தாய் லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவட்ரா இலங்கையின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் அண்மையில் வெளியான செய்தி எந்த அடிப்படையும் இல்லாத வெறும் ஊகம் என்று வெளி விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட செய்தியை முற்றாக மறுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள் ளதாவது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இருந்து வரும் சிறப்பான இரு தரப்பு உறவுகளை இது போன்ற ஊகங்கள் எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு உறுதியாக கூறுகிறது.
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் கசிப் பிரோம்யாவுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று முன் தினம் தொலைபேசியில் பேசினார்.