தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரவுக்கு இலங்கை அரசின் பொருளாதார ஆலோசகர் பதவி?

thaksin.jpgதாய்லாந் தின்  முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரவுக்கு இலங்கை அரசின் பொருளாதார ஆலோசகர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின்  சினவத்ர தாய்லாந்திலிருந்து வெளியேறி வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு முன்னாள் பிரதமரும் சினவத்ரவின் உறவினருமான சோம்சல் வோங்சவட் இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாக பாங்காக் போஸ்ட் என்கிற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டில் பிரதமர் பதவியில் இருந்து சினவத்ரவை ராணுவம் நீக்கியது. இதன் பிறகு அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு ஊழல்களில் அவருக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. சிறைத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தாய்லாந்திலிருந்து வெளியேறிய காலத்தில், இலங்கைக்கு சினவத்ர பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  கம்போடியா மற்றும் இலங்கை அரசுகளின் பொருளாதார ஆலோசகராக சினவத்ர நியமிக்கப்படலாம் எனவும், இது எந்த வகையிலும் தாய்லாந்துக்கு அச்சுறுத்தலாக அமையாது எனவும் வோங்சவட் தெரிவித்திருப்பதாக பாங்காங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • பல்லி
    பல்லி

    அரசு போறபோக்கை பார்த்தால் KP க்குதான் வெளியுலக அமைச்சர் பதவி கிடைக்கும் போல் உள்ளது; அல்லது கப்பல் துறையாவது கிடைக்கும், நல்லவேளை தலைவர் காணாமல் போனது!!

    Reply
  • Appu hammy
    Appu hammy

    Everything is possible in this now banana republic!
    Our Maharajano and his brothers do not need the advice of Thaksin. Actually they can give him some tuition on how to “patriotically” rob a country without getting cought If he is accommodated then it’s for sure the opposition will go to the town with the slogan – Ali Baba and the 40 thieves.

    Only corrupted can lead the currupts, may be he needed advice from these goon bros to make fast money. Not surprising. It is a matter of birds of a feather flocking together. Thaksin has lots of ill gotten money – billions & billions. He is the Economic Advisor to the Cambodian PM Hun Sen another very corrupt politician in the region. Cambodia has turned down Thailand’s request for extradition. May be he is uncomfortably close to the border with Thailand and is perhaps looking for a country with corrupt politicians and which has no extradition treaty with Thailand to park himself. Perhaps Sri Lanka fits the bill.

    Reply
  • மாயா
    மாயா

    தலைவருக்கு , இராணுவ தளபதி பொறுப்பு தருகிறேன் என்று பிரேமதாஸ சொன்ன போதும் , எனக்கு முள்ளிவாய்க்கால்தான் வேணும் என்று இருந்திருக்கிரார் பல்லி. அது கிடைச்சிருந்தால் ஏகப்பட்ட தலைகள் , தலையால் விழுந்திருக்கும். நல்ல காலம் தலை கொத்தப்பட்டது.

    Reply
  • பல்லி
    பல்லி

    உன்மைதான் மாயா தலை கொத்தபட்டது தவிர்த்து; நாமும் ஏன் அதுகள் மாதிரி??….

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஏனப்பா நீங்கள் எல்லோதும் உங்கள் தலையை கொத்துகிறீர்கள்? ஸ்ரீலங்கா அரசு வழமைபோல இச்செய்தியை ஆதாரமற்றது என மறுத்துள்ளது!

    ”The government has denied Thai media reports which said that former Thai Prime Minister Thaksin Shinawatra is poised to be appointed as an economic adviser to the Government of Sri Lanka. The Foreign Ministry said that these reports are baseless. The foreign Ministers of Thailand and Sri Lanka have also had a telephone discussion in the wake of the media reports.”

    http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=72271

    Reply
  • பல்லி
    பல்லி

    // தலை கொத்தபட்டது தவிர்த்து//
    சாந்தன் கவனியுங்கள்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி, நான் உங்களைச் சொல்லவில்லை!

    // நல்ல காலம் தலை கொத்தப்பட்டது //
    தொப்பி அளவானவர்கள் போடலாமே, அதற்குள் நீங்கள் ஏன் அவசரமாக எனக்கு அளவில்லை எனச் சொல்கிறீர்கள்? பல்லி கவனியுங்கள்!

    Reply
  • sinna
    sinna

    நல்ல காலம் தலை கொத்தப்பட்டது // இது இளந்திரையனின் சாபம்

    Reply
  • பல்லி
    பல்லி

    //எல்லோதும் உங்கள் தலையை கொத்துகிறீர்கள்?//
    கவனித்தேன் சாந்தன்;

    ://தொப்பி அளவானவர்கள் போடலாமே//
    அளவவில்லாவிட்டாலும் அமத்தி பிடித்தெல்லவா போடுவீர்கள்;

    //நீங்கள் ஏன் அவசரமாக //
    எல்லாம் ஒரு பாதுகாப்புதான்;

    Reply
  • மாயா
    மாயா

    சாந்தன் போன்றோர் , இன்னமும் தலை இருப்பதாக , தன் தலையை மறந்து, தொப்பி விற்க கடை விரித்துள்ளனர். என்ன செய்ய? கடைகள் நட்டத்தில் போவதை அனைவரும் உணர்ந்தே உள்ளனர். அதுதான் பொண்சேகாவை கொண்டு வந்தாவது, மீண்டும் குண்டுச் சத்தத்தை கொண்டு வர , பலர் திட்டம் போடுகிறார்கள். பாவம் மக்கள். இதுபோன்ற தலைமைகளால் , இதுவரை தமிழர் பெற்றதை விட இழந்தது அதிகம். தலை செத்துப் போச்சு. அதையாவது நம்புவீர்களா?

    சின்ன தலை கொத்தப்பட்டது இளந்திரையனின் சாபமல்ல. ஈழத் தமிழரின் சாபம். கட்டாயமாக குழந்தைகளை வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்று , முன்னரங்குகளில் கொன்று போடக் காரணமாக இருந்த தலைவர்கள் , இந்த படுபாவிகள் செத்து தொலையட்டும் என மண் வாரி இறைத்த , புலிகளை நம்பி கடல் கரை வந்த , புலிகளே விடிவு என இருந்த மக்களின் சாபம். சிங்களவனது சாபமல்ல , தமிழரின் சாபம். புத்தாண்டு சந்தோசமாக பிறந்துள்ளது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாயா,
    சரியாகச் சொல்லியுள்ளீர்கள். இன்னமும் தலையை வைத்து பிழைப்பு நடத்துவதே தமது தலையாய கடைமையாக சிலர் நினைத்து வாழ்வது முற்றிலும் உண்மை. ஆனால் மக்கள் தெளிவடைந்த வருகின்றார்கள்.

    Reply
  • BC
    BC

    மாயா, 2010 புத்தாண்டு சந்தோசமாக இலங்கை தமிழர்களுக்கு பிறந்துள்ளது. புலம் பெயர்ந்த பிழைப்பு வாதிகளுக்கு திண்டாட்டம் தான்.

    Reply