இலங்கை யின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது பரப்புரையை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தமது முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நீண்ட உரையின் மூலம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விளக்கமளித்ததன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
anwar
வருகிற நாடாளுமன்ற தேர்தலில், கூட்டமைப்பிட்கு வாக்களிக்கும்படி , வடக்கில் வாழும் சிங்கள மக்களுக்கு சரத் பொன்சேகா சொல்வாரா?
பல்லி
நீங்கள் யார் மீது அன்பு என்பதை மக்களுக்கு சொல்லுவதை விட; மக்கள் மனநிலை என்ன என்பததை கிராமம் கிராமமய் அலைந்து திரிந்து கேட்டு தெரிந்து கொள்வதே உங்களுக்கு தேவை; காரனம் உங்களை விட மக்கள் மிக கற்று விட்டனர்;
rohan
மக்கள் நினைப்பதைக் கூட்டமைப்பு சொல்கிறதா?
கூட்டமைப்பு சொல்வது பற்றி கவலைப்படாது மக்கள் சரத்துக்கு (அல்லது மகிந்தவுக்கு) வாக்களிப்பரா?
கூட்டமைப்பு சொல்கிறது என்பதற்காக மக்கள் சரத்துக்கு வாக்களிப்பரா?
கூட்டமைப்பு சொல்கிறது என்பதற்காக மக்கள் சரத்துக்கு எதிராக வாக்களிப்பரா?
மகிந்த தான் வெல்வார் என்றால், தேவானந்தாவும் சகாக்களும் கள்ளவாக்கு முயற்சிகளைத் தவிர்த்துக் கொள்வரா? சரத்துக்காக கள்ளவாக்கு போட ஓர் அமைப்பு தமிழ் பகுதிகளில் இல்லை என்பது தெளிவு.
//பல்லி: நீங்கள் யார் மீது அன்பு என்பதை மக்களுக்கு சொல்லுவதை விட; மக்கள் மனநிலை என்ன என்பததை கிராமம் கிராமமய் அலைந்து திரிந்து கேட்டு தெரிந்து கொள்வதே உங்களுக்கு தேவை; காரனம் உங்களை விட மக்கள் மிக கற்று விட்டனர்//
இதையே தான் அடைக்கலநாதன் சொல்லியிருக்கிறார். தமக்குச் சாதகமான கள்ள வாக்கு இல்லாது தமது பலத்தை அளவிட கூட்டமைப்பு முன் வந்திருக்கிறது. கிராமம் கிராமமாய் ஒரு முடிவு இரண்டு வாரங்களில் வரும். மகிந்த வென்றால் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் வரும்.
பல்லி
றோகன் மே 18க்கு முன்பு உள்ள கிராமங்கள் வேறு இப்போது உள்ள கிராம மக்களின் மனநிலை வேறு;அடைக்கல நாதன் அல்ல அடிக்கிற நாதன் போனால் கூட அவுத்து போட்டு அனுப்பும் மனநிலையில் மக்கள்;; எத்தனைகாலம் தான் அவர்களும் மிரிபட முடியும்;;
பார்த்திபன்
றோகனின் கருத்தைப் பார்த்தால் கூத்தமைப்பிற்கு ஏதோ கள்ள வாக்கே போடத் தெரியாது போலல்லவா உள்ளது. சென்ற தேர்தலில் யாழில் போட்டியிட்ட கூத்தமைப்பு ஒரு வேட்பாளருக்கு விழுந்த கள்ளவாக்குகளைப் பார்த்து விட்டு யழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரே மனம் நொந்து அறிக்கை விட்டதை றோகன் அறியவில்லைப் போலும். இராணுவத்திற்கு 40000 பிரேதப்பெட்டிகளைச் செய்யச் சொல்லி வசனம் பேசிய அந்த வேட்பாளர் தற்போது யாழில் தான் நிற்கின்றார். தனது பழைய கெளங்கரியத்தைக் காட்டாமலா விடுவார்??
மக்களுக்கு விளக்கம் கொடுக்க வெளிக்கிட்ட கூத்தமைப்பு, தாங்கள் சரத்துடன் என்ன ஒப்பந்தம் செய்து கொண்டோமென்பதை சொல்ல மட்டும் தயங்குவது ஏனோ?? அதுபோல் சரத் விட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறந்தும் தமிழரின் பிரைச்சினைகள் பற்றிய எந்தத் தீர்வுமில்லை. மொத்தத்தில் கூத்தமைப்பும் சரத்தும் கூட்டுச்சேர்ந்து தமிழர்களை முட்டாள்களாக்குகின்றார்கள் என்பது தெளிவு. தமிழ் மக்கள் இனியும் முட்டாள்களா என்பதை தேர்தல் முடிவுகள் விரைவில் தெளிய வைக்கும்.
பார்த்திபன்
றோகனின் கருத்தைப் பார்த்தால் கூத்தமைப்பிற்கு ஏதோ கள்ள வாக்கே போடத் தெரியாது போலல்லவா உள்ளது. சென்ற தேர்தலில் யாழில் போட்டியிட்ட ஒரு கூத்தமைப்பு வேட்பாளருக்கு விழுந்த கள்ள வாக்குகளைப் பார்த்து விட்டு, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரே மனம் நொந்து அறிக்கை விட்டதை றோகன் அறியவில்லைப் போலும். இராணுவத்திற்கு 40000 பிரேதப்பெட்டிகளைச் செய்யச் சொல்லி வசனம் பேசிய அந்த வேட்பாளர், தற்போது யாழில் தான் நிற்கின்றார். தனது பழைய கெளங்கரியத்தைக் காட்டாமலா விடுவார்??
மக்களுக்கு விளக்கம் கொடுக்க வெளிக்கிட்ட கூத்தமைப்பு, தாங்கள் சரத்துடன் என்ன ஒப்பந்தம் செய்து கொண்டோமென்பதை சொல்ல மட்டும் தயங்குவது ஏனோ?? அதுபோல் சரத் விட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறந்தும் தமிழரின் பிரைச்சினைகள் பற்றிய எந்தத் தீர்வுமில்லை. மொத்தத்தில் கூத்தமைப்பும் சரத்தும் கூட்டுச்சேர்ந்து தமிழர்களை முட்டாள்களாக்குகின்றார்கள் என்பது தெளிவு. தமிழ் மக்கள் இனியும் முட்டாள்களா என்பதை தேர்தல் முடிவுகள் விரைவில் தெளிய வைக்கும்.
rohan
//மே 18க்கு முன்பு உள்ள கிராமங்கள் வேறு இப்போது உள்ள கிராம மக்களின் மனநிலை வேறு;அடைக்கல நாதன் அல்ல அடிக்கிற நாதன் போனால் கூட அவுத்து போட்டு அனுப்பும் மனநிலையில் மக்கள்;; எத்தனைகாலம் தான் அவர்களும் மிரிபட முடியும்//
இல்லையே!
அப்போதும் மக்கள் ஆயுதத்துக்குத் தான் அப்போதும் பயந்தனர், இப்போதும் பயப்படுகின்றனர். தேவானந்தா மகிந்தவுக்காக திரட்டிக் கொண்டு போன கூட்டம் விசுவாசத்துடன் போனது என்றா சொல்ல வருகிறீர்கள்? வலிகாமத்தில் மக்கள் விரட்டியதாக எங்கோ ஒரு செய்தி வந்தது. மற்றப்படி, பிரபலமான தமிழரசுக் கொடியிலிருந்து தேவானந்தா சுட்ட கொடியுடன் அணி வகுத்த கூட்டத்தைப் பாருங்கள்.
இப்போது உள்ளநிலையில் நேரடியாகப் போனால் மக்கள் கருத்து வெளிப்பாடு உணர்ச்சி பூர்வமானதாகத் தான் இருக்கும். வாக்கை அவர்கள் எங்கே போடப் போகிறார்கள் என்று அவர்களுக்குத் தான் தெரியும்.
புலி மீது சீற்றம் இருந்தாலும் நியாயமாக யோசிக்கிறவனுக்கு கூட்டமைப்பு தம்மைக் காக்கவில்லை என்ற கோபம் வரக் கூடாது. அவர்களுக்குத் தம்மைத் தாமே காக்க முடியவில்லை. எத்தனை கூட்டமைப்பு (கூட்டணி) பிரமுகர்கள் உயிர் இழந்தனர் என்பது எமக்கே தெரியும். அது மக்கள் செல்வாக்கு இழந்த ஒரு அரசியல் கட்சி.
புலி வென்று ஒரு உண்மையான தேர்தல் நடந்திருந்தால் கூட்டமைப்பு தான் வென்றிருக்கும் – இது புலிக்கும் தெரியும் கூட்டமைப்புக்கும் தெரியும்.
மக்கள் ஏன் அவுத்துப் போட்டு அனுப்ப வேண்டும்? கேள்வி கேட்டு வாயடைக்க வைத்து அதன் மூலம் அனுப்புவது சரி
பார்த்திபன்
தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘துக்ளக்’ வார இதழில், வாசகர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கு அதன் ஆசிரியர் சோ அளித்த சிந்தனையைத் தூண்டும் பதிலும், கீழே தரப்படுகின்றது.
கேள்வி – ‘இலங்கையில் நடந்த இறுதிப் போரில் சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது சர்வதேச அளவில் பெரிய விடயம். இதை நாங்கள் சாதாரணமாக விடப் போவதில்லை’ – என்று ரணில் விக்கிரம சிங்கே கூறியிருப்பது பற்றி?
பதில் – செய்யட்டும். நல்லதுதான். அப்படியே, ‘பிரபாகரன் உட்பட புலித் தலைவர்கள், சயனைட் சாப்பிடாமல் சரணடைய முன்வந்தது ஏன்? என்பதையும் பரிசீலித்துவிட்டு, விக்கிரம சிங்கே விளக்கச் செய்தால் நல்லது. ‘சாதாரண புலிக்கு சயனைட்; விசேசப் புலிகளுக்குச் சரண்’ என்பது புலிச் சட்டமா?’ என்ற சந்தேகம் தீர்த்து வைக்கப்படுவது நல்லதுதானே?
பல்லி
//. ‘சாதாரண புலிக்கு சயனைட்; விசேசப் புலிகளுக்குச் சரண்’ என்பது புலிச் சட்டமா?’ //
இந்த வரிகள் பல பக்க கட்டுரையைவிட வலிமையானவை;
lamba
பிரபாகரன் தன்இனத்தையே கொன்ற ஒரு கொலைகாரன், தமிழருக்குத் துரோகம் செய்தவர் என்பதை கூட்டமைப்பு வெளிப்படையாகச் சொல்லிப்போட்டு, தமிழரிடம் பொன்சேகாவுக்கு வாக்குப் போடச் சொல்லிக் கேட்டால் சனமும் போடும்.