாங்கிய வீடுகள், கடை கண்ணிகளை” பார்க்க முடியாது போய் விடும் என்ற பயமா?

    பயப்பட வேண்டாம். தமிழர்கள் ” சரத்துக்கு ஏன் வாக்குப் போடச் சொல்லி கேட்டீர்கள் என்று கேட்டு உங்கள் வாயை அடைக்க மாட்டார்கள். அதே வேளையில் மீண்டும் உங்களுக்கு வாக்கு போடவும் செய்வார்கள். அறுபது வருடங்களாக உங்கள் பேச்சை கேட்டு “ஆடியே” பழக்கமான தமிழர்கள் அப்படி திடீரென்று மாறிவிட மாட்டார்கள்.

    ஆனால் உங்களுக்கு “இந்தியா” அல்லது வேறு நாடுகளுக்கு போய் “தமிழ் பிரச்சனை” பற்றி அறிக்கையும் விடலாம். ஆனால் பாராளுமன்றத்தில் “பதில்” மாத்திரம் சொல்ல வேண்டியிருக்கும். அது கண்டிப்பாக ஒரு “அலைச்சல்” பிடித்த அலுவலாகவே இருக்கும். இனி பாராளுமன்றத்துக்கு “லீவு” கேட்டு அடிக்கடி விண்ணப்பம் செய்து மூக்குடைபட வேண்டியிருக்கும்!

    இன்னொரு “ஈழக்” கோஷ்டியான “ஆள் கடத்திகளும்”, கடல் கடந்த ஈழம் கோஷ்டிகளுக்கும் சில்லறை சேர்க்க வழியில்லாது “இடியப்ப” வியாபாரம் செய்ய “சேர்த்த” பணத்தை முதலீடு செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளது

    Reply
  • மாயா
    மாயா

    நந்தா, “தமிழ் அரசியல்வாதிகள் , தமது மக்களுக்காக ( குடும்பத்துக்காக) சிங்கள அரசியல்வாதிகளை நச்சரித்த அளவு, தமிழ் மக்கள் தேவைகளுக்காக நச்சரித்ததில்லை ” என பசில் ராஜபக்ஸ பகிரங்கமாக நக்கல் விட்டிருந்தார். இனியும் இவர்களை நம்புவோர் கண்ணிருந்தும் குருடர்கள்தான்.

    Reply
  • Ajith
    Ajith

    Sampathan’s decision is right to support Fonseka. It is a protest vote against Rajapakse regime and its allies like Douglas and Karuna.Otherwise, Douglas and his military wing used that opprtunity show that they are the tamil peoples choice and tamil people are behind the brutal dictator and under world gangs. It was a good lesson for Rajapakse supporters. The message is clear. Our land is not under the sinhala rule and LTTE are the sole representatives of tamils.

    Reply