இலங் கையில் இருபது வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்திபிணையில் செல்ல கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. .
திஸ்ஸநாயகத்தின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திற்கு கையளிக்க வேண்டுமென்றும் திஸ்ஸநாயகத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தவிர 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக திஸ்ஸநாயகம் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மாயா
இது நல்ல திருப்பம். இப்போதைய நிலையில், பலர் மன மாற்றம் பெற வாய்ப்புண்டு. பலர் விடுதலை அடைய வேண்டும். தேர்தல் களத்துக்கு நன்றி.
rohan
//இப்போதைய நிலையில், பலர் மன மாற்றம் பெற வாய்ப்புண்டு. //
என்ன விதமான மன மாற்றம் பற்றிப் பேசுகிறோம்?
பல்லி
பாதுகாப்பாய் இருந்து கொண்டு பட்டதை எழுது அண்ணா,,