ஸ்காபரோ ஒன்ஸ நீண்டகால சமூகச் செயற்பாட்டாளரும் பொதுப்பாடசாலை அறங்காவலருமான நீதன் சண், இன்று தொகுதி 42இன் நகரசபை உறுப்பினருக்கான வேட்புமனுவை நகர மண்டபத்தில் தாக்கல் செய்தார்.
ரொறன்ரோ மாநகரில் நன்கு அறிமுகமான சமூகத் தலைவரான நீதன் சண் ஸ்காபரோ ரூச் றிவர் வதிவாளர்களை தான் நகரசபையில் திறம்பட பிரதிநிதித்துவப் படுத்துவேன் என நம்புகின்றார். வேட்பாளராக அறிவித்த, நீதன் சண்இ “42ஆம் தொகுதிக்கு தேவையான அங்கிகாரத்தையும், வளங்களை கொண்டு சேர்ப்பதற்காகவும், வதிவோரிடையேயும், நகரசபையிடையேயும் உரிய தொடர்பாடலை ஏற்படுத்தவுமே, நான் இத்தொகுதியில் போட்டியிடுகின்றேன்” எனச் சுறுசுறுப்புடன் குறிப்பிட்டார்.
நீதன் சண் ஸ்காபரோவில் கடந்த பத்தாண்டுகளாக கல்வி, குழந்தைகள், இளையோர் வேலை, வேலை வாய்ப்பு, குடிவரவு, வறுமைக் குறைப்பு உள்ளடங்கிய பல துறைகளிற் பணியாற்றியுள்ளார். இருபதுக்கும் கூடிய பாடசாலைகளில் மாலை நேர நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது குமுகத்தில் அவர் ஆற்றிய சேவை பல திட்டங்களும் அமைப்புக்களும் தொடக்கப்படுவதற்கும், வலுப்பெறுவதற்கும் வழியமைத்தது.
அவர் தேர்வாகியதும், நகரசபை அரசை இன்னமும் அணுகவும், விளங்கவும், நம்பவும், அனைவரும் அணுகவும் கூடியதாக அமைப்பார். நீதன் தனது பத்தாண்டுக்கு மேலான சமூக மேம்பட்டுப் பட்டறிவைக் கொண்டு நகரசபை, தொகுதி 42இன் ஒவ்வொரு வதிவாளருக்குமாக உழைப்பதை செய்வதை ஆவன செய்வார். நீதன் 21ஆம் நூற்றாண்டில் எமது தலைமைத்துவத்துக்குத் தேவையான சமநிலையைக் வழங்குபவர். அவர் நான்கு ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலராக அரசியற் பட்டறிவையும், அத்தோடு புதிய தலைமுறைக்கு உரித்தான புதுமை, ஆக்கம், மற்றும் உற்சாகத்தையும் கொண்டுள்ளார்.
நீதன் சண்ணுக்கு ஆதரவு வழங்கி வந்த நீண்டகால மல்வேர்ன் வதிவாளரான திரு. நடா விஜயபாலன் குறிப்பிடுகையில், “இச்சுற்றாடலுக்குத் தலைமை மாற்றம் தேவையானது, தொகுதி 42இன் வதிவாளர்கள், நகரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ஈடுபாடு காட்ட உரிய வாய்ப்புக் கிடைப்பதற்கு இப்பொதாவது காலம் கனியவேண்டும்.” எனத் தெரிவித்தார்.
தெற்காசிய சமுகங்கள் நீதன் சண், ஒக்டோபர் 25, 2010இல், ரொறன்ரோ மாநகரில், இளைய தெற்காசிய நகரசபை உறுப்பினராகி ஒரு வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கின்றார்கள். தற்போதைய நகரசபையில் உள்ள 44 உறுப்பினர்களில் ஒருவர் கூட தெற்காசியர் இல்லை. நீதன் தேர்வாகிய பின், ரொறன்ரோ நகரசபைக்குத் தேர்வாகும் முதற் தமிழரும் ஆவார்.
நீதன் சண் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் (science) மற்றும் கல்வியில் (education) என இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது அவர் சமூககவியலில் (sociology) மற்றும் ஒப்புரவில் (equity) கலை முதுகலைப் பட்டத்தை நிறைவுசெய்கின்றார். தெற்காசிய சமூகங்களுக்குச் சேவையாற்றும் CASSA எனும் அமைப்பில் நிறைவேற்று இயக்குநராகப் பணியாற்றுகின்றார். நீதன் சண் ஆசிரியர், குமுக சேவை அமைப்பின் நிறைவேற்று இயக்குநர்இ வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் மற்றும் சமூகத் தேவை மற்றும் பாதிப்புப் பற்றிய ஓரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பல சவாலான பாத்திரங்கள் ஏற்றுள்ளார். அவர் பல ரொறன்ரோ சமூக அமைப்பின் முக்கிய நபர் விருது, நகரகக் கூட்டமைபின் இனத் தொடர்பாடல் விருது முதலான விருதுகளால் சிறப்பிக்கபட்டுள்ளார். மேய்றீ நிறுவனமும் மற்றத்துக்கான தலைவர்கள் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்ததற்காக சிறிப்பித்தது.
நீதன் சண்ணும் அவரது ஆதரவாளரும் பிறின்சஸ் பாங்குவற் மண்டபத்தில் தங்களது ஒன்றுகூடலை ஞாயிற்றுக்கிழமை, சனவரி 10, 2010 ஒழுங்கு செய்துள்ளார்கள். கூடுதல் விவரங்களுக்கோ, நீதனுடனான ஊடக நேர்காணலுக்கோ, ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரகால் திருவைத் 416-727-3034 என்ற எண்ணூடாகவோ நீதன் சண்ணை 416-824-3399 என்ற எண்ணூடாகவோ அல்லது info@neethanshan.ca என்ற மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளலாம்.
Poddu
நீதன் சண் சொல்ற விசயமெல்லாம் சரி ஆனா போனமுறை சும்மா நில்லாமல் புலியை நம்பி எலெக்சன் கேட்க வெளிக்கிட்டுத்தான் தம்பி கவுண்டவர். புலியோட நிண்டா தமிழ் சனம் எல்லாம் வோட் போடும் வெள்ளையன் வோட்போட வரமாட்டான் என்றெல்லாம் கணக்குப் போட்டு கனவு காண்டு கொண்டிருந்தவர். அதுக்குள்ள யாரோ உவற்றை ஆக்கள் தான் ஊரிலை முஸ்லீம்கலை கலைச்சவை என்ற விசயத்தை கசியவிட அது துண்டுப் பிரசுரமா வெளியில வந்தது. அந்தத் தொகுதி பாங்கிஸ்தான் பங்களாதேஸ் இந்திய முஸ்லிம் சமூகங்கள் மனித உரிமையை மதிக்கிறவையெல்லம் வந்து வோட்டப் போட்டு இவரை வெறும் கையோட அனுப்பிப் போட்டுதுகள்.
எப்பவோ எத்தினையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால செய்ததை எங்க அறுவடை செய்யிறம் பார்த்தியலோ. தம்பி நீதன் சண் சும்மா ஓடுற பஸ்ஸி ஏறப்பிடாது. விசாரிச்சுப் பார்த்து எங்க இருந்து பஸ் வருகுது குறைஞ்சது பஸ் எங்க போகுது என்று தெரிஞ்சாவது ஏறவேணும். பார்த்து.