ஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து ஹெய்ட்டி உள்துறை அமைச்சர் பால் அந்தோனி கூறும் போது, மரணித்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டியுள்ளது. மீட்கப்பட்ட 40 ஆயிரம் உடல்களை கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களில் புதைத்து இருக்கிறோம்’ என்றார்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வீடுகளை இழந்தவர்களுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.