இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதி நாட்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர். அரச மருத்துவர்கள் நான்கு பேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப் பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார்.
தாம் கைது செய்யப்பட்டது குறித்தும், காவலில் இருந்தபோது தாம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் BBC தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியில் விவரித்திருந்தார். காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒருலட்ச ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாதம் ஒரு முறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.
rohan
அப்படி நீங்கள் சொன்னால் நாங்கள் நம்பத் தானே வேண்டும்!!
Ajith
Doctor, We already know the truth.We can understand where you are and who asked you to tell BBC.You said the same thing as four other doctors said. I will do the same thing if I am in your position.I don’t understand why you were left alone when other doctors were partially released some months back. Still journalists can’t go passing vavuniya without MOD clearance.
rohan
மருத்துவர் சிவபாலன். நீங்கள் பாவம், என்ன செய்வீர்கள்?
குடும்பத்துடன் நாட்டுக்கு வெளியில் வந்தால் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மாயா
//rohan on January 3, 2010 2:49 am மருத்துவர் சிவபாலன். நீங்கள் பாவம், என்ன செய்வீர்கள்? குடும்பத்துடன் நாட்டுக்கு வெளியில் வந்தால் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.//
புலிகளே, புலத்தில் அகதி அந்தஸ்ந்து கோரும் போது , புலிகளுக்கு எதிராகத்தான் வாக்கு மூலம் அளிக்கிறார்கள். அது உங்களுக்கு தெரியாதா? “சிறீலங்கா அரசால் பிரச்சனை என்றால், வன்னியில் வாழலாமே? ” என வெளிநாட்டு போலீசார் கேட்கும் போது புலியால் இல்லை, எவரால் பிரச்சனை என்று சொல்லி, அகதி அந்தஸ்த்து கேட்டீர்கள்?