இரண் டாவது முறையாகவும் தம் மீது நம்பிக்கை வைத்து நாட்டு மக்கள் பெற்றுத்தந்த இந்த அமோக வெற்றியையிட்டு தமது மகிழ்ச்சியை தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
தீவிரவாதத்தை தோற்கடித்தபின் நடைபெறும் முதலாவது தேசிய தேர்தல் இதுவாகும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து மக்களும் பயமோ சந்தேகமோ இன்றி இந்த தேர்தலில் பங்கெடுத்துள்ளனர்.
இப்போது நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம். இந்த நாட்டு மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை உலகத்துக்கே நிரூபித்த வெற்றி. நாட்டை நேசிக்கும் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய வெற்றி. உண்மையான வெற்றி பிறப்பது தோல்வி இல்லாத நிலையிலேயாகும். இந்த வெற்றி நாம் அனைவருக்கும் சொந்தமானது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
நீதியின் முன்னே அனைவரும் சமமானவர்கள். நீதியை காப்பவர் நீதியின் பாதுகாப்பை பெறுவார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
நீதியை மதிக்கும் நாடு அபிவிருத்தியடைந்த நாடு, நல்லாட்சி நிறைந்த நாடு. இவை அனைத்தும் நிறைந்த மற்றும் வளமான எதிர்காலத்தைதான் எதிர்கால பரம்பரைக்கு மற்றும் இந்த நாட்டுக்கு உரிமையாக்கித் தருவேன் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.